Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-10-26 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
திருக்கோவலூர் உலகளந்த பெருமாள் கோவில்!
ச. நாகராஜன்
தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவலூர் (திருக்கோவிலூர், திருக்கோயிலூர் என்றும் அழைக்கப்படும்) 108 வைணவ திவ்ய திருத்தலங்களுள் ஒன்றாகும்.
இத்தலம் விழுப்புரம்- காட்பாடி ரயில் பாதையில் உள்ளது.
தூவடிவின் பார்மகள் பூ மங்கையோடு
சுடராழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற
காவடியின் கற்பகமே போல நின்று
கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை
செம்பொன் செய் திருவுருவம் ஆனான் தன்னை
தீவடிவின் சிவன் அயனே போல்வார்
மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே
திருமங்கையாழ்வார், பெரியதிருமொழி 2-10-9
மூலவர்: திரிவிக்ரமன், உலகளந்த பெருமாள் – திருவடியை உயரத் தூக்கிய நிலையில் நின்ற திருக்கோலம். மூலவர் தாரு மரத்தால் ஆனவர்.
உற்சவர்: ஆயனார் கோவலன் (கோபாலன்)
தாயார்: பூங்கோவல் நாச்சியார்
தல விருட்சம்: புன்னை மரம்
தீர்த்தம்: பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், சக்ர தீர்த்தம்
விமானம்: ஶ்ரீகர விமானம்
மூலவர் வலக்கையில் சங்கும் இடது கையில் சக்ரமுமாகக் காட்சியளிப்பதோடு வலது காலால் பூமியை அளந்தவாறு நிற்கிறார்.
இந்தத் தலத்தைப் பற்றிய பழம்பெரும் புராண வரலாறு ஒன்று உண்டு.
திருமால் திரிவிக்ரம அவதாரம் எடுத்த போது பூமியை அளந்த அவரது திருவடியை பூமாதேவி பூஜித்துப் பெருமையுற்றாள்.
விண்ணோக்கி சத்யலோகம் சென்ற திருவடியை பிரம்மா பூஜித்துப் பெருமையுற்றார். தமது கமண்டல நீரால் பிரம்மா திருமாலின் திருவடியை பூஜித்த போது திருவடியில் பட்டுச் சிதறிய நீர்த் துளிகளே கங்கை, கிருஷ்ணா, பத்ரா, சிலம்பாறு உள்ளிட்ட நதிகளாயின என்று புராணங்கள் கூறுகின்றன.
தனது மூன்றாவது திருவடியால் மாவலியை பாதாளத்தில் புகுத்தி அங்கும் பெருமாள் காட்சியளித்தார்.
அதே அவதாரத்தை இந்தத் திருத்தலத்திலும் காட்டி அருளியதால் இந்தத் திருத்தலம் மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.
இது வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் மிக முக்கியமான க்ஷேத்திரமாக விளங்குகிறது.
இங்கு பெருமாள் வழக்கத்திற்கு மாறாக வலது கரத்தில் சங்கையும் இடது கையில் சக்கரத்தையும் கொண்டு காட்சி தருகிறார்.
பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றாகவும் இது அமைகிறது.
இங்கு கர்பக்ருஹத்திலேயே விஷ்ணு துர்க்கை எழுந்தருளியிருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
இது தான் திவ்யபிரபந்தம் விளைந்த விளை நிலமாகும்.
திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும் இது.
இங்கு ஓடுகின்ற பெண்ணையாறே கிருஷ்ணா பத்ரா நதியாகும்.
வேணுகோபாலர் க்ஷேத்ர பாலக வேடத்தில் இருக்கிறார்.
பிரகாரத்தில் வேணுகோபால், லட்சுமி நாராயணர், லட்சுமி ராகவர், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆஞ்சநேயர், ஆண்டாள், சுக்ராசாரியார் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.
மிக உயரமான கோபுரத்தைக் கொண்டுள்ள தலங்களில் இதுவும் ஒன்று. 11 அடுக்குகளைக் கொண்டதாய் 192 அடி உயரமுள்ளதாய் விளங்குகிறது இங்குள்ள கோபுரம். ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த்க் கோவிலில் மூலவரின் பின்னால் வாமனமூர்த்தி இருந்து அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் தான் முதல் மூன்று அந்தாதிகள் தோன்றின.
ஒரு சமயம் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களும் இந்த ஊரில் ஒருவரை ஒருவர் அறியாமல் தனியே சஞ்சரித்து வந்தனர். ஒரு நாளில் பெரும் மழை பொழியவே இரவு நேரத்தில் மூவரும் ஒரு வீட்டின் இடைகழியில் வந்து தங்கினர். அப்போது ‘ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்’ என்ற அளவில் அந்த இடம் அமைந்திருக்க நான்காவதாக அங்கு வந்த பெருமாள் அவர்களுடன் சேர இட நெருக்கடி ஏற்பட்டது.
இப்படி நெருக்கம் ஏன் ஏற்பட்டது என்பது மூவருக்கும் விளங்கவில்லை.
ஆகவே பொய்கையார் பூமியை அகல் விளக்காக்கி கடல் நீரை நெய்யாக்கி சூரியனை விளக்காக ஏற்றினார். முதல் பாடல் இப்படி மலர்ந்தது:
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.
அடுத்து பூதத்தாழ்வார் அன்பாகிய அகல் விளக்கில் ஆர்வத்தையே நெய்யாக்கி சிந்தை என்னும் திரி கொண்டு ஞான விளக்கை ஏற்றினார். இரண்டாவது பாடல் மலர்ந்தது இப்படி:
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புறு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
இருள் நீங்க இறைவனின் திருக்காட்சியைக் காண முடிந்தது.
பேயாழ்வார் இறைவனின் வடிவழகைக் கண்டு மகிழ்ந்தார்.
உடனே அவரது பாடல் மலர்ந்தது:
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.
இங்கு பொய்கையாரின் பாசுரங்கள் முதல் திருவந்தாதியாகவும், பூததாழ்வாரின் பாசுரங்கள் இரண்டாம் திருவந்தாதியாகவும், பேயாழ்வாரின் பாசுரங்கள் மூன்றாம் திருவந்தாதியாகவும் மலர்ந்தன.
இந்தப் பாசுரங்களில் இறைவன் இங்கு இப்படி காட்சி அளித்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன.
ஆண்டு முழுவதும் ஏராளமான திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.
பக்தர்கள் திரளாகக் கூடி அருள் பெறும் முக்கிய திவ்ய திருத்தலமாக திருக்கோயிலூர் அமைகிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இதற்கு முன்னர் வெளியிட்ட 30கேள்விகள் கடைசியில் உள்ளன ;விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.
31
விசுவாமித்திர முனிவன் அதி பயங்கர கோபத்துடன் எக்காளச் சிரிப்பு சிரித்து வெளியேற எத்தனித்தபோது,வசிட்ட மாமுனிவன் ப்ளீஸ் வெயிட்,ப்ளீஸ் பி பேஷண்ட்PLEASE WAIT, PLEASE BE PATIENTஎன்று சொல்லி தசரதனுக்கு என்ன சொன்னான்?
32
நீ தேரோட்டி மகன்;க்ஷத்ரியர்கள் போட்டியில் நீ இடம்பெற முடியாது என்றுகர்ணனிடம் சொன்னபோது,உடனே அவனை இன்று முதல் அங்க நாட்டுக்கு மன்னன் என்று டிக்ளேர்DECLARATION செய்து பிளாஷ் நியூஸ்FLASH NEWSவெளியிட்டான் துரியோதனன்;அந்த அங்க நாட்டுக்கு ஏன் அங்கம் என்று பெயர் வந்ததாகக் கம்பன் செப்புகிறான்?
33
ராம லெட்சுமணர்களுக்கு பலா,அபலா என்ற இரண்டு மந்திரங்களை விச்வாமித்ரன் அளித்தானே;அவைகளின் பொருள் என்ன?காளிதாசன் இது பற்றி விளம்பியது என்ன?
34
தாடகை என்னும் அரக்கியை கம்பன் எப்படி அழகாக வருணிக்கிறான்?
35
ராமனைப் பார்த்த ஆண்களுக்கு,தாங்கள் பெண்களாகப் பிறந்து இவரை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை எழுமாமே! கம்பனின் அதீதக் கற்பனை வரும் பாடல் எது?
36
இந்தியாவில் எரிமலைகள்/VOLCANOES கிடையாது;ஆயினும் தாடகையை கம்பன் வால்க்கேனோ – எரிமலை என்று வருணிக்கும் வியப்பான இடம் எது?
37
தமிழ்க்கடல் தந்த அகத்தியனை கம்பன் எப்படி அறிமுகப்படுத்துகிறான்?
38
செவிடன் காதில் ஊதிய சங்கு போலஎன்று தமிழ்ப்பழமொழி உண்டு;ஆனால் கம்பன்,தீயவர் காதில் போட்ட சொற்கள் ஒரு காதில் சென்று மனத்தில் தங்காமல் மறு காது வழியாகப் போய் விடும் என்ற உவமையைப் பொருத்தமாகப் பயன்படுத்துவது எங்கே?
39
கம்பன்,ராமாயணம் இயற்றும் காலையில்,அவருக்கு பேருதவி புரிந்தவர் சடையப்ப வள்ளல் என்னும் பெருந்தகை ஆவார்;அவரை அவ்வப்போது கம்பன் புகழ்ந்து நன்றிக் கடன் செலுத்துவான்;அவ்வாறு முதல்முதலில் புகழும் பாடல் எது?
40
ஒருவன் செய்த நற்பயன்/ கல்வி அனைத்தும் மறுபிறப்பில் (ஏழு பிறப்புக்கும்) வரும் என்று வள்ளுவன் சொன்னதைக் கம்பன் எப்படிப் பாட்டில் வடிக்கிறான் ?
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
விடைகள்
31.கறுத்த மா முனி கருத்தை உன்னி. ‘நீ
பொறுத்தி’ என்று அவற் புகன்று. ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?’எனா வசிட்டன் கூறினான்.
கறுத்த மாமுனி – சீற்றம் கொண்டெழுந்த விசுவாமித்திர
முனிவனது; கருத்தை உன்னி – உள்ளக் கருத்தை நினைத்துத்
தேர்ந்து (அவனை நோக்கி); நீ பொறுத்தி என்று அவன்புகன்று –
நீ பொறத்தருள்வாயாக என அவனுக்குச் சொல்லிவிட்டு (பிறகு
இவைகள் களைப்பினைப் போக்கும்;தன்னுடைய தாயின் அரவணைப்பில் செல்லும் நினைப்பினை உண்டாக்கும்;உலககப் புகழ்பெற்ற காளிதாசன்தான் இதனை விளக்குகிறான் :
तौ बलातिबलयोः प्रभावतो
विद्ययोः पथि मुनिप्रदिष्टयोः।
मम्लतुर्न मणिकुट्टिमोचितौ
मातृपार्श्वपरिवर्तिनाविव॥ ११-९
tau balātibalayoḥ prabhāvato
vidyayoḥ pathi munipradiṣṭayoḥ |
mamlaturna maṇikuṭṭimocitau
mātṛpārśvaparivartināviva || 11-9)RAGHUVAMSAM
பொருள் – கற்கள் நிரம்பிய கடினமான பாதையில் சென்ற இருவர்க்கும் பலா,அதி பலா என்ற இரண்டு வேத மந்திரங்களும் களைப்பினை நீக்கின;தாயாருடன் செல்வது போன்ற எண்ணத்தை உண்டாக்கின.ரகுவம்சம் [11-9]
***
34.‘பெரு வரை இரண்டொடும். பிறந்த நஞ்சொடும்.
உரும் உறழ் முழக்கொடும். ஊழித் தீயொடும்.
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம்எனின்.
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே:
பெரியமலைகள் இரண்டுடனும்;தன்னிடம் தோன்றிய நஞ்சுடனும்;
இடிக்கு ஒப்பான முழக்கத்துடனும்; – ஊழிக் காலத்துப் பெரு நெருப்புடனும்;
இரண்டு பிறைச் சந்திரர்கள் சேர்ந்து;எழுகின்ற கடல் ஒன்று உண்டென்றால் அது;
யாவரும் அஞ்சத்தக்க தோற்றத்தை உடைய அவளதுஉடலை ஒத்ததாகும்.
பெருவரை: பெரியமலை. கொங்கைகள் இரண்டும் மலைகள் கண்கள்
இதற்கு முன்னர் வெளியிட்ட30கேள்விகள்;விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்
1
அஞ்சிலே ஒன்று பெற்றான் — என்னும் அருமையான கம்பன் பாடலின் பொருள் என்ன?
2
ராம என்ற இரண்டே எழுத்துக்கள் தரும் அற்புதப்பலன்கள்பற்றிகம்ப இராமாயண சிறப்புப் பாயிரத்தில் ஒரு பாடல் உள்ளது. நினைவுக்கு வருகிறதா அந்தப்பாடல்?
3
எந்த ஒரு நூலினையும் மங்களச் சொற்களுடன் துவங்க வேண்டும் என்ற விதி சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் உள்ளது;கம்பன்,தனது ராமாயணத்தை,எந்தச் சொல்லுடன் துவங்குகிறான்?
4
கம்பனும் காளிதாசனும் என்ன சொல்லி நூலை எழுதத் துவங்கினார்கள்?
5
போற்றுவார் போற்றட்டும்,தூற்றுவார் தூற்றட்டும்;போங்கடா போங்க! நான் சொல்வது தெய்வ மாக்கவி எழுதிய கவிதை என்று கம்பன் செப்பியது எங்கே?
6
வால்மீகியைத் தவிர வேறு இருவர் ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணம் எழுதினார்கள் என்று கம்பன் ஒரு புதிர் போடுகிறானே ! அந்தப் புதிருக்கு விடை கிடைத்ததா?
7
தெய்வ மாக்கவி,முதலில் ராமாயணம் சொன்னவர் என்றெல்லாம் வான்மீகி முனிவரைப் போற்றிய கம்பன் அவருடைய பெயரை எங்கேயாவது பகர்ந்தானா?
8
கம்பன் சர்வ சமய நோக்குள்ளவன்;சைவ,வைணவ பேதம் பாராட்டாதவன்;முடிந்த அளவுக்கு சிவன் பெருமையை அவன் பாடுகிறான்;சரயு நதிப் பாடலில் சிவனை அவன் எப்படிப் புகழ்கிறான்?
9
ஆகாசாத் பதிகம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் பிரதி கச்சதி– என்று பிராமணர்கள் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தன மந்திரத்தில் சொல்கிறார்கள்;இதைக் கம்பனும் சொல்லி,சர்வசமய பொதுநோக்கினைக் காட்டும் பாடல் எது?
10
கம்பன் போகிற போக்கில்Musicமியூசிக்பற்றி ஒரு அருமையான உவமை சொல்கிறான்;இந்தப்பாடலின் பொருள் விளங்குகிறதா?
பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்.
***
11
கம்பன் சொல்லும் அதிசய மூலிகைகள் எவை?
12
தூக்கணாங் குருவிகள்தான் மனிதனுக்கு வீட்டில் விளக்கு ஏற்றுவதைச் சொல்லிக் கொடுத்தன;அவை மின்மினிப் பூச்சிகளை பிடித்துக் கொண்டு போய் கூட்டில் வைத்து அழகு பார்க்கும்;இதைத் தற்கால தீபாவளி,நவராத்ரி,கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்களுடன்DECORATIONSஒப்பிடலாம்;இந்த அதிசயத்தைக் கம்பன் எங்கே குறிப்பிடுகிறான்?
