மண்டோதரியின் மாண்பு !

mando best
By s Nagarajan
Post No 988a; dated 19th April 2014
ராமாயண வழிகாட்டி; அத்தியாயம் 24

ராமாயணத்தில் வரும் அற்புதமான பாத்திரங்கள் அனைவரையும் சரி சமமாக கவிதா மயமாக்கி இருப்பது வால்மீகி ஒருவராலேயே செய்ய முடிந்த அற்புதம். இந்த வகையில் மண்டோதரியை அவர் சித்தரிக்கும் பாங்கே தனி!

அஹல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரீ ததா I

பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் மஹாபாதக நாசினி: II

ஹிந்துக்களால் காலம் காலமாகத் துதிக்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.
அஹல்யா, திரௌபதி, சீதா, தாரா. மண்டோதரீ ஆகிய ஐந்து கன்யாக்களின் பெயரை தினமும் நினைத்தால் மஹாபாதகங்களும் நாசம் அடையும் என்பது இதன் பொருள். இதில் நால்வர் ராமாயணத்தில் வரும் பாத்திரங்கள். திரௌபதி மஹாபாரதத்தில் வரும் பாத்திரம். ராமாயணத்தில் வரும் நால்வரும் ராமரை இன்னார் என்று அடையாளம் தெரிந்து கொண்டு பரம்பொருளே அவர் என்று நிர்ணயித்த மஹா பாக்கியசாலிகள். திரௌபதியோ கண்ணன் உண்மையில் பரம் பொருளே என்று அறிந்தவள். அவரைத் ஹ்ருதயகமலவாசா என்று துதித்தவள்.

மண்டோதரீ ராவணன் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்தவுடன் புலம்புகிறாள். அவனை வதம் செய்ய வந்தவன் சாதாரண மானுடன் அல்ல; பரம் பொருளே என்று அவள் கூறுகிறாள்
யுத்த காண்டத்தில் நூற்றுப்பதினான்காவது ஸர்க்கத்தில் 16,17,18,19 ஆகிய நான்கு ஸ்லோகங்களில் அவளின் பேரறிவு வெளிப்படுகிறது.

வ்யக்த மேஷமஹாயோகீ பரமாத்மா ஸநாதந: I
நாதிமத்ய நிதநோ மஹத: பரமோ மஹாந் II

தமஸ: பரமோதாதா சங்க சக்ர கதாதர: I
ஸ்ரீவத்ஸ வக்ஷா நித்ய ஸ்ரீரஜய்யச் சாச்வதோ த்ருவ: II

மாநுஷம் ரூபமாஸ்தாய விஷ்ணுஸ்ஸத்யபராக்ரம I
ஸர்வை: பரிவ்ருதோ தேவைர் வாநரத்வமுபாகதை: II

ஸர்வலோகேஸ்வரஸ் ஸாக்ஷாத்லோகாநாம் ஹிதகாம்யயா: I
ஸராக்ஷஸ பரிவாரம் ஹதவாம்ஸ்த்வாம் மஹாத்யுதி: II

mand5

ஏஷ – இவர் (ஸ்ரீராமர்) மஹாயோகீ பரமாத்மா ஸநாதந: – மஹாயோகியும் பரமாத்மாவும் புராணபுருஷரும் அநாதிமத்ய நிதநோ – ஆதியும் மத்தியும் அந்தமும் இல்லாதவரும் மஹத: பரமோ மஹாந் – பெரும்பொருளிலும் சிறந்த பெரும்பொருளூம் தமஸ: பரம: – இருளுக்கு (அஞ்ஞானத்திற்கு) அப்பாற்பட்டவரு தாதா – சிருஷ்டிப்பவரும் சங்க சக்ர கதாதர: -சங்கத்தையும் சக்கரத்தையும் திருக்கரத்தில் கொண்டவரும் ஸ்ரீவத்ஸ வக்ஷா – ஸ்ரீ வத்ஸமென்னும் மறுவை மார்பில் கொண்டவரும் நித்ய ஸ்ரீ –நித்ய லக்ஷ்மீ சமேதரும் அஜய்ய –அஜேயரும் சாச்வதோ த்ருவ: – எக்காலத்திலும் இருப்பவரும், மாறுபடாதவரும் ஸர்வலோகேஸ்வர: – அனைத்து லோகங்களுக்கும் ஈஸ்வரரும் மஹாத்யுதி: -மஹிமை மிக்கவருமாகிய சாக்ஷாத் விஷ்ணு: -சாக்ஷாத் விஷ்ணு பகவான்.

mand17

வ்யக்த – இது திண்ணம் ஸத்யபராக்ரம – ஸத்யமான பராக்ரம்ம் கொண்ட இவர் லோகாநாம் – உலகங்களுக்கு ஹிதகாம்யயா – நன்மை புரியத் திருவுள்ளம் கொண்டு மாநுஷம் ரூபே ஆஸ்தாய – மானிட உருவம் தரித்துக் கொண்டு வாநரத்வம் – வானர உருவத்தை உபாகதை: -அடைந்த தேவைர் ஸர்வை: – தேவர்கள் யாவராலும் பரிவ்ருத: – சூழப்பட்டு த்வாம் – உம்மை ஸராக்ஷஸ பரிவாரம் – அரக்க பரிவாரங்களுடன் ஹதவான் – கொன்று விட்டார்.

mand24

ராமாயணத்தின் மையக் கருத்தை இந்த நான்கே ஸ்லோகங்களில் நாம் காண்கிறோம். விஷ்ணுவுக்கு சஹஸ்ர நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமம் அதி ரஹஸ்யமான அர்த்தங்களைக் கொண்டது. அந்த ஆயிரம் நாமங்களில் தேர்ந்தெடுத்த சிலவற்றை மண்டோதரீ இங்கு குறிப்பிடுவது ரஹஸ்யசாரமாகவும், சுவையுடன் கூடியதாயும், ராமரை விஷ்ணுவே என்று நிர்ணயம் செய்வதாயும் அமைந்துள்ளது.

தாரையும் கூட ராமரை பரம்பொருளே என்று இனம் கண்டவள். மண்டோதரியும் அப்படியே.

ராமாயணத்தின் ஜீவநாடியான விஷ்ணு நாமங்கள் இடம் பெறும் ஸ்லோகங்கள் என்பதால் இவை தனிச் சிறப்புடையவையாக ஆகின்றன; உயர்ந்து நிற்கின்றன!

Contact:— Swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment