
WRITTEN BY R. NANJAPPA
Post No.7893
Date uploaded in London – – 28 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 20 – ஒரு கரு, ஒரு கவி, நான்கு பாடல்கள்!-(1)
R. Nanjappa
ஒரு கரு, ஒரு கவி, நான்கு பாடல்கள்!
ஒரு சிறந்த கவிஞன் ஒரே விஷயம் அல்லது எண்ணம் அல்லது உணர்ச்சி பற்றி பல நிலைகளில், பல வழிகளில் சிந்தித்து எழுதவேண்டும். இதற்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.கதை அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் , சந்தர்ப்பச் சூழ்நிலைகள் வேறுபடும். இதுவே கவிக்குக் கிடைக்கும் வாய்ப்பு. நம் திரைக்கவிகள் அனைவருமே இந்தக் கலையில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
காதலில் தோல்வி அல்லது ஏமாற்றம் என்பது சினிமாவில் முக்கியமான ஒரு “தீம்”. இதை இசை, சாஹித்யம் கலந்து தரும்போது, “சோகம்’ என்ற உணர்ச்சி பாவம் மனதில் எழும். இதைச் சிறந்த முறையில் தரும்போது, இந்த பாவம் “ரஸமாக” மாறுகிறது. ‘உணர்ச்சிவசப்படுதல்’ என்று சொல்கிறோம். நாட்டியக் கலையில், அபிநயம் சங்கீதம் சாஹித்யம் மூன்றும் இணைந்து இந்த பாவத்தை உச்ச நிலைக்குக் கொண்டு செல்லும், சினிமாவில் இதை நடிப்பில் காட்டுகின்றனர்


இந்த ஏமாற்றத்தையும் அதன் விளைவுகளையும் கவிகள் பலவிதமாகக் கவிதையில் வடித்திருக்கின்றனர். நல்ல கவிதைக்கு நல்ல இசையும் அமையும் போல! இப்படி கவிஞர் ஸாஹிர் லுதியான்வி எழுதிய நான்கு கவிதைகளைப் பார்ப்போம். ஏமாற்றம் அல்லது தோல்வி என்பதுதான் கரு. அதை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று பார்ப்போம்.
1. ஜானே ஓ கைஸே லோக் தே
Song: Jaane Woh kaise
Film: Pyaasa 1957
Music: S.D.Burman
Singer: Hemant Kumar
जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला
हमने तो जब कलियाँ माँगी काँटों का हार मिला
ஜானே ஓ கைஸே லோக் தே ஜின்கே ப்யார் கோ ப்யார் மிலா
ஹம்னே தோ ஜப் கலியா(ன்) மாங்கீ கா(ன்)டோ கா ஹார் மிலா
இந்த உலகில் தங்கள் காதல் நிறைவேறப் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள்?
எனக்குத் தெரியவில்லையே!
நான் மலர்களை நாடியபோது எனக்கு முட்களின் மாலை தானே கிடைத்தது!
खुशियों की मंज़िल ढूँढी तो ग़म की गर्द मिली
चाहत के नग़मे चाहे तो आहें सर्द मिली
दिल के बोझ को दूना कर गया जो ग़मखार मिला
हमने तो जब…
குஷியோ(ன்) கீ மன்ஃஜில் டூன்டீ தோ கம் கீ கர்த் மிலீ
சாஹத் கே நகுமே சாஹே தோ ஆஹே(ன்) ஸர்த் மிலீ
தில் கே போஜ் கோ தூனா கர் கயா ஜோ கம்கார் மிலா
நான் சந்தோஷம் நிறைந்த லட்சிய இடத்தைத் தேடினேன்
ஆனால் துக்கத்தால் வளைக்கப்பட்டேன்
நான் நல்ல காதற் சொற்களைக் கேட்க விரும்பினேன்
துக்கம் கலந்த பெருமூச்சு தான் கிடைத்தது
என்னுடைய துக்கம் விலகும் என்று யாரையாவது நெருங்கினால்
என் வருத்தம் இரு மடங்கானது!
बिछड़ गया हर साथी देकर पल दो पल का साथ
किसको फ़ुरसत है जो थामे दीवानों का हाथ
हमको अपना साया तक अक्सर बेज़ार मिला
हमने तो जब…
பிசட் கயா ஹர் ஸாதீ தேகர் பல் தோ பல் கா ஸாத்
கிஸ்கோ ஃபுர்ஸத் ஹை ஜோ தாமே தீவானோ(ன்) கா ஹாத்
ஹம் கோ அப்னா ஸாயா தக் அக்ஸர் பேஃஜார் மிலா
கூட இருந்தவர்கள் எல்லாம் சில காலத்திலேயே என்னை விட்டுப் பிரிந்தனர்
ஆம், ஒரு பைத்தியத்தின் கையைப் பிடித்து நிற்க யாருக்கு நேரம் இருக்கிறது!