13
கோசல நாட்டுப் பெண்கள் நல்ல படித்த பணக்கார பெண்களாம்;ஆயினும் அவர்கள் ஆபீசுக்குப் போகாமல் வந்த விருத்தினர்களைக் கவனிப்பதே வேலையாகச் செய்தார்களாம்;கம்பனின் இந்த கற்பனை வளத்தை எங்கே காணலாம்?
14
வாலிபால் என்னும் விளையாட்டினைக் கண்டு பிடித்தவர்கள் தமிழ்ப் பெண்கள்தான் ! பிற்காலத்தில் பூப்பந்தாட்டம் துவங்குவதற்கு அவர்களே காரணம்;இதைச் சங்க இலக்கியப்பாடல்களில் காண்கிறோம்;கம்பன் அவர்கள் தினசரி ட்ரெயினிங் எடுத்தத்தைச் சொல்கிறானே ! அது என்ன பாடல்?
15
தாலி பற்றி அடிக்கடி தாலி அறுக்க விரும்பும் பெண்கள் கட்டுரைகளை எழுதி அவர்களின் அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்ப்THOUSAND WATT BULBபோட்டு காட்டுவதைஅவ்வப்போது படிக்கிறோம்;ஆனால் மு.சண்முகம் பிள்ளை,கம்பனும் மில்டனும்நூல் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் எஸ் ஆர் கே ஆகியோர் தாலி உண்டு என்று இலக்கியக் குறிப்புகளைக் காட்டினார்கள் !கம்பனும் தாலி உண்டு என்கிறான் ! அது எங்கே?
16
பட்டி மண்டபம் இன்று பட்டி மன்றமாகிவிட்டது;பட்டி விக்ரமாதித்யன் என்ற மாபெரும் மன்னனும் அறிஞனும் உண்டாக்கிய விவாத சபை இது ! மாணிக்க வாசகரும் ஒன்றும் அறியாத என்னை பட்டி மண்டபம் ஏற்றினையே என்கிறார்;ஏனெனில் அவரை புத்தர்களுடன் வாதிடும்படி சிதம்பரம் தீட்சிதர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர்;அயோத்தியில் பலMANY HALLSஹால்கள்;உண்டாம்;அதில் ஒன்று அறிஞர்கள் மோதும் பட்டி மண்டபம் என்கிறானே கம்பன்;அதைச் செப்பிய இடம் யாதோ!
17
யுவான் சுவாங் என்னும் சீன யாத்ரீகன் அப்பர்,மஹேந்திர பல்லவன் காலத்தில் வந்தான்;அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் குப்தர் காலத்தில் வந்த சீன யாத்ரீகன் பாஹியான்– குப்தர் காலத்தில் வீடுகளுக்கு கதவுகள் இல்லை;அந்த நாட்டில் திருடர்கள் இல்லை என்றான்;கம்பன் கண்ட அயோத்தியின் நிலை என்ன?
18
முதல் முதலாக கம்பன் ராவணனை அறிமுகப்படுத்தும் இடம்– தேவர்கள் அவன் செய்த அட்டூழியங்களை முறையிட்ட இடம் –ஆகும் . வால்மீகியில் இல்லாத அவதார விஷயத்தைக் கம்பன் இங்கே செப்பினானா?
துளசிதாஸ் எழுதிய ஹனுமான் சாலீஸாவில் அனுமன்,சிவ பெருமானின் அவதாரம் என்கிறார்;கம்பன் என்ன சொன்னான்?
21
விஷ்ணு ராமனாகவும்,சிவன் அனுமனாகவும் தேவர்கள் வானரங்களாகவும் அவதரித்ததாகக் கம்பன் சொன்னதைப் பாடல்களில் கண்டோம்;வாலி,சுக்ரீவன் யார் அவதாரம்?
22
ரிஷ்யஸ்ருங்க முனிவரின் தமிழ்ப் பெயர்கலைக்கோட்டு முனிவர் (கலை-மான்);அவரை கம்பன் எப்படிப் புகழ்கிறான்?
23
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை — என்று மூதுரை நூலில் தமிழ் மூதாட்டி ஔவையார்பாடியுள்ளார்.ரிஷ்ய ச்ருங்க முனிவர் நகருக்குள் நுழைந்தவுடன் என்ன நடந்தது?
24
சோழர்கள் ஒரிஜினல் தமிழர்கள் அல்ல என்று புறநானூற்றுப் புலவர்களும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவும் குறிப்பால் உணர்த்துகின்றார்கள்.வடமேற்கு இந்தியாவை ஆண்ட சிபி என்னும் சூரியகுல மன்னன் அவர்களின் முன்னோன்;கம்பன் செப்புவது என்ன?
25
கலைக்கோட்டு முனிவன் தசரதனுக்காக புத்ர காமேஷ்டி யாகம் செய்தவுடன் அக்கினி குண்டத்திலிருந்து வந்த தேவன்,பாயசம் ஏந்திய கலத்தைக் கொண்டுவந்தான் என்று வால்மீகி கூறுகிறார்;கம்பன் வேறு கதை சொல்கிறானே!
26
சுமித்திரைக்கு மாட்டும் இரட்டைப்பிள்ளைகள்பிறந்தது ஏன் என்று கம்பன் காட்டுகிறான்?
27
கம்பன் சொல்லும் ஜாதகக் குறிப்புகள் என்ன?ராமன்,லெட்சுமணன் நட்சத்திரங்கள்- ராசிகள் என்ன?
28
வள்ளுவர் பற்றிக் கம்பன் புகல்வது யாது?
29
ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு என்று விச்வாமித்ர முனிவன் சொன்னவுடன் தசரதன் அவனைவிட்டுவிடு,நானே வருகிறேன்,என்று சொல்லி எப்படித்துடித்தான்?
30
விசுவாமித்திர முனிவரின் கோபத்தையும் எக்காளச் சிரிப்பையும் கம்பன் எப்படி அழகாக வருணிக்கிறான்?
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English Part is at the end of this article
கிருஷ்ண பரமாத்மாவும் ராமனும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் ,அதாவது 100 ஆண்டு வித்தியாசத்தில் இருந்தவர்கள்–என்று ஆர் மார்ட்டன் ஸ்மித் எழுதிய புஸ்தகத்தை மீண்டும் படித்தவுடன் இந்தக்கட்டுரையை எழுதுகிறேன்.
DATES AND DYNASTIES IN EARLIEST INDIA byR.MORTON SMITH, TORONTO, CANADA, 1973
சங்க காலப் புலவர் கபிலர் புறநானூற்றுப் பாடலில் 49 தலை முறைகள் தனக்குத் தெரியும் என்று பாடினார். அவருக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உலகப்புகழ்பெற்ற, உலகத்தின் முதல் இலக்கண நூலினை வியக்கவைக்கும் முறையில் எழுதிய, பாணினி 21 தலைமுறை 53 தலை முறை பற்றிப் பேசினான் . அதற்கு முன்னர் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் வெறுமனே எண்களை மட்டும் சொல்லாமல் உண்மையிலேயே இருந்த 57 குருமார்களின் பெயர்களையும் வரிசைக்கிரமத்தில் சொல்லிவிட்டது . இன்றும் காஞ்சி, சிருங்கேரி மடங்களின் சங்கராசார்யர்களைச் சொல்லும் போது இவர் இத்தனையாவது பட்டம் என்று சொல்லி அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காண்கிறோம் .
***
புறநானூற்றுப் பாடல்
பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன் :இருங்கோவேள்.
(பாரி மகளிரை அழைத்துக் கொண்டு சென்ற காலத்துப் பாடியது.)
இருங்கோவேள் என்ற சிற்றரசனைப்பாடிய கபிலர், “நான் பிராமணன் சொல்கிறேன் ; உன்னுடைய 49 தலைமுறைகளை எனக்குத் தெரியும்” என்று அவனைப் புகழ்கிறார் ; அதுமட்டு மல்லாமல் ஜாதி வெறியை உடைத்துப் புரட்சியும் செய்தார் ; க்ஷத்ரியனான பாரியின் மகள் இருவரையும் தன்னுடைய மகள்கள் என்றும் அறிவிக்கிறார் . சுமார் 50 தலைமுறைகளுக்கு , உலகம் ஒப்புக்கொண்ட சராசரி மன்னன் ஆட்சி ஆண்டான 25 ஆண்டுகள் என்பதை ஒப்புக்கொண்டாலும் அவருக்கு முன்னர் 1250 ஆண்டு வரலாற்றினை அவர் கூறினார் ; அதாவது இற்றைக்கு 3250 ஆண்டுகளுக்கு முன்னர் துவரை என்னும் துவாரகாவை ஆண்ட மன்னன் வழிவந்தவர் . மேலும் யாகத்தீயில் மன்னர்கள் தோன்றிய. மஹாபாரதக் கதைகளையும் நினைவு படுத்துகிறார்; கபிலரைத் தோற்கடிக்கும் முறையில் பாணினி எழுதிய அஷ்டாத்யாயி நூலில் , பாணினிசூத்திரம் 2-1-19 க்கு உதாரணம் காட்டுகையில் சங்க்யா வம்சேன என்பதற்கு, ஏகவிம்சதி பாரத்வாஜம்,த்ரி பஞ்சாசத் கெளதமம் என்கிறார் . இதன் பொருள் வம்ச பரம்பரையைக் கூறுகையில் 21 ஆவது தலைமுறை,53 ஆவது தலைமுறை என்று கூறலாம் என்பதாகும் . அதற்கும் முந்தைய பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் 57 தலைமுறை குருமார்களின் பெயர்களையே சொல்லி உலகையே வியப்பில் ஆழ்த்திவிடுகின்றனர். (அவர்கள் பெயர்களை முன்னொரு கட்டுரையில் எழுதியுள்ளேன்). ஆகவே கபிலரும் பாணினியும் சொன்னது வெறும் எண்கள் அல்ல .
***
பேராசிரியர் ஆர். மார்ட்டன் ஸ்மித், 38 ஆண்டுகளுக்கு சம்ஸ்க்ருதம் பயின்றவர். ஆக்ஸ்போர்ட், கனடாவிலுள்ள டொராண்டோ பல்கலைக் கழகங்களில் பணியாற்றியவர்; இந்துமத நூல்கள் குறித்துப் பல புஸ்தகங்களை எழுதியுள்ளார் . அவர் சொல்லும் வினோத விஷயங்களை நாம் அப்படியே நம்ப வேண்டிய அவசியமில்லை . ஆனால் அவர் கொடுத்த பட்டியல் மிகவும் வியப்பானது! புராணங்களிலிருந்து எடுத்த சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார் .அவர் 40,50 தலைமுறை யாதவ மன்னர்களின் பெயர்களை கி மு 1800 ஆம் ஆண்டிலிருந்து தருகிறார்; நான்கு தசரத மன்னர்கள்,ஆறு ஜனமேஜர்கள் ,3 கிருஷ்ணர்,பல வசிஷ்டர்,பல விச்வாமித்திரர்களையும் பட்டியலிட்டுள்ளார் . இதனாலதான் அவர் குறிப்பிடும் தேதிகளில் சந்தேகம் எழுகிறது ; ராமாயணத்துக்கும் மஹாபாரதப்போருக்கும் இடைவெளி நூறு ஆண்டுகள்தான் என்கிறார்! நேற்று எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் நீண்ட பட்டியல் கொடுத்துள்ளேன்; இங்கு சுருக்கமாகத் தருகிறேன். அவருடைய தேதிகளிலேயே நாம் முரண்பாட்டினையும் காணலாம். ராமனுக்கு வேறு தேதி; அகஸ்தியருக்கும் ராவணனுக்கும் 200 ஆண்டுகள் முந்திய தேதியைக் கொடுத்துள்ளார் !!
***
தமிழில் மிகவும் புகழ்பெற்ற பாஷ்யக்காரர் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் ஆவார்; அந்த மதுரை நகர பாரத்வாஜ கோத்திர பார்ப்பான், நமக்கு ராவணன் – பாண்டியன் சமாதான உடன்படிக்கை, அகஸ்தியர்– தொல்காப்பியர் மோதல் , த்ருணதூமாக்கினி என்னும் பார்ப்பான்தான் தொல்காப்பியன் என்ற சுவையான செய்திகளையும் கொடுத்தார்; அந்தப் பிராமணன் ஒரு தமிழ் வெறியன் ;வேதத்திலுள்ள ஒரு ஷாகையே தமிழ் மொழிக்குப் பின்னால்தான் வந்தது என்றும் எழுதியுள்ளான். ஆனால் அந்தத் தவற்றினை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) தவறு என்பதைத் தனது உரையில் விளக்கியுள்ளார் . இப்பொழுது PROFESSOR R. MORTON SMITH சொன்ன காலக் கணக்கினைக் காண்போம்
ஒரு முக்கிய விஷயம்:- அவர் யயாதி என்ற மன்னற்குக் கொடுத்த தேதி சிந்து சமவெளி நாகரீகத்தை ஓரம் கட்டுகிறது! மாக்ஸ்முல்லரின் தேதிகளைக் குப்பைத் தொட்டியில் வீசி எரிகிறது! தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகஸ்தியனைக் கி.மு 1230-ல் இருந்தவன் என்கிறது ; இதனால் தமிழின் 3255 ஆண்டுப் பழமை புலனாகிறது !!!
இதோ தேதிகள் ;அனைத்தும் கி. மு. BCEஆண்டுகள்:–
ராம தாசரதி / தசரதன் மகன் ராமன் -1060 BCE;
ராம ஜமதக்கினி /பரசுராமன் 1327;
பலராமன் – 1080 ;
ராமனும் பரசுராமனும் மோதிய செய்தி எல்லா ராமாயங்களிலும் உளது ; ஆனால் இவர் கொடுக்கும் தேதியில் பெருத்த இடைவெளி .
அர்ஜுனன் கார்த்தவீரியன் – 1375;
இவன் ராவணனை வென்று விரட்டியடித்தவன்;
ராவண அனாரண்ய – 1400;
ராவண த்ருணபிந்து- 1250;
க்ருஷ்ண அர்ஜுனை யாதவ – 1320;
கிருஷ்ண வாசுதேவ – 980;
கிருஷ்ண ஷ்யாம–1115 ; இவர்தான் மஹாபாரத கிருஷ்ணன் .
வேத வியாசர்- 1050-980;
அர்ஜுனன் பாண்டவ – 975;
Source book- DATES AND DYNASTIES IN EARLIEST INDIA byR.MORTON SMITH, TORONTO, CANADA, 1973
***
இந்தப் பெயர்களில் குழப்பம் இருந்தாலும் , இராமாயண கதாபாத்திரங்கள் மஹாபாரத கதாபாத்திரங்களுக்கு 100 ஆண்டுகளுக்கு முந்தியவர்கள்தான் என்பதாகும் .
அவரைக் குற்றம் சொல்வதற்கு முன்னர், நமது உபன்யாசகர்கள் சொல்வதையும் நாம் நினைவிற் கொள்ளவேண்டும் . மஹாபாரத கர்ணன், பிராமணன் போல நடித்து க்ஷத்ரியர்களின் மஹாவிரோதியான பரசுராமரிடம் பாடம் கற்றபோது, வண்டு துளைத்த தொடையில் ரத்தம் வந்தபோதும் ஆடாமல் அடங்காமல் இருந்த கர்ணனைப் பார்த்து டேய்,நீ பிராமணன் இல்லை ;பிராமணர்கள் தொடை நடுங்கிகள்;பயங் கொள்ளிகள். நீ யாரடா? என்று கேட்டதை அறிகிறோம் ; இதே போல பீமனும் அனுமனும் சந்தித்த கதைகளும் உண்டு; அவைகளைப் பார்க்கையில் மார்ட்டன் ஸ்மித் கொடுக்கும் தேதிகளில் பசை இருப்பது போலத் தோன்றுகிறது!
