மதர் தெரஸா : மீடியா உருவாக்கிய செயிண்ட்! -1 (Post No.3164)

mother-teresa-indian-stamp

Written by S NAGARAJAN

Date: 18 September 2016

Time uploaded in London: 6-10 AM

Post No.3164

Pictures are taken from various sources; thanks.

 

 

இந்தக் கட்டுரையில் அடுத்து வரும் முதல் பாராவை கட்டுரை ஆரம்பத்திலும் முடிவிலும் படிக்க வேண்டும்! இது ஒரு அன்பு வேண்டுகோள்!

 

மதர் தெரஸாவைக் குறை சொல்வது நமது நோக்கமல்ல. ஏழைகளுக்கு உதவி செய்யும் ஒவ்வொருவரும் இறைவனின் சந்நிதானத்தில் மகத்தான இடத்தைப் பிடிப்பவரே. ஹிந்து மதத்தைச் சேர்ந்த எந்த ஒருவருக்கும் இதில் சிறிதளவும் ஐயமில்லை. இதை எழுதும் ஹிந்துவான எமக்கும் இதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

 

மீடியாக்கள் அடிக்கும் கூத்தைச் சற்று உற்று நோக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவே இந்தக் கட்டுரை!

ஆஹா, மதர் தெரஸா – நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸா – கடைசி கடைசியாக புனிதர் ஆகி விட்டார்.

 

 

வாடிகனில் உள்ள போப் ‘மனமுவந்து” இதை அங்கீகாரம் செய்து அவரை ;லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் “புனிதராக” அறிவித்து விட்டார்!

மகிழ்ச்சி!

 

 

ஏழைகளுக்கு உதவி சிறிதளவே செய்தாலும் ஒருவர் போற்றப்பட வேண்டியவரே! அந்த வகையில் மகிழ்ச்ச்சி!!

ஆனால் உலகில் “ப்ரொஜெக்ட்” செய்யப்படும் விதத்தில் அவர் அந்த ப்ரொஜெக்ஷனுக்கு ஏற்புடையவரா?

இல்லை என்று சொல்கிறது ஒரு ஆய்வு.

இந்த ஆய்வு இன்று எடுக்கப்பட்டதில்லை. 2013ஆம் ஆண்டு  மார்ச் மாதம் கனடிய பத்திரிக்கையான “Relegieuses”  என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒன்று.

பிரசுரமான போதே கடும் விமரிசனத்திற்கு உள்ளாகிய கட்டுரை இது.

 

theresa-1

அவரைப் பற்றி மூவர் ஆய்வை நடத்தினர். Sergi Larivee மற்றும் Genevieve Chenard றஆகிய  இருவர் மாண்ட்ரீல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். சைக்கோஎஜுகேஷன் (Psychoeducation) பிரிவில் பணியாற்றுபவர்கள் இவர்கள். மூன்றாமவர் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் கல்விப் பிரிவில் வேலை பார்ப்பவர். பெயர் Carole Snechal.

 

சுருக்கமாக ஒரே வரியில் ஆய்வின் முடிவைச் சொல்ல வேண்டுமெனில் அன்னை தெரஸா “anything but a saint” – ‘புனிதரைத் த்விர வேறு என்ன வேண்டுமானாலும்” என்று சொல்லலாம்.

ஊடகங்களின் திட்டமிட்ட டியூனும் தீவிரமான பிரச்சாரமும் அவரை புனிதர் ஆக்கி விட்டன!(a creatuib if orchestrated and effective media campaign)

 

வாடிகன் அவரது மனிதப் பண்பு என்ற பக்கத்தை உன்னிப்பாகப் பார்க்கத் தவறி விட்டது என்கிறது ஆய்வு,

 

எல்லையிலாத் துன்பத்திற்கு ஆட்பட்டு அவரிடம் வந்த நோயாளிகளின் துன்பத்தை அவர் புகழ்வதிலேயே (gloryfying the suffering) குறியாக் இருந்தாரே தவிர அந்த நோயைப் போக்க அவர் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை என்கிறது ஆய்வு.

இந்த ஆய்வில் மூன்று ஆய்வாளர்களும் அன்னை தெரஸாவைப் பற்றி வெளிவந்த அனைத்து பிரசுரங்களையும் ஆவணங்களையும் முறையாக் ஆராய்ந்தனர் பின்னரே அவரது உள்ளீடற்ற சித்திரத்தை (Hallowed image) றஆய்வு மூலமாகச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தெரஸா மறைந்த போது 517 இல்லங்களை – ஆதரவற்று இறப்போருக்கான இல்லங்களைக் – (missions or homes for dying) கொண்டிருந்தார்!

 

 

இந்த மிஷன்களுக்கு வந்த பணத்திற்கோ குறைச்சல் இல்லை. கோடிக் கணக்கில் டாலர்கள் – உல்கெங்கிலுமிருந்து பணம், பணம், பணம்!

இந்த மிஷன்களுக்கு ஏராளமான டாக்டர்கள் வருகை புரிந்து வந்தனர்.

 

 

இவற்றில் பல கல்க்த்தாவில் அமைந்திருந்தன. இந்த இல்லங்கள் ஏழைகளையும் ஆதரவற்று இறக்க இருப்போரையும் “அன்புடன்” அறைகூவி வரவேற்றன!

– அடுத்த கட்டுரையுடன் முடியும். கட்டுரையின் முடிவில் முதல் பாராவைத் திருப்பிப் படிக்க வேண்டும்.

 

–subham–