
ராமாயண, மஹா பாரத முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ) (Post No.4594)
Written by London Swaminathan
Date: 8 JANUARY 2018
Time uploaded in London-7-50 AM
Post No. 4594
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
((எனது பிளாக்கில் கடந்த 7 ஆண்டுகளில் 600-க்கும் மேலான கேள்விகளும் பதிலும் பதியப்பட்டுள்ளன. இவைகளைத் தமிழ் இலக்கியத்திலிருந்தும் ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் இருந்தும் எடுத்துள்ளேன். ஆங்கிலத்திலும் அவைகளைத் தந்துள்ளேன். படித்துப் பயன் பெறுக.))
கீழேயுள்ள 25 கேள்விகள் ராமாயண மஹாபாரதத்தில் வரும் முனிவர்கள், ரிஷிகள் பற்றிய கேள்விகளாகும்; எங்கே உங்கள் இதிஹாஸ அறிவைச் சோதித்துப் பாருங்கள் பார்ப்போம்! விடைகள் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளன.

1.மஹாபாரதத்தை எழுதியவர் வியாஸர்; அதை எழுத்து வடிவில் ஆக்க அவருக்கு உதவியவர் விநாயகப் பெருமான். வியாஸரின் பெயர் என்ன?
2.அஷ்டாவக்ரர் கதையை யுதிஷ்டிரன் என்னும் தருமனிடம் யார் சொன்னார்? ( அஷ் டாவக்ரன் என்றால் எட்டு கோணல் என்று அர்த்தம்; அவரது தந்தை வேதத்தைத் தவறாக உச்சரித்ததால் கருவிலேயே அஷ்டாவக்ரர் கோணிக் குறுகிப் போனார்)
3.பாண்டவர்கள் ‘த்வைத்ய’ வனத்தில் வசித்த காலத்தே, ஒரு ரிஷி விஜயம் செய்து, பிராமணர்கள் சூழ வாழுங்கள் என்று அறிவுரை வழங்கினார்; யார் அவர்?
4.துராணாச்சார்யாரின் தந்தை யார்?
5.துரோணருக்கு அக்னி அஸ்திரத்தை வழங்கியவர் யார்?

6.பாண்டவர் வனவாச காலத்தில் அவர்களுக்கு நள-தமயந்தி கதையைச் சொன்னவர் யார்?
7.பாண்டவர்களுக்குச் சமயச் சடங்குகள் பற்றி ஆலோசனை வழங்கும் ரிஷியின் பெயர் என்ன?
8.சேவை செய்தமைக்காக இஷ்டப்பட்ட கடவுளை அழைக்கும் மந்திரத்தை குந்தி தேவிக்கு உபதேசித்த முனிவர் யார்?
9.மஹாபாரத யுத்தம் நடந்தபொழுது பலராமரைச் சந்தித்த வானசாஸ்திர , ஜோதிட நிபுணர் யார்?
10.துர்யோதணனைக் கட்டுக்குள் வைக்கும்படி திருதராஷ்டிரனுக்கு புத்திமதி சொன்ன முனிவர் யார்?
- செத்துப்போன நாகப் பாம்பை ஒரு முனிவர் மீது வீசியமைக்காக பரீக்ஷித் மஹாராஜனைச் சபித்த முனிவர் யார்?
- யார் மீது செத்த பாம்பை பரீக்ஷித் வீசி எறிந்தார்?
13.சொந்த பந்தம் என்ற தளைகளில் இருந்து விடுபட திருதராஷ்டிர மன்னனுக்கு உபதேசித்த முனிவர் பெயர் என்ன? அந்த உபதேசம் அடங்கிய நூலின் பெயர் என்ன?
XXX XXX XXXX

ராமாயண முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ)
14.ராம பிரானுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்த முனிவர் யார்?
15.எந்த முனிவரின் ஆஸ்ரமத்தில் சீதை வசித்தாள்?
16.ராம பிரானுக்கு புகழ் மிகு சூர்ய ஸ்துதியை சொல்லிக் கொடுத்த முனிவர் யார்?
17.ராம லெட்சுமணர்களுக்கு பலா, அபலா (பலை, அபலை) என்ற அதிசய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தவர் யார்?
18.தசரதனுக்கு வாரிசு உருவாக எந்த முனிவர் வந்து புத்ர காமேஷ்டி யாகம் செய்தார்?
19.அகஸ்த்யரின் ஆஸ்ரமத்துக்குச் செல்லும் முன் ராமனுக்கு தனது தவத்தை எல்லாம் அளித்த முனிவர் யார்?
20.ஜனக மன்னனின் குரு யார்?

21.இந்திரனுடைய அழைப்பை மறுத்துவிட்டு, ராமனையும் ஸீதையையும் தரிசித்து அக்னியில் (தீ) புகுந்து உயிர்நீத்த முனிவர் யார்?
22.பரதனுடன் வந்தவர்களுக்கு தன் தவ வலிமையால் பெரும் விருந்தளித்த முனிவர் யார்?
23.ஸீதைக்கு அணிகலன்கள் அளித்த அநசூயை யாருடைய மனைவி?
- ராமன் கால்பட்டவுடன் பெண்ணாக உருமாறிய அஹல்யாவின் கணவர் பெயர் என்ன?
25.ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணத்தை எழுதிய மஹரிஷி யார்?
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

ANSWERS
1.கிருஷ்ணத் த்வைபாயனர், 2.லோமண ரிஷி, 3.பகதல்ப்ய ரிஷி, 4.பரத்வாஜ மஹரிஷி, 5.அக்னிவேஷ முனிவர், 6. பிருஹதஸ்வ மஹரிஷி, 7. தௌம்ய ரிஷி, 8. துர்வாஸர், 9. கார்காசார்யா, 10. நாரதர், 11.ச்ருங்கி முனிவர், 12.ஷமிக முனிவர், 13. ஸனத்சுஜாதர்; நூலின் பெயர்- ஸநத் சுஜாதீயம், 14.வசிஷ்டர், 15. வால்மீகி முனிவர், 16. அகஸ்த்யர், துதியின் பெயர்- ஆதித்ய ஹ்ருதயம், 17. கௌஸிகன் எனப்படும் விஸ்வாமித்ரர், 18. கலைக்கோட்டு முனிவர். ஸம்ஸ்க்ருதப் பெயர் ரிஷ்ய ஸ்ருங்கர், 19.சுதீக்ஷ்னர், 20.சதானந்தர்தர், 21.சரபங்கர், 22.பரத்வாஜர், 23.அத்ரி மஹரிஷி, 24. கௌதம முனி, 25.வால்மீகி
–SUBHAM–