***
அவர் சொன்ன நான்கு தசரதர்களைத் தவிர எகிப்திலுள்ள தசரதர் கடிதங்களை அவர் சேர்க்கவில்லை ; அமர்னா கடிதங்கள் / தசரதன் , துருக்கியிலிருந்து எழுதிய கடிதங்கள்! நல்ல வேளையாக அப்படியே கியூனிபார்ம் எழுத்தில் களிமண் கல்வெட்டுகளில் உள்ளன . வேத கால தெய்வங்களை ரிக் வேத மந்திரத்தில் உள்ள அதே வரிசையில் சொல்லி கைச்சாத்திட்ட உடன்படிக்கையும் அப்படியே கியூனிபார்ம் எழுத்தில் களிமண் கல்வெட்டுகளில் துருக்கி நாட்டில் கிடைக்கிறது ; அத்தோடு பிரதர்தனன் என்ற சூரிய குல மன்னன் பெயரும், கிக்குலி ஸம்ஸ்க்ருதக் கட்டளைகளுடன் எழுதிய குதிரைப் பயிற்சி நூலும் நமக்கு கியூனிபோர்ம் லிபி கல்வெட்டில் கிடைத்துள்ளது ;இவையனைத்தும் மாக்ஸ்முல்லர் செத்துப்போன (1921) பின்னர் வெளி வந்தன . மாக்ஸ் முல்லர் உளறல்களை தவிடு பொடியாயின! கல்வெட்டு சான்றுகளை எவரும் புறக்கனிப்பதில்லை ; இவை அனைத்தும் கி.மு 1400 தேதியிடப்பட்டவை ; உலகிலுள்ள அவ்வவளவு என்சைக்ளோ பீடியாக்களிலும் போகஸ்கொய் கல்வெட்டு,அமர்னா கடிதங்கள் என்ற பெயர்களில் பதிவிடப்பட்டுவிட்டன. ஆகையால் ஆராய்ச்சியாளர்கள் இவைகளை ஆதாரமாக வைத்து, மார்ட்டன் ஸ்மித் சொன்ன வரிசையையும் கருத்தில் கொண்டு, ஆராய வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக துருக்கி நாட்டு, எகிப்திய நாட்டு சம்ஸ்க்ருத கல்வெட்டு விஷயங்களை முதலில் பாடப் புஸ்தகத்தில் சேர்க்க வேண்டும் ; அகஸ்தியர் போன்ற ரிக்வேத குறிப்புகளால் தமிழின் பெருமையும் பழமையும் உலகிற்குத் தெரியவரும்!
கீழே ஆங்கிலத்தில்: ALL DATES ARE IN BCE:
ABHIMANYU-992 BCE
AKRURA -1110
AMBA -1110 (Princess of Kasi who cursed Bhisma)
AMBARISHA MANDHATA 1460 (Choza’s Ancestor)
ARJUNA KARTAVIRYA-1375 (Ravana was crushed by this king)
ARJUNA PANDAVA- 975 (Bhagavad Gita Fame)
BALARAMA -1110
BAGIRATHA – 1200 (Greatest Hindu Engineer who diverted River Ganga)
BHARADWAJA BARHAPASTYA – 1295 (B for Bharadwaja)
B DIVODAASA-1330 (Rid Vedic King)
BHARATA DAASARATHI -1060 (Rama’s Brother)
BHIMASENA PANDAVA-975 (Mahabharata)
BHISMA-1055(Mahabharata)
DAMAYANTI NALA 1370
DASARATHA LOMAPADA 1090 (Ramayana)
DIRGHTAMAS – 1295 (Rig Vedic Rishi)
DRAUPADI-980(Mahabharata)
DRONA BHARADVAJA 1030(Mahabharata)
DURYODHANA 980(Mahabharata)
GAADHI KAUSIKA- 1340
GALAVA VAISVAMITRA 1285
IKSVAKU MAANAVA-1840- oldest king
JAMADAGNI AARCIKA 1344
J –SUNASHEPA – 1260 (Parasurama???)
JANAKA VIDEHA 810 (Sita Devi’s Father)
JANAKA MITHILA- 1500
KAKSHIVANT- 1215
KANCANAVARMAN– 1520 (note Varman of Pallava/Pandyas)
KRSNA ARJUNI YADAVA 1310 (confusion)
KRSNA SYAMA- 1115(confusion)
KRSNA VASUDEVA- 980(confusion)
Morton Smith is not sure about which Krishna married Sathyabama, which Krishna was the driver of Arjuna’s Car)
LOPAMUDRA AGASTYA- 1240 (Tamil Saint)
MADHUCHANDAS VAISVAMITRA-1260
MATIVAJA MITANNI 1400 (Hindu King who ruled Turkey)
NAHUSA AAYAVA 1820
Pandya eponym -1160
RAMA DASARATHI 1060
RAMA JAMADAGNYA 1327-1280 (note the difference between Rama and Parasurama???)
RAVANA ANARANYA – 1400
RAVANA TRNABINDHU 1250
PRATARDANA OF KASI 131O (This name is in Mitanni King list 1400 BCE)
PURU YAYATEYA 1780
PURURUVA AILA 1860
SARASVATI ANTINARA 1540
SARMISHTA VAARSAPARVANI 1800 BCE
SATYABHAMA KRSNA-1080
SIBI AUSINARA 1345 (Purananuru Choza ancestor)
SINDHUDWIPA AMBARISHA 1410 (Indus Valley King)
SITA RAMA 1060 (Lord Rama’s wife)
xxxxxxx
Supporting Information
FROM TURKEY:
The Boğazköy Inscription (dated to roughly 1400–1380 BCE) is a cuneiform clay tablet recording a political treaty between Hittite King Suppiluliuma I and Mitanni King Shattiwaza (Matiwaza), discovered at the ancient Hittite capital of Hattusa (modern Boğazkale/Boğazköy in Turkey).
• Mitanni-Hittite Treaty: The document outlines a peace agreement and alliance between the two ancient Near Eastern kingdoms.
• Invoked Vedic Deities: As part of the treaty’s divine witnesses, four major Vedic gods are invoked: Mitra, Varuna, Indra, and the Nasatyas (the Ashvins).
• Order of Deities: The names appear in a sequence that is found in the Rig Veda according to Asko Parpola, the most famous Indus Valley Civilization Scholar.
XXXX
FROM EGYPT
The Amarna letters of Dasaratha (historically and linguistically known as Tushratta) are a vital subset of the famous Amarna Letters archive discovered in Egypt.
Dasaratha/Tushratta was the ruler of Mitanni, a powerful empire located in northern Mesopotamia (modern-day Syria and Turkey) during the 14th century BCE. Written in Akkadian cuneiform (the international diplomatic language of the Late Bronze Age), his correspondence spans 13 letters cataloged as EA 17 through EA 29. They were addressed to Pharaohs Amenhotep III, Akhenaten, and Queen Mother Tiye.
• The “Hurrian Letter” (EA 24): While twelve of his letters are written in Akkadian, EA 24 stands out as an artifact of immense linguistic importance. Comprising 494 lines written almost entirely in the Western dialect of Hurrian, it remains the longest contiguous text surviving in the Hurrian language today.
• Dynastic Marriages: A central theme in his letters is negotiating political alliances through royal marriages. In letters like EA 19 and EA 22, Dasaratha arranges for his daughter, Princess Taduhepa (sometimes equated with Queen Kiya or Nefertiti in alternative historical theories), to marry Amenhotep III.
• Demands for Gold: Egypt controlled massive gold mines in Nubia, making it the financial powerhouse of the ancient world. Dasaratha frequently pleads with the Pharaoh to send gold, famously using variants of the phrase, “May my brother send gold in very great quantity… for gold is as common as dust in my brother’s land”.
• The Traveling Goddess (EA 23): In this letter, Dasaratha mentions sending a sacred, miraculous statue of the Hurrian goddess Šauška (Ishtar) of Nineveh to Egypt. It was meant to bless and heal an aging and ill Amenhotep III.
Historians and scholars are particularly fascinated by Dasaratha’s letters because they provide absolute archaeological evidence of Vedic culture in the ancient Near East.
The ruling elite of the Mitanni empire spoke a language with clear SANSKRIT roots. The cuneiform spelling of the king’s name—Tushratta—is widely accepted by linguists as the Akkadian rendering of the Sanskrit name Dasaratha (meaning “he who has ten chariots”) or Tvesharatha (“having splendid chariots”). Other Mitanni kings mentioned in these records bear names like Artatama (Rtatama, “most righteous”) and Sutarna (Sutarna, “good sun”).
XXXX
PANINI SUTRA ABOUT 53 GENERATIONS
In Pāṇini’s Aṣṭādhyāyī, Sūtra 2.1.19 states: “संख्या वंश्येन” (saṅkhyā vaṃśyena). This rule dictates that a numeral (saṅkhyā) is compounded with a term denoting a lineage or family descendant (vaṃśya), and the resulting compound is classified as an Avyayībhāva samāsa.
The phrase “त्रिपञ्चाशत् गौतमम्” (tripancāśat gautamam) is a classic illustrative example of this specific sūtra:
•त्रिपञ्चाशत्(tripancāśat): The numeral meaning 53.
•गौतमम्(gautamam): Refers to the descendants of the sage Gautama (a lineage / vaṃśya).
***
एकविंशतिभारद्वाजम् (Ekaviṃśatibhāradvājam) is a classic example of an अव्ययीभाव समास (Avyayībhāva compound) in Paninian grammar. It is formulated under the rule संख्या वंश्येन (२-१-१९) (Sūtra 2.1.19, often numbered 2.1.18 in some recensions).
• The Sūtra: Saṅkhyā vaṃśyena (संख्या वंश्येन) states that a numeral (संख्या) compounds with a word denoting a member of a lineage/family (वंश्य), resulting in an Avyayībhāva समास.
• Lineage Types: Panini explains that a lineage (vaṃśa) can be of two types:
1. Vidyā (Learning/Guru paramparā): e.g., Dvimuni vyākaraṇam (The grammar belonging to the two sages—Pāṇini and Kātyāyana).
2. Janma (Birth/Family descent): This is where our example fits.
• Laukika Vigraha (Literal Meaning): Ekaviṃśatibhāradvājāḥ (एकविंशतिभरद्वाजाः), which translates to “Twenty-one generations / descendants in the lineage of Sage Bharadwaja
XXXXX
DATE OF MAHABHARATA WAR
R.Morton Smith – 1050 BCE Srinivas Raghavan 3067 BCE P C Sen Guptas 2449 BCE Dr Sankalia – later than 15th century BCE S B Roy on the basis of astronomical calculations – 1424 BCE S B ROY in his book “Date of Mahabharata Battle” has beautifully summarised the views of scholars in this field as follows:–
D R Mankad- 3201 BCE M M Krishnamachari – 3137 BCE C V Vaidya – 3102 BCE V B Athvale – 3016 BCE
XXXXX
TAMIL INSCRIPTION GIVES KALIYUGA IN DAYS!
The Parthivasekarapuram copper plate inscription (dated around 865 CE) of Ko Karunathadakkan states that 1,449,087 days of the Kali Yuga had passed.
• Parthivasekarapuram Copper Plate: Recorded in Tamil and points to the traditional commencement of the Kali Yuga around 3100–3102 BCE.
• Calculation Context: This total of 1,449,087 elapsed days corresponds historically to the mid-9th century CE dating of the record, showing that early South Indian epigraphy tracked time using exact day counts from the start of the Kali era.
XXXXX
HINDU WONDER – 57 GENERATIONS AT ONE GO! (Post No.7480)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7480
Date uploaded in London – 21 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
(List of 57 generations of Gurus is attached at the end)
Hindus are the only people in the world who use geographical and historical data in their everyday ritual. No where in the world we can see such a historical sense. While they do Pujas in the temple or at home, they begin it with Sankalp (vow) in which they refer to Manvantara, Yuga, Year, Date, Day and their location on earth. It will even beat the google map. Because they have divided the entire northern hemisphere into several ‘dwips’ (land mass), and they say where in the world they do that ritual. Let us forget all these Mantra stuff and come to the real world!
Foreign ‘scholars’ who have no faith in Hinduism or practical experience accused Hindus of people with no historical sense. They praised only one Kashmiri Brahmin as the first one with Historical sense. That Brahmin named Kalhana wrote Raja Tarangini (River of Kings) with the names of Kings and their periods which can be understood by foreigners. But surprise, surprise! the foreign ‘scholars’ rejected his first four chapters in Raja Tarangini saying it contains myths and unhistorical information. It is like praising a beautiful woman and saying the part above her neck is Ugly!!! The fact of the matter is Kalhana challenges the date of Buddha, Kali Yuga, Kanishka etc which didn’t suit the ‘scholars’.
Let me come to the topic of the day!
I titled it as ‘57 generations at one go’. What is it?
Brihad Aranyaka Upanishad is the oldest of the 108 Upanishads. Even the jaundice eyed foreigners generously dated it as 850 BCE material. But Hindus believe it is still older which is proved by the internal evidence. This Big Forest (Brihad Aranyaka) Upanishad has a chapter called Vamsa Brahmana in which it gives 57 generations of teachers and two gods.
Foreign historians give 25 years per generation/ per king. But when it comes to forest living , peace loving, meditative, god fearing, vegetarian Gurus it must be longer than 25 years. So let me stretch it to 30 to 40 years and give a rough calculation.
30X 57 generations =1710 years or
40 X 57 = 2280 years
Before 850 BCE which means , the first Guru for this particular Upanishad lived 2560 years or 3130 years before our time!!
Can we rust this information?
Yes , you can trust it because,
Even foreigners believe all that is said in Vedic literature is true, but they doubt Puranic information. But we have other strong proof from archaeological and historical sources.
Kabilar, the Brahmin poet, who contributed the highest number of Tamil poems to Sangam Tamil Corpus, sings about a chieftain named Irungovel in Purananuru verse 201 as the person in the 49th generation in his line. The most famous Tamil commentator Nacchinarkiniyar , a Brahmin belonging to Bharadwaja Gotra, says that the Yadavs came to Tamil Nadu with a group after Krishna’s demise. Kabilar lived 2000 years ago and if we add another (25 X49) 1225 years it means 3225 years. This is about Irugovel’s forefather’s arrival in Tamil Nadu. I am referring it to prove that the number of generations is used commonly and to prove Hindus had this historical sense of accounting.
If one comes to all Mutts and Adeenams in Tamil Nadu one can see they always use the generations to say this ascetic is the 68th in the line of Acharyas or 157 th etc.This accounting generation is used even today.
Aihole Inscription and Parthivasekarapuram Copper Plates used Kaliyuga years even during fifth century.
ROME POPES AND NUMBERS
In the list of 57 generations we see some strange names of Rishis. That proves it is very ancient.
In the list we see several Rishis has the same name. This is very important. Hindus very often come across the names of Indra, Agastya, Visvamitra, Vasistha, Bhoja, Vikramditya, Sankaracharya, Janaka, Avvaiyar etc and get confused. The Pauranic speakers projected them as one person. It is incorrect. Look at the list of Popes in Vatican City.
Popes with the name of John – 23 Popes!
Benedict -16, Leo- 13, Gregory 16!
Go to the list of Pharaohs of Egypt; there are 14 Ramesses!
So, Hindus must number them like Westerners to avoid confusion (Eg. Pope John XIV, Gregory XIII).
