ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்! (Post No.4047)

Written by S NAGARAJAN

 

Date: 3 July 2017

 

Time uploaded in London:-  6-40 am

 

 

Post No.4047

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்!

 

ச.நாகராஜன்

இப்போது உலகெங்கும் நடைபெற்று வரும் நிகழ்வுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன, திகைக்க வைக்கின்றன!

ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்லாம் மதத்தைக் கண்டு பயப்பட்டு தங்கள் மதத்தையும் நாட்டையும் காப்பாற்ற முனைப்போடு ஈடுபட உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பிக்கும் காட்சியைக் காண்கிறோம்.

 

 

ஆஸ்திரேலியாவிலோ, எங்கள் தேசத்தின் அரசியல் சாஸனம் மற்றும் பண்பாட்டுக்குத் தக வாழ முடியுமானால் இங்கு வாழுங்கள்; இல்லையேல் நடையைக் கட்டுங்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் முஸ்லீம்களை நோக்கி எச்சரிக்கை கலந்த அறிவுரையை சில தினங்களுக்கு முன்னர் வழங்கியதையும் காண்கிறோம்.

 

 

மியான்மரிலோ 969 இயக்கம் முஸ்லீம்களை ஒதுக்கி வைத்து புத்த மதத்தினரின் கடைகளிலேயே அனைத்தையும் வாங்குங்கள் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

 

 

அமெரிக்காவிலோ முன்னர் ரஷியாவை எதிரியாகச் சித்தரித்து வரும் நாவல்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களை அறவே காணோம். அதற்குப் பதிலாக இஸ்லாமிய தீவிரவாதிகளை பயங்கரமாகச் சித்தரித்து அமெரிக்காவைக் காப்பாற்ற விழைவதற்கான அறைகூவல் கொண்ட நாவல்களும் சீரியல்களும் ஏராளமாக வருவதைக் காண்கிறோம்.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

 

;பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமியரும் ஹிந்துக்களும் ஹிந்து நாட்டில் இணைந்து வாழ்வதை இப்போதைய உலக நோக்கில் கண்டு பிரமிக்க வேண்டியிருக்கிறது.

 

பாபரிலிருந்து ஆரம்பித்து ஔரங்கசீப் வரை பற்பல ஆண்டுகள் முஸ்லீம்களே ஹிந்து நாடான பாரதத்தை ஆண்டனர். ஆனாலும், தீவிரமான மதமாற்ற முயற்சியை அவர்கள் மேற்கொண்ட போதிலும், ஹிந்துக்களைப் பெருவாரியாக மாற்ற முடியவில்லை.

 

 

அதே சமயம் அவர்களை அப்படியே ஜீரணித்ததோடு தங்களின் அற்புதமான கலாசாரத்தை அவர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதையும் ஹிந்து மதம் சுட்டிக் காட்டி மதமாற்றம் தேவையில்லை என்ற நோக்கையும் எடுத்து வைத்து வந்திருக்கிறது.

 

வரலாற்று ரீதியாக் ஒரு சில உண்மைகளை இங்கு காண்போம்.

அக்பர் முதன் முதலாக ஹிந்துக்களும் இஸ்லாமியரும் ஒருங்கிணைந்து அன்யோன்யமாக வாழ வேண்டும் என்று முயற்சித்தார்.தீன் இலாஹி உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டார்.

 

 

அடுத்து ஜிஹாங்கீர் இந்த முய்றசியை மேற்கொண்டு வளர்த்தார்.

அக்பரின் பேரனான தாரா ஷிகு இன்னும் அதிக முயற்சிகளை மேற்கொண்டார்.

ராமாயணம், உபநிடதங்கள், கீதை ஆகிய அரிய இதிஹாஸ வேத நூல்கள் பெர்சிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

இந்திய சிந்தனை பெர்சியாவில் ஊடுருவியது.

அடுத்து முகம்மது கஜினியில் சமகாலத்தவரான,

அல்பெரூனி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பொது அற்புதமான் இந்த தேசத்தைக் கண்டு வியந்தார், பிரமித்தார்.

ஹிந்து மற்றும் புத்த மத நூல்கள் பலவற்றை ஆராய்ந்தார், மொழி பெயர்த்தார். புராணங்களின் மீது அவர் பெருமதிப்பைக் கொண்டிருந்தார்.

 

 

இருபத்தி இரண்டு சம்ஸ்கிருத ஆதார நூல்களை ஆராய்ந்து தனது வானவியல், ஜோதிடம், பூகோள நூலை உருவாக்கினார்.

