Written by London swaminathan
Research article no.1881, Date: 22 May 2015.
(This article is published already in English)
வேத கால மக்களுக்கு இருந்த பூகோள அறிவு அவர்களை நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் வைக்கிறது. வேதங்கள் என்பன வரலாற்றுப் புத்தகமும் அல்ல; புவியியல் நூலும் அல்ல.ஆயினும் அதில் ஏரளமான விஷயங்கள் இருக்கின்றன. சங்கீதம், நாட்டியம், வான சாத்திரம், சோதிடம், வரலாறு, புவியியல், மந்திர தந்திரம், தாயத்து, பறவைகள், மிருகங்கள், பாம்புகள், மீன் வகைகள், ஏரி,குளங்கள், நாடு நகரங்கள், கடல்கள், ஆறுகள் என நீண்ட பட்டியல் உள்ளது. ஆயினும் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்கள் உள் நோக்கத்துடன் செயல்பட்டதாலும், இந்துக்கள் மீது வெறுப்பு கொண்டமையாலும் வேண்டுமென்றே பல இடங்களைத் தவறாக மொழிபெயர்த்தனர். இப்பொழுது அவர்கள் “குட்டு” கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகி வருகிறது.
1.தொல் பொருட் துறைச் சான்று
சமஸ்கிருத மொழிக்கும், வேத கால தெய்வங்களுக்கும் அழிக்க முடியாத, மறுக்கவொண்ணாத தொல் பொருட் துறை, வரலாற்றுச் சான்றுகள் கிடைத்தமையால் அதன் பிரம்மாண்டமான வியாபகம் தெரிகிறது.
ஈரான் என்னும் பாரசீக நாட்டிலிருந்து ஆந்திரம் வரையான பல பிரதேசங்களின் பெயர்கள் வேதங்களில் உள்ளன. உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் எட்டாவது மண்டலத்தில் இரானிய மன்னர்கள் பெயர்கள் இருப்பது அறிஞர் பெருமக்களை திகைப்பில் ஆழ்த்துகிறது.
துருக்கி நாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்களை ரிக் வேத சூக்தத்தில் சொல்லிய அதே வரிசையில் சொல்லி இரண்டு மன்னர்கள் உடன்படிக்கை செய்துகொண்ட கல்வெட்டு கி.மு1400 ஆண்டு வாக்கிலேயே வேதங்கள் துருக்கி வரை சென்று விட்டதைக் காட்டுகிறது.
அது மட்டுமின்றி தசரதன் என்ற மன்னன் எழுதிய கடிதங்கள் எகிப்தில் அமர்னா என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டதும் சம்ஸ்கிருதப் பெயர்களைக் கல்வெட்டில் காட்டுகிறது. இதுவும் கி.மு.1400 ஐ ஒட்டிய சான்று. எகிப்து முதல்—ஈரான் முதல் — ஆந்திரம் வரை வேதப் பெயர்களும் சம்ஸ்கிருதச் சொற்களும் இருப்பது உலகின் மிகப்பெரிய நாகரீகம் என்பதை காட்டுவதாக உள்ளது. வேறு எந்த பழைய மொழியும் இவ்வளவு பெரிய பரப்பில் காணப்படவில்லை. அலெக்சாண்டர் காலத்திற்குப் பிறகு கிரேக்க மொழி வேண்டுமானால் இந்தச் சிறப்பைப் பெற்றது.ஆனால் வேதங்களோ அலெக்சாண்டருக்கு குறைந்தது 1500 ஆண்டுகளுக்கு முந்தையவை!
2.கடலோடிகள்
பூஜ்யு என்பவரைக் கடலில் தத்தளித்த, உடைந்த கப்பலில் இருந்து, காப்பாற்றியது ரிக் வேதத்தில் பத்து இடங்களுக்கு மேல் வருகிறது. அவர்களுக்குப் பாரத நாட்டின் இரு புறம் இருந்த கடல்களும் நன்கு தெரிந்திருந்தன. கங்கைச் சமவெளி முதல் முஜாவான் மலை வரை பல இடங்களையும் துதிகளில் போற்றியுள்ளனர்.
