
Post No. 8121
Date uploaded in London – – – 7 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 60 – சித்ரகுப்தா!
R. Nanjappa
சித்ரகுப்தா!
ஹிந்தித் திரை இசையில் சித்ரகுப்தா (1917-1991) தனி இடம் பெற்றவர். 1946 முதல் (எஸ்.டி.பர்மன் காலம்) 80கள் வரை (பர்மனுக்கும் பின்னும்) துறையில் இருந்தவர். சுமார் 150 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பல படங்கள் நல்ல இசையைக் கொண்டிருந்தும் திரையில் வெற்றிபெறவில்லை. பல படங்கள் பெரும் வெற்றி பெற்றன. ஆனாலும் இவரை முதல் வரிசையில் வைத்து எண்ணுவதில்லை. இன்று இவரை பலருக்கும் தெரியாது. இசையமைப்பாளர்கள் ஆனந்த்-மிலிந்த் அப்பா என்றால் தெரியுமோ என்னவோ!
புராணப் படங்கள், ராஜா-ராணி கதை, ஸ்டண்டு படம், சமூகப் படம் என எல்லாவித படங்களுக்கும் இசை அமைத்ததால் இவர் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இவர் இனிமையை என்றும் கைவிட்டதில்லை. இவர் இசையில் உருவான பல அருமையான பாட்டுக்கள் இருக்கின்றன, இரண்டை இங்கு பார்ப்போம்.
சல் உட் ஜா ரே பஞ்சீ
चल उड़ जा रे पछि
चल उड़ जा रे पछि
की अब ये देश हुआ बेगाना
चल उड़ जा रे पछि
ख़तम हुए दिन उस डाली के जिस पर तेरा बसेरा था
आज यहाँ और कल हो वह ये जोगी वाला फेरा था
सदा रहा है इस दुनिया में किस का ाबू दाना
चल उड़ जा रे पछि
तूने तिनका तिनका चुन कर नगरी एक बसाई
बारिश में तेरी भिगी काय धुप में गरमी छै
गम ना कर जो तेरी मेहनत तेरे काम ना आई
अच्छा है कुछ ले जाने से देकर ही कुछ जाना
चल उड़ जा रे पछि
भूल जा अब वो मस्त हवा वो उडाना डाली डाली
जब आँख की कान्ता बन गई चाल तेरी मतवाली
कौन भला उस बाग़ को पूछे हो ना जिसका मालि
तेरी क़िस्मत में लिखा है जीते जी मर जाना
चल उड़ जा रे पछि
रोते है वो पंख पखेरू साथ तेरे जो खेले
जिन के साथ लगाए तूने अरमानो के मेले
भीगी आँखों से ही उनकी आज दुआए ले ले
किसको पता अब इस नगरी में कब हो तेरा आना
चल उड़ जा रे पछि.
சல் உட் ஜா ரே பஞ்சீ கே அப் யே தேஷ் ஹுவா பேகானா
சல் உட் ஜா ரே பஞ்சீ.
பறவையே, நீ இப்பொது பறந்து போய்விடு–
இப்போது இந்த இடம் உனக்கு அந்நியமாகிவிட்டது.
கதம் ஹுவே தின் உஸ் டாலி கே ஜிஸ் பர் தேரா பஸேரா தா..
ஆஜ் யஹா(ன்) ஔர் கல் ஹோ வஹா(ன்) யே ஜோகீவாலா ஃபேரா தா
ஸதா ரஹா ஹை இஸ் துனியா மே கிஸ் கா ஆபூ தானா
சல் உட் ஜா ரே பஞ்சீ..
அந்தக் கிளையில் அமர்ந்திருந்தாயே– அந்த நாட்கள் கழிந்துவிட்டன
இன்று இங்கே, நாளை வேறு எங்கோ என்று பரதேசிபோல் நீ அலைந்துவிட்டாய்
இந்த உலகில் எவருக்காவது சதாகாலமும் நல்ல உணவும் பானமும் கிடைத்தது என்பது உண்டா?
பறவையே, நீ இப்போது பறந்து சென்றுவிடு!.
தூனே டின்கா டின்கா..சுன்கர் நகரீ ஏக் பஸாயீ
பாரிஷ் மே தேரீ பீகீ ஆங்கே(ன்) தூப் மே கர்மீ சை
கம் ந கர் ஜோ தேரீ மேஹ்னத் தேரே காம் ந ஆயே
அச்சா ஹை குச் லேஜானே ஸே தேகர் ஹீ குச் ஜானா
சல் உட் ஜா ரே பஞ்சீ…
நீ சின்னச் சின்ன சுள்ளியாகப் பொறுக்கி எடுத்து உன் வீட்டைக் கட்டினாய்
(அப்படியும்) மழையில் உன் கண்கள் நனைந்தன, வெய்யிலில் சூடானது
உன் உழைப்பு உனக்குப் பலன் தரவில்லையே என்று வருத்தப்படாதே!
