
WRITTEN BY S NAGARAJAN (for AIR Talk)
Date: 17 March 2016
Post No. 2638
Time uploaded in London :– 5-59 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

எலக்ட்ரானிக் வேஸ்ட் எனப்படும் மின்சார சாதனங்களின் அபரிமிதமான கழிவு உலகின் சுற்றுப்புறச் சூழலுக்கு இன்று ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலாகும்.
ஐரோப்பாவில் மட்டும் 50 மில்லியன் டன் என்ற பெரும் அளவில் மின் சாதனக் கழிவு ஏற்படுகிறது என்றால் உலகெங்கும் எவ்வளவு கழிவு ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கும்.
கணினிகள், அலைபேசிகள், அலுவலக மின்சார சாதனங்கள், பொழுது போக்கு மின்னணுச் சாதனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் என்ற இவை அனைத்திலும் ஏற்படும் கழிவுகள் மலைக்க வைக்கும் ஒன்று.
இவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்தாமல், வாங்குவோர், கழிவு எனத் தூக்கி எறிந்து விடுகின்றனர். சி ஆர் டி எனப்படும் காதோட் ரே டியூப் (Cathode ray tubes) மறுசுழற்சிக்கு உட்படாத ஒன்று. இதில் உள்ள ஈயம், பாஸ்பார்ஸ் (phospors – பாஸ்பரஸ் அல்ல) அபாயம் விளைவிக்கும் வீட்டு சாதனக் கழிவு என அறிவியல் வல்லுநர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாதனக் கழிவுகளால் ஏற்படும் திரவ மற்றும் வாயுக் கழிவுகள் மிகப் பெரும் அபாயத்தைச் சுற்றுப் புறச் சூழலில் ஏற்படுத்துகின்றன. இவை நீர் நிலைகள், நிலத்தடி நீர், மண், காற்று ஆகியவற்றுடன் கலப்பதால் மனிதர்களுக்கு பல அபாயங்களை ஏற்படுத்துகின்றன. நிலம் மற்றும் நீரில் வாழும் விலங்குகளும் ஜந்துக்களும் கூட இவற்றால் பாதிக்கப்படுகின்றன. பாதரஸம், ஈயம், காட்மியம், பெரில்லியம், க்ரோமியம் மற்றும் இதர இரசாயன நச்சுப் பொருட்கள் இவற்றில் இருப்பதால் இவற்றை உரிய முறையில் அகற்ற இதற்காக பிரத்யேகமாக உள்ள அரசு அல்லது தனிப்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.
மின்னணு சாதனங்களில் அலுமினியம், தாமிரம், தங்கம், வெள்ளி, பிளாஸ்டிக், இரும்பு போன்ற அரிய உலோக வகைகள் இருப்பதால் இவற்றைக் கழிவாகத் தூக்கி எறிவது அரிய தாது வளத்தைத் தூக்கி எறிவதாகும். இவற்றை உரிய முறையில் பிரித்தெடுத்து மறு சுழற்சிக்கு உட்படுத்தினால் அரிய செல்வத்தைக் காத்தவர்கள் ஆவோம்.
மின் சாதனக் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதன் மூலம் ஆற்றலை சேமிக்கலாம்; சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதைத்யுடுக்கலாம்; பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்கலாம்; ஆதார வளங்களைக் காக்கலாம்; அரிய உலோகங்களைச் சேமிக்கலாம். சிந்திப்போம்; செயல்படுவோம்.

-subham-

You must be logged in to post a comment.