
Compiled by London swaminathan
Date: 27 November 2015
Post No. 2366
Time uploaded in London :– 8-21 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.
நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை
சில வியாபாரிகள் ஓர் இராஜாவிடம் சென்று குதிரையைக் காட்டி விலை கூறினர். அரசன் அவற்றையேற்றுப் பின்னும் பல குதிரைகளைக் கொண்டுவரும்படி கூறி லக்ஷம் ரூபாய் கொடுத்தனுப்பினார். அப்படியே வியாபாரிகள் சென்றனர்.
மூன்றாம் நாள் அரசன் போதையாயிருக்கும் போது, “மந்திரி நம் தேசத்திலிருக்கும் முட்டாள்களின் பெயரை எழுதி ஒரு பட்டியல் கொண்டுவா “ என்றார்.
மந்திரி அவ்வாறே எழுதிக் கொண்டுவர அரசன் அதைப் பார்த்துக் கோபம் கொண்டான். என் பெயரை ஏன் முதலில் எழுதிவைத்தாய்? என்றான். அதற்கு மந்திரி, “யாதொரு ஆதாரமும் இல்லாமல் வழிப்போக்கர்களாகிய குதிரை வியாபாரிகளுக்கு லக்ஷம் ரூபய் கொடுத்தீர்களே! இது முட்டாள்தனமல்லவோ? ஆதலினால்தான் உமது திருநாமம் முதலில் வந்தது என்று சொன்னார்.
“அவர்கள் குதிரைகளைக் கொண்டுவந்துவிட்டால், என்ன செய்வாய்?”
என்று அரசன் கேட்டார்.

உமது திருநாமத்தை எடுத்துவிட்டு, அவர்கள் பெயரைப் பதிந்துவிடுவேன்” என்றார் மந்திரி.
–சுபம்–
You must be logged in to post a comment.