
Yazidi Temple looks like Hindu Temple
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்:–லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 1248; தேதி 23 ஆகஸ்ட் 2014
இந்தக் கட்டுரையின் முதல் பகுதி –– ‘’இராக் நாட்டில் இந்து மதம்: மயில் வாகனன் வழிபாடு’’ — என்ற தலைப்பில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (கட்டுரை எண் 1232) வெளியாகியது. அதைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.
நான் முதல் கட்டுரையை லணடன் பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் எழுதினேன். அதற்குப் பின் லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி வீக்’ The Week என்னும் பத்திரிக்கை மேலும் பல சுவையான விஷயங்களை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் கிடைத்த புதிய செய்திகள் மேலும் வியப்பை ஊட்டுகின்றது!!
1.யாசிதி மக்கள் சூரியன் இருக்கும் திசையை நோக்கி தினமும் மூன்று முறை வழிபடுவர்:
இது இன்றும் பிராமணர்கள் செய்யும் சந்தியாவந்தன வழிபாட்டை நினைவுபடுத்தும். முஸ்லீம்களாக மதம் மாற மறுக்கும் யாசிதிக்கள் வேத கால பிராமனர்களாக் இருந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பிராந்திய வழக்கத்தில் மூழ்கி இருக்கலாம்.
2.யாசிதி மக்களில் மூன்று ஜாதிகள் உண்டு. முதல் இரண்டு ஜாதிக்கள் உயர் ஜாதி. மதம் நீதி போதனைகளை உபதேசிப்பது இவர்கள் தொழில்:
இது வேத கால ஜாதி முறை போன்றது. பிராமணர்கள் மட்டுமே முன்னர் ஆசிரியர் வேலை செய்து வந்தனர். பிரிட்டனிலும் கூட ஜாதி உண்டு. இன்று வரை ராஜ குடும்பத்தினர் மட்டுமே ராஜாவோ ராணியோ ஆகலாம். பிரபுக்கள் ஜாதியில் பிறந்தவர்களுக்கு பிறப்பு அடிப்படையில் பிரபு பதவி வழங்கப்படும்.

Yazidi girls in front of a Yazidi lamp
3.யாசிதி மக்கள் நீல நிற ஆடை அணியமாட்டார்கள். இது புனித நிறம்:
இது பற்றி முதல் பகுதியில் எழுதிவிட்டேன். மயில் இவர்களுடைய புனித பறவை ஆதலால் அந்த நிறமும் புனிதம்!!
4.யாசிதி மக்களின் பல வழக்கங்கள் மிக மிக ரகசியமானவை. வெளி உலகம் பார்த்தே இராத வழக்கங்கள். லலிஷ் என்னும் கிராமம் வடக்கு இராக்கில் பசுமையான மலைப் பகுதியில் உள்ளது. அந்தப் புனிதத் தலத்துக்கு வாழ்க்கையில் ஒரு முறையாவது யாசிதி போகவேண்டும்:
இது இந்துக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்குப் போய் கங்கையில் குளிக்க வேண்டும் என்பது போன்றது.
5.யாசிதி இன மக்களுக்கு ஞான ஸ்நானம் உண்டு. அவர்கள் இரண்டு புனித ஓடைகள் உள்ள இடத்தில் இதைச் செய்கிறார்கள்:
இந்துக்களைப் போன்று தண்ணிரை உபயோகிக்கும் இனம் உலகில் எங்கும் இல்லை. பிறந்தது முதல் இறக்கும் வரை உள்ள 40 சடங்குகளிலும் (சம்ஸ்காரம்) நீர் இன்றியமையாதது. பிராமணச் சிறுவர்கள் ஞான ஸ்நானம் செய்யும் (பூணூல் சடங்கு) நாளன்று பல முறை குளிக்க வேண்டும். பைபிளில் உள்ள ஏசுவின் காலைக் கழுவும் பாத பூஜை, ஞான ஸ்நானம் எல்லாம் இந்து மதச் சடங்குகளின் மிச்ச சொச்சமே என்று பைபிளில் சம்ஸ்கிருதம் என்ற நீண்ட ஆங்கில கட்டுரையில் ஏற்கனவே விளக்கி இருக்கிறேன். ஆக யாசிதி இன மக்கள் வேத கால பிராமணர்களாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கால, தேச, வர்த்தமனங்களுக்கு ஏற்ப மாறினார்கள் என்று எண்ண இடம் இருக்கிறது. இவர்கள் வேத மதத்தின் ஒரு பிரிவான ஜொராஸ்திரியர்களுக்கும் முன்னவர்கள் – 4000 ஆண்டு பழமையான இனம் என்பதெல்லாம் முதல் பகுதியில் விளக்கப் பட்டுவிட்டது.

