
Written by London swaminathan
Date: 14 January 2017
Time uploaded in London:- 11-59 am
Post No.3543
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக – என்று வாழ்த்துவது மரபு. இது வேத காலத்தில் துவங்கிய வாழ்த்து. எல்லா சம்ஸ்கிருத நாடகங்களையும் மங்கள வாழ்த்துடன் நிறைவு செய்வார்கள். நாட்டிற்கும், நாட்டை ஆளும் மன்னனுக்கும் மங்களம் (பரத வாக்யம்) சொல்லியே முடிப்பர். எல்லா துதிப் பாடல்களையும், தோத்திரங்களையும், இதைப் படித்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பலச்ருதி சொல்லியே முடிப்பர். சங்கீதக் கச்சேரிகள் அனைத்தும் “பவமான சுதுடு பட்டுடு” என்ற தியாகராஜ கீர்த்தனையின் மங்களப் பாடலுடன் முடியும்.
எல்லோரும் பஜனைகளிலும், பூஜைகளிலும் சொல்லும் சில வாழ்த்துப் பாடல்களைப் படித்து, இந்த நன்னாளில், “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” (எல்லோரும் வாழ்க! இன்பமுடன் வாழ்க) என்று நாமும் பிரார்த்தனை செய்வோம்.
சைவ சமய நிகழ்ச்சிகள் அனைத்தும் “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்” (அந்தணர் முதலான எல்லாஜாதியினரும், பசு முதலான எல்லாப் பிராணிகளும் வாழ்க) என்ற தேவாரப் பாடலுடன் முடியும்
பிராமணர்கள் வேத மந்திரங்கள் மூலம் தன, தான்ய, புத்ர பௌத்ர சம்பத்துகள் உண்டாகட்டும் என்று வேத மந்திரம் முழங்கும் போது “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று மற்றொரு கோஷ்டியினர் சொல்லி வாழ்த்துவர்.
உலகில் இப்படி பிராணிகள் முதல் மன்னன் வரை வாழ்த்து சொல்லும் வழக்கத்தை பாரத நாட்டைத் தவிர வேறு எங்கும் காண முடியாது. மற்ற நாடுகளில் மன்னனுக்கோ மஹாராணிக்கோ மட்டும் வாழ்த்துச் சொல்லி முடிப்பர்.
xxx
|
|

பஜனைகளில் பாடப்படும் மங்களம்:-
சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரி மனோஹராய சாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம் தத்தோத்ராய மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம் வேணு க்ருஷ்ண மங்களம்
சீதாராம மங்களம் ராதா க்ருஷ்ண மங்களம்
xxx
சைவ நிகழ்ச்சிகளையும் பூஜைகளையும் நிறைவு செய்யும்போது பாடும் பாடல்
வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!
—சம்பந்தர் தேவாரம்
வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.
–கந்த புராணம்
xxxx

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே /
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய மங்களம் //
வேதவேதாந்த வேத்யாய மேகஸ்யாமலமூர்த்தயே /
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம் //
விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே: /
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம் //
—-ராமாயண பாராயண மங்கள் ஸ்லோகம்
xxxx

பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு
நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்
ப்ரஹ்லாத நாரதாதி பதலு பொகடி ஸண்டு
ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன
—-தியாகராஜ கீர்த்தனை
xxxx
காலே வர்ஷது பர்ஜன்ய:, ப்ருத்வீ சஸ்ய சாலினீ
தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மணா சந்து நிர்பயா:
அபுத்ரா; புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண;
அதநா; சதநா; சந்து ஜீவந்து சரதாம் சதம்!
(பொருள்: காலத்தில் உரிய மழை பொழியட்டும் நெல் வளம் சிறக்கட்டும், நாடு மகிழ்ச்சியால் செழிக்கட்டும், பிராமணர்கள் ( ஒழுக்கமுடைய அறிஞர்கள் ) பயமின்றி வாழட்டும், பிள்ளைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் உடையோர் பேரன் பேத்திகளை ஈன்றெடுத்து மகிழட்டும்,வறியோர்கள் செல்வச் செழிப்படையட்டும். நூறாண்டுக் காலம் நோய் நொடியில்லாமல் வாழட்டும்)

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம்
ந்யாயேந மார்கேண மஹீம் மஹீசா: |
கோ ப்ராஹ்மணேப்யோ சுபமஸ்து நித்யம்
லோகா: ஸமஸ்தா ஸுகிநோ பவந்து ||
இந்துக்கள் பூஜைகள், யாக யக்ஞங்களை முடிக்கும்போது உலகம் முழுதும் வாழப் பிரார்த்தனை செய்வர். இப்படி எல்லா மக்க,,,,,,,,,,,,ம் வாழ்க, எல்லாப் பிராணிகளும் வாழ்க என்பதை, இந்து மதத்தில் மட்டுமே காண இயலும்.
ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் என்ற ஸ்லோகத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே ஞான சம்பந்தர் கீழ்க்கண்டவாறு அழகாக மொழிபெயர்த்துள்ளாற்
வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!
—சம்பந்தர் தேவாரம்
xxx
மல்குக வேத வேள்வி, வழங்குக சுரந்து வானம்,
பல்குக வளங்கள் எங்கும், பரவுக வரங்கள் இன்பம்
நல்குக உயிர்கட்கெல்லாம், நான் மறைச் சைவம் ஓங்கி,
புல்குக உலகம் எல்லாம், புரவலன் செங்கோல் வாழ்க!
—பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம்
xxx

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று உளார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்
—பெரியபுராணம், சேக்கிழார்
சுப மங்களம்! நித்ய ஜய மங்களம்
You must be logged in to post a comment.