120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 5 (Post No.2800)

HUGE BUDDHA

Written  BY S NAGARAJAN

Date: 11 May 2016

 

Post No. 2800

 

 

Time uploaded in London :–  6-30 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 5

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 58. அவருக்கு ஒரே ஒரு வருத்தம்.

 

 

தன் தாயை ஒரு முறை கூட அவர் பார்த்ததில்லை. அவர் பிறக்கும் போதே தாய் இறந்து விட்டாரே! ஒரே ஒரு முறை தன் தாயைக் காண அவர் விரும்பினார்.

 

 

தன் தாய்க்கு  முக்தி அளிக்க ஒரு கடுமையான சபதத்தை அவர் மேற் கொண்டார். அது தான் விரலை எரிக்கும் விரதம்.

இதை அசோகா மடாலயத்தில் நிறைவேற்றுவது என்று அவர் நிச்சயித்தார்.

 

 

அங்கு புத்தரின் எச்சங்கள் இருந்தன. அசோகா மடால்யம் சென்று புத்தரின் எச்சங்களுக்கு தன் மரியாதையுடன் கூடிய நமஸ்காரத்தை அவர் செய்தார்.

 

 

ஒரு நாள் இரவு திடீரென்று மிக நீளமான  கோல்டன் ட்ராகன் (தங்க கடல்நாகம்) மிக பிரகாசமாக அவர் கண்ணுக்குத் தெரிந்தது. அங்கு அறைக்கு முன்னால் இருந்த குளத்தில் அது இறங்கியது. அதன் முதுகின்  மீது  ஸு யுன்  ஏறி அமர்ந்தார். அது வானத்தில் பறந்தது.

அடடா, மலைகள், நீரோடைகள், மரங்கள், மலர்கள் என அழகுக்கு அழகு தரும் அனைத்தையும் அவர் பார்த்தார். மிக கம்பீரமான அதி அழகான அரண்மனைகள், மாளிகைகளை எல்லாம் அது கடந்தது. ஒரு அறையை அடைந்தது.

ஸு யுன்  அந்த அறையில் தன் அன்னையைக் கண்டார். “அம்மா! தயவு செய்து இந்த ட்ராகனின் மீது ஏறி மேற்கு சுவர்க்கத்தில் உள்ள அமிதாப புத்தரை அடையுங்கள்’ என்று கூறினார்.

ட்ராகன் மீண்டும் கீழிறங்க  ஸு யுன்  கண்ணை விழித்தார். மனமும் உடலும் குளிர்ந்திருக்க பார்வையோ முழுவதும் அறியத்தக்க விதத்தில் தீர்க்கமாக இருந்தது.

 

 

அந்த ஒரே ஒரு தடவை தான் அவர் தன் அன்னையைப் பார்த்தார்!

 

 

தினமும் நமஸ்காரம் செய்வது தொடர்ந்தது. ஒரு நாள் திடீரென்று உடல் நலம் சீரில்லாமல் போனது.

உட்காரக் கூட முடியவில்லை. எல்லோரும் ஸு யுன்னின் இறுதி நாள் நெருங்கி விட்டது என்றே நினைத்தனர்.

தன் விரதத்தை முடிக்காமல் சாகக் கூடாது என்று நினைத்தார் அவர்.

 

 

ஆனால் இந்த உடல் நிலையில் விரலை எரிப்பதாவது! அனைவரும் அதை எதிர்த்தனர்.

 

ஸு யுன்  கண்ணீர் ததும்ப மடாலய நிர்வாகியாக இருந்த துறவியை நோக்கி, “எனக்கு உடலும் உயிரும் தந்த அன்னைக்கு நான் செய்ய வேண்டிய க்டனைச் செய்ய விரும்புகிறேன். அதில் என் உயிர் போனால் தான் என்ன?” என்றார்.

 

 

அந்த துறவிக்கோ வயது 21 தான்.  அவர் பெயர் ஸான் லியாங். அவர் கண்ணீர் ததும்ப, “ அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். நாளை தான் நிச்சயிக்கப்பட்ட நாள். அனைவருக்கும் ஆகும் உணவுக்கான செலவு என்னுடையது” என்றார்.

மறு நாள் வந்தது.அனைவரும் கூடினர். ஒருமனப்பட்ட மனதோடு புத்தரை துதித்து வணங்கி ஸு யுன் விரலை எரிக்கும் சடங்கைத் தொடங்கினார். விரல் கொஞ்சம் கொஞ்சமாக தீபத்தில் காட்டப்பட்டது!

 

 

அசோகா மடாலயத்தில் புத்தரின் எச்சங்கள் ஏராளம் இருந்தன. புத்தரின் 84000 எச்சங்களை அசோகர் வெவ்வேறு ஸ்தூபங்களில் நிறுவி அந்த எச்சங்களை பூமிக்கடியில் புதைக்குமாறு  கடவுளருக்கு ஆணையிட்டார். கிழக்கில் சீனாவில் இது 19 இடங்களில் உள்ளன. இவற்றில் இரண்டு இடங்களீல் ஒன்று மவுண்ட் வு –டாய் இன்னொன்று அசோகா மடாலயம்.

மவுண்ட் வு-டாயில் ஸ்தூபத்திற்கு அடியில் எச்சம் உள்ளது. அதைக் காண முடியாது.ஆனால் அசோகா மடாலயத்திலோ அது டாய்- காங் என்ற அரசன் அரசாண்ட போது பூமிக்குள்ளிருந்து வெளியே வந்து விட்டது. அங்கே ஒரு ம்டாலயம் ஸ்தாபிக்கப்பட்டு புத்தரின் எச்சம் ஒரு தூணில் வைக்கப்பட்டது.

வரிசையாக நின்று ஒவ்வொருவரும் ஸ்தூபத்திற்கு அருகில் சென்று வணக்கம் செலுத்த வேண்டும்.

 

 

அங்கு தரிசிப்பவரின் மனப் பக்குவத்திற்கு ஏற்ப எச்சம் சிறிதாகவோ பெரிதாகவோ அவர்களுக்குத் தோன்றும். சில்ர் ஒன்றைக் காண்பர். சிலரோ பலவற்றைக் காண்பர். வண்ணமும் மாறும் – பார்ப்ப்வர்களின் நிலைக்குத் தக்கபடி.

 

ஸு யுன் எச்சத்தை தரிசித்த பின்னர் கூடியிருந்த அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்து தன் அறைக்கு மீண்டார்.

அவர் மனம் திருப்தி அடைந்திருந்தது.

தாயை தரிசித்ததோடு  மட்டுமின்றி அவ்ரது முக்திக்கும் அவர் வழி வகுத்து விட்டார்!

-தொடரும்