குளியல் எத்தனை வகை?

shower

bath tub

Article No. 2001

Compiled  by London swaminathan

Date 18  July 2015

Time uploaded in London: காலை 6-39

குளியல் (ஸ்நானம்) ஐந்து வகை என்று பராசர ஸ்மிருதி கூறுகிறது.

மனு ஸ்மிருதியிலும் குளியல் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. ஆனால் அவை வகை பிரிப்பன அல்ல.

இந்துக்களின் வாழ்வு — நீருடன் ஒன்றிணந்தது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் “ஜலம்” உண்டு. பிராமணர்கள் அனுதினமும் தண்ணீரை வைத்துக்கொண்டு மும்முறை தொழ வேண்டும்.

வேத மந்திரங்கள் முதல் சிந்து சமவெளி மொஹஞ்சதாரோ ‘பெரிய குளம்’ வரை இதற்கு எடுத்துக் காட்டுகள் உள. உலகில் சமயத்துடன் தண்ணீரை இந்த அளவுக்கு வேறு எவரும் தொடர்பு படுத்தியதில்லை.

ஆரியர்களும் திராவிடர்களும் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று சொன்ன மாக்ஸ்முல்லர்கள், கால்டுவெல்கள் முகத்தில் கரிபூசும் சான்றுகள் இவை. ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையை ‘டார்பிடோ’ வைத்துத் தகர்க்கும் சான்று இது. குளிர்ப் பிரதேசத்திலிருந்து வந்தவன் தண்ணீர் குளியல் பற்றிப் பேசமாட்டான்! வெளிநாட்டுக் காரர்கள் குளிப்பது அரிது! ஆகையால் பண்பாடு தெரியாமல் அவர்கள் உளறிவிட்டனர்.போகட்டும்.

indus-greatbathsouth

பெரிய குளம், மொஹஞ்சதாரோ

நாலு ஆண்டுக்கு ஒரு முறை கும்ப மேளாவும் 12 ஆண்டுக்கு ஒரு முறை மஹா கும்பமேளாவும், இந்திர விழாவும் கொண்டாடுபவர்கள் நாம். தமிழ் நாட்டில் சோழர்கள் நடத்திய இந்திர விழா இப்பொழுது தமிழ் நாட்டில் அழிந்தாலும் நேபாளத்திலும் தென் கிழக்காசிய நாடுகளிலும் (தண்ணீர் விழா= வாட்டர் பெஸ்டிவல் என்ற பெயரில்) கொண்டாடி வருகின்றனர். இதுபற்றி முன்னரே விரிவாக எழுதிவிட்டேன்.

ஸ்நானானி பஞ்சபுண்யானி கீர்த்தனானி மனீஷிபி:

ஆக்னேயம் வாருணம் பிராம்மம் வாயவ்யம் திவ்யமேவ ச (பராசர ஸ்ம்ருதி)

ஆக்னேயம்= விபூதிக் குளியல்

வாருணம் = நீரில் முழுகிக் குளித்தல்

பிராம்மம் = மந்திரம் சொல்லி நீரை உடல் மீது தெளித்துக் கொள்ளல் (ப்ரோக்ஷனம் செய்தல்)

வாயவ்யம் = பசுவின் பாத துளியை (மண்) உடலில் பூசிக்கொள்ளல்

திவ்யம் = சூரியன் இருக்கும்போது பெய்யும் மழையில் நனைதல்

இவையெல்லாம் வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தண்ணீர் கிடைக்காத இடங்களில் யாவருக்கும் பொருந்தும். ஆனால் இவை விதியன்று; விதிவிலக்குகள் போல அரிதாகப் பயன்படுதுவது. இதே போல தினமும் ஆடைகளைத் துவைத்துக் கட்டிக்கொண்டு கடவுளை ‘மடி’யாக வழிபடுவது இந்துக்களின் வழக்கம். அப்படித் துணியைத் துவைக்க முடியாத ஒரு நிலையில் – குறிப்பாக நீண்ட தூர யாத்திரையின் போது – நாம் கட்டப்போகும் ஆடையை தோய்க்காவிட்டாலும் சூரியனுக்கு முன் “வஸ்த்ராய Fஅட்” என்று சொல்லி உதறிவிட்டுக் கட்டிக்கொள்ளலாம் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

stamp great bath

பிரெஞ்சு பாத்

மேல் நாட்டினர் குளிக்கமாட்டார்கள். ஆகையால் அவர்களுக்கு நீரின் அருமை பெருமை தெரியாது. பிரெஞ்சுக் காரர்கள் மிகவும் மோசம்! 29 பேரில் ஒருவர் வாரத்துக்கு ஒரு முறை குளிப்பர் என்பது பத்திரிக்கையில் வந்த செய்தி. ஆனால் உலகின் பெர்Fயூம் தலைநகர் பாரீஸ் என்பதால் – அவர்கள் உடல் முழுதும் அந்த  வாசனைத் தண்ணீரை அடித்துக்கொள்வர். இதனால் கிண்டலாக என்ன “பிரெஞ்சுக் குளியலோ?” என்று கிண்டல் செய்வர். அதையே நம் ஊரில் ‘காக்காய் குளியல்’ என்போம்.

ஸ்பாஞ்ச் பாத்

வயதானவர்களோ, நோயாளிகளோ, சிறுவர்களோ மேலை நாட்டிலுள்ள “பாத்” தொட்டியில் இறங்க முடியாது. குழாயடி (ஷவர்) வரை நடக்க முடியாது என்றால் ஒத்தடக் குளியல் தருவார்கள். இதற்கு ஸ்பாஞ்சு எனப்படும் கடற்பஞ்சு அல்லது நல்ல ஈரத்துணியை வைத்துக் கொண்டு உடலின் எல்லாப் பகுதிகளையும் துடைப்பர்.

டர்கிஷ் பாத்

துருக்கிக் குளியல் என்பது நீராவிக் குளியல் அறையில் ஆவியில் குளிப்பது. பின்னர் சுடு நீர் ஊற்றில் குளித்து மசாஜ் எடுப்பதாகும்.

இவ்வாறு பலவகைக் குளியல் இருந்தாலும் மேலைநாட்டினர் எல்லோரும் குளிப்பது அபூர்வம்!

கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி – என்பது பாரதீய பண்பாடு!

வாழ்க பாரதம்! வளர்க நம் பண்பாடு!!