எனது ஷீரடி யாத்திரை! Post No. 2372

Written by London swaminathan

Date: 8 December 2015

Post No. 2372

 

Time uploaded in London :– 6-41 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தத்தாவதார ராதகுரு சாயி

கஜலா தாவு தாவா பாயி

 

எனது டயரியில் (Diary) வைத்திருக்கும் படங்களில் ஒன்று சீரடி சாய் பாபா படம். அதன்கீழ் “தத்தாவதார ராதகுரு சாயி. கஜலா தாவு தாவா பாயி” என்று எழுதியிருக்கும். பொருள் தெரியாமலேயே, இந்த ஸ்லோகத்தைப் படித்துவிட்டு அன்றாட வேலைகளைத் துவக்குவேன். பாபாவின் பொன்மொழிகளில் பிடித்தது “நானிருக்க பயமேன்?” Why fear when I am here?

 

1964-ம் ஆண்டுமுதல் பல முறை புட்டபர்த்திக்குச் சென்று ஸ்ரீ சத்யபாபாவைத் தரிசனம் செய்துள்ளேன். அதுமுதல் சீரடி பாபா பற்றி கேள்விப்பட்டு பல நூல்களில் சீரடி பாபா செய்த அற்புதங்களைக் படித்தறிந்தேன். புட்டபர்த்திக்குப் போனதுபோலவே சீரடிக்கும் போகவேண்டுமென்று பல ஆண்டுகளுக்குத் திட்டமிட்டு இறுதியில் அந்த ஆசை 2015 நவம்பர் 30ஆம் தேதி நிறைவேறியது.

 

பம்பாயிலிருந்து நவம்பர் 29ஆம் தேதி புறப்பட்டு நாசிக் சென்றோம். அங்கிருந்து 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான த்ரயம்பகேஸ்வரம் சென்றுவிட்டு, பஞ்சவடி (Panchavati), முக்திதாம் (Muktidham) ஸ்தலங்களை தரிசித்துவிட்டு (இவை பற்றி அடுத்த கட்டுரையில் காண்க)  இரவு சீரடியில் தங்கினோம். ஒரு நடுத்தர ஹோட்டலில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய்வீதம் (Double Room) டபுள் ரூம் (இரண்டு படுக்கை அறை) எடுத்தோம். கோவில் ஐந்து நிமிட தூரத்தில் இருந்தது. காலையில் ஆறு மணிக்கு போய் வரிசையில் நின்றோம். 45 நிமிடங்களில் பாபாவின் சமாதியுள்ள சந்நிதியில் நின்று தரிசித்தோம். நல்ல சூழ்நிலை. காலை நாலு மணிக்கு காகடி (Kakadi) ஆரத்தி இருந்த போதிலும் அதற்குச் செல்லவில்லை.

எங்களை அழைத்துச் சென்ற டாக்ஸி டிரைவர், இது கூட்டமில்லாத ஒரு நாள் என்றார். பொதுவாக வியாழக்கிழமை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமிருக்கும் என்று சொன்னார். காலையில் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போதே பாபாவின் ஆரத்தி பாடல்கள், சஹஸ்ரநாமம் முதலியன ஒலிபெருக்கி மூலம் காதில் விழுந்தது.

 

கோவிலுக்குள் பாபா சந்நிதியை தங்க கவசத்தால் அலங்கரித்துள்ளனர். ஆயினும் மொபைல் போன், கேமரா, மற்றும் வீடியோ புகைப்படக் (Mobile Phones, Cameras, Video Equipments) கருவிகளுக்கு அனுமதியில்லை.

 

ஒரு ஐடியா (IDEA) / யோஜனை!

