
Post No. 8128
Date uploaded in London – – – 8 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 61 – இரு மணிகள் – ஹேமந்த் குமார், லதா மங்கேஷ்கர்!
R. Nanjappa
ஹேமந்த் குமார், லதா மங்கேஷ்கர்!
| ஹேமந்த் குமார், இசைஞர், பாடகர். தன் இசையிலேயே பாடியதுடன் பிறருக்காகவும் பாடினார். 50களில் இவர் குரலில் ஒரு தனிக் கவர்ச்சி, கம்பீரம் இருந்தது. 50களில் இவர் பிற இசைஞர்களுக்காகப் பாடிய இரு பாட்டுக்களைப் பார்க்கலாம். இவற்றில் ஒரு விசேஷம். அதையும் கவனிக்கலாம். ஒரு தனிப்பாடல் : ஏ பஹாரோ(ன்) கா ஸமா. ye bahaaron kaa samaa, chaand taaron kaa samaa kho na jaaye aa bhi jaa ye bahaaron kaa samaa இந்த இனிய வசந்த காலத்தின் சூழல், இனிய நிலவு, தாரகைகள் மலர்ந்த சூழல்– இவை மறைந்து போவதற்குள் நீ வந்துவிடு! zindagaani dard ban jaaye kahin aisaa na ho saans aahen sard ban jaaye kahin aisaa na ho dil tadap kar na jahaan so na jaaye aa bhi jaa ye bahaaron kaa samaa, வாழ்க்கையில் துன்பம் வந்துவிடப் போகிறது– அப்படி நேராமல் இருக்கட்டும் விடும் மூச்சும் பெருமூச்சாக மாறி துன்பம் தராமல் இருக்கட்டும் துடிக்கும் மனதுடன் உறக்கம் கொள்ளாது இந்த நல்ல சூழல் மறைவதற்குள் நீ இங்கு வா kyaa huaa kyun is tarah toone nigaahein pher li meri raahon ki taraf se apni raahein pher li zindagi ka kaaravaan kho na jaaye aa bhi jaa உனக்கு என்ன நேர்ந்தது? ஏன் இப்படி என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டாய்? என் பாதையிலிருந்து உன் பாதையைத் திருப்பிக்கொண்டாய்? வாழ்க்கையின் நல்ல போக்கு மாறுவதற்குள் நீ இங்கு வா! இந்த அழகிய சூழல் மாறிவிடப் போகிறது! Song: Ye Baharo(n) ka sama film: Milap 1955 Lyrics: Sahir Ludhianvi Music: N.Dutta Singers: Hemant Kumar. Lata separately, in tandem Here lyrics are given for Hemant Kumar version. YouTube link: https://www.youtube.com/watch?v=3TUtFWwlklw Hear Lata Mangeshkar’s version also here: https://www.youtube.com/watch?v=-sGOg_MiSl8 எஸ்.டி.பர்மனுக்கு உதவியாளராக இருந்த தத்தா, முதலில் இசையமைத்த படம் ‘மிலாப்‘. இவருக்கு ஸாஹிர் லுதியான்வியின் கவிதை மீது ஒரு மோகம்! பல முன்னணி இசைஞர்களுக்கு ஸாஹிரின் போக்கு பிடிக்கவில்லை. தத்தா பல படங்களில் ஸாஹிர் பாட்டுக்கு இசையமைத்தார்.. ஒரு டூயட் : பீமார் ஏ மொஹப்பத் கா बीमार ए मोहब्बत का इतना सा फ़साना है मरता है कोई तुम पर जीने का बहाना है साँसें तो हैं उलझी सी दिल है तो दीवाना है मरता है कोई तुम पर जीने का बहाना है बीमार ए मोहब्बत का सीखे हैं मेरे दिल ने अंदाज़ तेरे दिल के कुछ और भी दीवाने बेचैन हुए मिल के पहलु में कसक सी है होंठों पे तराना है मरता है कोई तुम पर जीने का बहाना है बीमार ए मोहब्बत का दिल मे तेरी सूरत ने एक शम्मा जलायी है ये रात मोहब्बत की तक़दीर से आई है धड़कन की सदा सुन लो खामोश ज़माना है मरता है कोई तुम पर जीने का बहाना है बीमार ए मोहब्बत का பீமார் ஏ மொஹப்பத் கா இத்னா ஸா ஃபஸானா ஹை மர்தா ஹை கோயீ தும் பர், ஜீனேகா பஹானா ஹை காதல் என்னும் நோய்– இதில் என்ன சிக்கல்? இவ்வளவுதான்– வாழ்கிறேன் என்ற பெயரில் உனக்காக உயிரைவிடவும் யாரோ துணிந்து விட்டார்! ஸான்ஸே தோ ஹை உல்ஜீ ஸீ தில் ஹை தோ தீவானா ஹை மர்தா ஹை கோயீ தும் பர், ஜீனே கா பஹானா ஹை பீமார் ஏ மொஹப்பத் கா… மனது பைத்தியமாகி விட்டது, மூச்சு