அக்பரும் சூரிய நமஸ்காரமும் (Post No. 2463)

Emperor-Akbar-Empress-Jodha

Akbar and his wife Jodha Akbar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 6 January 2016

 

Post No. 2463

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

இந்திய சங்கீதம்

 

அக்பரும் சூரிய நமஸ்காரமும்

(Akbar and surya namaskar by Santanam Nagarajan)

ச.நாகராஜன்

 

 

கங்கை ஜலம் அருந்திய அக்பர்

 

அக்பர் ஒரு நல்ல ஹிந்துவுக்கு உரிய பல செயல்களை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்.

அவர் எங்கு சென்றாலும் கூடவே கங்கை ஜலம் கொண்டு செல்லப்படும். தன் வாழ்நாள் முழுவதும் கங்கை ஜலத்தைத் தவிர வேறெந்த நீரையும் அருந்தாதவர் அக்பர்.

 

Jodha-Akbar-Mugh

மரியாதையை எதிர்பார்க்காத மன்னர்

 

அவரது அரசவையில் இருந்த ந்வரத்னங்களின் வீட்டுக்கு அவர் செல்வது வழக்கம். அவர்களின் அழைப்பை அவர் எதிர்பார்ப்பதே இல்லை.

 

ஆனால் இதில் ஒரு சங்கடம் அவர்களுக்கு உண்டு. சாதாரணமாக மாமன்னரான அக்பர் ஒருவரது வீட்டிற்கோ மாளிகைக்கோ அரண்மனைக்கோ சென்றால் அவரை மரியாதை செய்ய வேண்டும், அவரது அந்தஸ்துக்குத் தக!

 

 

தங்கத் தட்டில் விருந்து, முத்துக்கள் பதிக்கப்பட்ட குவளைகளில் நீர், ஒன்றே கால் கோடி ரூபாய் தக்ஷிணை ஆகியவை நிறைவேற்றப்பட வேண்டிய குறைந்த பட்ச மரியாதைகள்.

ஆனால் ராஜா பீர்பல் இதற்கெல்லாம் எங்கே போவார்? அவர் தன் இல்லம் வந்தமைக்காக மன்னரை வாழ்த்தி ஒரு பாடலைப் பாடுவது வழக்கம்.

 

அக்பரும் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு மகிழ்வார்.

தான்ஸேனும் இது போல தங்கத் தாம்பாளம், வைரக் கோப்பை, வெள்ளிக் குவளைகள், தங்க நாணய தக்ஷிணை ஆகியவற்றை ஒரு போதும் கொடுத்ததில்லை; ஏனெனில் அவரிடம் இவை இல்லை, அவ்வளவு தான்.

 

ஆனால் மன்னர் வந்தவுடன் பாட ஆரம்பிப்பார். அதில் அக்பர் உருகி விடுவார். அவர் தான் தான்ஸேனுக்கு எல்லாவற்றையும் தருவார்.

 

ஏராளமான ஹிந்து அறிஞர்களைத் தன் அருகில் வைத்துக் கொண்டு அவர்களின் முழு அறிவையும் தன்னால் முடிந்த மட்டில் கிரகிக்கப்ப் பார்த்தார் அக்பர்.

surya namaskar by english

 

சூரிய உபாஸனை

 

தினமும் அதிகாலையில் சூரியோதயத்திற்கு முன்னர் எழுவது அவர் வழக்கம். சூரிய உபாஸனையில் அவர் மனம் பக்தி சிரத்தையுடன் வெகுவாக ஈடுபட்டது.

 

ஜைன மதத்தைச் சேர்ந்த பண்டிதரான பானுசந்திர உபாத்யாய அவருக்கு சூரிய ஸஹஸ்ரநாமத்தை உபதேசித்தார்.  ஆயிரம் நாமங்களைச் சொல்லி சூரியனை வழிபடும் வழக்கத்தை தன் வாழ்நாள் இறுதி வரை அக்பர் கடைப்பிடித்தார். அவரது ஆரோக்கிய ரகசியம் சூரிய நமஸ்காரத்தில் இருந்தது.

அக்பரின் இந்த சூரிய வழிபாடு தான்ஸேனை வெகுவாகக் கவர்ந்தது.

சூரியனை நோக்கிப் பிரார்த்தித்த தான்ஸேன், “ஒளிபொருந்தியவராக சிரஞ்சீவியாக அக்பர் ஆட்சி புரிய சூரிய பகவான் அநுக்ரஹம் புரிய வேண்டும்” என்று பாடலை யாத்துப் பாடினார்.

 

“அங்கே சூரியன், இங்கே அக்பர்!

இருவரையும் பாருங்கள்!

 

என்ன பவித்ரம், வந்து வரம் வாங்குங்கள், ஆனந்தம் பெறுங்கள்!

சஹஸ்ர கிரணங்களைக் கொண்டுள்ள சூரியன் போலவே அக்பரும் ஆயிரம் கிரணங்களைக் கொண்டுள்ளார். புத்தி ச்ரேஷ்டர். துக்கம் போக்குபவர் என தான்ஸேன் சொல்கிறேன்” என்ற பொருளமைந்த பாடலையும் யாத்துப் பாடினார்.

சூரிய உபாஸனையை இடைவிடாது அக்பர் செய்து வந்ததால் பவித்திரமான ஒருவராக அவர் இருப்பதாக நினைத்த தான்ஸேன் அக்பர் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வந்தார்.

 

surya deva painting

புனைகதைகளில் தான்ஸேன்

 

ஆனால் ராம தானுவாக இருந்தவர் தான்ஸேனாக மாறியதோடு இஸ்லாமை ஏன் தழுவினார் என்பதை வரலாறு சரியாக விளக்கவில்லை. பல புனைகதைகள் இருப்பதால் அது பற்றிய உண்மை தெரியவில்லை.

 

ஒரு கதையில் மன்னர் ராமச்சந்திரரிடமிருந்து வந்து விட்ட சோகத்தால் தான்ஸேன் பாடுவதையே நிறுத்தி விட்டதாகவும், இதனால் அக்பர் அவரிடம் தன் புத்திரியை அனுப்பிப் பாட்டுச் சொல்லித்தரச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. அவளுக்குப் பாட்டுச் சொல்லித் தரவே நாளடைவில் பழைய நிலைக்கு வந்து மீண்டும் பாட ஆரம்பித்ததாகக் கூறும் இந்தக் கதை வெறும் பொய்க்கதை என்பதை சுலபமாக உணரலாம்.

அரியணை ஏறி தான்ஸேனை அழைக்கும் போது அக்பருக்கு இருபதே வயது. அவர் எப்படி தன் மகளை 57 வயதான தான்ஸேனிடம் அனுப்பி இருக்க முடியும்?

 

ஆக தான்ஸேனின் வரலாறு பல மர்ம முடிச்சுகளைக் கொண்டதாகவே விளங்குகிறது.

 

ஆனால் ராகினிகளை  (ராக தேவதைகள்) அவர் உபாஸித்ததும் அந்த தேவதைகள் அவர் நாவில் நர்த்தனம் ஆடியதும் உண்மையே!

 

அக்பர் ஒரு வரலாற்று விசித்திரம் என்றால் அதில் அங்கம் வகிக்கும் தான்ஸேனைப் பற்றிய விவரங்களும் அப்படித்தான்!

*********

 

Leave a comment

Leave a comment