இது எனக்கு மிகவும் பிடித்த பாலிஸி. ஏனெனில் வெறி பிடித்ததுபோல் மொபைல் போனில் கத்துவதும், அல்லது இளம் பெண்களும் ஆண்களும் மொபைனில் “கிளுக் கிளுக்”கு என்று சிரித்து நமக்கு எரிச்சல் ஊட்டுவதும் இருக்காது. மேலும் ‘’செல்பி’’ (Selfie) எடுப்பது போல முன்னாலுள்ள பின்னாலுள்ள அழகிகளைப் படமெடுக்கும் வாய்ப்புகளும் இராது. ஆகவே எந்த இந்துக் கோவிலிலும் மொபைல் போன், காமெராக்களைப் பிடுங்கிவைக்க வேண்டுமென்பதை பலமாக ஆதரிப்பவன் நான். எனக்கும் புகைப்படமெடுத்து போட ஆசைதான். அத்தகையோருக்கு கோவில் நிர்வாகம் தனி நேரம் ஒதுக்கி, ‘’எஸ்கார்ட்’’ (Escort) செய்து அழைத்துச் செல்லலாம். அதற்குத் தனி கட்டணம் வசூலிக்கலாம். ஐம்பது ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான கோவில்களுக்குச் சென்றதில் கண்டுபிடித்த ஒரு உண்மை இதோ:—-

“சாமி கும்பிடச் செல்லும்போது கலை அழகு ரசிக்கச் செல்லாதே; புகைப்படம் எடுக்காதே.

புகைப்படம் எடுக்கவோ, சிலை அழகுகளை ரசிக்கச் சென்றாலோ சாமியை மறந்து விடு” – இது எனது பொன்மொழி!!

 

முஸ்லீம் சமாதி:

சீரடி பாபா கோவிலுக்குள் பல பாபா பக்தர் சமாதிகளும் உள்ளன. சில முஸ்லீம் பக்தர்கள், அவருடைய நெருங்கிய பக்தரான ஏ.எஸ். ஐயர் சமாதி ஆகியன உள்பட குறைந்து நாலு சமாதிகளை வலம் வந்துவிட்டு, பாபா விபூதி பொட்டலம் கொடுக்குமிடத்தில் கீயூ (Queue) வில் நின்று அதையும் வாங்கினோம். உண்டியலில் காசு போட்டோம். இந்த விபூதி ‘உடி’ எனப்படும். சமாதியில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் அக்னியின் சாம்பல் இது.

 

சமாதியில் மியூசியம்

சமாதி காம்பவுண்டுக்குள் பபவின் மியூசியமும் உள்ளது. இதில் அவர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் உள்ளன. அரிய புகைப்படங்களும் உள்ளன. இவ்வளவு விஷயங்களையும் வேறு எந்த புத்தகத்திலும் கண்டதில்லை. பாபா பக்தர்கள் பார்க்கவேண்டிய இடம்.

கோவிலுக்கு வெளியே தேநீர்க்கடை

எங்களை அழைத்துச் சென்ற பம்பாய் தமிழ் டிரைவர் அடிக்கடி அங்கே செல்வதால் காலை நாலரை மணி முதல் சாலையின் இருமருங்கிலும் டீ விற்பார்கள் என்று சொல்லியிருந்த்தார். அது உண்மைதான். கோவிலுக்கு அதிகாலை 4 மணிக்குப் போவோர் டீ அருந்திச் செல்லலாம். இது நல்ல (Idea) ஐடியா. மற்ற தலங்களிலும் இதைப் பின்பற்றலாம். பேப்பர் கோப்பைகள் (Paper Cups) என்பதால் சுகாதாரம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சாப்பிட்டவுடன் நாமே அவைகளைக் கசக்கித் தூக்கி எறிந்துவிடலாம்.

 

நல்ல பிசினஸ் (Business)

நாங்கள் சென்ற கோவில்களுக்கு வாசலில் நூற்றுக் கணக்கான இடங்களில் “இங்கே உங்கள் , காமெராக்களை விட்டுச் செல்லுங்கள், மொபைல் போன்களை விட்டுச் செல்லுங்கள், பூ வாங்குங்கள், செருப்புகளை விட்டுச் செல்லுங்கள்”— என்று வணிகர்கள் நச்சரிக்கிறார்கள். கோவில் நிர்வாகம் இதை ஏற்பாடு செய்யாததால், அவர்களில் ஒருவரை நம்பி காமெரா, போன் – ஆகியவற்றை விட்டுச் சென்றோம். திரயம்பகேஸ்வரர் கோவிலில் நாங்கள் கொண்டு சென்ற பூக்களை சந்நிதிக்குள் நுழையும் முன்னரே ஒரு பெண் வாங்கி ஒரு கூடையில் போட்டுவிட்டு இரண்டு மூன்று பூக்களை நமக்கு பிரசாதம் என்று கொடுக்கிறார். ஆனால் சீரடியில் பாபா சமாதி வரை பூக்களைக் கொண்டு செல்லலாம். பிரசாதமும் பெறலாம்.