(துவாரகைக்கு அடியில் கடலில் கண்டுபிடித்த துறைமுக தடயங்கள் மக்களின் 5000 ஆண்டுக்கு முந்தைய கடல் வழிப் பயணத்துக்குச் சான்றாகத் திகழ்கின்றன).
3.முப்பது நதிகள்
வேதத்தில் முப்பதுக்கும் மேலான நதிகள் பெயர்கள் இருக்கின்றன. நதி சூக்தம் என்ற பெயரில் உலகிலேயே முதல் முதலாக நதிகளைப் புகழ்ந்து பாடும் துதியும் உள்ளது. உலகில் நீரையோ, நதிகளையோ புகழ்ந்து பாடும் பாட்டு கி.மு.1700-ல் பாரதம் தவிர வேறு எங்கும் இல்லை.
பூ சூக்தம் என்று பூமியையும் இயற்கை வளத்தையும் பாராட்டும் ஒரு பாடலும் இருக்கிறது. இப்படிப் பூமியைப் பாராட்டும் பாடலும் அவ்வளவு பழைய காலத்தில் வேறு எங்கும் கிடைக்காது
மேலும் நதிகளைப் புகழ்ந்து பாடுகையில் கிழக்கேயுள்ள நதியின் பெயரை முதலில் சொல்லி மேற்கேயுள்ள நதியின் பெயரை கடைசியாகச் சொல்லுவது வேத கால இந்துக்கள் கங்கைச் சமவெளியில் தோன்றி மேற்கே சென்று நாகரீகத்தைப் பரப்பினார்கள் என்பதைக் காட்டுகிறது.
ஹிட்லருக்கு மிகவும் உதவிய ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையைப் போற்றுவோருக்கு இது செமை அடி கொடுக்கிறது. அது மட்டுமல்ல. எல்லா யாக யக்ஞங்களிலும் இந்திரனுடைய திசை கிழக்காவும், வருணனின் திசை மேற்காகவும் கொடுத்திருப்பது ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையை அடியோடு நிராகரிக்கிறது.

4.பத்து ராஜா யுத்தம்
வேதத்தில் மிகவும் பெரிதாகப் பாடப்பட்ட போர்- பத்து ராஜா போர் (தச ராக்ஞ யுத்தம்) ஆகும். அந்தக் காலத்திலேயே பத்து ராஜாக்கள் இருந்ததைத் தெளிவாக்கும் சொல் இது. தங்கள் கொள்கைக்கு குந்தகம் விளையுமே என்று அஞ்சிய, வெள்ளைக் கார்கள், வெளிநாட்டினர், அவைகளைப் பழங்குடி இனப் பெயர்கள் என்று மொழி பெயர்த்தனர். ஆனால் பல வேத கால அரசர்களோ அஸ்வமேத யக்ஞங்களைச் செய்தோர் பட்டியலில் இடம் பெறுகின்றனர். அஸ்வமேதம் என்பது அருகாமை நாடுகளை வெல்லும் யாகம். அது இனக் குழுக்கள் செய்வன அல்ல.
மேலும் வேதத்தில் சொல்லப்படும் எல்லா நாடுகளின் பெயர்களும் மஹாபாரத்தில் இருக்கின்றன. மஹாபாரதத்தில் முப்பது நாடுகளின் பெயர்கள் இருக்கின்றன. வேத கால இலக்கியங்களில் வரும் மன்னர்களின் பெயர்களும் நமக்குக் கிடைக்கின்றன.

5.மோசசுக்கு ஒரு நீதி! வேதத்துக்கு வேறு ஒரு நீதி!