என்னுடைய நிழலுக்கே கூட என்னைக் கண்டு பேஜாராகிவிட்டது போலும்!
इसको ही जीना कहते हैं तो यूँ ही जी लेंगे
उफ़ न करेंगे लब सी लेंगे आँसू पी लेंगे
ग़म से अब घबराना कैसा, ग़म सौ बार मिला
हमने तो जब…
இஸ்கோ ஹீ ஜீனா கஹதே ஹை தோ யூ(ன்) ஹீ ஜீலேங்கே
உஃப் ந கரேங்கே லப் ஸீ லேங்கே ஆன்ஸூ பீலேங்கே
கம் ஸே அப் கப்ரானா கைஸா, கம் ஸௌ பார் மிலா
இதுதான் வாழ்க்கை என்று சொல்கிறீர்களா?
சரி, அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்!
பெருமூச்சு விடமாட்டேன், குற்றம் குறை சொல்லமாட்டேன்,
கண்ணீரைச் சகித்துக் கொள்வேன்!
துக்கத்தைக் கண்டு இப்போது எப்படி பயப்படுவது?
அதுதான் நூறுமுறை வந்துவிட்டதே!
எத்தனை உருக்கமான பாடல்! இதை ஹேமந்த்குமார் மிகவும் உருக்கமாகவே பாடியிருக்கிறார்.
இந்த உணர்ச்சிக்கு இலக்கணம் வகுக்கும் பாடல். பர்மனின் இசை பற்றிச் சொல்ல தகுந்த சொற்கள் இல்லை!

2.நிலவுக்கும் தாரகைகளுக்கும் ஆசை!
Song: Maine Chaand aur sitaro(n) ki tamanna
Film: Chandrakantha 1956
Music: N.Dutta
Singer: Mohammad Rafi
मैंने चाँद और सितारों की तमन्ना की थी
मुझको रातों की सियाही के सिवा कुछ ना मिला
मैंने चाँद और सितारों की…
மைனே சாந்த் ஔர் ஸிதாரோ(ன்) கீ தமன்னா கீ தீ
முஜ்கோ ராதோ(ன்) கீ ஸியாஹீ கே ஸிவா குச் நா மிலா
சந்திரனையும் தாரகைகளையும் அடையவேண்டும் என விரும்பினேன்
இரவின் இருளைத் தவிர வேறெதுவும் எனக்குக் கிட்டவில்லை!
मैं वो नग़मा हूँ जिसे प्यार की महफ़िल ना मिली
वो मुसाफ़िर हूँ जिसे कोई भी मंज़िल ना मिली
ज़ख़्म पाएँ हैं, बहारों की तमन्ना की थी
मैंने चाँद और सितारों की…
மை ஓ நக்மா ஹூ(ன்) ஜிஸே ப்யார் கீ மஹஃபில் ந மிலீ
வோ முஸாஃபிர் ஹீ(ன்) ஜிஸே கோயீ பீ மன்ஃஜில் நா மிலீ
ஜக்ம் பாயே(ன்) ஹை, பஹாரோ(ன்) கீ தமன்னா கீ தீ
நான் ஒரு பாடல்– என்னை ஆசையோடு கேட்கும் ரசிகர்கள் கிடைக்கவில்லை
எந்த லட்சியத்தையும் எட்டமுடியாத பயணத்தில் ஈடுபட்ட வழிப்போக்கன் நான்
வஸந்த காலத்தின் இன்பங்களுக்கு ஆசைப்பட்டேன், காயமே கிட்டியது!
நான் சந்திரனுக்கும் தாரகைகளுக்கும் ஆசைப்பட்டேன்……
किसी गेसू, किसी आँचल का सहारा भी नहीं
रास्ते में कोई धुँधला सा सितारा भी नहीं
मेरी नज़रों ने नज़ारों की तमन्ना की थी
मैंने चाँद और सितारों की…
கிஸீகேஸூ, கிஸீ ஆன்சல் கா ஸஹாரா பீ நஹீ
ராஸ்தே மே கோயீ துந்தலா ஸா ஸிதாரா பீ நஹீ
மேரீ நஃஜ்ரோ(ன்) நே நஃஜாரோ கீ தமன்னா கீ தீ
எந்தக் கூந்தலோ, முந்தானையின் உதவியோ கூட கிடைக்கவில்லை
மறைந்துவரும் ஒரு நட்சத்திரம் கூட வழியில் இல்லை
நல்ல காட்சிகளைக் காண கண்கள் ஏங்கின
நான் சந்திரனுக்கும் நிலவுக்கும் ஆசைப்பட்டேன்…….
मेरी राहों से जुदा हो गई राहें उनकी
आज बदली नज़र आती हैं निगाहें उनकी
जिनसे इस दिल ने सहारों की तमन्ना की थी
मैंने चाँद और सितारों की…
மேரீ ராஹோ(ன்) ஸே ஜுதா ஹோ கயீ ராஹே(ன்) உன்கீ
ஆஜ் பதலீ நஃஜர் ஆதீ ஹைய் நிகாஹேன்) உன்கீ
ஜின்ஸே இஸ் தில் நே ஸஹாரோ(ன்) கீ தமன்னா கீ தீ
அவள் பாதை என் பாதையிலிருந்து பிரிந்து விட்டது
இன்று அவள் கருத்து மாறிவிட்டது
நான் அவள் துணையை நாடினேன்
நான் நிலவுக்கும் நட்சத்திரத்திற்கும் ஆசைப்பட்டேன்……..
प्यार माँगा तो सिसकते हुए अरमान मिले
चैन चाहा तो उमड़ते हुए तूफ़ान मिले
डूबते दिल ने किनारों की तमन्ना की थी
मैंने चाँद और सितारों की...
ப்யார் மாங்கா தோ ஸிஸ்கதே ஹுயே அர்மான் மிலே
சைன் சாஹா தோ உமட்தே ஹுயே தூஃபான் மிலே
டூப்தே தில் நே கினாரோ(ன்) கீ தமன்னா கீ தீ
அன்பைத் தேடினேன், அழுகையே கிடைத்தது
சாந்தியைத் தேடினேன், வீசும் புயல் கிடைத்தது
மூழ்கும் இந்த மனது கரையைத் தேடியது
நான் நிலவுக்கும் நட்சத்திரத்திற்கும் ஆசைப்பட்டேன்…….
dil men naakaam ummidon ke basere paaye
roshani lene ko nikala to andhere paaye
rang aur noor ke dhaaron ki tamanna ki thi
main ne chaand aur sitaaron ki…………

பயனில்லாத ஆசைகள் மனதில் குடிகொண்டு விட்டன
வெளிச்சத்தைத் தேடினேன், இருள் கிடைத்தது
சொர்க்கத்தின் ஒளியும் நிறமும் நிறைந்த அந்தப் பெருக்கைத் தேடினேன்
நான் நிலவையும் தாரகைகளையும் தேடினேன், இரவின் இருளே கிடைத்தது.
இதுவும் முதல் பாடலைப் போன்ற அதே மன நிலையை விவரிக்கிறது, சொற்கள் தான் வேறு.
முதல் பாடலில் மலர்–முள் என்றார்; இங்கு ஓளி–இருள் என்கிறார். மனதை வருடும் இசை, ரஃபியின் இனிய குரல்.
என்.தத்தா நல்ல இசைஞர். அவருக்கு உரிய இடமோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லை. ஸாஹீரை பெரிய இசைஞர்கள் ஏற்க மறுத்தபோது, என்.தத்தா போன்ற இசைஞர்களுடன் சேர்ந்தார்.
இந்த இரண்டு பாடல்களும் படத்தில் கதையை ஒட்டி எழுந்தவை. சோக மயம் தான்– ஆனால் மனதைத் தொடும்படி இல்லை! புத்தியில் பதிகிறது– மனதில் அவ்வளவு பாதிப்பில்லை.ஏன்?
நாம் தமிழில் இதைவிடவும் மனதைத் தொடும் பாடலைக் கேட்டிருக்கிறோம்! பழைய “தேவதாஸ்” படத்தில் சி.ஆர். சுப்பராமன் இசையமைத்து, கண்டசாலாவும், ராணியும் பாடிய பாடல்கள் இவற்றை விட உருக்கமானவை. “சீறும் புயலும் மழையும் சேர்ந்தால், சின்னக்குடை தாங்காதே” –அப்பா, இந்த வரிகளை கண்டசாலாவின் குரலில் கேட்டவர்களுக்கு, இதற்கு நிகராக வேறு ஒரு வரியைச் சொல்வது கஷ்டம். “எல்லாம் மாயைதானா..” என்று கே.ராணி எடுக்கும்போதே மனம் திடுக்கிடுகிறது. ‘பயனில்லாத ஆசைகள் மனதில் குடிகொண்டுவிட்டன” என்று இங்கு வருவது ‘நிறைவேறாத ஆசை வளர்வதும் ஏனோ” என்ற தேவதாஸ் பாடலின் வரியை நினைவுபடுத்துகிறது. [இந்தப் பாடலை எழுதியது யார்? எஸ்.டி சுந்தரம் என்று நினைவு. சிலர் உடுமலை நாராயண கவி என்பர்.]
நான் ஸாஹிரின் கவிதையில் குற்றம் சொல்லவில்லை! இதே உணர்ச்சிகளை இன்னும் ஆழமாகத் தமிழ்ப்பாடலில் பார்த்திருக்கிறோம் என்று சொல்ல வந்தேன்!
சரி, இப்படி நடந்ததையே நினைத்து வருந்துவதால் ஆவதென்ன? இதற்கு மாற்று என்ன? இதை வேறு கவிதைகளில் சொல்கிறார். அடுத்துப் பார்ப்போம்.

***