 

நாங்கள் வரிசையில் நின்று சமாதியை அடையும் முன்னரே ஒருவர் வந்து மலைபோல பிரசாத பாக்கெட்டு (Packets) களைக் குவித்தார். அதில் சுவையான இனிப்பான பூந்திப் பிரசாதம் இருந்தது. உங்களுக்கு விருப்பமிருந்தால் சர்க்கரை உருண்டை பிரசாத பாக்கெட்டும் வாங்கிச் செல்லலாம்.

 

சீரடியிலும் விஷேச தரிசன வசதிகள் உண்டு. முதியோர்கள் ஒருவரை துணைக்கு அழைத்துச் சென்று விரைவில் தரிசிக்கலாம். மின்னணுப்பதிவின் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து விரைவில் திரும்பிவரலாம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் நேரம் முதலிய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

சீரடி பாபா சமாதி முகப்பு தோற்றம்

 

ஏமாற்றுப் பேர்வழிகள்!

எல்லா மதங்களும் சொல்லித்தருவது – சத்தியத்தைக் கடைப்பிடி; உண்மையாக இரு, அன்பாக இரு. இதைக் கடைப் பிடிப்போர், வேறு எந்த தெய்வத்தையும் வணங்கத் தேவையில்லை. ஆனால் பாபாவின் அருளைப் பெற வந்த ஒரு கும்பல், ஒரு நீல நிற கயிற்றில் ஒரு பாட்ஜை அணிந்துகொண்டு, ஏதோ அங்கு வேலை பார்ப்போர் மாதிரி எல்லாரையும் முந்திக் கொண்டு சென்றது. இந்தக் கும்பல் பாபாவைக் கும்பிட்டென்ன பயன்? கும்பிடாமல் போனால் என்ன? கழுதை, கழுதையே!

 

எனக்கு பிடிக்காத விஷயம் இரண்டு!!

புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா கொண்டுவந்த புதிய பழக்கம் இப்பொழுது இந்து மதத்தை விஷமாக அரித்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடைய ஞானிகள் பாடிவைத்த அருமையான, சக்தி வாய்ந்த பஜனைப் பாடல்களில் எல்லாம் கடைசி வரியை மாற்றி பாபாவின் பெயரைப் புகுத்தினர். இது தவறு – மிகப் பெரிய தவறு. பாபாவைப் புகழ்ந்து பாடுங்கள் அவரே கடவுள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் ஏற்கனவே இருக்கும் பாடல்களில் கை வைக்காதீர்கள்.

 

இப்பொழுதே நமது குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் கேட்கும் நூற்றுக் கணக்கான கேள்விகளுக்குப் பெரும்பாலான பெற்றோர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. இதற்கு அடுத்த தலைமுறை “நேற்று வந்த பாபாதான் கடவுள்” என்று பாடினால் அவர்கள் குழம்பிப்போவார்கள். ஆகையால் தயவு செய்து ட்ரடிஷனல்’ (Traditional) /சம்பிரதாய பஜனைகளை மாற்றாதீர்கள். பாபா பற்றி தனியே பாடுங்கள், ஆடுங்கள்— அது உங்களின் தனி உரிமை.

இதே போல பாபா கொண்டுவந்த மற்றொரு வழக்கம்- காட்டுத் தீ போல பரவி வருகிறது- அதாவது தனி மனித தீபாரதனை. எனது அப்பா, அம்மா, குருமார்கள், சங்கராசார்யார்கள் எல்லோரும் கடவுள் படங்களுக்கும் சிலைகளுக்கும் தான் ஆரத்தி (Arti) காட்டினர். இன்றோ பாபாவைப் பார்த்து, தோழான், துருத்தி, குப்பன், சுப்பன் எல்லாம் – ஆனந்தா பெயரைச் சேர்த்து வைத்துக்கொண்டு தனக்கு தீபாரதனை வாங்கிக் கொள்ளுகின்ரனர். பின்னர் அந்த பாபாக்கள், ஆனந்தாக்கள் எல்லாம் கொலை வழக்கிலும், கற்பழிப்பு வழக்குகளிலும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர் (கம்பி எண்ணுதல்= சிறைவாசம்).

