காற்றில் மாசை ஏற்படுத்துவது வாகன நச்சுப் புகையே! ( Post No. 2362 )

smoke1

Radio Talk written by S NAGARAJAN

Date: 26 November 2015

Post No. 2362

 

Time uploaded in London :– 6-26 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

emissions-smoke

பெரு நகரங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேம்பட்ட அளவில் காற்றை மாசுபடுத்துவது வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையே! சென்ற பத்தாண்டுகளில் உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் டீஸல் வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையை சுவாசிப்பவர்கள் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாவதைச் சுட்டிக் காட்டுகின்றன. இதனால் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது.

 

 

டீஸல் எரிபொருளைப் பயன்படுத்தி  இயக்கப்படும் லாரிகள் வெளியேற்றும் புகை நச்சுப்புகை என்று 1998ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட்து. 2012ஆம் ஆண்டு  ஜூன் மாதம் உலக சுகாதார நிறுவனம் (WORLD HEALTH ORGANISATION) டீஸல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது (Carcinogenic) என்று அறிவித்துள்ளது.Particulate Matter எனப்படும் துகள்மப் பொருளையும் நைட்ரஜன் ஆக்ஸைடையும் அதிக அளவில் டீஸல் வாகனங்கள் வெளியேற்றுகின்றன. பெட்ரோலால் இயக்கப்படும் வாகனங்களோ கார்பன் மானாக்ஸைடையும் ஹைட்ரோகார்பன்களையும் வெளியேற்றி காற்றை மாசுபடுத்துகின்றன.

 

 

வாகனங்களில் மாசைக் கட்டுப்படுத்தும் அதி நவீன எஞ்சின்களைப் பொருத்துவது, வாகனங்களைச் சரியான முறையில் பராமரிப்பது, அவ்வப்பொழுது வாகனங்களைச் சோதனைக்குட்படுத்தி நச்சுப்புகை கட்டுப்பாட்டிற்கான சான்றிதழை புதுப்பிப்பது போன்ற வழிகளை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

 

 

இது ஒருபுறமிருக்க மாசு என்றாலேயே வெளிப்புறத்தில் ஏற்படும் மாசைப் பற்றியே நாம் பொதுவாக நினைக்கிறோம். ஆனால் வீட்டிற்குள் ஏற்படுத்தப்படும் காற்று மாசைப் பற்றி யாரும் நினைப்பதில்லை. கிராமங்களையே அதிகமாகக் கொண்டுள்ள நம் நாட்டில் அன்றாட சமையலுக்காக வீடுகளில் விறகுகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு தொடர் இருமலும் நுரையீரலில் புற்று வியாதியும் நியுமோனியாவும் வர அதிக வாய்ப்புள்ளது. ஆகவே இவற்றைப் பயன்படுத்துவோர் எல் பி ஜி போன்ற மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும்.

 

 

இது இன்றைய நாட்களில் அவசியத் தேவை அவசரத் தேவையும் கூட!

 

***

 

 

 

Leave a comment

Leave a comment