
Radio Talk written by S NAGARAJAN
Date: 27 November 2015
Post No. 2365
Time uploaded in London :– 6-37 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

ஓஸோன் உறை என்பது வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் உள்ள ட்ரோபோஸ்பியர் (Troposphere) என்று அழைக்கப்படும் முக்கிய பகுதியாகும். இதில் மாசு ஏற்பட்டால் தீவிரமான சுவாச சம்பந்தமான கோளாறுகள் மனிதர்களுக்கு ஏற்படும். விவசாய அறுவடைகள் பாதிக்கப்படும்,கட்டுமான வேலைகளும் பாதிக்கப்படும்.
இந்த ஒஸோன் உறையை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தங்கள் நாட்டைப் பொறுத்த வரையில் ஆராய முடிவு செய்து ஆராய ஆரம்பித்தனர். ஒஸோன் உறையைப் பாழ்படுத்துவது வாகனங்கள் வெளியேற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடும் கார்பன் டை ஆக்ஸைடுமே என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். தொடர் இரசாயன மாறுதல்கள் மூலம் இந்த நச்சுப்புகை ஓஸோனைத் துளைக்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
கடந்த 15 ஆண்டுகளாக லண்டன் மாநகரில் சேகரிக்கப்பட்டிருந்த தரவுகளிலிருந்து தங்கள் ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு இந்த மாசானது ஐரோப்பியப் பகுதியில் ஏற்படும் மாறுதல்களை மட்டுமே சார்ந்ததாக இல்லை; உலகளாவிய அளவில் ஏற்படும் மாறுதல்களும் இப்பகுதியை பாதிக்கின்றன என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இதிலிருந்து நாம் அறிவது உலகின் ஒரு பகுதியில் ஏற்படும் மாசு அந்தப் பகுதியை மட்டும் சார்ந்ததாக இல்லை. அது உலகின் ஏனைய பகுதிகளையும் பாதிக்கிறது என்பது தான்.
ஆகவே ஒஸோனை பொருத்தவரையில் எல்லா நாடுகளும் கூடி மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை ஏற்படுத்தி அவற்றை தீவிரமாக அமுல்படுத்த வேண்டும் என்ற முடிவை அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஓஸோன் பாதிப்பு ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் சற்றுக் குறைந்திருந்தது; ஆனால் இப்போது அது மீண்டும் அதிகரித்துள்ளது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஓஸோன் பாதிப்பு என்பது உலகப் பிரச்சினையாக இருப்பதால் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் அதில் பொறுப்பு உண்டு அதைத் தவிர்க்கவும் தடுக்கவும் எல்லா விதமான நடவடிக்கைகளையும் ஒவ்வொருவரும் எடுத்தல் இன்றியமையாதது!
***
You must be logged in to post a comment.