 

ஏன் இந்தப் புலம்பல்?

சீரடி விஷயம் எழுதப் போய், திடீரென இதை ஏன் எழுதுகிறேன் என்று நீங்கள் வியக்கலாம். காரணம் என்ன? தமிழ்நாட்டில் சில அயோக்கியர்கள், இப்படி பாபா வேஷம், பகவான் வேஷம், ஆனந்தா வேஷம் போட்டு காசு பணம் அடிப்பதை நான் அறிவேன். மேலும் சீரடியில் எனது டாக்ஸி டிரைவர் வாங்கிய ஒரு புதி சி.டி.யைக் (Compact Disc) காரில் போட்டு ‘சுவிட்’சை அமுக்கினார். அருமையான குரல், அருமையான மியூசிக் (Music) ஆனால் பாடலின் பொருள்: காசி, மதுரா சென்றபோதெல்லாம் கிடைக்காத அருள் ஆனந்தம், சீரடி சென்றால் கிடைக்கும்!!!!! நீ ராமனுக்கு மேல், அல்லாவுக்கு மேல், ஜீசசுக்கு மேல், மோசசுக்கு மேல் என்று ஒரே பிதற்றல்!!

இந்துக்களின் வீக்னெஸ் Weakness/ பலவீனம்

மஹாத்மா காந்தி செய்த பயங்கரத் தவற்றை (ஹிமாலயன் பிளண்டர் HIMALAYAN BLUNDER), பாபா பக்தர்கள் பின்பற்றுகின்றனர். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நாம் பாடும் ரகுபதி ராகவ ராஜா ராமில் அல்லா, குல்லா என்ற வார்த்தைகளை நுழைத்து பாடலை களங்கப் படுத்தினார் காந்தி. அதையே பர்த்தி, சீரடிக்காரர்களும் பின்பற்றி பிதற்றத் துவங்கிவிட்டனர். அல்லாவை, ஏசுவை, நானக்கை, மோசசை சேர்க்க நமக்கு உரிமையுமில்லை, தேவையுமில்லை. அப்படிப் பாடுவதற்கு அந்தந்த மதத்தினர் முன்வர வேண்டும்.  காந்தி பாடிய ரகுபதி ராகவ ராஜாராமை முஸ்லீம் எவரும் பாடுவதில்லை. காந்தி சொன்ன வந்தே மாதர கோஷத்தை ஏற்க மறுத்து அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு பாகிஸ்தானை உருவாக்கினர். இந்தப் பாடத்தை இந்துக்கள் மறக்கக்கூடாது.

 

ஷீரடி: சமாதியின் நுழை வாயில்

 

எனக்கு பயங்கர அனுபவம்!!!

ஒரு முறை பிரபல தமிழ் உபந்யாசகர் ஒருவரை லண்டன் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். முருகன் சந்நிதியில் விபூதி கொடுத்தவுடன் அதை வாங்கி, அர்ச்சகர் முன்னிலையிலே கீழே போட்டுவிட்டார். எனக்கும் அவர்களுக்கும் ரத்தம் கொதித்தது. ஆயினும் கடவுள் சந்நிதி என்பதால் அவரை மன்னித்து விட்டனர். நானும் அவரை உபந்யாச ஹால்/ மண்டபம் அங்கிருப்பதால்தான் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். யார் வந்தாலும் அவர்களுக்குரிய மரியாதை செய்து அர்ச்சகர்கள் ஆளுக்கு ஐந்து பவுன் போட்டு ஒரு ஐம்பது பவுனை ஒரு கவரில் போட்டுக் கொடுத்து, மரியாதை செய்வது அவர்களுடைய வழக்கம். ஆகையால்தான் சந்நிதியில் நுழைய நேரிட்டது. ஆனால் அவருடைய மனைவி, முருகனை அலட்சியம் செய்யாமல் விழுந்து கும்பிட்டார். அவர்களிருவரும் காரில் ஏறிச் சென்றவுடன் அர்ச்சகர்கள் அந்த பண உறையுடன் ஓடிவந்தனர். “முதலில் நாங்கள் கொடுக்கத் தயங்கினோம். நீங்கள் கூட்டி வந்ததால் கொடுப்பது முறை என்று ஓடிவந்தோம்” என்றனர். நான் சொன்னேன்: நீங்கள் செய்தது மிகவும் சரியே! நானும் இதையேதான் செய்திருப்பேன். இந்தப் பணத்தை அடுத்த உபந்யாசகருக்குப் பயன்படுத்துங்கள்” – என்றேன்.

