பைத்தியத்துக்கும் லிதியம்; பாட்டரிக்கும் லிதியம்! (Post No.5494)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 1 October 2018

 

Time uploaded in London – 8-38 am (British Summer Time)

 

Post No. 5494

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

பைத்தியத்துக்கும் லிதியம்; பாட்டரிக்கும் லிதியம்! (Post No.5494)

 

மூலக அட்டவணையில் 118 மூலகங்கள் (118 elements in Periodic Table) உள்ளன. நம் எல்லோருக்கும் தெரிந்த மூலகம் தங்கம் இரும்பு, வெள்ளி, ஆக்ஸிஜன், ஹைட்ரஜன்.

 

இதற்கு முன் நெப்போலியனைக் கொன்ற ஆர்ஸெனிக், ஈயத்தைத் தங்கமாக்கும் என்று நம்பவைத்த பாதரஸம், செலீனியம், தால்லியம் குறித்து சுவையான விஷயங்களைப் பகிர்ந்தேன். மூலக அட்டவணயில் மேலும் ஒரு மூலகத்தை இன்று காண்போம்.

 

 

லிதியம் (Lithium)என்னும் உலோகம் மூன்று இடங்களில் மிகவும் பயன்படுகிறது.

 

மன நோய் உள்ளவர்களுக்கான மருந்தில்;

ஹைட்ரஜன் குண்டுகளில் (Hydrogen Bombs);

நாம் உபயோகிக்கும் கைக் கடிகாரம் முதலிய கருவிகளில் பாட்டரிகளாக (Lithium Battery).

 

லிதியம் பற்றிய சுவையான விஷயங்களை முதலில் சொல்கிறேன்.

 

ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் 1817ல் இதை ஒரு விஞ்ஞானி johan August Arfvedson கண்டு பிடித்தார்.

லிதியம் கார்பனேட் (Lithium Carbonate) என்னும் உப்பு மன நோயாளிகளுக்கு மிகவும் சொற்ப அளவில் கொடுக்கப்படுகிறது. இதைக் கண்டுபிடித்த கதை சுவையான கதை.

ஒரு காலத்தில் கீல்வாத நோய்க்கு இதை மருந்தாகப் பயன்படுத்தினர். இப்பொழுது மனநோய் மருந்துகளில் பயன்படுகிறது. யூரிக் அமிலம் (Uric Acid) உடலில் அதிகமாகும் போது மூட்டு வலியை உண்டாக்கும் நோய் வருகிறது. ஆஸ்திரேலிய டாக்டர் ஜான் கேட் (John Cade) என்பவருக்கு திடீறென்று ஒரு ஐடியா தோன்றியது மன நோயும் ஒரு மனிதனின் ரத்தத்திலுள்ள அதிக இரசாயனப் பொருள்களால்தான் உண்டாக வேண்டும் என்று நம்பினார். கடுமையான மன நோயுள்ளவர்களின் சிறு நீரை கினி பிக்  (Ginea Pigs) எனப்படும் பிராணிகளுக்குக் கொடுத்தார். அவை இறந்துவிட்டன. பிறகு லிதியம் உப்பு கலந்த கரைசலை அவைகளுக்குக் கொடுத்தபோது அவை மந்த (lethargic) கதியில் செயல்பட்டன. ஆனால் பின்னர் நல்ல நிலைக்கு வந்து துள்ளி ஓடின. இதையே லிதியம் கார்பனேட் என்ற உப்பாக மன நோயாளிகளுக்குக் கொடுத்தபோது பலன் கிடைத்தது.

 

ஐந்தாண்டுகளுக்கு மன நோயாளி என்று அடைத்து வைக்கப்பட்ட ஒரு நோயாளிக்குக் கொடுத்தபோது அந்தப் பைத்தியத்தின் ஆட்ட பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போயின. இரண்டே மாதங்களில் சாதாரண ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். பின்னர் வீடு திரும்பி ஒரு வேலையில் சேர்ந்தார். அது முதல் உலகம் முழுதும் லிதியம் மருந்து உபயோகத்தில் வந்தது.

 

ஆனால் எந்த ஒரு மருந்துக்கும் பக்க விளைவுகள் உண்டு. மக்களை மந்த கதியில் இயங்க வைக்கும் . மேலூம் ஆளுக்கு ஏற்ற, நோய்க்கு ஏற்ற அளவு இதை உடலில் ஏற்ற வேண்டும். மன நோய் மருத்துவர்களைக் கலந்தாலோசித்தே இதைப் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் குண்டு

 

இதைவிட சுவையான விஷயம் ஹை ட் ரஜன் குண்டுகளில் லிதியம் ஹைட்ரைட் (Lithium Hydride) பயன்படுவதாகும். அணுகுண்டுகளை விட பல்லாயிரம் மடங்கு வலிமை வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு. அணு குண்டு என்பது அணுவைப் பிளப்பதால்(fission) ஏற்படும் ஆற்றல். ஹை ட் ரஜன் குண்டு என்பது அணுவை இணைப்பதால் (fusion) உண்டாகும் ஆற்றல். நாம் தினமும் பார்க்கும் சூரியனில் ஒவ்வொரு வினாடியும் பல்லாயிரம் கோடி ஹைட்ரஜன்  அணுக்கள் இணைந்து ஹீலியம் உண்டாகும் போது கிடைக்கும் ஆற்றலே சூரிய சக்தி.

