Written by London swaminathan
Date : 2 September 2015
Post No. 2117
Time uploaded in London : 14–29
Pro-British, Anti-Brahmin Booklet by “Dravidian” Traitors!
(( from the British Library, London))
ஜஸ்டிஸ் கட்சி என்பது இப்போதுள்ள திராவிடக் கட்சிகளுக் கெல்லாம் தாய். அது உடைந்து, உடைந்து பல “மு.க.” கட்சிகள் வந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் பிராமணர்கள் மீதுள்ள கோபம், பிரிட்டிஷாருக்கு ஆதரவாக மாறியது. “எனக்கு ஒரு கண் போனாலும் போகட்டும், பிராமணனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும்” — என்று சிலர் துவக்கிய கட்சி அது. இது எப்படி இருக்கிறது என்றால், குளத்துக்குக் கோபித்துக் கொண்டு ——– கழுவாமல் போனவர் கதையாக இருக்கிறது. சுயநலம் என்பது தேசத் துரோகமாக மாறி பிரிட்டிஷாரே இந்தியாவை நிரந்தரமாக ஆள வேண்டும் என்று காந்தி முதலியோருக்கு எதிராக ஒரு கோஷ்டி கொடி தூக்கியது. பிராமணர் மீதான வெறுப்பும் பிரிட்டிஷாருக்கு தாளம் போடுவதும் எந்த அளவுக்குப் போனது என்பது இந்த நூலைப் படிப்போருக்கு புலப்படும். இதை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து ‘காப்பி’ எடுத்தேன்.
இந்தியாவை என்றுமே பிராமணர்கள் மட்டுமே ஆள்வார்கள் என்ற பிரமையை ஏற்படுத்தி அவர்கள் பிரசாரம் செய்தனர். அந்தப் பிரசாரம் எல்லாம், பாரதி – வ.உ.சி.- வ.வே.சு. ஐய்யர் என்ற மூன்று வீரர்களின் பிரசாரத்தில் வெள்ளத்தில் அடித்துக்கொண்ட வேரற்ற மரங்களாக அடித்துச் செல்லப்பட்டன. இப்போது நாட்டை ஆளும் நரேந்திர மோடி முதல் இதற்கு முன் பல மாநிலங்களை ஆண்ட முதல்வர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்ல என்பதும், சுதந்திர இயக்கத்தை முன்னின்று நடத்திய காந்திஜி பிராமணர் அல்ல என்பதும் இவர்களின் பிரசாரத்தைப் பொய்யாக்கிவிட்டன.
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தலில் போடியிட்டபோது பிராமணர்களாலேயே தோற்கடிக்கப்பட்டனர். இவ்வளவுக்கும் மொத்த ஜனத் தொகையில் பிராமணர் தொகை எப்பொழுதுமே மிகமிகக் குறைவு. ஒரே ஒருமுறை மட்டும் ஜஸ்டிஸ் கட்சி வென்றது. காரணம்? எல்லா கட்சிகளும் தேர்தலை பகிஷகரித்தன. அந்த ஒரு கட்சி மட்டும் வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவாக நின்றது. வேறு யாரும் ஓட்டுப்போட வராததால் அவர்களே அவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பிரிட்டிஷாருக்கு ‘ஜே’ போட்டனர். பின்னர் ஜனநாயக முறையில் அழிக்கப்பட்டனர்.
முற்றும்.
























You must be logged in to post a comment.