Yazidi fire worship like Hindu Havan,Homam
6. மித்ர (சூரிய உபசனை) வழிபாடு:—- இவர்கள் மோசுல் (இராக்) பக்கத்தில் உள்ள சூரியன் கோவிலில் வழிபாடு செய்வர்:
மித்ரன் என்பது வேத கால தெய்வம். சூரியனின் மறு பெயர். சூரிய நமஸ்காரம் செய்வோர் முதலில் சொல்லி வணங்கும் மந்திரம் ‘’ஓம் மித்ராய நம:’’ பிற்காலத்தில் ரோமானியர்கள் இந்த மித்ர வழிபாட்டை எடுத்துக் கொண்டு காளையைப் பலி கொடுத்தனர். இது ரோமானியர்கள் புகுத்திய ஒரு பழக்கமாக இருக்கலாம். ஏனெனில் இந்துக்கள் காளை மாட்டையோ பசுமாட்டையோ கொல்ல மாட்டார்கள். சிவனின் வாகனமான காளை—தெய்வீக மிருகம் ஆகும்
7. யாசிதிக்கள் புத்தாண்டு கொண்டாடுவர். சூபி சந்யாசி இறந்த சமாதியில் வழிபடுவர்:
சூபி முஸ்லீம்கள், இந்துக்கள் போலவே நம்பிக்கை உடையவர்கள்.
8.யாசிதி இனம்மக்கள் பால்ய விவாஹம் செய்வர். இவர்கள் வசிக்கும் ஆர்மீனியா நாட்டில் திருமண வயதை 18ஆக உயர்த்த அரசு சட்டம் கொணர்ந்த போது யாசிதி இன மக்கள் கிளர்ச்சியில் குதித்தனர்.
இந்துக்களின் பால்ய விவாஹம் ஸ்ம்ருதிக்களிலும் தமிழ் சங்க இலக்கியத்திலும் உளது. அகம் பற்றிய சங்க இலக்கியத்தில் பெண்களை வருணிக்கும் போது அப்போதுதான் பூப்பெய்தியது போல உடல் வருணனை உளது. மேலும் கண்ணகிக்கு 12 வயது, கோவலனுக்கு 16 வயது ஆனபோது திருமணம் நடந்ததை சிலப்பதிகாரம் மிகத் தெளிவாகவே கூறுகிறது.

Yazidis tie knots to make wishes
இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவத்தில் ‘’தி வீக்’’ கட்டுரையின் ஆங்கில வாசகங்களும் அதற்கான எனது விமர்சனங்களும் உள. யாருக்கேனும் அந்தப் பத்திரிக்கைக் கட்டுரையின் ஆங்கில வாசகம் தேவை ஆனால் அதில் காணலாம்.
ஆர்மீனியா, துருக்கி, இராக் ஆகிய மூன்று நாடுகளில் யாசிதி இனம் வசித்தது. துருக்கியில் 1980 ஆம் ஆண்டில் நிலைமை மோசம் அடையவே யாசிதி இன மக்களுக்கு ஜெர்மனி அடைக்கலம் கொடுத்தது.
Contact swami_48@yahoo.com

You must be logged in to post a comment.