 

இதே போல ஹரே கிருஷ்ணா இயக்கத்திலும் பல பிருஹஸ்பதிகள், அசமஞ்சங்கள் உண்டு. ராமனையும், கிருஷ்ணனையும், போற்றிப் பரவி ஆடிப்பாடி, உச்சுக் குடுமியுடன் தெருவில் தேர் இழுத்துவந்து, வாழ்நாள் முழுதும் குடி, கூத்து இன்றி, முழு வெஜிட்டேரியனாக இருப்பதால் அவர்கள் மீது எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. ஆனால் இத்தனைக்கும் நடுவில் சிவ பெருமானை டெமி காட்/ உப தேவதை (DEMI GOD) என்று வலிய, வம்புக்கு இழுத்துப் பேசும்போது “அடப் பாவி மகன்களா! ஒரு குடம் அமிர்தம் கொண்டு வந்து அதில் ஒரு சொட்டு விஷம் சேர்க்கிறீர்களே” என்று மனதுக்குள் நொந்துபோவேன்.

 

 

குஜராத்தி ஸ்வாமிநாராயணன்களும் இதே போலத்தான். அவர்களுக்கு ஸ்வாமிநாராயணன் என்பவர் நீலகண்டன் என்ற பிராமணச் சிறுவன் என்பதுகூடத் தெரியாமல் அவர்தான் ஆதி தெய்வம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

ஆயினும் பல பாபாக்களும், பகவான்களும், ஆனந்தாக்களும் செய்த மிகப்பெரிய நன்மை:– வேற்று மதங்களில், இந்துக்கள் போய் விழாமலிருக்க, இவர்களுடைய கவர்ச்சி உதவுகிறது. அதுவும் சத்ய சாய்பாபா போன்றோர் செய்த பொதுநல சேவைகளும் இமயம் போல உயர்ந்தவை. அவருடைய கல்வி நிறுவனங்களும், மருத்துவ மனைகளும், குடிநீர்திட்டங்களும் அவர்தம் புகழை எந்நாளும் காப்பாற்றும், போற்றும்.

ஷீரடியில் பிச்சைக்காரர்கள்

 

நாம் என்ன செய்ய வேண்டும்?

சின்மயா, சிவானந்தா ஆஸ்ரமம் போல பேஸிக் BASIC/ அடிப்படை இந்துமத தத்துவங்களைப் போதிக்க வேண்டும். ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகளின் ஆழ்ந்த தத்துவங்களையும் புனிதக் கொள்கைகளையும் போதிக்க வேண்டும். பழைய பாடல்களில் வேற்று மதத்தினரின் பெயர்களைச் சேர்த்தாலோ, தனி மனிதரைத் தெய்வம்போலப் பாராட்டி தீபாரதனை , ஆரத்தி காட்டினாலோ அவர்களிடமிருந்து ஒதுங்க வேண்டும்; புராதன இந்துமதத்தை ‘’கரப்ட்’’ CORRUPT ஆகாமல், துருப்பிடிக்க (RUSTY) விடாமல் காப்பது நம் கடமை.

ஆதி சங்கரர், மத்வர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், விவேகாநந்தர், ரமணர் போன்றோரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும்.

ஷீரடி பாபாவுக்கு நமஸ்காரம்! புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவுக்கு நமஸ்காரம்.

 

 

சீரடியில் சமாதியருகே சிறு வியாபாரிகள்.

-சுபம்-

 

Leave a comment

Leave a comment