
Radio Talk written by S NAGARAJAN
Date: 19 November 2015
POST No. 2341
Time uploaded in London :– 9-23 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
புவி வெப்ப உயர்வானது இந்தியாவின் வழக்கமான பருவநிலை மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புதிய ஆய்வு ஒன்றின் முடிவு சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளது. வருகின்ற இருநூறு ஆண்டுகளுக்குக் கோடைகால பருவ நிலையில் இந்தப் பாதிப்பு தொடரக்கூடும் என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதி நவீன கணினி தொழில்நுட்பத்தின் மூலமாக பருவநிலை பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகளின் குழு, சராசரியாக இந்தியாவில் கோடைகாலத்தில் பெய்யும் மழையின் அளவில் இனி 40 முதல் 70 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளது.
1870ஆம் ஆண்டிலிருந்து பெய்துள்ள மழை அளவை ஒப்பிட்டுப் பார்த்ததில் இனி அடிக்கடி இப்படி மழை பொய்க்கின்ற வாய்ப்பும் குறைந்த அளவிலேயே மழை பெய்யும் வாய்ப்பும் உருவாகும் என்பதை ஆய்வு தெரிவித்துள்ளது.
தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகள் வாக்கர் சர்குலேஷன் (Walker Circulation) மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மேலை ஹிந்து மஹாசமுத்திரத்திற்கு உயர் அழுத்தப் பகுதிகளைக் கொண்டு வருவது, எல் நினோ ஏற்படும் காலங்களில் மாறி அதனால் இந்தியாவில் பருவ மழை அளவு குறையும் நிலை ஏற்படும் என்பதைத் தெளிவாக ஆய்வு குறிப்பிடுகிறது.
புவி வெப்பம் உயர்வதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப் புகையே!

வளி மண்டலத்தைக் கார்பன் டை ஆக்ஸைடும் கார்பன் மானாக்ஸைடும் தாக்கி பல்வேறு விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதை நாம் அனைவரும் அறிவோம். இதற்குக் காரணம் இந்த நச்சுப் புகைகளை வெளியேற்றும் வாகனங்களே! ஆகவே வாகனங்களுக்கே உரிய நச்சுப்புகை கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.
***
You must be logged in to post a comment.