
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 3 October 2018
Time uploaded in London –8-50 am (British Summer Time)
Post No. 5502
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
மநு நீதி நூல்- PART 28
MANAVA DHARMA SASTRA FOURTH CHAPTER CONTINUED……………..
வார விடுமுறையைக் கண்டுபிடித்த இந்துக்கள்! (Post No.5502)
மநு நீதி நூலின் நாலாவது அத்தியாயத்திலுள்ள சுவையான விஷயங்களை முதலில் பகிர்வேன்; முதல் 26 கட்டுரைகளில் நிறைய அதிசயங்களைக் கண்டோம்.

பள்ளிக்கூட மாணவர்களுக்கு வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று கிறிஸ்தவ நாடுகள் அமல் படுத்திய வழக்கத்தை இன்று கடைப் பிடிக்கிறோம். ஆனால் கிறிஸ்துவுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த, ரிக் வேதம் புகழும், ஸரஸ்வதி நதி பற்றிக் குறிப்பிடும், மநு தர்ம சாஸ்திரமோ மாதத்துக்கு குறைந்தது ஆறு நாட்கள் விடுமுறையை அமல் படுத்தியது. சில மாதங்களில் ஆறுக்கும் மேலான நாட்கள் விடுமுறை. அதிசயத்திலும் மஹா அதிசயம்– 4000 ஆண்டுகளாக இன்று வரை வேத பாடசாலைகள் இதைப் பின்பற்றி வருகின்றன.
மாதத்தில் இரண்டு அஷ்டமிக்கள்
மாதத்தில் இரண்டு சதுர்தஸிக்கள்
மாதத்தில் பௌர்ணமி, அமாவாஸை
முதலியன வேதம்படிக்க விலக்கப்பட்ட நாட்கள்.
இந்தப் பகுதியில் மநு ஒரு விஞ்ஞானி என்பதையும் காட்டுகிறார். அவர் பெரிய ஸவுண்ட் (SOUND ENGINEER) எஞ்சினீயர். இடி இடித்தால், கன மழை பெய்தால், பூகம்பம் ஏற்பட்டால், விண்கற்கள் விழுந்தால் 24 மணி நேரம் பள்ளி விடுமுறை (SLOKAS 103, 104, 105). ஆதாவது வேத அத்தியயனம் கிடையாது.
இன்று லண்டன், நியூயார்க் முதலிய இடங்களில் இருந்து வரும் வானவியல் (ASTRONOMY MAGAZINES) பத்திரிக்கையில் மாதம் தோறும் எந்த நாள் இரவில் வானத்தின் எந்தப்பகுதியில் விண்கற்கள் வீழ்ச்சி (METEORITE SHOWERS) வரும் என்று அட்டவணை தருகிறார்கள். பூமியில் ஒவ்வொரு நிமிடமும் டன் கணக்கில் விண்கற்கள் விழுகின்றன. அவற்றில் 99 சதவிகிதம் காற்று மண்டலத்திலேயே பஸ்மமாகி (சாம்பல்) விடும்.சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பூகம்பம், விண்கல் வீழ்ச்சி முதலியவை குறித்துப் பேசியிருப்பது, அதுவும் சட்டப் புத்தகத்தில் பேசியிருப்பது, ஆச்சர்யமான விஷயம். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை போலும்.

அது மட்டுமல்ல; பிராஹ்மணன், பாம்பு, க்ஷத்ரியனைப் (SLOKA 135, 136) பகைக்காதே- உன்னை அடியோடு அழித்து விடுவர் என்று எச்சரிக்கிறார்.
நல்லது செய்பவனுக்கு கெடுதியே வராது என்று (SLOKA 146) கண்ண பிரான் பகவத் கீதையில் (6-40) மொழிந்ததை இவரும் செப்புகிறார்.
சில மிருகங்கள் (SLOKA 113) குறுக்கே போனால் வேத அத்தியனம் கிடையாது என்றும் உரைக்கிறார். பூனை, பாம்பு, தவளை உள்பட. இது அந்தக் கால (மூட) நம்பிக்கை போலும்.
சில மிருகங்களின் ஒலி கேட்டாலும் வேதப் படிப்பு ‘ஸ்டாப்’!
சுடுகாடு, தீட்டு விஷயங்களைச் சொல்லிவிட்டு, அந்தக் காலங்களில் வேத படிக்காதே என்று ஆணை இடுகிறார்
இன்றைய பகுதியில் எந்தக் காலங்களில் எப்படி வேதம் படிக்க வேண்டும் என்று இயம்புகிறார்.
அது மட்டுமல்ல மாமிசம் (SLOKA 131) சாப்பிட்டால் வேதம் படிக்காதே என்பார். காரணம்- அந்தக் காலத்தில் மூன்று ஜாதிகள் வேதம் பயின்றன.

வாஹன சவாரியின் (SLOKA 120) போது வேதம் சொல்லக் கூடாது என்று சொன்னவர் குதிரை, ஒட்டக சவாரியுடன் கடற் பயணத்தையும் குறிப்பிடுகிறார். ஆனால் பிராஹ்மணர்கள் வெளி நாடு செல்ல மநு தடை போட்டதையும், தமிழ்ப் பெண்கள் வெளி நாடு செல்ல தொல்காப்பியன் தடை போட்டதையும் முன்னரே எழுதியுள்ளேன். ஆகவே மநு சொல்லுவது மூன்று ஜாதியினருக்கு என்பது என் ஊகம்.
வேதம் என்பது ஒலி அடிப்படையில் அமைந்த அறிவியல் நூல். ஆகையால் அவர் பல சப்தங்கள், அதிர்வுகள் ஏற்படுகையில் வேதத்தைப் பயிலாதே என்று சொல்லுகிறார்.
ஒரு (SLOKA 121) ஸ்லோகத்தில் ரிக், யஜூர், சாம வேதம் ஆகிய மூன்றும் முறையே தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள் (இறந்த முன்னோர்) ஆகியோருக்கானவை என்ற புதுக் கருத்தை முன்வைக்கிறார்.
ஸ்லோகம் 138 மிகவும் பிரஸித்தமான ஸ்லோகம்
உண்மையச் சொல்; இனிமயானதை மட்டும் சொல்; உண்மையே ஆனாலும் கசப்பானதைச் சொல்லாதே
இப்படிப் பல சுவையான விஷயங்களை கீழே உள்ள ஸ்லோகங்களில் காண்க. நாலாவது அத்தியாயத்திலுள்ள வேறு அதிசயங்களை அடுத்த கட்டுரையில் நோக்குவோம்

கீழேயுள்ள இணைப்புகளைக் காண்க—










–subham-