
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9203
Date uploaded in London – –29 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிப்ரவரி 2021 காலண்டர்
பண்டிகை நாட்கள் -பிப்ரவரி .11- தை அம்மாவாசை ; 14- காதலர் தினம் ; 16- வசந்த பஞ்சமி ; 19 -ரத சப்தமி , சிவாஜி ஐயந்தி ; 27- மாசி மகம் , கேரளத்தில் ஆட்டுக்கல் பொங்கல் விழா , குரு ரவிதாஸ் ஜயந்தி
அமாவாசை – 11; பவுர்ணமி -26/27; ஏகாதசி விரத நாட்கள்- 7/8, 23
சுப முகூர்த்த தினங்கள்- FEB.1, 3, 4, 8, 15, 24, 25

பிப்ரவரி 1 திங்கட்கிழமை
சம்பத்சு ஹி சுசத்வானாம் ஏக ஹேதுஹு ஸ்வ பெளருஷம் – கதா சரித் சாகரம்
உயர்ந்தோர்க்கு அவர்களுடைய ஆண்மையே செழிப்பைக் கொண்டுவரும்
XXX
பிப்ரவரி 2 செவ்வாய்க் கிழமை
விக்ரமார்ஜித சத்வஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா – ஹிதோபதேசம் 2-19
வீரமுள்ளோனுக்கு அரச பதவி இயல்பாகவே வந்து சேரும் .
XXXX
பிப்ரவரி 3 புதன் கிழமை
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. (திருக்குறள் – 777)
புகழை விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள வீர மறவரின் காலிலே, விளங்கும் கழல்களே அழகு உடையவாகும்
XXXX
பிப்ரவரி 4 வியாழக் கிழமை
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். (திருக்குறள் – 778)
போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் வீர மறவர்கள், தம் அரசனே கோபித்தாலும் , தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள்
XXXX
பிப்ரவரி 5 வெள்ளிக் கிழமை
அயுக்தமத்ருதித்வம் புருஷா ணாம் – அவிமார்கம் 2-33
ஊசலாடும் மனதுடையோன் மனிதன் அல்ல
XXX

பிப்ரவரி 6 சனிக் கிழமை
எததேவ பரம் சாதுர்யம் யத்பர ப்ராண ரக்ஷணம் — சம்ஸ்க்ருத பழமொழி
வீரத்தின் உச்ச கட்டம் மற்றோரு உயிரைக் காப்பதில்தான் உளது
XXX
பிப்ரவரி 7 ஞாயிற்றுக் கிழமை
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (திருக்குறள் – 772)
காட்டு முயலைக் குறிதவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானைமேல் எறிந்து குறிதவறிய வேலினைத் தாங்குதலே வீரருக்கு இனிதாகும்
XXXX
பிப்ரவரி 8 திங்கட்கிழமை
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. (திருக்குறள் – 773)
‘பேராண்மை’ என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர் நின்று போரிடும் ஆண்மையே; அவருக்கு ஒரு கேடு வந்தவிடத்து உதவிநிற்கும் ஆண்மையோ, அதனிலும் சிறந்ததாகும் .
XXXX
பிப்ரவரி 9 செவ்வாய்க் கிழமை
இந்தக் கடினமான உலகத்தை ஆண்மையுடையோரே அனுபவிக்க முடியும்
தீக்ஷ்ணா ணுவர்த்தி லோகோயம் பவுருஷேணை வ புஜ்யதே – ராமாயண மஞ்சரி
XXX
பிப்ரவரி 10 புதன் கிழமை
மடியில் தலை வைத்து உறங்குவோரை வீழ்த்துவது ஆண்மையா – ஹிதோபதேசம்
அங்கமாருஹ்ய ஸுப் தானா ம் வதே கிம் நாம பவுருஷம்
XXX

பிப்ரவரி 11 வியாழக் கிழமை
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர். ( திருக்குறள் – 771)
பகைவரே! என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்து நின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக (HERO STONES FOR DEAD SOLDIERS) நிற்பவர் மிகப் பலர்
XXXX
பிப்ரவரி 12 வெள்ளிக் கிழமை
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. (திருக்குறள் – 776)
கழிந்து போன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே வீரனாவான்
XXXX
பிப்ரவரி 13 சனிக் கிழமை
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர். ( திருக்குறள் – 779)
தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, சாகிற வீரரை, சூளுரை பிழைத்ததற்காக யாரும் தண்டிக்கமாட்டார்கள்
XXX
பிப்ரவரி 14 ஞாயிற்றுக் கிழமை
புஜே வீ ர்யம் நிவசதி ந வாசி – சம்ஸ்க்ருத பழமொழி
வாய்ச் சொல்லில் வீரம் இல்லை; புஜ பலத்தில் இருக்கிறது.
XXX
பிப்ரவரி 15 திங்கட்கிழமை
பிரதாப சஹாயா ஹி சத்வவன்தஹ- சம்ஸ்க்ருத பழமொழி
விரமுள்ளவனுக்கு ஆண்மையே துணை
XXX

