
WRITTEN BY London swaminathan
swami_48@yahoo.com
Date: 14 JULY 2019
British Summer Time uploaded in London –7-27 AM
Post No. 6627
Pictures are taken from various sources including Facebook, google,
Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
எண் 5 பற்றி தொடர்ந்து காண்போம்
கர்மாவுக்கான ஐந்து காரணங்கள்
பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்:-
உயர்தோளா! செயல்களின் முடிவு நிலையைக் காட்டும் ஸாங்கியத்தில் எல்லாச் செயல்களின் வெற்றிக்கும் கூறப்பட்டுள்ள இந்த 5 காரணங்களையும் என்னிடமிருந்து உணர்வாய் (18-13)
அதிஷ்டானம் ததா கர்த்தா காரணஞ்ச ப்ருதக்விதம்
விவிதாஸ்ச ப்ருதக் சேஷ்டா தைவஞ் சைவாத்ர பஞ்சமம்
பகவத் கீதை – 18-14
இருப்பிடமாகிய உடலும், அவ்வாறே செயலைச் செய்பவனும், வெவ்வேறாண கருமேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் செய்யும் செயல்களும் ஐந்தாவதாக தெய்வமும்
சரீர வாங்மனோபிர் யத் கர்மப்ர்ராரபதே நரஹ
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவஹ
—பகவத் கீதை 18-15
சரீரத்தாலும் வாக்காலும் மனத்தாலும் நியாயமாகவோ, அநியாயமாகவோ எந்தச் செயல் செய்தாலும் அவை கரும பலனுக்கு காரணங்களாகும்.
ஐந்து காரணங்களில் ஒன்றான தெய்வம் எப்படிச் செயலாற்றும் என்பதற்கு ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட பகவத் கீதை உரையில் அண்ணா சொல்லும் கதை:–
ஒரு பெண் புறா தன் நாயகனைப் பார்த்து “நமது முடிவு காலம் வந்துவிட்டது; வேடன் ஒருவன் வில்லையும் அம்பையும் ஏந்திக் கீழே நிற்கிறான்; மேலே வல்லூறு வட்டமிடுகிறது” என்று பயந்து கூறிக்கொண்டிருக்கையில் ஒரு பாம்பு அவ்வேடனைக் கடித்தது; அவன் விட்ட அம்பு குறி தவறி வல்லூறைக் கொன்றது; புறா தப்பிப் பிழைத்தது. விதியின் போக்கு வெகு அதிசயம்.

–subham–