
Post No. 8394
Date uploaded in London – 24 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பரிபாடலில் நான் :–
பரி 6-87, 20-82
சங்க இலக்கியத்தின் சுமார் 30,000 வரிகளில் , சுமார் ஒரு லட்சம் சொற்களில் இரண்டே இடங்களில் அபூர்வமாக நான் வருகிறது ;பரி . 6-87, 20-82
உலகம் முழுதும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது இயற்கை விதி.
அணு என்னும் நுண்ணிய துகளுக்குள்ளும் புரோட்டான்களும் எலெட்ரான்களும் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. ஆகையால் மாற்றம் என்பது இயற்கை நியதி. திருவள்ளுவர் இன்று வந்தால் தமிழ் எழுத்துக்களைப் பார்த்து வியப்பார் நான் ‘பிராமி’ எழுத்தில் அல்லவா எழுதினேன். இது என்ன எழுத்து? என்று கேட்பார்.
இதே போல மொழியும் மாறிக்கொண்டே வரும். பழைய ஆங்கில நூலை ஒரு ஆங்கிலச் சிறுவனிடம் கொடுத்தால் ; அவன் படிக்கவும் இயலாது. அர்த்தமும் சொல்லத் தெரியாது. தமிழுக்கும் இது பொருந்தும்.
சொற்களின் ஒலியும் மாறும்; பொருளும் மாறும்; எழுத்தும் மாறும். இது உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் . ஆயினும் வெளிநாட்டு அரைவேக்காடுகள் வேண்டும் என்றே ஆரிய- திராவிட இன பேத விஷத்தை மொழி மாற்றத்திலும் புகுத்தினார்கள் . இன்று ஆங்கிலம் 39 விதமாகப் பேசப்படுகிறது என்று ஆங்கில மொழி ஆராய்ச்ச்சியாளர்களே சொல்லுகிறார்கள் . இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா , தென் ஆப்பிரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு குடியேறினவர்களே வெவ்வேறு விதமாக ஆங்கிலம் பேசுவார்கள். பிரிட்டனுக்குள் வேல்ஸ் , ஸ்காட்லாந்து , அயர்லாந்து, இங்கிலாந்தில் வெவ்வேறு விதமாக ஆங்கிலம் பேசுவார்கள்.
இது தெரிந்தும் இந்தியாவில் யார் இருவர் சண்டை போட்டாலும் எந்த இரண்டு சொல் மாறினாலும் ஒன்றை ஆரியர் என்பர் மறறொன்றை திராவிடர் என்பார்கள் வெளிநாட்டு விஷமிகள். தமிழ் நாட்டில் மட்டும் இதை புகுத்தவில்லை. ஏனெனில் உலகிலேயே இளிச்சவாயர்கள் தமிழர்கள் அவர்களை மதம் மாற்றினால் இந்தியா எப்போதும் ஆங்கிலேயர் வசமாகும் என்று கனவு கண்டனர். உண்மையில் சோழர்கள் வடமேற்கு இந்தியாவிலிருந்து வந்த சம்ஸ்கிருதம் மொழி பேசும் மக்கள். அவர்களே புறநானுற்றிலும் சிபி என்னும் ரிக் வேத இனத்தில் உதித்தவர் என்று சொல்லுவர். மாந்தாதா , நாபாகன். முதலிய சூரிய குல மன்னர்களை முன்னோர்களாகக் கூறுவர்; பாண்டியர்களோ பாண்டவர் பரம்பரை என்பர் . மதுரை மீனாட்சி, சூரசேனன் மகளான காஞ்சன மாலையின் புதல்வி. அவளை கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மெகஸ்தனிஸும் “பண்டேயா” ராணி என்று குறிப்பிடுவான் . சோழர்களையும் பாண்டியர்களையும் அக்கினி குல சேரர்களையும் ஆரிய- திராவிட வலைக்குள் எளிதில் வீழ்த்தலாம். ஆனால் அவர்களைத் திராவிடர்கள் என்று பிரித்து சிண்டு முடிய ஆசைப்பட்டதால் வெள்ளைக்கார கயவர்கள் தமிழர்கள் மீது கை வைக்கவில்லை.

சுருங்கச் சொன்னால் உலகம் முழுதும் மொழி மாற்றம் இருக்கிறது இரு அணிகள் இடையே சண்டை நடக்கிறது. பிரித்தாளும் வெள்ளைத்தோல் கயவர்கள் இன பேத வாதத்தை அங்கெல்லாம் புகுத்தவில்லை; இந்து மதத்தின் ஆணி வேரை அசைத்து இந்து மதத்தை விழுததாட்டுவேன் என்று எழுதிவிட்டு, வேதத்தை மொழி பெயர்க்கத் துவங்கிய மாக்ஸ்முல்லர் முழி பிதுங்கிப் போனார். இந்தியாவுக்கு வர பயந்து, சாகும் வரை இந்தியா வுக்குள் வரவே இல்லை. அவர் மூலம் ஹிட்லர் உருவானார். “நான் ஜெர்மன் ; நான் ஒரு ஆரியன்” என்று மாக்ஸ்முல்லர் எழுதியதை ஹிட்லர் பிடித்துக் கொண்டு அப்படியே தன சுய சரிதையில் எழுதி, இந்து சுவஸ்திகாவைக் கொடியில் பொறித்து , மிலிட்டரி யுனிபார்மில் பொறித்து ஆட்டம் போட்டார். ஆக அவர் கனவும் பலிக்கவில்லை.