பிப்ரவரி 16 செவ்வாய்க் கிழமை
புவு ருஷேன வினா மூல்யம் புருஷஸ்ய எ கிஞ்சன
வீரமில்லாதவனுக்கு மதிப்பு எதுவுமில்லை – கஹா வத் ரத்னாகர்
XXX
பிப்ரவரி 17 புதன் கிழமை
புவுருஷேண து யோ யுக்தஹ ச து சூர இதி ஸ்ம்ருதஹ
ஆண்மையுடையவனையே சூரன் என்பர் மக்கள்
வால்மீகி ராமாயணம் 6-71-59
XXX
பிப்ரவரி 18 வியாழக் கிழமை
ஆண்மையை கைவிடாதீர் — சம்ஸ்க்ருத பழமொழி
பவுருஷம் ந பரித்யஜேத்
XXXX
பிப்ரவரி 19 வெள்ளிக் கிழமை
புருஷகாரேண வினா தெய்வம் ந சித்யதி – யாக்ஞ வாக்ய ஸ்மிருதி 1-351; ஹிதோபதேசம் 32
மனிதன் முயற்சி செய்யாவிடில் இறைவன் அருள்புரிய மாட்டான்
XXX
பிப்ரவரி 20 சனிக் கிழமை
துணிச்சல்மிக்கவர் சவடால் விடுவதில்லை – செயலில் காட்டுவர்
ந ஹி சூரா விகத்தந்தே தர்ஷயந்த்யேவ பவுருஷம் – சம்ஸ்க்ருத பழமொழி
XXX

பிப்ரவரி 21 ஞாயிற்றுக் கிழமை
ந ஸூர்யோ தீ பேனாந்தகாரம் பிரவிசதி – பத்மப் ராப் ராந்தக
சூரியன் விளக்கை வைத்து இருளை விரட்டுவதில்லை
XXX
பிப்ரவரி 22 திங்கட்கிழமை
ந சத்வவன்தஹ ஸக்யந்தே பயா தப்யகதிம் கமயிதும் – ஜாதகமாலை
துணிச்சல் மிக்கவர் பயந்தும் கூட தவறான வழியில் செல்லார்
XXX
பிப்ரவரி 23 செவ்வாய்க் கிழமை
வீரர்கள் மற்றவர்களுக்கு துரோகத்தனமாக தீங்கிழைக்க மாட்டார்கள் – சிசுபாலவதம்
ந பரேஷு மஹவ் ஜஸ ஸ் சலா தபகுர் வந்தி மலிம் லுசா இவ
XXX
பிப்ரவரி 24 புதன் கிழமை
ந பரேணா ஹ்ருதம் பக்ஷ்யம் வ்யாக்ரஹ காதிதுமிச்சதி – வால்மீகி ராமாயணம் 2-61-16
மற்றவை விட்டுச் சென்ற மிச்சம் மீதியை புலி சாப்பிடுவதில்லை
XXX

பிப்ரவரி 25 வியாழக் கிழமை
ததாதி தீவ்ர சத்வானாமிஷ்டமீச்வர ஏவ ஹி – – கதா சரித் சாகரம்
தீவிர முயற்சி உடையோருக்கு கடவுளே அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறான்
XXX
பிப்ரவரி 26 வெள்ளிக் கிழமை
திட உறுதி பூண்டவர்கள் விரைவில் முழு வெற்றி அடைகின்றனர் – – கதா சரித் சாகரம்
தீவ்ர சத்வஸ்ய ந சிராத் பவந்த்யத்யேவ ஹாய் சித்தயஹ
XXX
பிப்ரவரி 27 சனிக் கிழமை
முதுகெலும்பில்லாதவரை விட்டு ஆண்மை ஓடிவிடும் – ராமாயண மஞ்சரி
அதைர்யலு ப்த சித்தானாம் பவுருஷம் பரி ஹீயதே
XXX
பிப்ரவரி 28 ஞாயிற்றுக் கிழமை
பீ டும் பெருமையும் உடைய சிங்கம் புல்லைத் தின்று உயிர்வாழ உடன்படுமா -நீதி சதகம் 21
கிம் ஜீர்ணம் த்ருணமதி மான மஹதாமக்ரேசரஹ கேசரி
XXX SUBHAM XXXXX

tags– பிப்ரவரி 2021 காலண்டர், ஆண்மை , வீரம் , பொன்மொழிகள்

