
A woman carries tannery waste as she walks through a dried pond at Hazaribagh area in Dhaka August 19, 2013. REUTERS/Andrew Biraj
Radio Talk written by S NAGARAJAN
Date: 18 November 2015
POST No. 2338
Time uploaded in London :– 13-42
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்
(நான்காம் பாகம்)
ச.நாகராஜன்
சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்
நாளுக்கு நாள் பூமி அதிகமாக வெப்பமாகிக் கொண்டே வருவதால் அபாயங்கள் பெருகி வருகின்றன. இந்த அபாயங்களைப் பற்றி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருக்கின்றனர் அவர்கள் தரும் எச்சரிக்கையை பொறுப்பான விதத்தில் மனித குலம் ஏற்றுக் கொண்டு புவி வெப்பமாதலைத் தடுக்க முழு முயற்சி எடுத்தல் இன்றியமையாதது.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 2001ஆம் ஆண்டிலிருந்து 2050ஆம் ஆண்டு வரை உயரும் தட்பவெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு 600 உயிரினங்களின் மீது புவி வெப்பம் அதிகமானால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் கடல் வாழ் உயிரினங்கள் மீது புவி வெப்பம் உயர்வதால் ஏற்படும் அபாயம் தாங்கள் கருதியதற்கும் மேலாகவே இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

Three Polar bears on an ice flow
கடல் நீரின் உஷ்ண நிலை உயர்வதால் கடலிலுள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைவுபடும் என்றும் இதனால் கடலில் வாழும் மீன்களின் உடல் எடை குறையும் என்றும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். முன்பு நடத்திய ஆய்வுகள் மீனின் இனப்பெருக்கத்தை புவி வெப்பம் குறைக்கும் என்று தெரிவித்த நிலையில் அதன் அளவும் குறுகி விடும் என்பதும் இப்போது தெரிகிறது.கடல் நீரின் உஷ்ண நிலை உயர்வதால் மீன்களின் உடல் உஷ்ணமும் அதிகரிக்கும். அதனால் அதன் உடல் இயக்கங்கள் வெகுவாகப் பாதிக்கப்படும். அது மட்டுமின்றி மீன் கூட்டங்கள் புவி வெப்ப உயர்வால் பூமியின் துருவங்களை நோக்கி விரையும் என்பதையும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்தியன் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் மீன்களின் உடல் அளவில் 14 முதல் 24 சதவிகிதம் வரை குறையும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர். நேச்சர் க்ளைமேட் சேஞ்ஜ் என்ற பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
அத்தோடு அடிலெய்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, தாவரங்களின் மீதும் புவி வெப்பத்தின் தாக்கம் உள்ளதாகக் கண்டறிந்துள்ளது. தாவரங்களில் இலைகளின் வடிவங்கள் மாறுவதோடு அவை பெரிதும் சுருங்கி வருகின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இலைகளின் அளவுக்கும் உயர்கின்ற வெப்ப நிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை குறுகிய இலைகளை ஆராய்ந்த பின்னர் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
ஆகவே புவி வெப்பம் இயற்கையில் அமைந்துள்ள தாவரங்களையும் பாதிக்கிறது. கடல் வாழ் உயிரினங்களையும் பெரிய அளவில் பாதிக்கிறது. இன்று புவி வெப்பமாதலைத் தடுப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகிறது.
*****
You must be logged in to post a comment.