பஞ்சாங்க ரகசியங்கள் —-5; காலற்ற, உடலற்ற, தலையற்ற ……. (Post No.8547)

பஞ்சாங்க ரகசியங்கள் —-5; காலற்ற,உடலற்ற, தலையற்ற ……. STARS!!!!

மேலே கண்ட தலைப்பை பார்த்து பயப்பட வேண்டாம்
இந்த கை கால் போற விஷயமல்லாம் நமக்கல்ல,
நட்சத்திரங்களுக்காம்…….

காலற்ற,உடலற்ற,தலையற்ற நாட்கள் என்றால் என்ன ???

தலையற்ற நாட்கள்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்.இந்த மூன்று நடசத்திரங்களும்
ஒரு ராசியில் முதல் பாதத்தில் ஆரம்பித்து மற்ற மூன்று பாதங்களும்
மற்றொரு ராசியில் முடிகின்றன.
இந்த நட்சத்திரத்தன்று   மனை முகூர்த்தங்களோ,வெளி நாடு
செல்லவோ கூடாது.

உடலற்ற நாட்கள்
மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இந்த மூன்று நடசத்திரங்களும்
ஒரு பாதி ஒரு ராசியிலும் மறு பாதி இன்னனொரு ராசிலும் வருவதினால்

 உடலற்ற ராசிகள் எனப்படும்.
இந்த நட்சத்திரத்தன்று  ,வயிறு சம்பத்தப் பட்டவியாதிகளுக்கு
மருந்து சாப்பிட ஆரம்பிக்கக் கூடாது.

காலற்ற நாட்கள்
புனர் பூசம் விசாகம்,பூரட்டாதி, இந்த மூன்று நட்சத்திரங்களும்
முக்கால் பாகத்தை ஒரு ராசியிலும் கால் பாகத்தை இன்னொரு
ராசியிலும் வருவதினால் இவை காலற்ற நாட்கள் எனப்படும்

இந்த 9 நட்சத்திர தினங்களன்றும் மனைவியுடன் புணரக்கூடாது
வெளி நாட்டு பயணங்களும் செல்லக் கூடாது.

மிக முக்கியமாக விவசாயிகளக்கென்றே சில நாட்கள்
பஞ்சாங்கத்தில் கொடுக்கப் பட்டிருக்கிறது.அவையாவன



கீழ் நோக்கு நாள் அல்லது அதோ முக நட்சத்திரங்கள்

பரணி, கிருத்திகை, ஆயில்யம்,மகம்,பூரம்,விசாகம்,மூலம்
பூராடம், பூரட்டாதி
மேற்கண்ட நட்சத்திரங்களில் செய்யக் கூடியவை
மஞ்சள்,கருணை, சேனை, போன்ற கிழங்கு வகைகள் அதாவது
மண்ணின்கீழ் வளரக்கூடிய எல்லா பயிர்களும் மற்றும் கிணறு
தோண்டுதல், குளம் வெட்டல், காய்கறிகளின் விதை நடுதல்
போன்ற காரியங்கள் செய்ய மிகமிக நல்ல நாட்களாம்.

சம நோக்கு நாள் அல்லது திரியங் முக நட்சத்திரங்கள்

அஸ்வினி,மிருகசீரிஷம்,புனர் பூசம் அஸ்தம்,சித்திரை,
சுவாதி,கேட்டை ரேவதி
ஆடு, மாடு,குதிரை, யானை, போன்ற நாற்கால் பிராணிகளை
வாங்குதல், விற்றல், உழவு,மேலும் வாசற்கால் வைக்க வீட்டிற்கு
தளம் போட, சாவை போட ஆரம்பிக்க மிகமிக நல்ல நாட்களாம்

மேல் நோக்கு நாள் அல்லது ஊரத்வ முக நட்சத்திரங்கள்

ரோகிணி, திருவாதிரை, பூசம்,உத்திரம்,உத்திராடம்,திருவோணம்
அவிட்டம், சதயம்,உத்ரட்டாதிமேல்நோக்கி வளரக்கூடிய
தென்னை, பனை,மற்றும் எல்லா, செடி, மர, வகைகளும் நடுவதற்கு
உதந்த நாள். மேலும் வீடு கட்ட, காம்பவுண்டு சுவர் அமைக்க
வியாபாரம் தொடங்க, பதவி உயர்வு கேட்க மிகமிக நல்ல
நாட்களாம்.


மல மாதம்
ஒரே மாத த்தில் இரண்டு அமாவாசையோ, இரண்டு பவுர்ணமியோ
அல்லது, ஒரு மாத த்தில், ஒரு பவுர்ணமியோ, அமாவாசையோ
கூட வராமலிருந்தாலோ அது மல மாதமாம் அந்த மாதத்ததில்
திருமணமோ, மற்றும் எந்த நல்ல காரியங்களும் செய்ய
விலக்காம்


இத்துடன்பஞ்சாங்க விளக்கங்கள் முடிந்தது.
மேலும்; ஏதாவது விளக்கம் தேவை என்றால் நான் விளக்க
முயற்சிக்கிறேன்


இதுகாரும் நீங்கள் படித்த 5 பாகங்களை உபயோகப்படுத்தி
வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகிறேன். இதை உங்கள்
நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி வணக்கம்

tags – மல மாதம், மேல் நோக்கு நாள், பஞ்சாங்க  ரகசியங்கள் —-5;

—-SUBHAM—