One more information about Indian Geography in the list:- One name has the prefix Vidharbi meaning he is from Vidharba region. So even thousands of years ago we have used the prefix showing the region. Most of Sangam Tamil Poets have prefix such as Madurai, Karur, Uraiyur etc showing where they came from. So they had geographical sense 2000 years ago.
If we read chapters after the ‘Vamsa Brahmana’ , we will come across several states in North India such as Videha (Bihar, Nepal), Panchala (Punjab, Haryana). Buddhist literature of sixth century BCE mentioned 16 Mega Kingdoms (Maha Janapada) in North India. Vedic literature belongs to a period long before Buddha’s time.
Now read the list and see that it goes beyond the time of Indus-Sarasvati River Civilization!
–SUBHAM—
TAGS- Kali Yuga date, Hindu Wonder, History Wonder, பாணினி, சங்கப் புலவர் , கபிலர் , ராமாயண காலம், மஹாபாரத காலம், அதிசய வரலாற்றுச் செய்திகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முஸ்லீம்கள் பற்றி அம்பேத்கர்!
ச. நாகராஜன்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தின் வரைவை உருவாக்கிய கமிட்டியின் தலைவராக இருந்தவர். தலித் சமூகத்திற்காகப் பாடுபட்ட அவர் கஷ்டப்பட்டு ஒரு வக்கீலாக முன்னுக்கு வந்தவர். ஆழ்ந்த சிந்தனையாளர். அரசியல் சட்டத்தில் நிபுணர்.
அவர் 1945ம் ஆண்டு Pakistan or the Partition of India என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். பின்னால் இது Thoughts on Partition என்று பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
மூஸ்லீம் லீக் தனி நாட்டைக் கேட்பது பற்றிய ஆழ்ந்த ஆய்வை அவர் மேற்கொண்டு தனது கருத்துக்களை இந்தப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
492 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.
முகலாய சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஹீரோக்களாகக் கொண்டாடப்படும் அனைவரும் அழிவையும் கொள்ளையையும் அடிப்படிக் கொள்கையாகக் கொண்டு ஏராளமானோரைக் கொலை செய்தவர்கள். தங்களுக்குள்ளும் அடித்துக் கொண்டு கொலை செய்து மாண்டவர்கள்.
அம்பேத்கர் முகம்மது கஜினி இந்தியாவுக்குள் நுழைந்தது முதல் அஹ்மத் ஷா அப்டல் சென்றது வரை 762 ஆண்டு கால வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்தார். வரலாற்று ஆசிரியர்கள் பலரது மேற்கோள்களை அவர் விரிவாக இந்தப் புத்தகத்தில் தருகிறார். (பக் 54-63) ஆலயங்களை இடித்துத் தரமட்டமாக்கல், கட்டாயமாக இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்தல், பெண்களைக் கற்பழித்தல், குழந்தைகளைக் கொல்லல் போன்ற ஈவு இரக்கமற்ற படு பாதகங்களை அவர்கள் செய்தனர்.
1920 முதல் 1940 முடிய நமது நாட்டில் நடந்த மதக் கலவரங்களை அவர் விரிவாகக் கூறுகிறார். (பக் 163-184)
1919 முதல்ல் ஏற்பட்ட பிரிட்டிஷாருக்கும் முஸ்லீம் லீகிற்கும் இடையேயான நெருக்கமான உறவைப் பற்றியும் அவர் விளக்குகிறார்.
ஜனத்தொகையில் 25 சதவிகிதமே இருந்த முஸ்லீம்கள் ராணுவத்தில் 36 சதவிகிதம் இடம் பெற்றதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
இந்தப் புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்.
இதில் இடம் பெற்றுள்ள சில குறிப்புகளைக் கீழே காணலாம்:
1) பக் 352 முஸ்லீம்கள் தேசபக்தி இல்லாதவர்கள்.
2) பக் 123 இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லீம்களும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும்.
3) பக் 125 இந்தியாவில் தொடர்ந்து இருக்க முஸ்லீம்கள் அனுமதிக்கப்பட்டால் மத நல்லிணக்கம் இந்தியாவில் ஒருபோதும் வராது.
4) பக் 294 முஸ்லீம்கள் பாரதத்திற்கு எதிராக ஜிஹாத் தொடங்குவார்கள்.
5) பக் 294 முஸ்லீம்கள் பாரதத்தை தாருல்- ஹர்ப் ஆகக் கருதுகிறார்கள்.
6) பக் 294 அவர்கள் நாட்டின் சட்டத்திற்கு எதிராக ஷரியா சட்டத்தை அமுல் படுத்த சதி செய்கிறார்கள்.
7) ஷரியா சட்டத்தின் படி இந்த நாட்டை தார்- உல்- இஸ்லாம் ஆக ஆக்கப் பார்ப்பார்கள்.
8) முஸ்லீம்கள் சமூக சீர்திருத்தத்திற்கு மிக மிக எதிரானவர்கள்.
பர்காவை பயன்படுத்துவது என்பது இஸ்லாமில் செக்ஸ் உறவில் தவறை உருவாக்கும்.
அம்பேத்கரைப் போற்றி வீதிக்கு வீதி அவர் படத்தைச் சுவரில் சித்தரிக்கும் பகுத்தறிவுகளுக்கு இதெல்லாம் தெரியுமா அல்லது தெரிந்தாலும் இவற்றை மூடி மறைக்கப் பார்க்கிறார்களா?
தெரியவில்லை.
ஆனால் அம்பேத்கர் சொன்னது பின்னால் காஷ்மீரிலும், சம்பல் பள்ளத்தாக்கிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் நாட்டின் இதர பகுதிகளிலும் உண்மையானதைப் பார்க்கிறோம்.
அவர் நமது நாட்டினருக்கு முன்னதாகவே எச்சரிக்கை கொடுத்தவர்.
அவர் கூறியதை உன்னிப்பாகக் கவனித்து நாம் முன்னேற வேண்டும் என்பது தான் காலத்தின் கட்டாயம்!
Picture of Dasaratha Letters (Amarna Letters) in Egypt
Written by London Swaminathan
Post No. 16,289
Date uploaded in London – 9 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Hindus are lucky to get great historical Inscriptions in Turkey and Egypt!
I was reading again the book DATES AND DYNASTIES IN EARLIEST INDIA byR.MORTON SMITH, TORONTO, CANADA, 1973. He studied Sanskrit for 38 years ; worked as professor in the Sanskrit departments ofOxford University and Toronto University, Canada. He shows the periods of Lord Rama and Lord Krishna very close, with only a hundred year difference. Though I don’t agree with him in placing Mahabharata war in 1000 BCE and Ramayana in 1100 BCE he has given us some points to ponder. He has concluded after studying Puranas and approaching it in a scientific way. We also hear stories like Parasurama of Ramayana teaching Karna of Mahabharata and Bhima of Mahabharata meeting Hanuman of Ramayana. Morton Smith’s research gives support to those stories.
The good thing that comes out of his book is that Max Muler Gangs’ theories are exploded. He gives us over 40 Yadhava kings from 1600 BCE. The earliest Ikshvaku King ruled in 1860 BCE overlapping Indus Valley civilisation.
Tamils must be happy to read that Agastya was living in 1260 BCE.
Rig Vedic names such as Dirgatamas , Divodasa, Trsadasyu, Sudas, Visvamitra and Vasistha also were assigned dates. If we believe Ravana -Pandya Peace agreement narrated by the greatest Brahmin Tamil Commentator Nacchinarkiniyar, if we belie his story of Tolkaappiar clashing with Agastya, if we believe his statement that Tolkappiar was Trna dumagni , then all these are placed in 1250 BCE.
But there are discrepancies. He gives Ravana 100 to 200 years earlier than Rama. He himself has shown four Dasarathas, 6 Janamejayas many Vasisthas, Many Viswamitras, many Bharadwajas. But yet lot of information given by him may be the starting points for future research.
The most important things are the names of DASARATHA, PRTARDANA ETC. Hindus were lucky to get two inscriptions from Turkey and Egypt dated around 1500 BCE with the names of Dasaratha and Pratardana. Vedic Gods are in a peace agreement made in Turkey. The names are in the same order as reported in the Rig Veda. They are called Amarna letters and Bogazkoy Inscription. Full details are in my blogs and all encyclopaedias including Wikipedia; they were discovered after Max Muller’s death in 1921. Had he lived then he would have rewritten whatever he bluffed earlier.
One big defect in his research is that he has believed what the Puranas said. Pargitter also did the same. But if Hindu scholars sit together they can find which Dasaratha they mentioned, which Vasistha they referred to. If Dasaratha’s name could reach Egypt and Turkey in 1500 BCE , our Dsaratha must have lived long before that. Turkey Dasaratha, Turkey Pratardana were later than our Puranic personalities. Mitanni civilization is about Hindus in Turkey and Egypt and so foreign scholars did not bother about them. Thank God, they have faithfully reported what they discovered in Egypt and Turkey. I have already written about Kikkulis Horse Training Manual with Sanskrit instructions (dated 1380 BCE) discovered in Turkey.
Here below is what Morton smith has said about some Puranic characters; I have added Solar Dynasty list from Wikipedia. In the Wikipedia list, I have inserted dates given by Morton Smith. Before Alexanders invasion, solar dynasty ruled with over 140 kings. Even if we give 25 years to each king, accepted by historians around the world, It will take our history 5000 to 6000 years back. Let us do methodical research without jumping to conclusions. One thing is very clear; the geographical material we get covers the whole of India. The first Manu after Floods is called a Dravida. The first Matsyavatara occurred in South India. Tiru Gnana Sambandar also sang about it in Seerkazi when he explained the 12 names of Seerkazi town. Madurai Bharadwaja Gotra Brahmin Nacchinarkiniyar was a Tamil fanatic and he placed even Vedic shaka after Tamil. But Kanchi Paramcharya (1894-1994) has pointed out where that Brahmin commentator went wrong. But his stories about Ravana ,Pandya, Tolkappiar and Agastya are interesting
Here are some selected names from Morton Smith’s book: All dates are BCE dates,
ABHIMANYU-992 BCE
AKRURA -1110
AMBA -1110
AMBARISHA MANDHATA 1460
ANIRUDHDHA- 935
ARISTANEMI-1310
ARJUNA KARTAVIRYA-1375
ARJUNA PANDAVA- 975
ASOKA 421-385
ATITHIGHU -1440
AAYU PURURUVASYA- 1840
BALARAMA -1110
BALI VAIROCANA- 1250
BAGIRATHA – 1200
BHARADWAJA BARHAPASTYA – 1295 (B for Bharadwaja)
B DIVODAASA-1330
B- AJAAMIDHA- 1350
B -VIDATHIN 640
BHARATA DAASARATHI -1060
BHAASAA PARTHASRAVASI-1080
BHIMASENA PANDAVA-975
BHISMA-1055
BRHADASVA AIKSVAKA- 1660
DAMAYANTI NALA 1370
DASARATHA LOMAPADA 1090
DHRUVA VAISVAMITRA 1270
DIRGHTAMAS – 1295
DRAUPADI-980
DRONA BHARADVAJA 1030
DURYODHANA 980
GAADHI KAUSIKA- 1340
GALAVA VAISVAMITRA 1285
HALA 63 CE period
IKSVAKU MAANAVA-1840- oldest king
JAMADAGNI AARCIKA 1344
J –SUNASHEPA – 1260
JANAKA VIDEHA 810
JANAKA MITHILA- 1500
KAKSHIVANT- 1215
KANCANAVARMAN- 1520
KAVI -1490
KRSNA ARJUNI YADAVA 1310
KRSNA SYAMA- 1115
KRSNA VASUDEVA- 980
LOPAMUDRA AGASTYA- 1240 (Tamil Saint)
MADHUCHANDAS VAISVAMITRA-1260
MANU AIKSVAA 1200
MATIVAJA MITANNI 1400 (Hindu King who ruled Turkey)
MRDATHITHI KANVA-131
NAHUSA AAYAVA 1820
NANDIVARDHANA VAIDEHA-
Pandya eponym -1160
RAMA DASARATHI 1060
RAMA JAMADAGNYA 1327-1280 (note the difference between Rama and Parasurama)
RAVANA ANARANYA – 1400
RAVANA TRNABINDHU 1250
PANINI 420
PARIKSHIT KAURAVA 1260
PARIKSHIT ABIMANYAVA- 950
PRATARDANA OF KASI 131O
PURU YAYATEYA 1780
PURURUVA AILA 1860
SARASVATI ANTINARA 1540
SARMISHTA VAARSAPARVANI 1800 BCE
SATYABHAMA KRSNA-1080
SIBI AUSINARA 1345 (Purananuru Choza ancestor)
SINDHUDWIPA AMBARISHA 1410 (Indus Valley King)
SISU NAGA 437
SITA RAMA 1060 (Lord Rama’s wife)
SUDAS PAIJAVANA 1090
S. HAMSAMUKSHA 1330
TRNABINDU SAKA 1320 BCE
RAVANA TRNABINDU 1250
TRSADASYU AIKVAKAVA 1450
TRISANKA SATYAVRATA 1325
UCATHYA ANGIRASA 1290
UDDALAKA ARUNI 855 (Upanishad Period)
USANAS BHARGAVA 1820
USINARA ANAVA -1365
VALMIKI 400 (Author of Ramayana)
VASISTHA IKSHVAKU 1840 (V for Vasstha)
V -TRISANKU 1335
V -APAVA 1315
V -MAITRAVARUNI 1320
V- MITRAVARUNA 1345
VASUDEVA KRSNA 1010
VISVAMITRA GATHINA 1340
VYASA KRSNA 1050 (Author of Mahabharata)
YADU YAYATEYA 1660
YAJNAVALKYA 810 (Upanishad Period)
YAYATI NAHUSA-1800 BCE
XXXXXXXXXXXXXXXXXXXXXX
Suryavanshi Kings beforeRama (Wikipedia List)- Dates are mine, not wikipedia’s)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இதற்கு முன்னர் வெளியிட்ட 20 கேள்விகள் கடைசியில் உள்ளன ; விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும் .
21
விஷ்ணு ராமனாகவும், சிவன் அனுமனாகவும் தேவர்கள் வானரங்களாகவும் அவதரித்ததாகக் கம்பன் சொன்னதைப் பாடல்களில் கண்டோம்; வாலி, சுக்ரீவன் யார் அவதாரம் ?
22
ரிஷ்யஸ்ருங்க முனிவரின் தமிழ்ப் பெயர் கலைக்கோட்டு முனிவர் (கலை-மான்); அவரை கம்பன் எப்படிப் புகழ்கிறான் ?
23
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை — என்று மூதுரை நூலில் தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்.ரிஷ்ய ச்ருங்க முனிவர் நகருக்குள் நுழைந்தவுடன் என்ன நடந்தது?
24
சோழர்கள் ஒரிஜினல் தமிழர்கள் அல்ல என்று புறநானூற்றுப் புலவர்களும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவும் குறிப்பால் உணர்த்துகின்றார்கள்.வடமேற்கு இந்தியாவை ஆண்ட சிபி என்னும் சூரியகுல மன்னன் அவர்களின் முன்னோன்; கம்பன் செப்புவது என்ன ?
25
கலைக்கோட்டு முனிவன் தசரதனுக்காக புத்ர காமேஷ்டி யாகம் செய்தவுடன் அக்கினி குண்டத்திலிருந்து வந்த தேவன், பாயசம் ஏந்திய கலத்தைக் கொண்டுவந்தான் என்று வால்மீகி கூறுகிறார்; கம்பன் வேறு கதை சொல்கிறானே!
26
சுமித்திரைக்கு மாட்டும் இரட்டைப்பிள்ளைகள் பிறந்தது ஏன் என்று கம்பன் காட்டுகிறான்?