ஏதாவது எடுத்துச் செல்வதை விட, சிறிதாவது கொடுத்து விட்டுச் செல்வது நல்லது தானே!
பறவையே, நீ பறந்து சென்று விடு!
பூல் ஜா அப் வோ மஸ்த் ஹவா வோ உடனா டாலீ டாலீ
ஜப் ஆங்க் கீ கா(ன்)டா பன்கயீ. சால் தேரீ மத்வாலீ.
கௌன் பலா உஸ் பாக் கோ பூசே ஹோ நா ஜிஸ்கா மாலீ
தேரீ கிஸ்மத் மே லிக்கா ஹை ஜீதே ஜீ மர் ஜானா
சல் உட் ஜா ரே பஞ்சீ
அந்த இனிமையாக வீசிய காற்று, கிளைக்குக் கிளை தாவி மகிழ்ந்தது ஆகியவற்றை மறந்துவிடு
உன்னுடைய அழகிய நடையும் களிப்பும் இந்த உலகத்திற்கு முள்போல ஆகிவிட்டது
தோட்டக்காரன் இருந்து பராமரிக்காத சோலையைப் பற்றி யார் கேட்பார்கள்?
சுரத்தில்லாமல் வாழவேண்டுமென்றுதான் உன் தலையில் எழுதியிருக்கிறதோ, என்னவோ!
பறவையே, நீ இப்போது பறந்து சென்றுவிடு!
ரோதே ஹை ஓ பங்க் பகேரூ ஸாத் தேரே ஜோ கேலே
ஜின் கே ஸாத் லகாயே தூ நே அர்மானோ(ன்) கே மேலே
பீகீ ஆங்கே ஸே ஹீ உன்கீ ஆஜ் துவாயே லேலே
கிஸ் கோ பதா அப் இஸ் நகரீமே கப் ஹோ தேரா ஆனா
சல் உட் ஜா ரே பஞ்சீ…
உன்னுடன் கூட விளையாடிக் களித்த அத்தனை பறவைகளும் இன்று கண்ணிர் சிந்துகின்றன
அவர்களிடன் சேர்ந்து நீ எத்தனை ஆசைக் கனவுகள் கண்டாய்!
கண்ணீர் மல்கும் கண்களுடன் இன்று அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்
நீ இந்த இடத்திற்கு மீண்டும் எப்போது வருவாயோ, யாருக்குத் தெரியும்?
பறவையே, நீ இப்போது பறந்து சென்றுவிடு!
Song: Chal Ud ja re panchi Film: Bhabhi 1957 Lyrics: Rajendra Krishan
Music: Chitraguta Singer: Mohammad Rafi
YouTube link: https://www.youtube.com/watch?v=TIWvwNty3yE
The same song was recorded by HMV in Talat Mehmood’s voice also (version song -not in the film)
Link https://www.youtube.com/watch?v=gO5HAdQ34oM
This is a great composition, with sublime lyrics, No one can listen to this song without tears welling up in the eyes!
ராஜேந்த்ர க்ருஷ்ணனின் அருமையான கவிதை, ரஃபியின் குரலில் ஒலிக்கும் பாட்டு! மனதை உருக்கும் படியான கவிதை, உருக்கமாகப் பாடியிருக்கிறார் ரஃபி. மிக அருமையான இசை.கண்கள் பனிக்காமல் இப்பாட்டைக் கேட்க இயலாது. இந்த மாதிரி மனதைத் தொடும் பாடல்களை தற்காலத்தவரால் தரவே இயலாது! Their songs come from the computer, not from the heart!
இது கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய ஏவிஎம் படம்- குலதெய்வத்தின் ஹிந்தி வடிவம் என்று நினைக்கிறேன்.
முஃப்த் ஹுவே பத்நாம்
मुफ्त हुए बदनाम किसी पे हाय दिल को लगा के २
जीना हुआ इलज़ाम किसी पे हाय दिल को लगा के …
गये अरमान ले के लुटे लुटे आते है
लोग जहाँ में कैसे दिल को लगते है
दिल को लगाते है अपना बनाते है
हम तो फिरे नाकाम हम तो फिरे नाकाम
किसी से हाय दिल को लगा के मुफ्त हुए
बदनाम ….
