
Written by S NAGARAJAN
Date: 11 September 2016
Time uploaded in London: 21-24
Post No.3145
Pictures are taken from various sources; thanks.
செப்டம்பர் 11 : பாரதி நாள்!
ச.நாகராஜன்

வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தை வாழவைக்கத்
தந்துயரம் பாராத சான்றோருள் – இந்தியமா
நாட்டிற்கோ காந்தியெனில் நாமெழவே கூவிட்ட
பாட்டிற்கோ பாரதியே தான்
செய்யுநலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்
உய்யுநலம் காட்டியவன் ஓர் கவிஞன் – நெய்யுமொரு
கூட்டிற்கோ தேன்கூடு கொட்டுதமிழ்ச் சந்தமொழி
பாட்டிற்கோ பாரதியே தான்
வீட்டிற்கோ குலமகளிர் வீதிக்கோ நல்லோர்பள்ளி
காட்டிற்கோ உயிர்தருமொரு சஞ்ஜீவனி – இந்தியமா
நாட்டிற்கோ வேதரிஷிகள் கவிதையெனில் தமிழ்ப்
பாட்டிற்கோ பாரதியே தான்
வேறு
இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்
வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்
தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்
புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்
புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்
புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்
புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை
எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்
********
You must be logged in to post a comment.