27
கம்பன் சொல்லும் ஜாதகக் குறிப்புகள் என்ன? ராமன் , லெட்சுமணன் நட்சத்திரங்கள்- ராசிகள் என்ன ?
28
வள்ளுவர் பற்றிக் கம்பன் புகல்வது யாது?
29
ராமனை என்னோடு காட்டுக்கு அனுப்பு என்று விச்வாமித்ர முனிவன் சொன்னவுடன் தசரதன் அவனைவிட்டுவிடு, நானே வருகிறேன், என்று சொல்லி எப்படித்துடித்தான் ?
30
விசுவாமித்திர முனிவரின் கோபத்தையும் எக்காளச் சிரிப்பையும் கம்பன் எப்படி அழகாக வருணிக்கிறான்?
XXXXX
விடைகள்
21.தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான். ‘எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்’ என்ன;
இரவி. ‘மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன்’ என்று ஓத
அரியும். ‘மற்று எனது கூறுநீலன்’ என்று அறைந்திட்டானால்
இந்திரன்= வாலியும். அவன் மகன் அங்கதனும்;
சூரியன்= சுக்கிரீவன்;அக்கினி.=‘நீலன்’.
தருஉடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான்-கற்பகம் முதலிய ஐந்து
மரங்களையுமுடைய தேவர்களுக்கு அரசனான இந்திரன்
சொல்லலுற்றான்; எனது கூறு மருவலர்க்கு அசனி அன்ன வாலியும்
மகனும் என்ன- எனது அம்சமானது. பகைவர்களுக்கு இடி போன்ற
வாலியும். அவன் மகன் அங்கதனும் ஆகும் என்றுரைக்க; இரவி மற்று
எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத- சூரியன்,
எனது அம்சம் அங்கேயே அந்த வாலிக்குத் தம்பியான
சுக்கிரீவன் என்று சொல்ல; அரியும் மற்று எனது கூறுநீலன் என்று
அறைந்திட்டான்- நெருப்புக் கடவுள் எனது அம்சம் ‘நீலன்’
என்னும் வானர வீரனாகும் எனக் கூறினான்.
XXXXX
22.‘வரு கலை பிறவும். நீதி மனுநெறி வரம்பும். வாய்மை
தரு கலை மறையும். எண்ணின். சதுமுகற்கு உவமை சான்றோன்.
திருகலை உடைய இந்தச் செகத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும்.
வருகலை பிறவும் – வளர்ந்த கல்வியாலும் கேள்வி முதலிய
பிறவற்றாலும்; நீதி மனுநெறிவரம்பும்- நீதியைக் கூறும்மனு நூல்
வரம்பாலும்; வாய்மைதரு கலைமறையும்- உண்மையை உணர்த்தும்
சான்றோன்- நினைத்துப் பார்த்தால் நான்முகனுக்கு ஒப்பாகிய
பெருமை உடையவனும்; திருகலை உடைய இந்தச் செகத்துளோர்
தன்மை தேரா- பலவித மாறுபட்ட இயற்கையை உடைய
உலகத்தவரின் தன்மையை அறியாதவனும்; ஒருகலை முகச்சிருங்க
உயர்தவன் வருதல் வேண்டும்-கலைமான் கொம்பு போன்ற கொம்பை
முகத்தில் உடையவனுமான சிருங்கன் என்னும் பெயருடைய உயர்ந்த
தவத்தை உடைய முனிவன் வரவேண்டும். (வேள்வியை நடத்த) இங்கு வரவேண்டும்
என்றான் வசிட்டன் என்பது பாட்டின் கருத்து.
XXXX
23.வளநகர் முனிவரன் வருமுன் வானவன்
களன் அமர் கடு எனக் கருகி. வான் முகில்.
சளசள என மழைத் தாரைகான்றன-
குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே
முனிவரன் வளநகர் வருமுன்- கலைக் கோட்டு முனிவன் அந்த வளம் பொருந்திய நகருக்கு வரும் முன்னே; வான்முகில் வானவன் களன் அமர்கடு எனக் கருகி – பெரு மேகங்கள். சிவபிரானுடைய கழுத்தில் தங்கியுள்ள நஞ்சு போலக் கருநிறம் கொண்டு.; குளனொடு நதிகள்தம் குறைகள் தீர – குளங்களும். ஆறுகளும் குறை தீரும் படியாக; மழைத்தாரை சளசள எனக் கான்றன – மழைத் தாரைகளைச்சளசள என்ற ஒலியுடன் பொழிந்தன. (வருமுன்:வருமளவில் (அல்லது வருவதற்கு முன்னமே)
XXXX
24.கம்பனும் அதையே செப்புகிறான்:
‘புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க
பெருந்தகைதன் புகழில் பூத்த
அறன் ஒன்றும் திரு மனத்தான். அமரர்களுக்கு
இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடி வேலான். ‘’தசரதன்’’ என்று.
உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்.
விறல்கொண்ட மணி மாட அயோத்திநகர்
அடைந்து. இவண் நீ மீள்தல்!’ என்றான்.
புறவு ஒன்றின் பொருட்டு ஆக. துலைபுக்க- ஒரு புறாவைக்
சக்கரவர்த்தியினது புகழ் பொருந்திய பெருங்குடியில் தோன்றிய;
அறன் ஒன்று திருமனத்தான் – அறப்பண்பு பொருந்திய நல்ல
மனத்தினனும்; அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறம் உண்ட வடிவேலான் – தேவர்களுக்குத் துன்பம் தந்த அசுரரின்
வலிமையை அழித்த வேலை உடையவனும்; தயரதன் என்று
உயர்கீர்த்தி செங்கோல் வேந்தன்- தயரதன் என்னும் பெயர்கொண்ட
புகழ்மிக்க செங்கோலுடையவனுமான வேந்தனது; விறல் கொண்ட
மணிமாட அயோத்தி நகர் அடைந்து – வலிமையை அணியாகக்
கொண்ட மணிகளால் இழைத்த மாளிகைகளையுடைய அயோத்தி
நகரத்தை அடைந்து; இவண் மீள்தல் என்றான் – பின் இங்கு மீண்டு
திரும்புதலே (நான் வேண்டும் வரமாகும்) என்று உரோமபதன்
சொன்னான்.
புறவு புறா. புறாவுக்காகத் தராசில் ஏறிய சிபி மன்னன் வரலாறு
பிரசித்தம். சோழர்கள் சிபிச் சக்ரவர்த்தி, தங்களுடைய முன்னோன் என்று சங்க இலக்கியப்பாடல்களிலும் பிற்காலக் கல்வெட்டுகளிலும் பறை அறிவிக்கிறார்கள் . பின்னர் வரும் பாடல்களிலும் இதை கம்பன் வலியுறுத்துகிறான்
(முந்திய பாடலில் வரம் அருளும் என்று கேட்ட மன்னனை
நோக்கி வரம் யாது என வினவிய கலைக் கோட்டு முனிவனுக்கு அயோத்தி அடைந்து
மீள்தலே அவ்வரம் என்றான் உரோமபதன்.)
XXXXX
25.ஆயிடை கனலின்நின்று அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம்ஒன்று – சூழ்
தீ எரிப் பங்கியும் சிவந்த கண்ணும் ஆய்
ஏயென பூதம் ஒன்று எழுந்தது – ஏந்தியே.
ஆயிடை கனலின் நின்று – அப்போது அந்த வேள்வித் தீயிலிருந்து; தீ எரிப்பங்கியும் சிவந்த கண்ணுமாய் – தீ எரிவதுபோன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக; பூதம் ஒன்று –ஒரு பூதமானது; அம்பொன் தட்டம் – அழகிய ஒரு பொன் தட்டத்தின் மேலே; தூய சுதை நிகர் பிண்டம் ஒன்று – தூய்மையான
அமுதத்தை ஒத்த ஒரு பிண்டத்தை; ஏந்தி ஏயென எழுந்தது –தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.
பிண்டம்: சோற்றுத்திரள் (பொன்தட்டிலே பாயசத்தை ஏந்திஅப்பூதம் வந்தது என்பது வான்மீகி கூற்று).
XXXX
26.கெளசல்யாவுக்கு ஒரு பங்கு கொடுத்தான் கைகேயிக்கு ஒரு பங்கு கொடுத்தான் சுமித்திரைக்கு ஒரு பங்கு கொடுத்தான்; கீழே சிந்திய சோற்றினையும் சுமித்திரைக்குக் கொடுத்தான் என்பது கம்பனின் கூற்று; இதனால் அவளுக்கு இரட்டைப்பிள்ளை !
ராசியில் ஒரு மகனைப் பெற்றாள்.ஆயில்யம் ஆதிசேடனுக்குரியதென்பர். ஆதிசேடன் அம்சமான இலக்குவன் இந்த நட்சத்திரத்தில் பிறந்தது பொருத்தமாகும்.
XX
சத்ருக்னன்- மகம்- சிங்க ராசி
படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர மறை நவில நாடகம்
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட.
விடம் கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள்.
மடங்கலும் மகமும் வாழ்வின் ஓங்கிட – சிங்க ராசியும் மக நட்சத்திரமும்
வாழ்வில் மகிழ்ந்தோங்கவும்; மீட்டும் ஈன்றனள் – மறுபடியும் ஓராண்மகவைப் பெற்றாள்.
மடங்கல்:சிங்கம். சுமித்திரை மக நட்சத்திரத்தில் சிங்க ராசியில் மீண்டும் ஒருபுத்திரனைப் பெற்றாள்
XXXX
28.யானை மீது இருந்துகொண்டு பறை அடிப்பவன் வள்ளுவன்
என்புழி வள்ளுவர் யானை மீமிசை
நன்பறை அறைந்தனர்;நகர மாந்தரும்
மின் பிறழ் நுசுப்பினார்தாமும் விம்மலால்
இன்பம் என்ற அளக்க அரும் அளக்கர் எய்தினார்.
என்புழி வள்ளுவர் யானை மீமிசை நன்பறை அறைந்தனர் –
என்று மன்னர் பிரான் கட்டளையிட்டபோது வள்ளுவர் யானை
மேலிருந்து அரசன் கூறியபடி பறை நன்கு சாற்றினர்; நகர மாந்தரும்
– (இதனைக் கேட்டு) நகர மக்களும்; மின்பிறழ் நுசுப்பினர் தாமும்-
மின்னலைப் போன்ற இடையை உடைய பெண்களும்; விம்மலால்
இன்பம் என்று அளக்க அரும் அளக்கர் எய்தினார் –
பெருங்களிப்பால் இன்பம் என்று சொல்லப்பபடும் அளக்க முடியாத
கடலை அடைந்தனர்.
என்புழி: என்றபோது. ‘
வள்ளுவர்: தோற்கருவி கொண்டு பறை சாற்றுபவர். அரசனது உள்படு
கருமத் தலைவர் இவரென்பர். யானை மேல் அமர்ந்து பறை முழக்கிச்
செய்தியை அறிவிக்கும் உரிமை உடையவர்கள்.
XXXX
9.எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
லெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த.
ஆர் உயிர் நின்று ஊசலாட.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான்
கடுந் துயரம் – கால வேலான்.
எண்ண முடியாத அரிய தவத்தைச் செய்த விசுவாமித்திரர்; சொன்ன இந்தச்
சொற்களானது; மார்பின் மேல் எறிந்த வேல் பாய்ந்த: புண்ணாகிய
புழையிலே; கனன்று கொண்டிருக்கும் தீ நுழைந்தது போல; தனது காதுகளில் புகுந்த
போது; உள்ளத்திலே நிலைத்துள்ள துயரம் (உயிரை) வெளியே தள்ள;
தயரதனது அவ்வரிய உயிர் (உள்ளே போகவும்.வெளியே வரவுமாக) ஊசல்போல் ஆட;
கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர் இழந்தான் எனக் கூறும்படி;
பகைவனின் உயிருக்கு இறுதிக்காலம் காட்டும் வேலையுடைய தயரதன் கடுமையான
துன்பத்தினாலே வருந்தினான். (தயரதன் சிரவணனை அம்பால் கொல்ல
அவனது பெற்றோர் தந்த சாபத்தால் நிலவிய துன்பம் இது.)
XXXX
ஹாஹா! ஹாஹா! ஹாஹா ! (எக்காளச் சிரிப்பு)
10.என்றனன்; என்றலும். முனிவோடு எழுந்தனன்.
மண் படைத்த முனி; ‘இறுதிக் காலம்
அன்று’ ‘என. ‘ஆம்’ என இமையோர் அயிர்த்தனர்;
மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும்
நின்றளவும் திரிந்தன; மேல் நிவந்த கொழுங்
கடைப் புருவம் நெற்றி முற்றச்
சென்றன; வந்தது நகையும்;சிவந்தன கண்;
இருண்டன. போய்த் திசைகள் எல்லாம்.
என்று தயரதன் சொன்னான். அவ்வாறு
கூறலும்; உலகத்தையே படைக்கத் தொடங்கிய முனிவனாகிய விசுவாமித்திரன்
சினத்தோடு எழுந்தான்; அம்முனிவனது. மேலே உயர்ந்தனவாகிய புருவங்கள்;
அவரது நெற்றியில் முற்றவும் சென்றன;
கோபச் சிரிப்பும் வந்து சேர்ந்தது;
ஹாஹா! ஹாஹா! ஹாஹா ! (எக்காளச் சிரிப்பு)
அம்முனிவனது இரு கண்களும் சினத்தால் சிவந்தன;
வானிலே உலாவிக் கொண்டிருந்த கதிரவன் அஞ்சி
மறைந்தான்; அவ்வுலகத்திலும். இவ்வுலகத்திலும் நின்ற உயிரினங்கள் யாவும்
நிலைகெட்டுத் திரிந்தன; – திக்குகள் எல்லாம் ஒளி இழந்து இருண்டன. –
இத் தோற்றங்களைக் கண்ட தேவர்கள் எல்லோரும்;
கடையூழிக் காலமோ அல்லவோ என ஐயம் கொள்வாராயினர்.
முனிவன் கொண்ட சீற்றத்தால் நிகழ்ந்தவைகளை அழகுறச்
சித்திரிக்கும் பாடல் இது.
—subham—
இதற்கு முன்னர் வெளியிட்ட20கேள்விகள்;விடைகள் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்
1
அஞ்சிலே ஒன்று பெற்றான் — என்னும் அருமையான கம்பன் பாடலின் பொருள் என்ன?
2
ராம என்ற இரண்டே எழுத்துக்கள் தரும் அற்புதப் பலன்கள் பற்றி கம்ப இராமாயண சிறப்புப் பாயிரத்தில் ஒரு பாடல் உள்ளது. நினைவுக்கு வருகிறதா அந்தப்பாடல்?
3
எந்த ஒரு நூலினையும் மங்களச் சொற்களுடன் துவங்க வேண்டும் என்ற விதி சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் உள்ளது;கம்பன்,தனது ராமாயணத்தை,எந்தச் சொல்லுடன் துவங்குகிறான்?
4
கம்பனும் காளிதாசனும் என்ன சொல்லி நூலை எழுதத் துவங்கினார்கள்?
5
போற்றுவார் போற்றட்டும்,தூற்றுவார் தூற்றட்டும்;போங்கடா போங்க! நான் சொல்வது தெய்வ மாக்கவி எழுதிய கவிதை என்று கம்பன் செப்பியது எங்கே?
6
வால்மீகியைத் தவிர வேறு இருவர் ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணம் எழுதினார்கள் என்று கம்பன் ஒரு புதிர் போடுகிறானே ! அந்தப் புதிருக்கு விடை கிடைத்ததா?
