
தீவிரவாதம் ஒழிய வழி
இஸ்லாமியர்கள் முன்னேற இஸ்லாமியர்களே உதவுக! (Post 2632)
WRITTEN BY S NAGARAJAN
Date: 15 March 2016
Post No. 2632
Time uploaded in London :– 7-56 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ச.நாகராஜன்

அமெரிக்காவில் பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் நாவல்கள் லட்சக் கணக்கில் விற்பனையாகின்றன.
இர்விங் வாலஸ், சிட்னி ஷெல்டன், ராபர்ட் லுட்லம் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் காலம் ஒரு காலம்; இன்றைய எழுத்தாளர்களின் காலம் ஒரு காலம்!
முன்பு ஹாலிவுட் திரைப்படங்களிலும் நாவல்களிலும் எதிரியாக சித்தரிக்கப்படுவது ஒரு கம்யூனிஸ்ட் தான். அந்த எதிரியிடமிருந்து கதாநாயகன் கதாநாயகி நாட்டை (அமெரிக்காவை) அல்லது உலகத்தையே காப்பாற்றுவர்.
ஆனால் கொள்கை அளவில் உள்ளீடே இல்லாத கம்யூனிஸ கொள்கையை அது பிறந்த ரஷியாவிலேயே தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
75 ஆண்டுகளுக்குள்ளேயே தள்ளாட்டம் போட்ட கம்யூனிஸ கொள்கை உலக தொழிலாளர்களை ஒன்று சேர்ப்பது இருக்கட்டும்; உள்ளூர் தொழிலாளர்களையே ஒன்று சேர்க்க முடியவில்லை.
சோவியத் யூனியன் சிதறுண்டு போனது; கம்யூனிஸம் காலாவதியானது.
அதன் மிரட்டல் கொள்கை, அடிதடி, வன்முறை, சர்வாதிகாரம் மட்டும் எஞ்சி உள்ளன.
அதை, கலக்கும் காம்ரேடுகள் முதலாக வைத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிழைப்பை ஓட்டுகின்றனர்.
செத்த பிணத்திற்கு தினசரி பூஜை!
இப்போது அமெரிக்கர்களுக்கு உத்வேகமூட்டிய கலக்கல் காம்ரேடுகளைக் காணோம் என்பதால் ஹாலிவுட் தயாரிப்பாளர்களும் எழுத்தாளர்களும் வேறு ஒரு களத்தைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
வந்து சேம்ர்ந்தார் ஒஸாமா பின் லேடன்.
தவறான கம்யூனிஸ கொள்கையை விட மோசமான ஒரு கொள்கையை முன் வைத்து அருமையான ஒரு மதத்தையே காவு கொடுக்க முன் வந்த அவர் செய்த மாபெரும் தவறு இரட்டை கோபுரத் தாக்குதல் தான்!
இப்போது அமெரிக்க சீரியல்கள், ஹாலிவுட் படங்கள், நாவல்கள் அனைத்திலும் வரும் ஒரே வில்லன் தீவிரவாத முஸ்லீம் தான்!
24 என்ற பிரபலமான அமெரிக்க சீரியலில் நம் பாலிவுட் அனில் கபூரும் நடித்துக் கலக்கியுள்ளார்.
அதில் வரும் ஒரு வாக்கியம் இது! முஸ்லீம் தீவிரவாதி சொல்வது:
“நமக்கு எப்போதுமே முதல் எதிரி அமெரிக்கா தான்!”
இது தான் அமெரிக்காவின் தீம். இதற்குத் தக தீவிர வாத முஸ்லீம்கள் செயல்படுகின்றனர்.
ஒரு பெரும் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா தயாராகிறது.
தீவிர வாதத்திற்கு எதிராக!
அதில் மேலை நாடுகள் அனைத்தும் – பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி,பிரான்ஸ், உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஓரணியில் திரள்கின்றன! தீவிரவாத்தை விரும்பாத இதர உலக நாடுகள் அனைத்தும் இந்த் அணிக்கு முழு ஆதரவு தருகின்றன!
கம்யூனிஸம் தானாக அழிந்தது போல தீவிரவாதமும் தானாகவே அழியும் காலம் வந்து விட்டது.
ஆனால் இதற்கு இஸ்லாம் பலி ஆகி விடக் கூடாது. இதை இஸ்லாமிய சகோதரர்கள் நன்கு உணர்ந்து தீவிரவாதிகளை தாமே அழிக்க முற்பட வேண்டும்.
இல்லாவிடில் 24 போன்ற ஏராளமான சீரியல்கள் கோடிக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஆதரவு தரப்படும். தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் முன் வருவது காலத்தின் கட்டாயமாகி விடும்!.
இன்று உலக மக்களின் ஒட்டு மொத்த வெறுப்புக்கும் கோபத்திற்கும் ஆளாகியுள்ளவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளே!
இஸ்லாம் இவர்களிலிருந்து விடுபட்டு முன்னேற இஸ்லாமியர்கள் தாம் உதவ வேண்டும்! செய்வார்களா?
காலம் பதில் சொல்லும்!
*******
You must be logged in to post a comment.