समझे थे साथ देगा किसी का सुहाना गम
खुली जो नजर तो देखा तन्हा खड़े है हम
तन्हा खड़े है हम दिन भी रहा है कम
रस्ते में हो गयी शाम रस्ते में हो गयी शाम
किसी पे हाय दिल को लगा के मुफ्त हुए
बदनाम ..
முஃப்த் ஹுவே பத்நாம் கிஸீ பே ஹாயே தில் கோ லகா கே
ஜீனா ஹுவா இல்ஃஜாம் கிஸீ பே ஹாயே தில் கோ லகா கே
யாரிடமோ மனதைப் பறிகொடுத்து, வீணில் அவப்பெயர் வந்தது
வாழ்க்கையே ஒரு குற்றச் சுமையாகிவிட்டது
யாரிடமோ மனதைப் பறிகொடுத்து வீணில் அவப்பெயர் வந்தது
கயே அர்மான் லேகே லுடே லுடே ஆதே ஹை
லோக் ஜஹா(ன்) மே கைஸே தில் கோ லகாதே ஹை
தில் கோ லகாதே ஹை, அப்னா பனாதே ஹை
ஹம் தோ ஃபிரே நாகாம்…
கிஸீ பே ஹாயே, தில் கோ லகா கே
முஃப்த் ஹுவே பத்நாம்….
ஆசைகள் நிறைந்த மனதுடன் சென்றேன், எல்லாம் இழந்து திரும்புகிறேன்
உலகில் மக்கள் எப்படித்தான் ஒருவரிடம் அன்பு செலுத்துகிறார்களோ, தெரியவில்லை!
அன்பு செலுத்துகிறார்கள், தன்னைச் சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள்– தெரியவில்லை!
நான் என்னவோ வெட்டியாக அலைகிறேன்
யாரிடமோ மனதைப் பறிகொடுத்து வீணில் அவப்பெயர் வந்தது
ஸம்ஜே தே ஸாத் தேகா கிஸீ கா ஸுஹானா கம்.
குலீ ஜோ நஃஜர் தோ தேகா தன்ஹா கடே ஹை ஹம்
தன்ஹா கடே ஹை ஹம், தின் பீ ரஹா ஹை கம்
ரஸ்தே மே ஹோ கயீ ஷாம்…
கிஸீ பே ஹாயே தில் கோ லகாகே….
முஃப்த் ஹுவே பத்நாம்..
யாரோ நம் இன்ப–துன்பத்தில் நம்முடன் இருப்பார்கள் என்று நினைத்தேன்
கண்ணைத் திறந்து பார்த்தால்– தனியாக நிற்கிறேன் என்று விளங்குகிறது!
தனியாகிவிட்டேன்–நாளும் கழிந்துவிட்டது
போகும் வழியிலேயே இருட்டிவிட்டது
யாரிடமோ மனதைப் பறிகொடுத்து வீணில் அவப்பெயர் வந்தது.
Song: Muft huve badnaam film: Baraat 1960 Lyrics: Majrooh Sultnpuri
Music: Chitragupta Singer: Mukesh
Youtube link: https://www.youtube.com/watch?v=JtYiroPAOSg
[I am including the audio track because often the original audio tracks have better recording]
இது படம் தொடர்பான பாடல்தான், ஆனாலும் மஜ்ரூஹ் சுல்தான்புரியின் கவிதை சிறப்பானது. இசையும் அருமை. முகேஷின் குரலில் இயல்பாக இருக்கும் உருக்கம் இத்தகைய பாடல்களை உணர்ச்சிக் காவியமாகச் செய்கிறது!
இத்தகைய பல ‘B Grade’ படங்கள் வெற்றிபெறவில்லை, பலருக்கும் தெரிவதில்லை ஆனால் பலவற்றில் அரிய இசை பொதிந்திருக்கிறது. சித்ரகுப்தா இசையமைத்த பல பாடல்கள் இத்தகைய படங்களிலேயே புதைந்து கிடக்கின்றன!
60 ஆண்டுகள் ஆகியும் மக்கள் மனதை விட்டு நீங்காத பாட்டுகள்!
Attachments area
Preview YouTube video Lyrics Video of Song Chal Ud Jaa Re Panchhi Ki Ab Ye Desh Huaa Begaanaa
Lyrics Video of Song Chal Ud Jaa Re Panchhi Ki Ab Ye Desh Huaa Begaanaa