Article No. 2101
Compiled by London swaminathan (தமிழில் மொழி பெயர்ப்பு)
Date : 27 August 2015
Time uploaded in London :– காலை 8-27
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு மாணவனின் கவனம் எங்கேயோ இருந்தது. ஆசிரியர் அதைக் கவனித்துவிட்டார். மாணவனிடம் கேட்டபோது அவனும் ஒப்புக் கொண்டான். என் மனது வேறு எங்கோ இருக்கிறது. பாடத்தில் கவனமே செலுத்த முடியவில்லை என்றான்.
தான் ஒரு காளை மாடு வளர்ப்பதாகவும், வீட்டை விட்டு வெளியே போனாலும் அதே நினைவுதான் வருகிறது என்றும் சொன்னான். ஏனெனில் அந்த காளை மாட்டின் மீது எனக்கு அலாதியான அன்பு என்றான்.
வாத்தியார் சொன்னார்: “நீ அருகிலுள்ள மலைக்குப் போ. அங்கே ஒரு வாரம் அமர்ந்து காளை மாடு பற்றி சிந்தித்துக்கொண்டு இரு. பின்னர் வகுப்புக்கு வா. ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா என்று பார்ப்போம்” என்றார். பையனுக்கும் அந்த யோஜனை பிடித்திருந்தது. அவனும் அருகிலுள்ள மலையில் அமர்ந்து காளை மாடு பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தான். ஒரு வாரம் உருண்டோடிவிட்டது. பள்ளிக்கூடத்துக்குத் திரும்பி வந்தான். ஆசிரியரும் மாணவர்களும் அவனது வருகையை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தனர்.
பள்ளிக்கூடத்துக்கு வந்த பையன் வகுப்பு அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். ஓஹோ, மரியாதையின் பொருட்டு நிற்கிறான் போலும் என்று கருதிய ஆசிரியர், “பிள்ளாய்! உள்ளே வருவீர்!” என்றார்.
மாணவனோ “எனக்கும் உள்ளே வர அவாதான். ஆனால் என் கொம்பு தடுக்கிறதே என்றான். ஒரு வார காலத்துக்குள் கொம்பு மிகவும் உயரமாக வளர்ந்து விட்டது” என்றான்!
இந்தக் கதையைச் சொன்னவர் சுவாமி ராமதாஸ். அவர் மேலும் சொல்லுவார்:” பாருங்கள் அந்தப் பையன் காளை மாடு பற்றி தியானித்தவுடன், தானே காளை மாடு ஆகிவிட்டதாக எண்ணினான். மனதின் சக்தி அபாரமானது. மனிதனிடம் ஏற்கனவே இறையுணர்வு இருக்கிறது. அதைத் தியானித்தால் விரைவில், எளிதில் இறைத் தன்மையை அடையலாம்”
xxx
உபநிஷத வாக்கியங்கள்:
அஹம் பிரம்மாஸ்மி = நானே பிரம்மம் (கடவுள்)
தத் த்வம் அஸி = நீயே அதுவாக இருக்கிறாய்!
–சுபம்–


You must be logged in to post a comment.