
Compiled by London swaminathan
Date: 27 November 2015
Post No. 2368
Time uploaded in London :– 13-55
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.
நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை
ஸ்ரீ ராமர், கிஷ்கிந்தை மஹாஜனங்களாகிய வானரக் கூட்டங்களுடன் ராவணனை ஜெயித்து, விபீஷணர்க்கும் பட்டங்கட்டி, சீதையை மீட்டுத் திரும்பி வருங்கால், பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் அனைவர்க்கும் விருந்து நடந்தது.
அதில் கறிவகைகளில் மொச்சக்கொட்டையும் போடப்பட்டிருந்தது. அப்போது சேஷ்டை மிக்க ஒரு குட்டிக் குரங்கு சும்மா இராமல், மொச்சக் கொட்டையைக் கையில் எடுத்து வைத்து அதைப் பிதுக்கிற்று. உடனே அதிலிருந்து பருப்பு விடுபட்டு மேலே எழும்பியது. அதனைப் பிடிக்க குட்டிக் குரங்கு மேலே பாய்ந்தது. அதனைப் பிடிக்க இன்னொரு குரங்கு பாய்ந்தது. அந்தக் குரங்கைப் பிடிக்க இன்னுமொரு குரங்கு பாய்ந்தது. இப்படியே வானர சைன்யங்கள் பூராவும் பாய்ந்தன.
தன்னினத்தார் எல்லாரும் பாய்வதைக் கண்ட அனுமார், ஏதோ அபாயம் வந்துவிட்டதென்று எண்ணி, எல்லோருக்கும் மேலே எகிறி ஒரு குதி குதித்தார். இதனைக் கண்ட லெட்சுமணப் பெருமாள், அனுமாரே பாய்வதென்றால், பெரும் ஆபத்து வருகிறது என்று கணக்குப் போட்டு, வில்லை நாணேற்றி சங்கத்வனி செய்ய ஆரம்பித்தார். அதைப் பார்த்த ராமர், யாரோ புது பகைவர் வந்துவிட்டார்கள் என்று கருதி படபடப்புடன் வில்லை நானேற்றித் திரும்பித் திரும்பி நாலா புறமும் பார்த்தார். ஒருவரையும் காணோம். பிறகு சங்கதியை விசாரிக்க குட்டிக் குரங்கின் சேஷ்டையே இவ்வளவுக்கும் காரணம் என்று தெரிந்தது. எல்லோரும் சிரித்து மகிழ்ந்தனர்!!

-சுபம்–
You must be logged in to post a comment.