ஆறுமுக நாவலர் – அருட்பிரகாச வள்ளலார் மோதல் (Post No3448)

Written by London swaminathan

 

Date: 14 December 2016

 

Time uploaded in London:- 11-34 am

 

Post No.3448

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

சைவ மறுமலர்ச்சியின் தந்தை ஆறுமுக நாவலர்; அவர் பணி செய்திராவிடில் இலங்கைத் தமிழர் ஏராளமானோர் கிறிஸ்தவர்களாக மதம் மாறி இருப்பர். இதே போலத் தமிழ் நாட்டில் அருட்பிரகாச ராமலிங்க அடிகள் செய்த பணி மகத்தானது. எளிய தமிழில், பாரதிக்கும் முன்னோடியாக நல்ல கவி புனைந்தவர். ஆறுமுக நாவலரும் வள்ளலாரும் பிராமணர்கள் அல்ல. இருவருக்கும் இடையேயும் வேண்டாத மோதல் ஏற்பட்டு (ஏற்படுத்தப்பட்டு) கோர்ட் வரை சென்று விட்டது. இறுதியின் ஏனோ தானோ என்று அந்த சண்டை முடிந்தது. நல்ல வேளை, இந்து மதத்துக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை. இருவர் புகழும் வாழ்க.

 

நான் மதுரையில் வடக்கு மாசிவீதியில் யாதவர் பள்ளியில் (யாதவா ஸ்கூல்) ‘ஐந்தாப்பு’ வரை (மதுரை பாஷை- ஐந்தாம் வகுப்பு) படித்தேன். தினசரி பிரார்த்தனை வள்ளலாரின் பாடல்தான்: “கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே……………..”

 

பின்னர் வீடு வீடாகச் சென்று நான் பஜனை செய்த காலங்களில் பாடியதும் வள்ளலார் பாடலே- “அம்பலத் தரசே அருமருந்தே, ஆனந்ததேனே அருள் விருந்தே”. என் தந்தைதான் இதைச் சொல்லிக் கொடுத்தார். அவரே எனக்கு “முன்னவனே யானை முகத்தவனே” — என்ற வள்ளலாரின் பிள்ளையார் பாட்டையும் சிறுவயதில் சொல்லிக் கொடுத்தார். 60 வருடங்களுக்கும் மேலாக இதை தினமும் சொல்லி வருகிறேன்! பள்ளிக்கூடத் தமிழ் நூலில் மனப்பாடப் பகுதியில் வள்ளலாரின் பாடல் “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்…………”. இவ்வாறு வள்ளாலார் எம் வாழ்வில் கலந்தவர்.

 

சின்ன வயதில் சிவாஜி கட்சி — எம்.ஜி ஆர். கட்சி என்று பிரிந்து பள்ளிக்கூடங்களில் சண்டை போடுவோம். பெரியவன் ஆனபோது காஞ்சி சங்கராச்சார்யார் கட்சி- சிருங்கேரி ஆச்சார்யாள் கட்சி என்று மதுரையில் சண்டை போட்டார்கள்; என் தந்தையோ பத்திரிக்கை ஆசிரியர் என்ற முறையில் இருவரையும் ஆதரித்தவர்..

     

அதுபோலத்தான் இந்த வள்ள்லார்- நாவலர் மோதலும் என்பது எனது கணிப்பு. கீழேயுள்ள தகவல் நாவலரின் தமையானார் புதல்வர் எழுதியது. மறுதரப்பு வாதம் இருந்தால் விமர்சனப் பகுதியில் தெரிவியுங்கள்:–

 

 

 

 

–subham–