120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்!– 6 (Post No.2843)

buddha gold

Article written by S.NAGARAJAN

 

Date: 267May 2016

 

Post No. 2843

 

Time uploaded in London :–  7-53 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 6

 

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 61. அவரது அதிசய அனுபவங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

ஒரு நாள் சிதிலமடைந்திருந்த ஆலயம் ஒன்றில் அவர் நுழைந்தார். அங்கு தங்க எண்ணினார். அங்கு உடைந்திருந்த சவப்பெட்டி கிடந்தது. அதனுடைய மூடி தலைகீழாக இருந்தது.  அது ஒரு பழைய சவப் பெட்டி என்பதால் அதன் மீது படுத்து தூங்க எண்ணினார் ஸூ யுன்.

ந்ள்ளிரவானது. சவப்பெட்டியினுள்ளே ஏதோ ஒரு அசைவு தெரிந்தது.

திடீரென்று எதிர்பாராத விதமாக ஒரு குரல் கேட்டது.

“நான் வெளியில் வர விரும்புகிறேன்”

உடனே ஸு யுன் கேட்டார்: “யார் நீ? மனிதனா? பேயா, பிசாசா?”

“ஒரு மனிதன்” பதில் வந்தது.

“நீ யார்?”

“ஒரு பிச்சைக்காரன்”

சிரித்தவாறே ஸு யுன் சவப்பெட்டியின் மேலிருந்து எழுந்தார். உள்ளிருந்து அவலட்சணமான பிச்சைக்காரன் ஒருவன் வெளியே வந்தான்.

அவன் ஸு யுன்னைப் பார்த்து, “ நீ யார்?” என்று கேட்டான்.

“நான் ஒரு துறவி” என்றார் ஸு யுன்.

 

buddha in SL

அந்தப் பிச்சைக்காரனுக்கு அவர் மேல் ஒரே கோபம். தன் மண்டையை  அமுக்கி அவர் உடைத்து விட்டதாக அவனுக்கு எண்ணம். அவன் அவரைத் தாக்க வந்தான்.

ஸு யுன் புன்சிரிப்புடன் கூறினார்” “ நீ இருப்பது தெரியாமல் நான் சவப்பெட்டியின் மீது படுத்தேன். உன்னால் அசையக்கூட முடியவில்லை. இப்போது எப்படி என்னைத் தாக்கப் போகிறாய்?”

அவன் மௌனமானான. வெளியில் சென்று சிறுநீர் கழித்து விட்டு வந்து மீண்டும் படுத்து விட்டான்.

மறு நாள் சூரியோதயத்திற்கு முன்னர் ஸு யுன் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அப்போது ஷாங்டாங் மாநிலத்தில் பாக்ஸர் இயக்கம் என்ற புரட்சிக்காரர்களின் இயக்கம் ஆரம்பமாகி இருந்தது.

ஒரு நாள் புரட்சிக்காரரில் ஒருவன் திடீரென அவர் முன் வந்து துப்பாக்கியை நீட்டினான்.

“நீ சாவதற்குப் பயப்படுகிறாயா?” என்று அவன் கேட்டான்.

“”எனது விதி நீ சுட்டுத் தான் முடிய வேண்டும் என்றிருந்தால், துப்பாக்கியால் என்னைச் சுடு” என்றார் அவர்.

அவர் கலங்காமல் இப்படிச் சொன்னதால் அசந்து போன அவன்,  “நீங்கள் போகலாம்” என்று அவரை விட்டு விட்டான்.

இந்த இயக்கம் சற்று தீவிரம் அடையவே ஸூ யுன் பீஜிங்கிற்குத் திரும்பினார்.

பின்னர் மவுண்ட் ஹாங்-லோ என்ற மலையில் புத்தரின் திருநாமத்தை உச்சரிக்கும் ஒரு கூட்டத்தில் பங்கு கொள்ள அங்கு சென்றார். அங்கு 87000 காட்டிஸ் எடையுள்ள வெங்கல மணியைக் கண்டார் ( ஒரு காட்டிஸ் என்றால் ஒரு பிண்ட் எடை) அது 15 அடி உய்ரமுள்ளது. 7 அடி நீளமுள்ள மணி அடிக்கும் நாக்கைக் கொண்டது. அதன் குறுக்களவோ 14 அடி!

அந்த  மணியின் வெளிப்புறத்தில் “அவதமசக சூத்ரங்கள்” தெளிவாக முழுதுமாக பொறிக்கப்பட்டிருந்தது!

இந்த மணியை தன் தாய் முக்தி பெறுவதற்காக  மிங் வமிசத்தைச் சேர்ந்த மன்னரான செங் ஸு இந்த ஆலயத்திற்கு கொடையாக அளித்திருந்தார் ( அவர் காலம் 1403-24)

பாக்ஸர் இயக்கம் உச்ச கட்டத்தை அடைய எங்கும் ஒரே இரத்தக் களரி.

கடைசியில் வைசிராய் சென் சுவான்-சுவான் அந்தப் பிராந்தியத்திற்கு வந்தார். அவ்ர ஸூ யுன்னை  வோ லாங் ஆலயத்திற்கு பிரார்த்தனை புரிய அழைத்தார். கடுமையான பஞ்சத்தைத் தீர்க்குமாறு அவர் வேண்டிக் கொள்ள ஸூ யுன் பிரார்த்தனை செய்தார்.

அங்கு மலையில் ஒரு துளி நீர் கூட இல்லை. காலையில் கிடைக்கும் பனித்துளிகளைச் சேகரித்து அதை ஸூ யுன் அருந்தினார், அங்கு அவர் வளர்த்த மூலிகைகளே அவருக்கு உணவு.

நாட்கள் உருண்டோடின. ஒரு நாள் ஃபாசெங் உள்ளிட்ட சில துறவிகள் அவரது குடிசைக் கதவைத் திறந்தனர்.

உள்ளே இருந்தது ஸூ யுன். அவர்கள் அதிசயித்துப் போனார்கள்.

“உங்களைக் காணவே காணோமே. இங்கா அமைதியாகப் படுத்திருக்கிறீர்கள்?”

ஸூ யுன் கூறினார்: “இங்கே” என்பதை விட்டு விடுங்கள். “அங்கே” எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள்!”

அனைவரும் சிரித்தனர்.

அவரது யாத்திரை தொடர்ந்தது.

-தொடரும்

 

 

Leave a comment

Leave a comment