7
தெய்வ மாக்கவி,முதலில் ராமாயணம் சொன்னவர் என்றெல்லாம் வான்மீகி முனிவரைப் போற்றிய கம்பன் அவருடைய பெயரை எங்கேயாவது பகர்ந்தானா?
8
கம்பன் சர்வ சமய நோக்குள்ளவன்;சைவ,வைணவ பேதம் பாராட்டாதவன்;முடிந்த அளவுக்கு சிவன் பெருமையை அவன் பாடுகிறான்;சரயு நதிப் பாடலில் சிவனை அவன் எப்படிப் புகழ்கிறான்?
9
ஆகாசாத் பதிகம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் பிரதி கச்சதி– என்று பிராமணர்கள் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தன மந்திரத்தில் சொல்கிறார்கள்;இதைக் கம்பனும் சொல்லி,சர்வசமய பொதுநோக்கினைக் காட்டும் பாடல் எது?
10
கம்பன் போகிற போக்கில்Musicமியூசிக்பற்றி ஒரு அருமையான உவமை சொல்கிறான்;இந்தப்பாடலின் பொருள் விளங்குகிறதா?
பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்.
***
11
கம்பன் சொல்லும் அதிசய மூலிகைகள் எவை?
12
தூக்கணாங் குருவிகள்தான் மனிதனுக்கு வீட்டில் விளக்கு ஏற்றுவதைச் சொல்லிக் கொடுத்தன; அவை மின்மினிப் பூச்சிகளை பிடித்துக் கொண்டு போய் கூட்டில் வைத்து அழகு பார்க்கும்; இதைத் தற்கால தீபாவளி, நவராத்ரி, கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்களுடன் DECORATIONS ஒப்பிடலாம் ; இந்த அதிசயத்தைக் கம்பன் எங்கே குறிப்பிடுகிறான் ?
13
கோசல நாட்டுப் பெண்கள் நல்ல படித்த பணக்கார பெண்களாம்; ஆயினும் அவர்கள் ஆபீசுக்குப் போகாமல் வந்த விருத்தினர்களைக் கவனிப்பதே வேலையாகச் செய்தார்களாம் ; கம்பனின் இந்த கற்பனை வளத்தை எங்கே காணலாம்?
14
வாலிபால் என்னும் விளையாட்டினைக் கண்டு பிடித்தவர்கள் தமிழ்ப் பெண்கள்தான் ! பிற்காலத்தில் பூப்பந்தாட்டம் துவங்குவதற்கு அவர்களே காரணம்; இதைச் சங்க இலக்கியப்பாடல்களில் காண்கிறோம்; கம்பன் அவர்கள் தினசரி ட்ரெயினிங் எடுத்தத்தைச் சொல்கிறானே ! அது என்ன பாடல்?
15
தாலி பற்றி அடிக்கடி தாலி அறுக்க விரும்பும் பெண்கள் கட்டுரைகளை எழுதி அவர்களின் அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்ப்THOUSAND WATT BULB போட்டு காட்டுவதை அவ்வப்போது படிக்கிறோம்; ஆனால் மு.சண்முகம் பிள்ளை , கம்பனும் மில்டனும் நூல் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் எஸ் ஆர் கே ஆகியோர் தாலி உண்டு என்று இலக்கியக் குறிப்புகளைக் காட்டினார்கள் !கம்பனும் தாலி உண்டு என்கிறான் ! அது எங்கே?
16
பட்டி மண்டபம் இன்று பட்டி மன்றமாகிவிட்டது; பட்டி விக்ரமாதித்யன் என்ற மாபெரும் மன்னனும் அறிஞனும் உண்டாக்கிய விவாத சபை இது ! மாணிக்க வாசகரும் ஒன்றும் அறியாத என்னை பட்டி மண்டபம் ஏற்றினையே என்கிறார் ; ஏனெனில் அவரை புத்தர்களுடன் வாதிடும்படி சிதம்பரம் தீட்சிதர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர் ; அயோத்தியில் பல MANY HALLS ஹால்கள்;உண்டாம்; அதில் ஒன்று அறிஞர்கள் மோதும் பட்டி மண்டபம் என்கிறானே கம்பன் ; அதைச் செப்பிய இடம் யாதோ!
17
யுவான் சுவாங் என்னும் சீன யாத்ரீகன் அப்பர், மஹேந்திர பல்லவன் காலத்தில் வந்தான் ; அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் குப்தர் காலத்தில் வந்த சீன யாத்ரீகன் பாஹியான்– குப்தர் காலத்தில் வீடுகளுக்கு கதவுகள் இல்லை; அந்த நாட்டில் திருடர்கள் இல்லை என்றான்; கம்பன் கண்ட அயோத்தியின் நிலை என்ன?
18
முதல் முதலாக கம்பன் ராவணனை அறிமுகப்படுத்தும் இடம்– தேவர்கள் அவன் செய்த அட்டூழியங்களை முறையிட்ட இடம் –ஆகும் . வால்மீகியில் இல்லாத அவதார விஷயத்தைக் கம்பன் இங்கே செப்பினானா?
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யக்ஷ்ம
Yakṣma (यक्ष्म) ருக் வேத்தித்திலும் அதர்வண வேதத்திலும் நோய் என்பதைக் குறிக்க பல இடங்களில் யக்ஷ்ம என்ற சொல் வருகிறது ; உடல்நலக்குறைவு என்பது தெளிவாகத் தெரிந்தாலும் என்ன நோய் என்பது தெளிவாக இல்லை; சில இடங்களில் டி பி. TB என்னும் க்ஷய ரோகத்தைக்/காச நோயைக் குறிக்கிறது; யஜுர் வேதத்தின் வாஜசநேயி சம்ஹிதையில் நூற்றுக் கணக்கான யக்ஷ்மங்கள் என்ற வாக்கியம் வருவதால் பொதுவாக நோய் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும் மேலும் காடக சம்ஹிதையில் நோயற்ற என்ற அர்த்தத்தில் அயக்ஷ்ம என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள். யஜுர் வேத சம்ஹிதைகளில் ராஜ யக்ஷ்ம , பாப யக்ஷ்ம என்றெல்லாம் பேசப்படுகிறது ; ஜாயேன யக்ஷ்ம என்பதை பாலியல் நோய் /காம சம்பந்தமான நோய் என்றும் கருத இடமுள்ளது.
தமிழ் மொழியிலும் பிணி என்ற சொல்லினை பிறவிப்பிணிக்கும் பயன்படுத்துகிறார்கள் ; அது போல வேதத்திலும் பொருள் கொள்ள முடியும்.
***
யம (யோக விஷயங்களில்)
Yama (यम, “forbearance”) யம என்றால் பொறுமை, சகிப்புத்தனமை , மற்றவர்களுக்கு மதிப்பு கொடுத்தல் என்று சம்ஸ்க்ருத அகராதி கூறும்; அஷ்டாங்க யோகம் என்பதன் ஒரு பகுதி இது ; இதை அத்து வகையாகப் பிரிப்பர். அவையாவன :
அஹிம்சை -அஹிம்சை (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை);
சத்ய- உண்மை;
ஆஸ்ததேய – திருடாமை; ஆங்கிலத்தில் உள்ள ஸ்டீல் STEAL என்னும் சொல் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லில் பிறந்தது .
ப்ரஹ்மசர்ய – காம விஷயங்களில் ஈடுபடாமை;
த்ருதி – உறுதி (தமிழ் மொழியில் உள்ள உறுதி என்னும் சொல் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லில் பிறந்தது ).
தயா- தயை;
ஆர்ஜவ- கபடமின்மை;
மிதாகார – மித உணவு;
செளச – தூய்மை .
***
யமன் (यम):—வேதங்களில் கூறப்படும் மரண தேவன் ; ஒவ்வொருவரின் உயிரையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் எடுத்துச் சென்று, அவர்கள செய்த பாவ புண்ணியங்களை சித்திர குப்தன் என்னும் அதிபயங்கர வேக சூப்பர் கம்யூட்டர் மூலம் கணக்குப்போட்டு ஒரே நொடியில் தீர்ப்பு சொல்பவன் ; அவனுடைய வாஹனம் எருமை; கூட வருவது இரண்டு நாய்கள் என்று வேத கால இலக்கியங்கள் செப்பும்; புராணங்களின் படி சூரிய தேவனான வைவஸ்வத (Rig Veda 10.14.5) என்பவருக்குப் பிறந்தவன்; மனு,இவனுடைய சகோதரன்;யமி என்னும் சகோதரியுடன் இரட்டைக்குழந்தைகளாகப் பிறந்தவன் . யமன் செய்யக்கூடிய வேலைகளைக் குறிப்பாக அருணகிரிநாதர் திருப்புகழில் ஏராளமான இடங்களில் காணலாம் ; இவனுடைய கணக்குப்பிள்ளையின் பெயர் சித்திர குப்தன்.
சித்திர குப்தன் என்பதைத் தமிழில் மொழிபெயர்த்தால் மறைவான / ரகசியமான படம் என்று அர்த்தம். அதாவது நம்முடைய எண்ணம் செயல்கள் அனைத்தையும் படம்பிடித்து நம்முடனே வரச்செய்யும் அதி வேக, உலகம் இது வரை கண்டுபிடிக்காத, சூப்பர் பாஸ்ட் கம்யூட்டர் ! நம்முடைய பாவ புண்ணிய மூட்டையை யமன் காண முடியும்.
சங்க கால நூல்களில் யமன், கூற்றுவன் காலன் என்ற பெயர்களில் வலம் வருகிறான் ; ச ம் ஸ்க்ருத நூல்களில் உள்ளதைப் போலவே இவன் தெற்குத் திசையில் இருப்பதத்தை தமிழ் நூல்களும் புகலும்; தென்புலம் என்றால் யமனுடைய திசை; திருக்குறளிலும் வருகிறது.
உபநிஷத்தில் வரும் நசிகேதன் கதையில்,மஹாபாரதத்தில் வரும் சத்தியவான் -சாவித்ரி கதையில்,யக்ஷப் ப்ரச்னம் என்னும் பேயின் கேள்வி-பதில் கதையில்,புராணங்களில் தேவார திருவாசகப்பாடல்களில் வரும் மார்க்கண்டேயன் கதையில் இவனுடைய அதிகாரத்தை அறியலாம்
உலக மஹா அதிசயம் பிராமணர்கள் இவனைத் தினமும் மூன்று வேளைகளில் வணங்குவதாகவும் ; இவருக்குத்தான் அதிகப்பெயர்கள்! தென் திசையை நோக்கி அவர்கள் இவனைப்புகழ்ந்து சொல்லும் பெயர்கள் :
yamāya namaḥ | yamāya dharma-rājāya mṛtyave cāntakāya ca |
vaivasvatāya kālāya sarva-bhūta-kṣayāya ca ||
audumbarāya dadhnāya nīlāya parameṣṭhine |
vṛkodarāya citrāya citra-guptāya vai namo namaḥ ||
citra-guptāya vai nama oṃ nama iti.
யம (यम): The Restrainer or Controller; he who keeps mankind in check.
தர்மராஜ (धर्मराज): The King of Righteousness or Justice.
ம்ருத்யு (मृत्यु): Death personified.
அந்தக (अन्तक): The Ender; he who brings life to a termination.
வைவஸ்வத (वैवस्वत): The son of Vivasvat (the Sun God).
கால (काल): Time, the ultimate devourer.
ஸர்வபூதக்ஷய (सर्वभूतक्षय): The destroyer or dissolver of all living beings.
ஒளதும்பரா (औदुम्बर): The one possessing immense strength (often symbolized by the glaucous fig tree).
தத்ன (दध्न): The sustainer. English word DEATH is derived from this Sanskrit word.
ஆங்கிலத்தில் உள்ள டெத் DEATH என்னும் சொல் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லில் பிறந்தது .
நீல (नील): The dark or blue-black complexioned one.
பரமேஸ்டி (परमेष्ठी): The supreme lord or high official of cosmic order.
விருகோதர (वृकोदर): The one with a vast appetite or a powerful physical frame.
சித்ர (चित्र): The wonderful or multifaceted one.
சித்திரகுப்த (चित्रगुप्त): Frequently invoked alongside Yama; his cosmic scribe who records all human deeds.
***
யமுனை (ஜமுனா) சங்க காலத்தில் தமிழர்களுக்குத் தெரிந்த இரண்டு நதிகளில் ஒன்று யமுனை; இதைத் தவிர கங்கை நதியை 17 இடங்களில் குறிப்பிடுகிறார்கள் ; சிந்து நதி பற்றித் தமிழர்களுக்குத் தெரியாது;சிந்துவெளி நாகரீகம்பற்றியும் தெரியாது ; ஆனால் மெளரிய, நந்த வம்சங்களைக் குறிப்பிடுகின்றனர் ; இரண்டு அதிசய விஷயங்கள்:– யமுனைக்குத் தொழுனை என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்; இதனுடைய விளக்கத்தை எவரும் குறிப்பிடவில்லை ; இதைக் குறிப்பிடும் அகநானூற்றுப் பாடலில் கண்ணன் கோபியர்களின் ஆடையை எடுத்துக்கொண்டு மரத்தில் உட்கார்ந்த செய்தி வருகிறது ; இது 2000 ஆண்டுப் பழமையான் பாடல்; புராணங்களுக்கு வெள்ளைக்காரர்கள் கொடுத்த குப்தர் காலத் தேதி தவறு என்பதையும் இது காட்டும்.
வேதத்தில் யமுனைநதியைக் குறிப்பிடுகிறார்கள்; இந்திரனுக்கு கிழக்கு திசையைக் கொடுத்துள்ளார்கள்; ஆகையால் கங்கை- யமுனை நதி தீரத்திலிருந்து பஞ்சாப் வழியாக இந்துக்கள் உலகம் முழுதும் குடியேறி நாகரீகத்தைப் பரப்பியதை அறிய முடிகிறது
யமி, யமுனா என்றால் இரட்டையர் என்றும் பொருள் ;இமயமலையில் யமுனோத்ரி சிகர பகுதியில் 10,849 அடி உயரத்தில் தோன்றி 860 மைல்களுக்குத் தனியாக , கங்கை நதிக்குச் சமமாக ஒடி, பிரயாகை என்னும் புண்ணிய தலத்தில் கங்கையுடன் கலக்கிறது ; வேத காலத்தில் ஒடி வற்றிப்போன சரஸ்வதி நதி இங்கு பாதாளம் வழியாக கலக்கிறது என்பதால் இதற்கு முக்கூடல் / திரிவேணி சங்கம் என்றும் பெயர். உலகத்தின் மிகப்பெரிய பண்டிகையான கும்ப மேளாவினால் பிரயாகை உலகப் புகழ் பெற்றது; துலுக்கர் ஆட்சிக் காலத்தில் இதற்கு அலஹாபாத் என்று பெயர் சூட்டினர்; இப்பொழுது அந்தப்பெயரை அழித்து, வெற்றி கண்டார்கள் இந்துக்கள்!
Yamunā (यमुना, ‘ட்வின்’) யமுனை நதிக்கரையில் நடந்த பெரும் யுத்தத்தை ரிக் வேதம் வருணிக்கிறது ; இதைக் காளிந்தி என்ற பெயரில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன .The river Is mentioned also by the name Kālindī in Eran Stone inscription of Budhagupta. T
யமுனையின் நிறம் கருப்பு; கங்கையின் நிறம் வெள்ளை இவை இரண்டினையும் கிருஷ்ணருக்கும் பலராமனுக்கும் ஒப்பிவிட்டு மகிழ்கிறான் காளிதாசன் ; கிருஷ்ணர் விளையாடியதும் யமுனை நதி தீரம்தான்.