சமுத்திரம் என்றால் அது கடல் அல்ல, வெறும் குளம், காம்போஜ, குரு, பாஞ்சால என்பதெல்லாம் நாடு அல்ல, வெறும் இனப்பெயர்கள் என்று விதண்டாவாதம் செய்வோர் எல்லாம் உள்நோக்கம் கொண்ட ஆட்கள் என்பது அவர்களின் பல கட்டுரைகளால் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அவர்களில் பாதிப்பேர் நாடு பிடிக்க வந்த கோஷ்டி அல்லது மதப் பிரசார கோஷ்டியைச் சேர்ந்தவர்கள். பைபிளைப் பற்றி ஆராய்ந்த அதே இனம் அதை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து, பாலஸ்தீனத்தில் பார்த்த இடங்களை யெல்லாம் முழுக்க முழுக்க அது பைபிளில் சொல்லிய இடங்களே என்று எழுதிய அதே இனம் –அது போல இந்து புராணங்களில் வருகையில் அவை கட்டுக் கதை என்றும் வேறு பொருளுடையவை என்றும் திரித்து எழுதினர், திரிசமம் செய்தனர்.மோசஸ் என்பவருக்கு இதுவரை வரலாற்று அல்லது தொல்பொருள் ஆதாரம் கிடையாது!!! அப்படியானால் மோசசும் இல்லை யூத மதமும் இல்லை என்று அர்த்தமா? அவர்கள் எல்லாம் கற்பனைப் பெயர்களோ!!!!
நல்ல வேளை, இந்துக்கள் செய்த புண்ணியம்! இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு அறிஞர்கள் இருபது விதமாக வேதத்தை மொழி பெயர்த்து “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக அவர்களது அறியாமைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினர். வேதத்தில் உள்ள சிறு தெய்வங்கள் (மைனர் காட்ஸ்) என்ற புத்தகத்தில் ஜோஷி என்பவர் ஒவ்வொரு வெளிநாட்டு அறிஞரும் அக்கடவுள்கள் பற்றி என்ன சொல்கின்றனர் என்பதைத் தொகுத்துக் கொடுத்துள்ளார். முரண்பாடுகளின் மொத்த உருவம் இந்த வெளிநாட்டு அறிஞர்கள் என்பதற்கு வேறு எடுத்துக்காட்டே தேவை இல்லை. குழப்படி மன்னர்கள்!
புறநானூற்றுப் பாடல் 201ல் அகத்தியர் 18 குடிகளை, 49 தலைமுறைகளுக்கு முன்னர் அழைத்து வந்த கதை இருக்கிறது. அதாவது கி.பி.முதல் நூற்றாண்டுக்கு முன்னர் 49 தலை முறை. அப்படியானால் கி.மு 1000 அல்லது கி.மு 1200.
சதபத பிராமணம் முதலிய இலக்கியங்களில் நான்கு திசை மக்களைப் பற்றி வருகிறது. இலங்கையில் வசித்த ராவணன் பருவக் காற்றைப் பயன்படுத்தி கோதாவரி நதிக்கரையில் வந்து அட்டூழியம் செய்தான். கயிலாயம் வரை சென்று வால் ஆட்டினான் என்று படிக்கிறோம். மாபாரத காலத்தில் கிருஷ்ணன் உத்தரப் பிரதேச மதுரா நகரில் இருந்து குஜராத்தில் உள்ள துவாரகைக்கு அடிக்கடி தேரில் வந்து போனான். ராமாயண பரதன் இரானிய எல்லையில் உள்ள கேகயத்தில் இருந்து ஆப்கனிஸ்தான் வழியாக உத்தரப் பிரதேச அயோத்திக்கு விரைந்து வந்தான். புவியியலும் போக்குவரத்தும் நமது இலக்கியங்களில் மலிந்து கிடக்கின்றன.
6.ஸ்வயம்வரத்தில் பல நாட்டு மன்னர்கள்
ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் சீதை, திரவுபதி, தமயந்தி அம்பா/அம்பிகா/அம்பாலிகா முதலிய பல ஸ்வயம்வரங்கள் வருகின்றன. இவைகளுக்கு 56 தேச அரசர்கள் வந்தனர் என்பதால் அக்காலத்திலேயே அவ்வளவு “நாடுகள்” இருந்ததைக் காட்டுகிறது.
