பாரத ஸ்தலங்கள் – 8 (Post No.8386)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8386

Date uploaded in London – – –23 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

(திருவாசகத் தலங்களும் மஹேஸ்வர மூர்த்தங்கள் அமைந்துள்ள தலங்களும்)

ச.நாகராஜன்

26. திருவாசகத் தலங்கள்!

  1. திருப்பெருந்துறை
  2. தில்லை
  3. உத்தரகோசமங்கை
  4. திருவண்ணாமலை
  5. திருக்கழுக்குன்றம்
  6. திருத்தோணிபுரம்
  7. திருவாரூர் 

மேலே கூறப்பட்டவை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு தலங்களாகவும் இடம் பெற்றுள்ளன.

27. திருவாசகத்தில் குறிக்கப்பெறும் தலங்கள்!

திருவாசகத் தலங்களன்றி திருவாசகத்தில் குறிக்கப்பெறும் தலங்களாக அறியப்படுபவை கீழ்க்கண்ட தலங்கள்.

  1. மகேந்திரமலை
  2. பஞ்சப்பள்ளி
  3. நந்தம்பாடி
  4. குடநாடு
  5. வேலம்புத்தூர்
  6. சாந்தம்புத்தூர்
  7. மதுரை
  8. திருப்பூவணம்
  9. திருவாதவூர் (மாணிக்கவாசகர் அவதரித்த தலம்)
  10. பூவலம்
  11. திருவெண்காடு
  12. பட்டமங்கலம்
  1. ஓரியூர்
  2. பாண்டூர்
  3. தேவூர்
  4. திருவிடைமருதூர்
  5. கச்சி ஏகம்பம்
  6. ஸ்ரீ வாஞ்சியம்
  7. கடம்பூர்
  8. ஈங்கோய்மலை
  9. திருவையாறு
  10. திருப்பூந்துருத்தி
  11. திருப்பனையூர்
  12. திருப்புறம்பயம்
  13. சந்திரதீபம்
  14. குற்றாலம்
  15. பாலை
  16. கல்லாடம்
  • மொக்கணீச்சுரம்
  • கூடல் (மதுரை)
  • திருப்பராய்த்துறை
  • திருச்சிராப்பள்ளி
  • கோகழி
  • திருப்பழனம்
  • இத்தி
  • மலைநாடு
  • அவிநாசி

மேற்கண்டவற்றுள் சில திருமுறைத் தலங்கள்.

ஏனையவற்றுள் பல பெயர்கள் எவ்வெத்தலங்களைக் குறிக்கின்றன என்பது சரியாகத் தெரியவில்லை.

28. மகேஸ்வர மூர்த்தங்கள் 25 அமைந்திருக்கும் தலங்கள்!

மகேஸ்வர மூர்த்தங்கள் சிவபெருமானின் 25 திருவுருவங்களைக் குறிப்பதாகும். இவ்வடிவங்கள் சிவாலயங்களில் கற்சிலைகளாகவும், பஞ்சலோக சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிவாகமங்கள் சிவபிரானின் ஐந்து முகத்திற்கும் 5 மூர்த்திகளை சுட்டிக் காட்டுகின்றன.

ஈசானம் – சோமாஸ்கந்தர், நடராஜர்,ரிஷபாரூடர்,சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்

தற்புருஷம் – பிட்சாடனர், காமசம்ஹாரர், சலந்தராசுரர், கால சம்ஹாரர், திரிபுராந்தகர்

அகோரம் – கஜசம்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, நீலகண்டர், கிராதர்

வாமதேவம் – கங்காளர், கஜாரி, ஏகபாதர், சக்ரதானர், சண்டேசர்

சத்யோசாதம் – லிங்கோத்பவர், சுகாசனர், அர்த்தநாரீஸ்வரர், அரியர்த்த மூர்த்தி, உமா மகேஸ்வரர்.

25 மகேஸ்வர வடிவங்களும் அவை அமைந்திருக்கும் தலங்களும் கீழே தரப்பட்டுள்ளன. (அடைப்புக்குறிக்குள் மாவட்டங்கள் தரப்பட்டுள்ளன)

  1. சோமாஸ்கந்தர் – திருவாரூர்
  2. நடராஜர் – சிதம்பரம்
  3. ரிஷபாரூடர் – வேதாரண்யம்
  4. கல்யாணசுந்தரர் – திருமணஞ்சேரி
  5. சந்திரசேகரர் – திருப்புகலூர் (திருவாரூர்)
  6. பிட்சாடனர் – வழுவூர் (நாகப்பட்டினம்)
  7. காமசம்ஹாரர் – குறுக்கை
  8. கால சம்ஹாரர் – திருக்கடையூர் (நாகப்பட்டினம்)
  1. சண்டேச அனுக்கிரகர் – கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
  2. ஏகபாதமூர்த்தி – மதுரை
  3. லிங்கோத்பவர் – திருவண்ணாமலை
  4. சுகாசனர் – காஞ்சிபுரம்
  5. உமா மகேஸ்வரர் – திருவையாறு (தஞ்சாவூர்)
  6. அரியர்த்த மூர்த்தி – சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
  7. அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு (நாமக்கல்)
  8. நீலகண்டர் – சுருட்டப்பள்ளி( ஆந்திரா)

***tags- பாரத ஸ்தலங்கள் – 8