
Written by S.NAGARAJAN
Date: 4 October 2017
Time uploaded in London- 6-16 am
Post No. 4269
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
நண்பரா, கைக்கூலியா!
மாக்ஸ்முல்லர் மர்மம்! – 4
ச.நாகராஜன்
6
லார்ட் மெக்காலேயின் முழுப் பெயர் தாமஸ் ஜேம்ஸ் பாபிங்டன் மெக்காலே.
மெக்காலே பிறந்த தேதி 25-10-1800
மாரடைப்பால் இறந்த தேதி 28-12-1859
1834ஆம் ஆண்டு சுப்ரீம் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவின் துவக்க உறுப்பினராக அவர் ஆக்கப்பட்டார்.
அடுத்து 1834ஆம் ஆண்டிலிருந்து 1838ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார்.
இநதியாவில் உள்ளவர்கள் நாகரீகமற்ற ஜடங்கள் என்றும். விக்கிரக ஆராதனை செய்பவர்கள் நிச்சயம் திருத்தப்பட வேண்டிய ஜென்மங்கள் – காட்டுமிராண்டிகள்- என்றும் அவர் தீர்மானமான எண்ணம் கொண்டார்.
இதற்கான ஒரே வழி ஆங்கிலக் கல்வியை இங்கு அறிமுகப்படுத்தி இந்திய இரத்தமாக இருந்தாலும், கறுப்புக் கலருடன் இருந்தாலும் எண்ணத்தில் சுத்தமான ஆங்கில டேஸ்டையும் அறிவையும், பழக்க வழக்கங்களையும் இந்தியர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தார்.
இந்த அறிவீ னமான கொள்கையைத் தான் மெக்காலே கொள்கை என்கிறோம்.
இதற்குப் பலியாகி இதை ஆமோதித்தோர் பிரிட்டனில் இருந்த ஏராளமானோர்.
மாக்ஸ்முல்லரும் இந்தக் கொள்கையில் விழுந்தவரே!
அனைத்து இந்தியரும் கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு எப்படியாவது உடனடியாக இந்தியாவை கிறிஸ்தவ நாடாக்கி விட வேண்டும் என்பதே மெக்காலேக்களின் ( மெக்காலே கொள்கையைக் கொண்டோர்) ஒரே எண்ணமாக இருந்தது.
இதற்கான வழி வகைகளை முழு வீ ச்சுடன ஆராய்ந்து அமுல் படுத்தினர் பாதிரிமார்கள்.
இந்த நிலையில் தான் மாக்ஸ்முல்லர் லண்டன் வந்தார்.
7
மிஷனரிகளுக்கு பிரமாதமான வேலை இந்தியாவில் காத்திருந்தது.
முப்பது கோடிப் பேர்கள்.
அவர்கள் 56 தேசங்களாகப் பழைய பாரதத்தில் இருந்து இப்போது ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாக ஆகி இருக்கின்றனர்.
பல்வேறு மொழிகள்.
ஆகவே
- ஐநூறுக்கும் மேற்பட்ட சம்ஸ்தானங்களை மேலும் பிளவு படுத்த வேண்டும்.
- இருக்கின்ற உள்ளூர் மொழிகளை வைத்து எவ்வளவு பிரச்சினையையும் பிரிவினையையும் உருவாக்க முடியுமோ அவ்வளவையும் உருவாக்க வேண்டும்.
- அனைவரையும் ஒன்று படுத்தும் ஆதார மொழியான சம்ஸ்கிருத்த்தை அழிக்க வேண்டும்; அது ஒன்றுமில்லாத மொழி என்று திட்டமிட்டு “ஆதாரபூர்வமாக அறிஞர்களின் பின்னணியில் ஆய்ந்து” முடிவை வெளியிட்டு சொந்த மக்களே அதை எள்ளி நகையாட வேண்டும்.