தென்பகுதியை ஆண்ட மன்னர்களில் போஜன் என்ற மன்னன் பெயரையும் வேத கால இலக்கியங்கள் சொல்லுகின்றன. போஜன் என்ற பெயர்ல் பத்தாம் நூற்றாண்டு வரை பல மன்னர்கள் இருந்தனர்.
இந்த ஸ்வயம்வர, அஸ்வமேதம் முதலியன உலகில் வேறு எங்கும் கிடையாது. ஆக நாம் இந்த நாட்டுப் பூர்வ குடிகளே, வ்நேறு எங்கிருந்தும் வரவில்லை என்பதற்கு இது இமயமலை போல் சான்றாக நிற்கும்.
ஆந்திரர், சரபர், புலிந்தர், அங்க, சேதி, பாஹ்லிக (பாக்ட்ரியா), அலின, சேதி, மத்ஸ்ய, பலனாச், பக்தூஸ் (பக்தூனிஸ்தான்), காசி, பரதர் முதலிய பல பெயர்கள் வேத கால இலக்கியத்தில் வருகின்றன. அந்தந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்தந்தப் பெயர்களால் அழைக்கப்பட்டனர். நாம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தியர்கள் என்று அழைப்பரல்லவா? அது போலத்தான்.
சரஸ்வதி நதி பற்றி 80 இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ஹரியூப (ஹரப்பா) போன்ற பெயர்களும் உள்ளன.
7.சப்த சிந்தவ
சப்த சிந்தவ (ஏழு நதிப் பிரதேசம்) என்னும் பெயர் ரிக்வேதத்திலேயே வருவதால் அவர்களுக்கு புவியியல் அறிவு இருந்ததும் அதை வைத்துப் பெயர் சூட்டுவதும் தெரிந்திருந்தது என்று அடித்துச் சொல்லலாம்.
நான் சொன்ன மேற்கூறிய எல்லா விஷயங்களுக்கும் மேற்கோள் குறிப்புகள் எனது ஆங்கிலக் கட்டுரையில் உள்ளன. வேதத்தில் எங்கே எந்த இடத்தில் இவை உள்ளன என்பனவற்றை அறிய விரும்புவோர் ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவும்.



R Nanjappa
/ May 22, 2015I only wish to draw attention to one fact, pointed out by Sri Aurobindo,
relating to the interpretation of the Veda. The Veda describes life as a
pilgrimage or journey, a battle and a sacrifice (Yajna). The Veda is
basically a work on Ultimate Knowledge or Wisdom (Vid) and is not about
mundane affairs, for which other Sastras exist. The Veda can be interpreted
at three levels, not just the physical. For instance, ‘Agni’ does not mean
mere physical fire, and this will be clear if we inquire into the roots of
the word. So, one has to be careful in interpreting the ‘battle of the ten
kings’ as a real battle between ten kings, or in interpreting the cow and
cave reference as though thousands of cattle were actually hidden in a
cave. Agni, vayu, Indra, light and darkness, etc clearly mean more than the
physical things- they are symbolic, if not allegorical. The foreigners said
the battle was among some ten kings- but they were idiotic, and had a
hidden agenda to say so. If we too say it was a real battle among ten
kings- though our kings are different- in what way are we different from
these accursed foreigners?
The Veda may contain references to Iran, Iraq, Turkey etc because India was
very extensve then, Vedic civilisation prevailed everywhere. There might
well have been battles, but Veda talks about Knowledge that liberates, not
these other things. It is not the purpose or function of the Veda to record
history. For that we have a separate category- itihas: iti-ha-asa. To look
for history in the Veda is like Mulla Nusruddin losing his key in the
market, but searching for it under a lampost in the street, because there
was light there! We should not fall into this wretched trap set by the
foreigners.