“யான்” என்று சங்க கால மனிதர்கள் எழுதி வந்தனர். தேவார திவ்வியப் பிரபந்த காலத்தில் அது “நான்” ஆகியது. இன்று நாம் யாரிடமாவது போய் “யான், யாம்” என்றால் ஏற இறங்கப் பார்ப்பார்கள் . ஒருவேளை மலையாளியோ என்று சந்தேகிப்பர். மலையாளமோ நேற்று வந்த மொழி. கன்னடம், தெலுங்கு போல பழைய மொழியும் அல்ல.
இது போல சங்க கால மக்கள் “பாண்டில், பண்டி” என்று சொன்னதை இன்று நாம் “வண்டி” என்கிறோம். இன்றோ இந்த “வ, ப,” மாற்றம் வங்கா ளத்திலும் ஒரிஸ்ஸாவிலும் மட்டுமே உண்டு.
நான், வண்டி முதலியன சங்க காலத்தில் ஏன் இல்லை?
ஏன் சங்கத் தமிழில் , திருக்குறளில் “ஒள” என்னும் எழுத்தில் துவங்கும் சொல்லே இல்லை?
ஒளவை என்பதைக் கூட அவ்வையார் என்று எழுதியது ஏன் ?
“ச , ஞ , ய” எழுத்துக்களுக்கு ஏன் தொல்காப்பியர் தடை விதித்தார் ?
உலகில் “ச” – வில் துவங்கும் சொல் இல்லாத பழைய மொழி இல்லையே !
“ ர , ல” எழுத்துக்களில் தமிழ் சொல் ஏன் துவங்கக் கூடாது?
இவை எதற்கும், எங்கும் விஞ்ஞான விளக்கம் கிடையாத!!!!. ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொரு பேட்டை மக்களுக்கும் , ஒவ்வொரு கால மக்களுக்கும் சில பழக்க வழக்கங்கள் உண்டு. சிலவற்றுக்கு வேற்று மொழி காரணம் இருக்கலாம். இன்னும் சில இயற்கையான மாற்றங்களாக இருக்கலாம்.
திருநெல்வேலி “ஏலே” ஆரியமா, திராவிடமா என்று ஆராய்ந்து பிரித்தாள வேண்டிய அவசியமில்லை
சங்க காலத்தில் விழா, புறா என்று சொல்லாமல் விழவு , புறவு என்ற குறில் ஓலியுடன் பேசினர் .
இப்போது ஒருவரிடம் போய் எங்கள் ஊரில் ‘விழவு’ என்றால், அட எழவே ! எவன் செத்தான், முதலில் அதைச் சொல்லித் தொலை என்பர்!!

பாணினியும் காத்யாயனரும் சமகாலத்தவர் என்று மாக்ஸ்முல்லர் உளறிவைத்தார். ஆனால் 10,000 இடங்களில் மாற்றங்களைக் காட்டுகின்றார் காத்யாயனார் என்பதைச் சுட்டிக்காட்டி இது கால இடைவெளியினால் ஏற்பட்டதேயன்றி பாணினியின் பிழையன்று என்று கோல்ட்ஸ்டக்கர் மாக்ஸ்முல்லரின் முகத்திரையைக் கிழிக்கிறார் . 10, 000 மாற்றங்களுக்கு பாணினி இடம் கொடுத்தால் அவரை இன்று உலகம் புகழாது. மொழி மாறியதால் இவ்வளவு வேறுபாடு . அந்த அளவுக்கு இருவரிடையே கால இடைவெளி என்றும் கோல்ட்ஸ்டக்கர் எடுத்துக் காட்டுகிறார். உலகில் மொழிகள், எவர் தலையீடு இன்றியும் மாறுபடும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
சோழ என்பதை வடக்கத்திய கல்வெட்டுகளிலும் சம்ஸ்கிருத நூல்களிலும் (அசோகர் கல்வெட்டு, காத்யாயனரின் வார்த்திகா , சோட- கங்க மன்னர்கள்) ஏன் 1500 ஆண்டுகளுக்கு “சோட” என்று எழுதினார்கள்?
எந்த இலக்கண விதியைப் பின்பற்றி கருடனை, ஆழ்வார்களும் கம்பனும் “கெலுழன்” , “கலுழன்” என்று சொன்னார்கள்?
இவைகளை எல்லாம் ஆராய்ந்தால் வெள்ளைத் தோல் மொழிக் கொள்கையினர் “ஜோக்” JOKES அடித்து இருக்கிறார்கள். இந்துக்களின் காதில் பூவைச் சுற்றி இருக்கிறார்கள் என்பது புரியும்
ரிக் வேத பிராதிசாக்யத்திலிருந்து சிவஞான முனிவர் வரையான, பட்டோஜி தீட்சிதர் வரையான சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கண நூல்களைக்கற்றால் வெள்ளைத்தோல் அடித்த “தமாஷாக்கள்” JOKES புரியும்.
உலகில் எல்லாம் மாறும்; எப்போதும் மாறும் ; CHANGE IS INEVITABLE; IT IS NATURE’S LAW.இது இயற்கையின் மாறாத நியதி.