இதை விட ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை இன்னும் ஒரு படி மேலே சென்றது.

 

குரு- சிஷ்ய பரம்பரை ஒன்று உருவானது

முஸ்லீம் மகான்கள் அல்லது குருமார்கள் ஹிந்து சீடர்களைப் பெற்றனர். ஹிந்து யோகிகள், ம்கான்கள் முஸ்லீம் சீடர்களைப் பெற்றனர்.

 

எங்கும் கலகமோ சச்சரவோ கருத்து வேறுபாடோ ஏற்படவில்லை.

 

பஞ்சாபில் இரு கல்லறைகள் உள்ளன. ஒன்று,  முஸ்லீமான ஜ்மாலி சுல்தானுடையது. இன்னொன்று ஹிந்து மகானான தியால் பவானி அவர்களுடையது. இருவரும் மிக நெருங்கிப் பழகிய நண்பர்கள். அந்த நட்புக்கு அடையாளமாக் இருவரின் கல்லறைகளும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் உள்ளன. இருவரின் சீடர்களும் மிகவும் ஒற்றுமையாக இருவரையும் போற்றி வழிபடுகின்றனர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவர் முஸ்லீம் மகானான பாவா ஃபல்டு. அவர் எதிர்காலத்தை அப்படியே கூற வல்லவர்.

 

இந்த அபூர்வமான சக்தி அவருக்கு ஒரு ஹிந்து யோகியிடமிருந்தே கிடைத்தது.

பாபல் ஸஹானா என்பவர் ஹிந்து மஹான். அவர் ஒரு  முஸ்லீம் பகீருடைய சீடர். அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர்.

 

 

இது ஒரு புற்மிருக்க எட்டாம் நூற்றாண்டில் அராபியர்களால் விரட்டியடிக்கப்பட்ட பார்ஸீக்கள் குஜராத்தில அடைக்கலம் புகுந்தது தனி வரலாறு. அவர்களையும் ஹிந்து மதம் அரவணைத்து ஏற்று அவர்களின் தனித்தன்மையையும் வழிபாட்டையும் மதித்து அவர்களை அவர்கள் வாழ்க்கை முறைப்படி வாழ வழிவகை செய்து உதவியது.

ச்மீப காலத்திய சரித்திரத்தை எடுத்துப் பார்த்தோமானால் கபீர் ஒரு பெரிய யோகியாகத் திகழ்ந்தார். அவருக்கு ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் சீடர்களாக இருந்தனர்.

 

 

அடுத்து மிக சமீப காலத்தில் ஷீர்டி சாயிபாபா முஸ்லீம் மகானாக இருந்தாலும் கூட ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஏராளமான அளவில் அவருக்கு சீடர்களாக இருந்தனர்.

. இன்றும் கூட ஆயிரக்கணக்கில் ஷீர்டியில் உள்ள அவரது சமாதிக்குச் சென்று வழிபடுகின்றனர்.

 

 

கடைசி கடைசியாக மஹாத்மா காந்தி ஹிந்துக்களையும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க அரும்பாடு பட்டார்.

 

ரகுபதி ராகவ ராஜாராம் பதிதபாவன சீதாராம்

ஈஸ்வர் அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்

என்று ‘’அல்லாவும் ஈஸ்வரனும் ஒன்று; அனைவருக்கும் நல்ல புத்திமதியைத் தா’’ என்று மனமுருக வேண்டினார்.

அதையே நவீன பிரார்த்தனை மந்திரமாக ஆக்கி தன் மாலை நேர வழிபாட்டில் அனைவரையும் பாட வைத்தார்.

இப்படி ஒரு பிரம்மாண்டமான மத நல்லிணக்கத் தொடர் முயற்சியை இதர நாடுகளில் வேறு ஒரு நாட்டிலும் காண முடியாது.

 

விரலை மடக்கினால் ஒரே ஒரு தேசம் மட்டுமே நமக்குத் தெரிகிறது.

 

அது தெயவ தேசம். பாரதம் தான். பாரதம் மட்டுமே தான்.

ஹிந்துக்களுக்கு அனைத்து மதங்களும் சம்மதமே!

அதே மனப்பான்மை மற்ற மதத்தினருக்கும் வரும் போது நமது பூமி தெய்வ பூமியாக மாறும்!

 

அதற்கும் ஹிந்து மதம் ஒரு மந்திரத்தைத் தந்திருக்கிறது.

லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து!

 

***