****
யாதேயர்கள்
தமிழர்களின் முருக வழிபாட்டுக்கு முக்கியத் தடயத்தைப் பழங்காலத்தில் கொடுத்த வம்சம் யாதேய வம்சம் ஆகும் இவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட காசுகளில் ஆறு தலை அறுமுகனைக் காண முடிகிறது ; ஸ்கந்தன்/ விசாகன்/ ஷண்முகன் என்ற பெயர்களை கெளடில்ய அர்த்த சாத்திரம், பதஞ்சலியின் மஹாபாஷ்யத்தில் காண முடிந்தாலும் நக்கீரனின் திருமுருகாற்றுப்படை என்னும் சங்க கால நூலில் செப்பியது உண்மை என்பதை இவர்கள் வெளியிட்ட காசுகள் காட்டுகின்றன ; முருக பக்தர்களான இவர்கள் வேலுடன் நிற்கும் வேலாயுதனையும் காசுகளில் பொறித்துள்ளார்கள் .
இவர்கள் யுத்த ஜீவிகள் ; அதாவது எல்லோருக்கும் ஆயுத சப்ளை செய்தவர்கள் என்று 2800 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி கூறியுள்ளான் ; போர் செய்வதும் ஆயுத உற்பத்தி செய்வதும் இவர்கள் தொழில் ; இன்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேலை நாடுகள் ஆயுத உற்பத்தி- விற்பனையில் வாழ்கின்றன ; அதற்கு முன்னுதாரணம் யாதேயர்கள்தான்!
அவர்களை ஏக ராஜ க்ஷத்ரிய என்பற்று பாணினி குறிப்பிடுவதால் ஒரே தலைவனுக்கு கட்டுப்பட்டு அவர்கள் வாழ்ந்ததையும் அறிகிறோம். மகாபாரதத்திலும் இவர்களை பற்றிய குறிப்புகள் உள்ளன; யுதிஷ்டிரரின் ராஜ சூய யாகத்தில் யாதேயர்களும் கலந்து கொண்டனராம்.
Yaudheya coins are ancient copper and silver currencies issued between the 2nd century BCE and the 4th century CE by the Yaudheyas.
• Design & Deities: Most coins feature Karttikeya (the Hindu war god also called Brahmanyadeva or Skanda) holding a spear or javelin on the obverse, often accompanied by a peacock. In coins he is shown with his six heads.
• Inscriptions: They commonly bear the Brahmi legend “Yaudheya Ganasya Jaya” (Victory of the Yaudheya tribe), celebrating military success.
• Symbols: Reverses often display a deer, an elephant, a bull, or an architectural temple structure.
• Denominations: Minted primarily in copper and bronze as punch-marked or cast coins, varying in weight from roughly 3 grams to over 11 grams.
தற்காலத்தில் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் வாழும் ஜாட் வகுப்பினர் தங்களை யதேயர் வழிவந்தவர்கள் என்று கூ றிக்கொள்கிறார்கள்.
****
யயாதி
இரண்டு யயாதி மன்னர்கள் இருந்தனர்; இருவரின் தந்தை பெயரும் நஹுஷன் ! இதனால் பல கதைகளில் குழப்பம் ஏற்பட்டது . ஒருவர் சூரிய வம்சத்தையும் மற்றோருவர் சந்திர வம்சத்தையும் சேர்ந்தவர்கள் . ; கச்ச-தேவயானி கதையில் இவருடைய கதை கொடுக்கப்பட்டது அவர் சந்திர வம்சத்தவர் .
சூரிய வம்ச யயாதியின் கதை காலவ முனிவர் கதையில் வருகிறது .காலவ முனிவர் தனது குருவான விஸ்வாமித்திரருக்குக் குரு தட்சணையாக ஒரு காது மட்டும் கருப்பாக இருக்கும் 800 அசுவமேதக் குதிரைகளைத் தர விரும்பினார். குரு தட்சிணை என்ன வேண்டும் என்று காலவர் திரும்பத் திரும்பக் கேட்டதால் இப்படிப்பட்ட வினோதமான குதிரைகளை விசுவாமித்திரர் கேட்டார்; இதற்காக அவர் மன்னர் யயாதியிடம் உதவி கேட்க, யயாதி தனது மகள் மாதவியை காலவ முனிவரிடம் ஒப்படைத்தார்.
• காலவ முனிவர் மாதவியை ஹர்யஸ்வன், திவோதாசன், உசீனரன் மற்றும் விஸ்வாமித்திரர் ஆகியோருக்கு மணம் முடித்துக் கொடுத்து, அதன் மூலம் அந்த அதிசயக் குதிரைகளைப் பெற்றுத் தன் குரு தட்சணையை நிறைவேற்றினார்.
• மேலும், மகாபாரதத்தின் விசித்திரப் பறவைக் கதைகளில், காலவ முனிவர் தனது நண்பனான கருடனுடன் (பறவை இன மனிதர்) குதிரைகளைத் தேடிச் சென்ற போது சாண்டிலி என்ற கற்புடைய பெண்ணைச் சந்தித்த சம்பவத்தையும் எழுதியுள்ளேன் .
Mādhavī (माधवी).—மாதவியின் கதை மஹாபாரத உத்யோக பர்வத்தில் வருகிறது அவள் எப்போது பார்த்தாலும் மான் தோலை அணிந்துகொண்டு முனிவர் போலத் தவம் இயற்றி வந்தாள்; அவள் எத்தனை பேருடன் உடலுறவு கொண்டாலும் கன்னித் தன்மையை இழக்காத வரமும் அவளுக்கு இருந்தது. அயோத்தி மன்னன் ஹர்யஸ்வாவுடன் படுத்த போது வசுமனாஸ் என்ற பிள்ளையைப் பெற்றாள். காசி மன்னன் திவோதாசன் மூலம் பிரதர்தனன் என்பவனையும், உசிநார மன்னன் மூலம் சிபிச் சக்ரவர்த்தியையும் விசுவாமித்திரர் மூலம் அஷ்டக என்பவனையும் பெற்றாள் .
To be continued…………………..
Tags. யக்ஷ்ம, யாதேயர் , யயாதி , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-126; இந்து மத கலைச்சொல் அகராதி-126, யமுனை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non-commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு – 32
(ஆர், சேஷாத்ரிநாதன்)
இராமனின் வாக்குறுதி
இவ்வாறு சுக்ரீவன் தனது உடலுக்கு ஏற்பட்ட துன்பத்தை रिपु सम मोहि मारेसि अति भारी என்பதன் மூலமும் மனதிற்கு ஏற்பட்ட துன்பத்தை इहाँ साप बस आवत नाहीं என்பதன் மூலமும் செல்வத்துக்கு ஏற்பட்ட இழப்பை इहाँ साप बस आवत नाहीं என்பதன் மூலமும் இராமனிடம் முறையிட்டான்.
सुन सेवक दुःख दीनदयाला फरकि उठीं द्वै भुजा बिसाला॥7॥
சுக்ரீவன் சொன்னதைக் கேட்டு இராமனின் இரு புஜங்களும் துடித்தன.. எல்லாவிதமான சேவைகளையும் செய்யத் सब प्रकार कारिहोँ सेवकार्ड தயாராக இருக்கிறேன் என்று சுக்ரீவன் சொன்னதால் அவனுடைய மனக் குமுறலைக் கேட்டு இராமனின் இரு புஜங்களும் துடித்தன என்று சொல்கிறார் துளசிதாசர்.
இரண்டு புஜங்களும் துடித்தன என்பதற்கு உரையாசிரியர்கள் சில விஷயங்கள் சொல்கின்றனர். அதாவது இரு புஜங்களும் துடிப்பது போருக்கான அறிகுறி.. வெறும் வாளை வீசி சண்டை என்றால் வலது புஜம் மட்டும் துடிக்குமாம். வாலி வதம் பாணத்தால் நிகழ்த்தப் பட வேண்டும். அதனால் இரு புஜங்களும் துடித்தன என்கிறார்கள்.
सुनु सुग्रीव मारिहउँ बालिहि एकहिं बान।
ब्रह्म रुद्र सरनागत गएँ न उबरिहिं प्रान॥6॥
தனது இரு கைகளையும் உயரே தூக்கி இராமன் சுக்ரீவனிடம் “சுக்ரீவா! கேள். நான் ஒரே பாணத்தினால் வாலியைக் கொன்று விடுவேன். பிரம்மா, சிவன் என்று எவரைச் சென்று அவன் சரணடைந்தாலும் அவன் உயிரைக் காப்பாற்ற முடியாது.
இதே கூற்றை அங்கதன் இராவணனிடம் கூறுகிறான்.
सुनु रावन परिहरि चतुराई। भजसि न कृपासिंधु रघुराई॥
जौं खल भएसि राम कर द्रोही। ब्रह्म रुद्र सक राखि न तोही॥
அங்கதன் இராவணனிடம் “நீ உனது கபட நடவடிக்கைகளை விட்டுவிட்டு இராமனிடம் சரண் அடைந்துவிடு. இராமனைப் பகைத்துக் கொண்டால் உன்னை பிரம்மா, சிவன் இவர்கள் எவராலும் காப்பாற்ற முடியாது” என்று சொல்கிறான்.
இராமன் வாலியை, சுக்ரீவன் ‘इहाँ साप बस आवत नाहीं। तदपि सभीत रहाँ मन माही அதாவது அவன் சாபத்தினால் இங்கு வர முடியாது. ஆனாலும் எனக்கு அவனிடம் பயம் உள்ளது என்று சொன்னவுடன் வாலியைக் குற்றம் செய்தவனாகக் கருதினான். கோபத்தின் வேகத்தில் சுக்ரீவனைத் தவறாக நினைத்து அடித்துத் துரத்தி இருக்கலாம். அதற்குப் பிறகு தனது அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்து தாரையிடம் முழுவிவரங்கள் கேட்டுத்தெரிந்து கொண்டு சுக்ரீவனை மீண்டும் கிஷ்கிந்தைக்குள் அழைத்து இருக்கலாம். ஆனால் நிறைய காலம் கடந்த பின்னரும் வாலி அதைச் செய்யவில்லை. அதற்குப் பதில் தனது மகளாக நினைக்க வேண்டிய சுக்ரீவனின் மனைவி ரூமையை தன்னுடையவளாக வைத்துக் கொண்டதைக் கேட்டதும் இராமன் கோபமுற்று வாலியைக் குற்றம் செய்தவனாகக் கருதி அவன் கொல்லப்படவேண்டியவன் என்று முடிவு செய்தான்.
மேலும் சுக்ரீவன் வாலிக்குப் பயந்து எல்லா லோகங்களுக்கும் சென்றும் யாரும் அவனுக்கு சரண் அளிக்கவில்லை. அதனால் இராமன் வாலியை ஒரே பாணத்தால் கொல்லுவேன் என்று சொல்லுகிறான். இந்திரனின் மகன் ஜெயந்தன் போல எந்த உலகத்திற்குச் சென்றாலும் பிரம்மா சிவனைச் சரணடைந்தாலும் அவன் தப்பமுடியாது என்று சொல்கிறான். தனது உறுதி மொழிக்கான காரணத்தையும் சொல்லுகிறான் இராமன்.
जे न मित्र दु:ख होहिं दुखारी। तिन्हहि बिलोकत पातक भारी॥
எவன் ஒருவன் தனது நண்பனின் துயரத்தைக் கண்டு தானும் துக்கமடைவதில்லையோ, அவனைப் பார்ப்பதும் பாவம் என்கிறார் துளசிதாசர்.
நண்பனின் துன்பத்தைக் கண்டு எவன் ஒருவன் தான் துன்புறுவதில்லையோ அவன் மகாபதகம் செய்தவன் ஆகிறான் என்று மனுஸ்ம்ருதி சொல்கிறது
ब्रह्महत्या सुरापानं स्तेयं गुर्वङ्गनागमः ।
महान्ति पातकान्याहुः संसर्गश्चापि तैः सह ॥
(मनुस्मृति ११। ५४)
ब्रह्महत्या सुरापानं स्तेयं गुर्वङ्गनागमः।
महान्ति पातकान्याहुः संसर्गश्चापि तैः सह ॥ – मनुः
பிராமணனைக் கொல்வது, , மது உண்பது , குருவின் மனைவியிடம் தவறாக நடந்து கொளவது, தங்கத்தைத் திருடுவது பெரிய பாவங்களாகும். இத்தகைய பாவங்களைப் செய்தவர்களைப் பார்க்கவே கூடாது. நண்பனின் துயரத்தைக் கண்டு தான் துயருண்டு அவனுக்கு உதவ முன் வராதவன் மேற்கண்டப் பாவங்களை செய்தவனுக்கு இணையான பாவத்தைச் செய்தவனாகிறான்.
குமாரசம்பவத்திலும் இது சொல்லப்பட்டுள்ளது
स्वजनस्यापि दुःखमग्रतो विवृतद्वारमिवोपजायते।
தனது நெருக்கமானவரின் துயரத்தை நேரில் காணும் போது, அது திறந்த கதவாக நம்முள் நுழையும் போலவே, நம்மை ஆழமாக பாதிக்கிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-10-26 மங்கையர் மலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ஊதியம் முதல் சுகாதாரம் வரை: இன்னும் தீராத பெண்களின் 20 பிரச்சினைகள்!
ச. நாகராஜன்
“ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்.”
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
இப்படி, மகாகவி பாரதியாரின் பெண்ணுரிமைக் குரலோசை முழங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கடந்து விட்டன.
ஆனால் இன்னும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.
முதலில் பிரச்சினைகள் எவை எவை என்பதை இனம் கண்டு கொண்டால் தீர்வைப் பற்றி சமுகத்தில் உள்ள அனைவரும் யோசிக்கலாம்.
இப்போது பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பட்டியல் இதோ:
1. ஒரே மாதிரியான ஊதியம் இல்லை. ஒரே நிறுவனத்தில் ஒரே மாதிரியான வேலையை ஒரே மாதிரி தகுதி கொண்ட பெண்கள் பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் ஊதியம் மட்டும் குறைவாகத் தரப்படுகிறது.
2. இனப் பாகுபாடு: மதம், இனம், ஜாதி இவற்றால் பல்வேறு நாடுகளிலும் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே நடத்தப்படுகின்றனர்.
3. பெண்கள் மீதான வன்முறை” : வோர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷனின் பார்வையின் படி மூன்றில் ஒரு பெண் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள். பெண் என்ற ஒரே காரணத்தால் தான் இது நிகழ்கிறது.
4. மருத்துவ சேவை குறைவாக உள்ளது. பெண்களுக்கே உரித்தான பல வியாதிகளுக்கான சிகிச்சை உலகெங்கும் குறைவாகவே உள்ளது. உலகின் மருத்துவ சேவையில் 67% பங்கைத் தரும் பெண்கள் 25% க்கும் குறைவாகவே உயர் பதவிகளைப் பெற்றுள்ளனர்.
5. கருத்தரிக்கும் உரிமை: 80 கோடி பெண்களுக்கு, தான் கருத்தரிப்பதில் எந்த நிலையை மேற்கொள்வது என்பது பற்றி முடிவெடுக்க எந்த வித உரிமையும் கிடையாது. இதில் 6% பெண்கள் கருக்கலைப்பு தடை செய்யப்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர். நவீன குடும்பக் கட்டுப்பாடு வழிமுறைகள் பெரும்பாலானோரை இதுவரை சேரவில்லை.