முட்டுகிறது! வாழ்கிறேன் என்ற சாக்கில் யாரோ உன்மீது உயிர்விடவும் துணிந்தார்! இந்தக் காதல் என்னும் நோய்…. ஸீகே ஹை மேரே தில் நே அந்தாஃஜ் தேரே தில் கே குச் ஔர் பீ தீவானே பேசைன் ஹுயே மில் கே பஹலூ மே கஸக் ஸீ ஹை, ஹோடோ(ன்) பே தரானா ஹை மர்தா ஹை கோயீ தும் பர், ஜீனே கா பஹானா ஹை பீமார் ஏ முஹப்பத் கா… என் மனது உன் மனதின் போக்கை அறிய முற்படுகிறது பைத்தியம்! உன்னுடன் சேர்ந்ததில் நிம்மதியை இழந்து விட்டது! நடையில் ஒரு மிடுக்கு, உதட்டில் ஒரு பாட்டு வந்து விட்டது! வாழ்கிறேன் என்ற பெயரில் உன் மீது உயிரை விடவும் யாரோ துணிந்தார்! தில் மே தேரீ ஸூரத் நே ஏக் ஷம்மா ஜலாயீ ஹை ஏ ராத் முஹப்பத் கீ தக்தீர் ஸே ஆயீ ஹை தட்கன் கீ ஸதா ஸுன்லோ காமோஷ் ஃஜ்மானா ஹை மர்தாஹை கோயீ தும் பர், ஜீனே கா பஹானா ஹை என் மனதில் உன் முகம் ஒரு விளக்கை ஏற்றிவைத்து விட்டது இந்த அன்பான இரவு விதி வசத்தால் வந்ததாகும்! உலகமே நிசப்தமாக இருக்கிறது– என் இதயத்துடிப்பைக் கேள்! வாழ்கிறேன் என்ற பெயரில் யாரோ உன்மேல் மடியவும் துணிந்தார்! Song: Beemar e mohabbat ka Film: Teesri Gali 1958 Lyrics: Majrooh Sultanpuri Music: Chitragupta Singers: Hemant Kumar & Lata Mangeshkar YouTube link: https://www.youtube.com/watch?v=E9-leS1krss https://www.youtube.com/watch?v=DqD2zrb806A மஜ்ரூஹ் ஸுல்தான்புரியின் அருமையான காதல் கவிதை! சித்ரகுப்தாவின் அருமையான இசை! இது ‘B grade’ படத்தில் மாட்டிக்கொண்டது! இந்தப் படத்தை எடுத்தவர் கோப் (Gope) என்ற பழைய காமெடி நடிகர். இந்தப் படத்தில் அவர் பேசுவதாக ஒரு வசனம் வரும்: “மை ஊபர் ஆதா ஹூ(ன்)” – இதோ, நான் மேலே வருகிறேன் என்று வரும். படப்பிடிப்பின்போது இந்த வசனத்தை அவர் பேசும்போதே இதயத் துடிப்பால் உயிர் நீத்தார்! பிறகு எப்படியோ படம் வெளிவந்தது. பிரபலமாகவில்லை. இந்த அருமையான பாடல் அதில் புதைந்துவிட்டது. இங்கே முதல் பாட்டு ஒரே மெட்டில் ஹேமந்த் குமார், லதா மங்கேஷ்கர் இருவரும் தனித்தனியாகப் பாடியது. இத்தகைய பாடல்களை Tandem Songs என்பர். இப்படிப் பல பாட்டுக்கள் இருக்கின்றன். ஆனால் ஆண் பாடகர் பாடிய எந்தப் பாட்டும் எந்தப் பெண் பாடகர் குரலிலும் எடுபடவில்லை! இங்கும் ஹேமந்த் குமார் குரலுக்கு லதா மங்கேஷ்கர் ஈடுகொடுக்க முடியவில்லை! ஆனால் அடுத்த டூயட்டில் இருவரும் இணைந்து பாடி பாட்டு பிரமாதமாக அமைந்து விட்டது! இத்தகைய டூயட் பாடல்கள் நம் திரை இசைக்கே உரித்தானவை! வேறு எங்கும் காணமுடியாது! ஹிந்தித் திரையிசையில் குறிப்பாக தலத்–லதா, ஹேமந்த் குமார்–லதா, ரஃபி–கீதா தத், ஹேமந்த் குமார்–கீதா தத் பாடிய டூயட் பாடல்கள் அனைத்தும் சிறந்தவை. இந்தக் குரல்களுக்கிடையே ஒரு தனிக் கவர்ச்சி இருக்கிறது! தமிழிலும் அருமையான டூயட் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் குரல்கள் இப்படிக் குழைந்து வருவது அபூர்வம் தான் என்று தோன்றுகிறது! வணங்காமுடியில் இரு டூயட்கள் பிரமாதமானவை: இசை ஜி.ராமனாதன் – மோகனப் புன்னகை செய்திடும் நிலவே– டி.எம்.எஸ்–சுசீலா – வாழ்வினிலே இந்தாள் இனி வருமா– ஏ.எம்.ராஜா– சுசீலா நாடோடி மன்னனில் ‘கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே‘- டி.எம்.எஸ்–ஜிக்கி. இசை எஸ்.எம். சுப்பையா நாயுடு. தமிழ்த்திரையில் இத்தகைய இனிய பாடல்கள் வித்தியாசமானவை! [நடிகர்களைப் பிடிக்காதவர்கள் கண்களை மூடி பாட்டை மட்டும் கேட்கவும்!] Attachments area Preview YouTube video YE BAHARON KA SAMA MILAP HEMANT |