
Article written by S.NAGARAJAN
Date: 28 May 2016
Post No. 2846
Time uploaded in London :– 7-08 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Contact swami_48@yahoo.com
சம்ஸ்கிருதச் செல்வம்
கீதத்தின் பெருமை!
ச.நாகராஜன்
பக்தியோடு கீதம் இசைத்தால் என்ன தான் நடக்காது?
இராவணனின் கீதம் இசைக்கும் மஹிமையையும் ஆயர்பாடிச் சிறுவர் சிறுமியர் கீதமிசைத்து கிருஷ்ணனை ஈர்த்ததையும் ஒரு கவிஞர் விளக்குகிறார் இப்படி:
கீதஸ்ய மாஹாத்ம்யவசாவபீஷ்டம்
வரம் ஹராத ப்ராப ச ராவணோபி
யத் கௌதுகாத் ஜோபகுலஸ்ய மத்யே
பபூவ க்ருஷ்ணோபி ச கோபரூப:
இதன் பொருள் : கீதத்தின் மஹிமையால் ராவணன் கூட சிவனிடமிருந்து அவன் விரும்பிய வரங்களைப் பெற்றான். கீதத்தின் ஆகர்ஷணத்தினால் ஆயர்பாடி இடையர்களின் இடையே கிருஷ்ணனும் கோபனாக வந்தான்.
பக்தியுடன் இசைக்கப்பாடும் பாடல் இறைவனையும் ஈர்க்கும் என்பதை இப்படி கவிஞர் கூறுகிறார்.
இது பகதத்த ஜலஹணரின் ‘சுக்திமுக்தாவளி’–யில் தொகுக்கப்பட்டுள்ள ஒரு பாடல்.
இது அமைந்துள்ள சந்தத்தின் பெயர் உபஜாதி.
இதை ஆங்கிலத்தில் எஸ்.பி. நாயர் மொழியாக்கம் செய்துள்ளார் இப்படி: –
“Due to the greatness of (the devotional) song even the demon Ravana secured from Lord Siva boons of his choice: due its attraction even Lord Krishna came into the midst of the horde of cowherds as a cowherd.

கீதங்கள்
சந்திரனின் ஒளி
வெற்றிலைச் சுருள்
கற்பூரம்
நேசிக்கும் நங்கையர்
முதலானவற்றால் சாரமற்ற இந்த உலகம்
சாரமுடையதாகிறது.
உலகம் இன்பக் கேணி என்பது வேத வாக்கு. பூவுலகை இன்ப லோகமாக்குவது எவை? அதைப் பட்டியலிடுகிறான் மன்னன் போஜ மஹாராஜன்.
அவன் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்!
கீதசீதாம்சுதாம்பூல கற்பூரவனிதாதிபி:
அஸாரோப்யேஷ சம்ஸார: ஸாரவானிச லக்ஷ்யதே
இதன் ஆங்கில மொழியாக்கம் இது:
By (the pleasing of) songs, moonlight, betel roll, camphor, beloved women, etc;, this world which is (really) devoid of essence appears to be possessed with substance ( S.B. Nair)
இசையின் மஹிமையே மஹிமை!
மஹாகவி பாரதி கூறியது போல ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!!
***************
You must be logged in to post a comment.