 

செயற்கை முறையில் ஹை ட்ரஜன்  அணுக்களை இணைக்க ஹை ட்ரஜன்  குண்டுகளில் லிதியம் ஐஸடோப் (Isotope) பயன்படுகிறது.

 

கீழேயுள்ள பாரா (paragraph) வை இரசாயன மாணவர்கள் மட்டும் படிக்கவும்:-

 

 

ஹைட்ரஜன் குண்டுகளில் லிதியம்-6 ஐஸடோப் பயன்படுகிறது ஹைட் ரஜனின் மற்ற ஒரு ஐஸடோப் டெடூரியம் (Deuterium) . மேற்கண்ட இரண்டும் சேர்ந்து டெடூரியம் ஹைட்ரைட்

ஆகிறது. இது பயங்கரமான சக்தியை வெளிப்படுத்த வல்லது.

எப்போது?

 

இதை ஒரு அணுகுண்டைச் சுற்றிவைத்துவிட்டால், அதை வெடிக்கும்போது அணுகுண்டில் பயன்படுத்தப்படும் யுரேனியம்-235 ஐஸடோப் பிரம்மாண்டமான வெப்பத்தை வெளிப்படுத்தும். உடனே அதை லிதியம்-6 உள்ளே வாங்கி ஹைட் ர ஜநை  ஹீலியம் என்னும் மூலகமாக மாற்றி மேலும் நியூட்ரான்களை வெளிவிடும் . அவை வெளிக்கூ ட்டில் வைக்கப்பட்ட யுரேனியம்-235ஐத் தாக்கி ப்லூடோனியம்-239 (Uranium, Plutonium)  ஆக மாற்றும் — இப்போது மூன்றாவது வெடிப்பு நிகழும் இவ்வாறு நடக்கையில் கோடி கோடி டன் வெடி மருந்தை ஒரே நேரத்தில் வெடித்தால் என்ன சக்தி கிடைக்குமோ அவ்வளவு சக்தி கிட்டும்.

இது ஹைட்ரஜன் குண்டு

லிதியம் பாட்டரி

மூலகம் என்பது திட, திரவ, வாயு நிலையில் உள்ளன. லிதியம் ஒரு உலோகம் (alkali metal) – திட நிலையில் இருந்தாலும் இரும்பு போல கனமாக இல்லாமல் மிக லேசான , எடை குறைந்த நிலையில் உள்ளது ஆகையால் இதைக் கலந்து உருவாக்கும் கலப்பு உலோகங்களும் (alloys) லேஸாக இருக்கும். இதை அலுமினியத்தோடு கலந்து விமானம் கட்டுகிறார்கள். ஆனால் எடை குறைந்தாலும் வலு அதிகம்.

 

காமெரா, கால்குலேட்டர், கை கடிகாரங்களில் மூன்று வோல்ட் (3 volt lithium batteries)  லிதியம் பாட்டரிகளைப் பயன்படுத்துவதன் காரணமும் இந்த எடைக் குறைவுதான். செயற்கை இருதயக் கருவிகளிலும் இவை பத்து ஆண்டு வரை இயங்குகின்றன.

 

லிதியத்துடன் ஒரு இரும்பு உப்பைச் சேர்த்து பொம்

மைகள், ஸ்டீரியோ, காஸெட், சி டி ப்ளேயர்களையும் இயக்குகிறார்கள்.

வானவியலில் லிதியம்

 

இந்த பிரபஞ்சம் மாபெரும் (Big Bang)  வெடிப்பிற்குப் பின்னர் உருவானது அப்பொழுது ஹைட்ரஜன், ஹீலியத்துடன் லிதியமும் உருவானது. அதாவது முதல் மூவர் – மூன்று முதல் ஆழ்வார்கள்–என்றும் சொல்லலாம. ஆகையால் சூரியனுக்கும் தம்பியான — ஜூனியர் ஆன– பழுப்புக் குள்ளன், சிவப்புக் குள்ள நட்சத்திரம் (Brown and Red Dwarfs) , ஆரஞ்சு வண்ண நட்சத்திரங்களை (Orange Stars) இதன் அளவை வைத்து இனம் காணுகிறார்கள்.

 

ஒவ்வொருவர் உடலிலிலும் 7 மில்லி கிராம் லிதியம் இருக்கிறது. பல வெப்ப நீரூற்றுகளில் இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா,  சீனா, ஜிம்பாப்வேயில் அதிகம் கிடைக்கிறது. கண்ணாடித் தொழிற்சாலைகளிலும் லிதியம் பயன்படுகிறது ஹைட்ரஜன் வாயுவைச் சேமித்து வைக்க லிதியம் ஹை ட்ரைட் பயன்படுகிறது

 

மனிதனுடைய சிறு நீரில் லிதியம் இருக்கிறது. திராட்சை, புகையிலை, பால், கடல் பாசியில் இருக்கிறது. ஒரு லிட்டர் ரத்ததில் பத்து மில்லி கிராம் லிதியம் இருந்தால் அது விஷம். 15 மில்லி இருந்தால் கெடுதி; 20 மில்லி இருந்தால் நாக்கு குளறும்; மரணமும் சம்பவிக்கும்.

 

லிதியத்தின் அணு எண் 3,

உருகு நிலை 181 டிகிரி சி;

கொதி நிலை 1347 டிகிரி சி.

 

வாழ்க லிதியம்; வளர்க லிதியம் பாட்டரி; தணிக பைத்தியம்.

 

வைத்தியத்தில் உதவும் லிதியம்; பைத்தியத்தில் உதவும் லிதியம் வாழ்க .

 

–சுபம்–