Article No. 2062
Written by London swaminathan
Swami_48@yahoo.com
Date : 11 August 2015
Time uploaded in London :– காலை 9-55
தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழி வல்லுநர்களும் எண் ஐந்துக்கு ஒரு சிறப்பிடம் தந்துள்ளனர். எவ்வளவோ நூல்கள் இருந்தும் பஞ்ச மஹா காவ்யங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ் சிறு காப்பியங்கள் என்றெல்லாம் பிரித்திருக்கின்றனர். அது மட்டுமல்ல, உரை வகைகளும் ஐந்து; சொற்குற்றங்களும் ஐந்து; அத்வைத சிறப்பு நூல்களும் ஐந்து — என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இங்கே ஏழு தலைப்புகளில் நூல்களின் மற்றும் அடைமொழிகளின் பெயர்களை மட்டும் காண்போம்.
1.ஐம்பெரும் காப்பியங்கள்
சிலப்பதிகாரம் (எழுதியவர் – இளங்கோ அடிகள்)
மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
குண்டலகேசி – நாகுதத்தனார்
வளையாபதி – பெயர் கிடைக்கவில்லை
கடைசி இரண்டு நூல்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
2.ஐஞ்சிறு காப்பியங்கள்
சூளாமணி –
நீலகேசி – தோலாமொழித் தேவர்
உதயணகுமார காவியம்
நாககுமார காவியம்
யசோதா காவியம்
(நான்கு நூல்களை யாத்தவர்களின் பெயர்களை தமிழ்கூறு நல்லுலகம் மறந்துவிட்டது)
3.பஞ்ச மஹா காவியங்கள் (சம்ஸ்கிருதம்)
குமார சம்பவம்– காளிதாசன்
ரகுவம்சம் – காளிதாசன்
கிராதார்ஜுனீயம் – பாரவி
சிசுபாலவதம் – மாக
நைஷதசரிதம் – ஸ்ரீஹர்ச
4.கிரந்த பஞ்சகம்
அத்வைத வேதாந்தத்தின் ஆதாரமாக ஐந்து நூல்கள் கருதப்படுகின்றன. அவையாவன:-
பிரம்மசூத்திரம்
சங்கர பாஷ்யம்
பாமதி ( வாசஸ்பதி மிஸ்ரா எழுதியது)
கல்பதரு (அமலாநந்தா)
பரிமளா (அப்பைய தீக்ஷிதர்)
5.சொற்குற்றங்கள் ஐந்து என அர்த்த சாஸ்திரம் விளம்பும்
அகாந்தி = விளங்காமை
வ்யாகாத = தான் சொன்னதையே மறுத்தல்
புனருக்த = கூறியது கூறல்
அபசப்த = இலக்கண வழு
சம்ப்லவ = சரியான வரிசை இல்லாமை
“அகாந்திவ்யாதாத: புனருக்தமபசப்த: சம்ப்லவ இதி லேகதோஷா:” — அர்த்தசாஸ்திரம் 2-10-57
6.தவிர்க்க வேண்டிய பேச்சுகள் ஐந்து என சரகர் செப்புவார்:
பருசம் = சுடு சொற்கள்
அதிமாத்ர = மிகைப்பட கூறல்
சூசக = நியாயமற்ற தாக்குதல்
அந்ருத = பொய் கூறல்
அகாலயுக்த= சொல்லக்கூடாத நேரத்தில் சொல்லுதல்
“பருஷஸ்யாதிமாத்ரஸ்ய சூசகாந்ருதஸ்ய ச
வாக்யஸ்யாகாலயுக்தஸ்ய தாரயேத்வேகமுத்திதம்”
—சரக சம்ஹிதா, சூத்ரம் 7-28
7.உரை வகைகள்
சூத்திரம் (மூல நூல்)
விருத்தி
பாஷ்யம்
டீகா
வார்த்திகா
–மஹாபாஷ்யம் (பதஞ்சலி எழுதியது)
உரை, விளக்க உரை, மறுப்புரை, அதற்கு எதிரான கண்டன உரை எனப் பல. இவை பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் தெய்வத்தின் குரலில் விளக்கி இருக்கிறார்.
–சுபம்–





You must be logged in to post a comment.