Compiled by London swaminathan
Date: 12 November 2015
POST No. 2323
Time uploaded in London :– 18-04
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை
நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை
விகடன் ப்ரவேசம்
அகட விகட தீரன் மெத்த மெத்த
அறட்டுக்காரன் கவி புறட்டுக்காரன்
ககனமதைப் பாயாய்க் – கணத்தினில்
கக்கத்திற் சுருட்டிப் பக்குவஞ் செய்வேன்
காசினி முழுவதையும் – எந்தன்
நாசியலடைப்பேன் வாசிபோல
வேதமுடிவறிவேன் – அந்த விமலனையும் விண்டு வேதனையும்
அடுப்புக் கல்லாய் வைத்து – இந்த
அகிலந்தன்னையோர் அகலாக்கி
சப்த சமுத்திர நீர்தன்னைச்
சடுதிலகலியிற் பாய்ச்சியே நான்
தேவர்கள் முதலோரை – விரைவில்
சேர்த்து ஒன்றாயதிற் போட்டுக் காய்ச்சி
பஸ்பமதாய்ச் செய்து – நெற்றியில்
பரிவுடனணிந்திடும் சூரன் நானே!
தந்தினத்தினதினன
நகைச்சுவை இறை வணக்கம்
ககனே காக ரத்னானி க்ரக ரத்னானி மூஷிகா
சயனே மட்குண ரத்னானி சபாரத்னானி விதூஷக
ககனே- ஆகாயத்திற்கு
காக ரத்னானி – காகங்கள் பறப்பது அழகு
க்ரகரத்னானி – வீட்டிற்கழகு
மூஷிகா – பெருச்சாளிகள் வசிப்பது
சயனே- படுக்கைக்கு
மட்குண ரத்னானி – மோட்டுப் பூச்சிகள் வசிப்பது
சபாரத்னானி- சபைக்கு அழகாவது
விதூஷகா – காணதனைத்தியும் கண்டவிதம் பிரசங்கம் செய்யும் விகடப் பிரசங்கிகள்
கோமுட்டிகள் பிரயாண ஒற்றுமை
ஆறுபேர் கோமுட்டிகள் ஒரு ஊருக்குப் போகும் மார்க்கத்தில் கள்ளியும் கத்தாழையும் நிரம்பி, ஆதிசேடன் குட்டிகள் வசிக்கும் பாழுங்கோவிலொன்றிருந்தது. அக்கோவிலில் முக்குறுணியரிசிப் பிள்ளையாரொன்றிருந்தது. விரிந்த முகமும் பெரிய துதிக்கையும் ஒருவிரல் ஆழமுள்ள தொப்புளுமாய் வீற்றிருந்ததைக் காணவும் அதில் ஒருவருக்கு சேஷ்டை சும்மாவிராமல் பிள்ளையார் தொப்புளில் விரலை விட்டார். அப்போது உள்ளேயிருந்த கொள்ளித் தேளொன்று நறுக்கென்று கொட்டியது.
அவர் மூக்கில் விரலை வைத்துமுகர்ந்து பார்த்துக்கொண்டு மற்றொருவரிடம்,”ஏமி பாவா! மஞ்சி வாசனரா, கமகமனி மணக்குசுந்தி” என்றான். இதைக் கேட்டு நிஜமென நம்பிய மற்றொருவனும் தன் விரலையுந்திணித்தான். அவனையும் ஒரு போடு போட்டது. அவனும், :அவுனுரா, பாவா, கஸ்தூரி வசன, கதம்ப வாசன, அத்தர் வாசன, அந்தா சேரி அரிகுமுக்குலோபனிசேஸ்துந்தி” யென்றான்
மூன்றாமவன் கையை விட அவனையும் தீண்டவே அவன் முன்னவனைப் போல வாசனை பிடித்து மெச்சினான். அந்தப் பாழுந்தேளுக்கு விஷமெங்கிருந்ததோ தெரியவில்லை, அத்தனை பேரையும் கொட்டிவந்தது.
இப்படியிருக்க கடைசியான ஒருவன் கையை விட்டான். அவன் மட்டும் அலறிப் புடைத்துக்கொண்டு, “அரே உரே, தேளுரா தேளு, கொண்டித் தேளுரா” எனவே எல்லோரும், அவுனுரா மாஅப்ப” என்று கட்டிக்கொண்டு நெறியின் உபத்திரவத்தால் அழுது சந்தோஷித்தனர்.
–சுபம்—


You must be logged in to post a comment.