உருகி வரும் பனிப்பாறைகளும் உயரும் கடல் நீர் மட்டமும்! (POST No. 2347)

Melting-Ice-Caps-in-Antarctica-700x465

 

Radio Talk written by S NAGARAJAN

Date: 21 November 2015

POST No. 2347

 

Time uploaded in London :– 5-55 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகில் ஆங்காங்கே பல நாடுகளிலும் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்வுகள் பனிப்பாறைகள் பரவலாக உருகி வருவதைச் சுட்டிக் காட்டுகின்றன

ஒவ்வொரு வருடமும் க்ரீன்லாந்தில் 200 மில்லியன் டன்கள் என்ற அளவில் ஐஸ் உருகுகிறது என்பதையும் 2003ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு ஆண்டும் இதே அளவு ஐஸ் உருகி வருகிறது என்பதையும்  கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

இப்படிப் பெருமளவில் பனி உருகுவதால் கடல் மட்டம் உயர்கிறது. ஏற்கனவே கார்பன் நச்சுப்புகையால் கடல் நீரின் அமிலத் தன்மை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அத்தோடு இந்த அபாயமும் சேர்ந்திருப்பது கவலை தரும் அம்சமாகும்.

18 வருடங்களாக விண்கலங்களின் உதவி கொண்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் உலகெங்கும் உள்ள கடல் நீர் மட்டம் மூன்று மிலிமீட்டர் உயர்ந்திருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.கிடைத்துள்ள விவரங்களின் அடிப்படையில் ஒரு கடல் நீர் மட்ட அட்டவணைத் தயாரிக்கப் பட்டதோடு எதிர்காலத்தில் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதும் கணிக்கப்பட்டுள்ளது.

 

 

2100ஆம் ஆண்டுக்குள் கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் அதிகரிக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும்.

 

கடல் நீரின் மட்டம் உயர்வது பூமியின் தட்பவெப்ப நிலை மாறுதலைக் கணிப்பதற்கான முக்கியமான காரணங்களுள் ஒன்றாகும்.

 

 

இப்படி கடல் நீர் மட்டம் உயர்ந்தால் குறைந்த பட்சம் தாழ்வான பகுதியில் வாழும்  60 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவர் அவர்கள் இடம் பெயர வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படும். 50 சென்டி மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்தாலேயே கடலோரப் பகுதிகளில் நீர் நுழைந்து சொல்லொணாத் துன்பத்தை அப்பகுதி வாழ் மக்கள் அடைவர் என்பது விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.

 

 

முந்தைய காலங்களில் எப்போதோ ஒரு முறை பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் வெள்ள அபாயம் இனி 2100ஆம் ஆண்டுக்குள் பல முறை பல்வேறு நாடுகளில் ஏற்படப் போகிறது என்பது சாதாரண விஷயமல்ல.

 

 

ஆகவே இதற்கு அடிப்படையான பூமி உஷ்ணத்தை அதிகரிக்க வைக்கும் மனிதனின் செயற்கையான காரணங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த உருகும் பனிப்பாறைகள் மனித குலத்திற்குத் தரும் எச்சரிக்கைச் செய்தியாகும். உணர்ந்து செயல்படுவோம்!

 

To be continued…………………………………………………

***

Leave a comment

Leave a comment