- ஆரியர்கள் படையெடுத்ததால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.திராவிடர்கள் வேறு இனம். அவர்கள் ஆரியர்களால் தெற்கே துரத்தப்பட்டவர்கள் என்று ஓங்கி முழங்கி அதை ஆதரிக்கும் ஒரு கைக்கூலிப் படையை உருவாக்க வேண்டும்.
- ஆங்கிலத்தைப் புகுத்தி அதைப் பேசுவோருக்கு உயர் பதவி அந்தஸ்து தரப்படல் வேண்டும். அவர்கள் ஆங்கில ஜாதி – அதாவது மேம்பட்ட ஜாதி என்ப்தை கணம் தோறும் வாழ்க்கை முறையில் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
- .சொந்த கலாசாரத்தைப் பின்பற்றுவோர் கல் தோன்றிய காலத்தில் இருந்த காட்டுமிராண்டிகள்; அவர்களின் இராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் உள்ளிட்டவை சுத்த புளுகு மூட்டைகள் என்ற பிரச்சாரம் பலப்படுத்தப்பட வேண்டும்.
- வேத மந்திரங்கள் அர்த்தம் இல்லாதவை; சிறுபிள்ளைத்தனமானவை என்று அடிக்கடி திருப்பித் திருப்பி “அறிஞர்களால்” சொல்லப்பட வேண்டும்.
- ஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து சண்டையிடச் செய்ய வேண்டும்.
- தீண்டாதார் என்று ஒரு கோஷ்டியை இனம் காட்டி ஒட்டு மொத்தமாக அவர்களை ஹிந்து மதத்திலிருந்து பிரிக்க வேண்டும்.
10 ) ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தீராத தொடர் பகையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கி அதை நீடித்து வளரச் செய்ய வேண்டும்.
- எவ்வளவு விதமாக எத்துணை அளவு நாட்டைப் பிரித்துத் துண்டாட முடியுமோ அத்துணை அளவு அதைச் செய்ய வேண்டும்.
- இந்த நோக்கங்களுக்கு ஆதரவாக உயர் குடி மக்களையும் படித்தவர்களையும், அறிஞர்களையும் பொன், பெண், பதவி உள்ளிட்ட அனைத்தையும் விலையாகக் கொடுத்து வாங்குதல் வேண்டும். அவர்கள் லண்டனின் மவுத் பீஸாக விளங்கினால் பாமர மக்கள் செய்வதறியாது தானே பின் தொடர்வர். வேலை சுலபமாகும்.
- மேலை நாட்டு நடை, உடை, பாவனைகளை அதிகமதிகம் பரப்ப வேண்டும். அதை அனைவரும் மதிக்கும் படி செய்ய வேண்டும்.
- ஓட் போடும் முறை வந்தால் அதை மூலதனமாகக் கொண்டு இன்னும் ஏராளமான பிரிவினைகளைச் செய்யலாம்.
- இதற்கு ஆகும பணத்தை இந்தியாவிலிருந்து சுரண்டி எடுத்து லண்டனுக்கு அனுப்பி அங்கிருந்து பட்ஜெட் போட்டு மீண்டும் இந்தியாவிற்கு இந்த நோக்கங்களுக்காக அனுப்பல் வேண்டும்.
இதற்காக முழு சேனை மிஷனரிகள் என்ற பெயரில் தயாராக வேண்டும் என்ற நிலைப்பாடு இதை ஒட்டி எழவே மிஷனரிகள் தயாராயினர்.
மேலே கண்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்திய வரலாற்றைச் சில நிமிடங்கள் ஆராய்ந்து பார்க்கும் அன்பர்கள் இன்று இந்தியத் திருநாட்டில் விளங்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் அலங்கோலங்களுக்கும் இவையே காரணம் என்பதை அறிந்து கொள்ள முடியும் – சுலபமாக.
இந்தப் பின்னணியில் மாக்ஸ்முல்லருக்கு வருவோம்.
***
தொடரும்