6. கல்வியில் சம உரிமை இல்லை: யூனிசெஃப் -ன் அறிக்கையின் படி 12 கோடி சிறுமிகள் பள்ளியில் சேரவே இல்லை. கல்வியில் எந்தத் துறையிலும் அவர்களுக்கு சம உரிமை இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
7. உணவு பற்றாக்குறை: ஆண்களை விட பெண்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. இதற்கான காரணம் சொல்ல முடியாத அளவு உள்ள வறுமை தான். பிரசவ காலத்தில் அவர்களுக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைப்பதே இல்லை.
8. பருவ நிலை மாற்றம்: அடிக்கடி ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் உடனடியாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.
9. அரசியலில் சம உரிமை இல்லை. உலகெங்கும் உள்ள பாராளுமன்றங்களில் 27.5% சதவிகிதம் தான் பெண்கள் அங்கம் வகிக்கின்றனர். இன்றைய போக்கு நீடித்தால் 50% என்ற சம உரிமை, இன்னும் 130 ஆண்டுகள் கழித்துத் தான் வரும்.
10. சமூக நிறுவனங்களில் பின் தங்கிய நிலை: சமூகம் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் நிறுவனங்களில் பெண்களின் பங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
11. பெண்களைக் கடத்தல் : பாலியல் வன்முறைகளுக்காக பெண்கள் கடத்தப்படுவது அதிகமாகி வருகிறது. 2021ம் ஆண்டு நிலவரப்படி கடத்தல் சம்பவங்களில் 61% பெண்களின் கடத்தலாகவே இருக்கிறது.
12. நடமாடத் தடை: நினைத்த இடத்திற்குப் பெண்கள் இன்று உலகின் எந்த பாகத்திலும் போக முடியாது. வீட்டில் உள்ளோர், சமூகப் பெரியோர்களின் கட்டுப்பாடு மிக அதிகம்.
13. இடம் மாறும் பெண்களின் அவல நிலை: ஏதோ ஒரு காரணத்திறாக நாடு விட்டு நாடோ அல்லது இடம் விட்டு இடமோ மாறும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.
14. ஊனமுள்ள பெண்களின் அவல நிலை: உலகில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு உடலில் ஏதோ ஒரு சின்ன கோளாறு இருக்கிறது. ஐ.நாவின் அறிக்கையின் படி இவர்கள் உடல் நலமுள்ள பெண்களை விட மூன்று மடங்கு அதிகமாகக் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.
15. மன நலம் பாதிப்பு: ஆண்களை விட மன அழுத்தம். ஏமாற்றம், மனச்சோர்வு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. அமெரிக்காவில் மட்டும் 2025ல் 34% அதிக பெண்கள் மனநலம் குன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
16. டிஜிடல் உலகத்தில் ஏமாற்றம்: டிஜிடல் உலகில் இன்னும் சம உரிமையும் வேலை வாய்ப்பும் பெண்களுக்குத் தரப்படவில்லை. இதனால் உலகின் பொருளாதாரமே நினைக்க முடியாத அளவிற்குப் பாதிக்கப்படுகிறது.
17. ஆன் லைன் தாக்குதல் : நவீன தொழில்நுட்பம் பெண்களைத் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் நொடி நேரத்தில் சித்தரித்து விடுகிறது. இதைத் தடுப்பதற்கான போதுமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
18. கூலி இல்லா வேலை: சம்பளமே இல்லாமல் பெண்களை வேலை வாங்குவது தவறு. ஆனால் பன்னாட்டு தொழிலாளர் சங்கத்தின் அறிக்கையின் படி 71 கோடி பெண்கள் சம்பளமே இல்லாமல் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஜப்பானில் இது மிக அதிகம்.
19. பிரசவ கால பராமரிப்பு : பிரசவ காலத்தில் பெண்கள் படும் வேதனையை நீக்க முயற்சிகள் போதுமானதாக இல்லை. 75% மரணங்கள் அதிக இரத்தப் போக்கு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் ஏற்படுகின்றன. மருத்துவக் கண்காணிப்பு அதிகம் தேவை.
20. மாதவிலக்கில் பராமரிப்பின்மை: 50 கோடி பெண்களுக்கு உலகெங்கும் மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் சிரமங்களுக்கு நிவாரணம் இதுவரை இல்லை.
ஆக இப்படி வாழ்க்கையின் முக்கியமான எல்லா அம்சங்களிலும் பெண்கள் இன்னும் பிரச்சினைகளை எதிர் கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் உள்ள பிரச்சினைகளை ஆண்களும், பெண்களும் தங்கள் இருப்பிடத்தில் இருக்கும் நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
உண்மை புரியும்.
பெண்கள் விழிப்புணர்வோடும் தைரியத்தோடும் செயலாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது.
ஆண்களோ எனில் அவர்கள் தங்கள் போக்கை மாற்றி சம உரிமையை பெண்களுக்கு வழங்க முன்வர வேண்டுகம்;
அனைவரும் இணைந்து உலக நிலைமையை மாற்றி சம உரிமையைப் பெண்களுக்கு அளிப்போம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
11
கம்பன் சொல்லும் அதிசய மூலிகைகள் எவை?
12
தூக்கணாங் குருவிகள்தான் மனிதனுக்கு வீட்டில் விளக்கு ஏற்றுவதைச் சொல்லிக் கொடுத்தன; அவை மின்மினிப் பூச்சிகளை பிடித்துக் கொண்டு போய் கூட்டில் வைத்து அழகு பார்க்கும்; இதைத் தற்கால தீபாவளி, நவராத்ரி, கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்களுடன் DECORATIONS ஒப்பிடலாம் ; இந்த அதிசயத்தைக் கம்பன் எங்கே குறிப்பிடுகிறான் ?
13
கோசல நாட்டுப் பெண்கள் நல்ல படித்த பணக்கார பெண்களாம்; ஆயினும் அவர்கள் ஆபீசுக்குப் போகாமல் வந்த விருத்தினர்களைக் கவனிப்பதே வேலையாகச் செய்தார்களாம் ; கம்பனின் இந்த கற்பனை வளத்தை எங்கே காணலாம்?
14
வாலிபால் என்னும் விளையாட்டினைக் கண்டு பிடித்தவர்கள் தமிழ்ப் பெண்கள்தான் ! பிற்காலத்தில் பூப்பந்தாட்டம் துவங்குவதற்கு அவர்களே காரணம்; இதைச் சங்க இலக்கியப்பாடல்களில் காண்கிறோம்; கம்பன் அவர்கள் தினசரி ட்ரெயினிங் எடுத்தத்தைச் சொல்கிறானே ! அது என்ன பாடல்?
15
தாலி பற்றி அடிக்கடி தாலி அறுக்க விரும்பும் பெண்கள் கட்டுரைகளை எழுதி அவர்களின் அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்ப்THOUSAND WATT BULB போட்டு காட்டுவதை அவ்வப்போது படிக்கிறோம்; ஆனால் மு.சண்முகம் பிள்ளை , கம்பனும் மில்டனும் நூல் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் எஸ் ஆர் கே ஆகியோர் தாலி உண்டு என்று இலக்கியக் குறிப்புகளைக் காட்டினார்கள் !கம்பனும் தாலி உண்டு என்கிறான் ! அது எங்கே?
16
பட்டி மண்டபம் இன்று பட்டி மன்றமாகிவிட்டது; பட்டி விக்ரமாதித்யன் என்ற மாபெரும் மன்னனும் அறிஞனும் உண்டாக்கிய விவாத சபை இது ! மாணிக்க வாசகரும் ஒன்றும் அறியாத என்னை பட்டி மண்டபம் ஏற்றினையே என்கிறார் ; ஏனெனில் அவரை புத்தர்களுடன் வாதிடும்படி சிதம்பரம் தீட்சிதர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர் ; அயோத்தியில் பல MANY HALLS ஹால்கள்;உண்டாம்; அதில் ஒன்று அறிஞர்கள் மோதும் பட்டி மண்டபம் என்கிறானே கம்பன் ; அதைச் செப்பிய இடம் யாதோ!
17
யுவான் சுவாங் என்னும் சீன யாத்ரீகன் அப்பர், மஹேந்திர பல்லவன் காலத்தில் வந்தான் ; அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் குப்தர் காலத்தில் வந்த சீன யாத்ரீகன் பாஹியான்– குப்தர் காலத்தில் வீடுகளுக்கு கதவுகள் இல்லை; அந்த நாட்டில் திருடர்கள் இல்லை என்றான்; கம்பன் கண்ட அயோத்தியின் நிலை என்ன?
18
முதல் முதலாக கம்பன் ராவணனை அறிமுகப்படுத்தும் இடம்– தேவர்கள் அவன் செய்த அட்டூழியங்களை முறையிட்ட இடம் –ஆகும் . வால்மீகியில் இல்லாத அவதார விஷயத்தைக் கம்பன் இங்கே செப்பினானா?
கோட்டம்என்பது ஒரு வகை வாசனை வேர்;கடுக்கை-கொன்றைமரம் ; சரக்கொன்றை, கண்டில் வெண்ணெய்: இது ஒரு வகையான பூண்டு வகையைக் குறிக்கும். சிந்தூரம் -வெட்சி பூச்செடி, மற்றும் புளியமரம்
இதில் கண்டில் வெண்ணெய் பற்றி யாருக்குத் தெரியும்?
***
12.சூட்டுடைத் துணை தூ நிற வாரணம்
தாள்-துணைக் குடைய, தலை சால் மணி
மேட்டு இமைப்பன; ‘மின்மினி ஆம்’ எனக்
கூட்டின் உய்க்கும,குரீஇயின் குழாம்அரோ.
உச்சிக் கொண்டை உடையதும் துணையானதுமான; தூய நிறத்தையுடைய சேவல்கள்;
தம் கால்களால் (குப்பைகளைக்) குடைவதால்;தகுதி மிக்க மாணிக்கங்கள்;
(அந்தக் குப்பை) மேடுகளில் ஒளிரும்; குருவிக்
கூட்டம்; ‘அந்த மணிகளை) மின்மினிப்
பூச்சிகள் என்று நினைத்து; தம் கூடுகளில்
கொண்டு போய் வைக்கும்.
கோழிகள் குப்பையைக் கிளறும்போது அக் குப்பைமேட்டில்
ஒளிர்கின்ற மணிகளை மின்மினிப் பூச்சி எனத் தவறாக எண்ணி,
அவற்றை ஒளி தருவதற்காகக் குருவிகள் தம் கூட்டில் கொண்டு
சேர்க்கின்றனவாம்.
இதே கற்பனைக் காட்சியைக் கம்பரே பின்னரும் தருகிறார்:
“எரியும் மின்மினி மணி விளக்கின் இன்துணைக் குரீஇயினம்
பெடையொடு துயில்வ” (4234)
***
13.பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும்,வைகலும்,
விருந்தும், அன்றி, விளைவன யாவையே?
பெரிய அகலமான கண்களை உடைய; பிறை வடிவமான நெற்றியை உடைய
பெண்களுக்கெல்லாம்; பொருட் செல்வமும்; நூலறிவும் நிறைந்திருப்பதால்; வறுமையால் உதவி நாடி வந்தோர்க்கு வழங்குதலும்;
நாள்தோறும் விருந்து ஓம்புதலும் அல்லாது; (பெற்ற செல்வத்தாலும் சேர்த்த கல்வி அறிவாலும்
விளைவன வேறு யாவை?
***
14.பந்தினை இளையவர் பயில் இடம், – மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம், –
சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம்;
நந்தன வனம் அல, நறை விரி புறவம்;
பந்தினை இயையவர் பயில் இடம்- அந்நாட்டு இளம் பெண்கள்
பந்து விளையாடபயிற்சி செய்யும் இடங்கள்; சந்தன வனம் அல சண்பக வனம்
ஆம்- சந்தனச் சோலைகளே;ஆயினும் அவர்களது மேனி மணத்தால்
சண்பகச் சோலைகளாகும்; கந்தனை அனையவர் கலை தெரி கழகம்-
முருகனை ஒத்த ஆடவர்கள் வில் முதலிய கலைகளைப்
பயிலுமிடங்கள்; நந்தன வனம் அல நறை விரிபுறவம்- பல மலர்களை
உடைய நந்தனவனங்களே ஆயினும் ‘அவர்தம்’ மேனி மணத்தால்
முல்லைக்காடுகளாக விளங்கும். (புறவம்- காடு)
இதில் வியப்பான விஷயம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலில் தனித்தனி மணம் உண்டு என்ற செய்தியாகும்!
பெண்களின் மேனி சண்பக மணமும்,ஆடவர் மேனி முல்லை
மணமும் உடையராதலின் மகளிர் பந்தாடுமிடம் சண்பகச் சோலை
ஆயின. ஆடவர் கலை பயிலுமிடம் முல்லைக் காடாக மணந்தன
என்பர். “ஆண்கள் மேனிக்கு முல்லை மணம்” இயல் பென்பதை
“மன்னொடும் தோளே முல்லை முகை நாறும்மே” என்று குறுந்தொகை
(193) வரிகளால் அறியலாம். இளையவர் என்பது இளம் வயதினர்
YESTERDAY’S TEN QUESTIONS; ANSWERS ARE IN MY BLOGS.
1
அஞ்சிலே ஒன்று பெற்றான் — என்னும் அருமையான கம்பன் பாடலின் பொருள் என்ன?
2
ராம என்ற இரண்டே எழுத்துக்கள் தரும் அற்புதப் பலன்கள் பற்றி கம்ப இராமாயண சிறப்புப் பாயிரத்தில் ஒரு பாடல் உள்ளது. நினைவுக்கு வருகிறதா அந்தப்பாடல்?
3
எந்த ஒரு நூலினையும் மங்களச் சொற்களுடன் துவங்க வேண்டும் என்ற விதி சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் உள்ளது;கம்பன்,தனது ராமாயணத்தை,எந்தச் சொல்லுடன் துவங்குகிறான்?
4
கம்பனும் காளிதாசனும் என்ன சொல்லி நூலை எழுதத் துவங்கினார்கள்?
5
போற்றுவார் போற்றட்டும்,தூற்றுவார் தூற்றட்டும்;போங்கடா போங்க! நான் சொல்வது தெய்வ மாக்கவி எழுதிய கவிதை என்று கம்பன் செப்பியது எங்கே?
6
வால்மீகியைத் தவிர வேறு இருவர் ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணம் எழுதினார்கள் என்று கம்பன் ஒரு புதிர் போடுகிறானே ! அந்தப் புதிருக்கு விடை கிடைத்ததா?
7
தெய்வ மாக்கவி,முதலில் ராமாயணம் சொன்னவர் என்றெல்லாம் வான்மீகி முனிவரைப் போற்றிய கம்பன் அவருடைய பெயரை எங்கேயாவது பகர்ந்தானா?
8
கம்பன் சர்வ சமய நோக்குள்ளவன்;சைவ,வைணவ பேதம் பாராட்டாதவன்;முடிந்த அளவுக்கு சிவன் பெருமையை அவன் பாடுகிறான்;சரயு நதிப் பாடலில் சிவனை அவன் எப்படிப் புகழ்கிறான்?
9
ஆகாசாத் பதிகம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் பிரதி கச்சதி– என்று பிராமணர்கள் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தன மந்திரத்தில் சொல்கிறார்கள்;இதைக் கம்பனும் சொல்லி,சர்வசமய பொதுநோக்கினைக் காட்டும் பாடல் எது?
10
கம்பன் போகிற போக்கில்Musicமியூசிக்பற்றி ஒரு அருமையான உவமை சொல்கிறான்;இந்தப்பாடலின் பொருள் விளங்குகிறதா?
பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,
பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்.