
Research Article written by london swaminathan
Date: 28 May 2016
Post No. 2850
Time uploaded in London :– 7-44 AM
(Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Contact : swami_48@yahoo.com
அமரகோசம் என்ற சம்ஸ்கிருத அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் யமனுக்கு 14 பெயர்கள் பற்றி நான் நேற்று எழுதிய கட்டுரையில் விவரம் காண்க. ஏனைய கடவுளருக்கு
சிவனுக்கு 52 பெயர்களும்
விஷ்ணுவுக்கு 46 பெயர்களும்
பலராமனுக்கு 17 பெயர்களும்
அம்பாளுக்கு 21 பெயர்களும்
லெட்சுமிக்கு 14 பெயர்களும்
கணபதிக்கு 8 பெயர்களும்
முருகன்/ ஸ்கந்தனுக்கு 17 பெயர்களும்
இந்திரனுக்கு 35 பெயர்களும்
அக்னிக்கு 34 பெயர்களும்
யமனுக்கு 14 பெயர்களும்
வருணனுக்கு 5 பெயர்களும்
வாயுவுக்கு 20 பெயர்களும்
குபேரனுக்கு 17 பெயர்களும்
மன்மதனுக்கு 19 பெயர்களும்
ஜினதேவனுக்கு 18 பெயர்களும்
புத்தபகவனுக்கு 7 பெயர்களும்
கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தையும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”.
(இவர்களில் இந்திரன்,அக்னி, குபேரன், வாயு, பிரம்மா, பலராமன்,யமன் பற்றிய பெயர்ப் பட்டியலையும் அதன் விளக்கங்களையும் இங்கே ஏற்கனவே எழுதிவிட்டேன்)

இன்று சூரியனின் பெருமையைக் காண்போம்:–
அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–
(சம்ஸ்கிருத உச்சரிப்பு: சம்ஸ்கிருதத்தில் சொல்லுக்குப் பின்னே இரண்டு புள்ளிகள் ( : ) விசர்கம் இருந்தால் அதற்கு முந்திய உயிரெழுத்தைப் போல உச்சரிக்கவும்; எடுத்துக் காட்டு:– பாஸ்கர: = பாஸ்கரஹ, க்ரஹபதி: = க்ரஹபதிஹி, சித்ரபனு:= சித்ரபானுஹு)
அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்
ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்
த்வாதசாத்மா =
திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்
பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)
அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்
ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்
ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்
விபாகர: = ஒளியூட்டுபவன்
பாஸ்வான்= ப்ளியுடையவன்
விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்
சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)
ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உஅடையவன்
உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)
விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்
அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)
மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்
மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)
அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)
பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)
த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்
தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)
மித்ர: = சூரியன் (நண்பன்)
சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்
விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)
விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)
க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்
த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்
அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)
பானு: = ஒளி
ஹம்ச: = சூரியன்
சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்
தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)
சவிதா= சூரியன்
ரவி: = சூரியன்
சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)
சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.

தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.
பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை.
சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.
அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)
சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.
சூர்ய சாரதியின் பெயர்கள்:- சூர்யசுத:, அருண:, அனூரு:, காஸ்யபி, கருடாக்ரஜ:
கிரணங்களின் பெயர்கள்:– கிரண:, உஸ்ர:, மயூக:, அம்சு:, கபஸ்தி:, க்ருணி:, க்ருஷ்ணி:, பானு:, கர:, மரீசி:, தீதிதி:
சூர்யப் பிரபைக்கான பெயர்கள்:- ப்ரபா, ருக், ருசி:, த்விஷ், பா:, சவி:, த்யுதி:, தீப்தி:, த்யுதிமதி, ரோசி:, சோசி:
தீப்தி போன்ற பெண்களின் பெயர்கள் இந்தப் பிரபை (ஒளி மண்டலம், ஒளிவட்டம்) யிலிருந்து வந்தவையே.
சூரிய வெப்பத்துக்கான பெயர்கள் முதலிய விஷயங்களையும் அமரம் உரைக்கும்.
உரைகாரர்களின் உரைகளுடன் படித்து இன்புறவேண்டிய நூல்.

–சுபம்–
You must be logged in to post a comment.