
Written by London Swaminathan
Date: 24 November 2016
Time uploaded in London: 9-05 AM
Post No.3384
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
போர்க்களத்தையும் ஏர்க்களத்தையும் ஒப்பிடும் அருமையான ஒரு பாடல் புற நானூற்றில் (369) உள்ளது. அதைப் பாடியவர் பரணர். இது போல சங்க இலக்கியத்தில் பல பாடல்கள் உள்ளன. காளிதாசனின் காவியங்களிலும் உள்ளன. இப்படி த் தொடர்ந்து பல விஷயங்களைக் கோர்வையாக ஒப்பிடுவது கிரேக்கப் புலவர் ஹோமரின் காவியங்களிலும் காணப்படுவதால் ஆங்கிலத்தில் இதை ஹோமரிக் உவமை என்று சொல்லுவர்.
பரணர் ஒப்பீட்டை முதலில் காண்போம்:-
போர்க்களமும் ஏர்க்களமும் ஒப்பீடு
யானை = மேகம்
வாள் வீச்சு = மின்னல்
முரசு முழ்க்கம் = இடி முழக்கம்
குதிரை = காற்று
அம்பு = மழை
போர்க்களம் = வயல் களம்
தேர் = ஏர்
வேல்/கணையம் = விதைகள்
பிணம் = பயிர்கள்
பேய்கள் மொய்க்கும் பிணக்குவியல்= நெற் போர்வை

சேரமான் கடலோட்டிய வெல்கெழுகுட்டுவன் மீது பரணர் பாடிய பாடல்
இருப்புமுகம் செறிந்த ஏந்தெழில் மருப்பின்
கருங்கை யானை கொண்மூ வாக
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள் மின்னாக, வயங்கு கடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக்காக
அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
வெவ்விசைப் புரவி வீசு வளியாக
விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
ஈரச்செறுவயின் தேர் ஏராக
விடியல் புக்கு, நெடியல் நீட்டி, நின்
செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்,
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி,
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு
கணநரியோடு கழுது களம் படுப்பப்
பூதம்காப்பப் பொலிகளந்தழீஇப்,
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள!
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்
பாடி வந்திசின் பெரும; பாடான்று
எழிலி தோயும் இமிழிசை யருவிப்
பொன்னுடை நெடுங்கோட்டு , இமையத்தன்ன
ஓடைநுதல், ஒல்குதல் அறியாத்
துடியடிக்குழவிய பிடியிடைமிடைந்த
வேழமுகவை நல்குமதி
தாழா ஈகைத் தகை வெய்யோயே!
–புறநானூறு 369
சங்க இலக்கியத்தில்
புறம் -370- ஊன்பொதி பசுங்குடையார்
புறம் -373 கோவூர்க் கிழார்
புறம் -373 மாங்குடிக் கிழார்
பதிற்றுப் பத்து- 14-17, 15-1-15
பொருநராற்றுப்படையிலும் (4-17) ஹோமரிக் உவமை உளது

காளிதாசனில்
ரகுவம்சம் 7-49, 10-44,10-48, 4-62, 11-29
ரகுவம்சம் 7-49
யுத்த பூமி- மிருத்யு தேவதையின் பான பூமி
தலைகள் – பழங்கள்
குல்லாய்கள் – பான பாத்திரங்கள்
ரத்தம் = மது
ரகுவம்சம் 10-44
ராவணன் தலை = தாமரை
யுத்த பூமி பூஜைக்கானது

ரகுவம்சம் 10-48
விஷ்ணு – மேகம்
ராவணன் – வ ட்சி
தேவர் – பயிர்
பேச்சு – நீர்
மகிழ்ச்சி – மழை
விஷ்ணுவை மேகமாகவும் ராவணனை வர்றட்சியாகவும், அவனால் துன்புறுத்தப்பட்ட தேவர்களை வாடிய பயிராகவும், விஷ்ணு கூறிய சொற்கள் மழையாகவும் மகிழ்ச்சியாகவும் உருவகப்ப்படுத்தப் பட்டுள்ளது.
இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை நிலவியதற்கு முந்தைய பல காளிதாசன் பற்றிய கட்டுரைகளில் எடுத்துக்காட்டுகளைத் தந்தேன். சங்க இலக்கியத்துக்கு முன்னரே காளிதாசன் வாழ்ந்ததை இவைகளும் நிரூபிக்கின்றன.
–subahm-