
Article written by S.NAGARAJAN
Date: 13 June 2016
Post No. 2890
Time uploaded in London :– 8-57 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
யோக வாசிஷ்டத்தை இலவசமாகப் படிக்கலாம், பெறலாம்!
ச.நாகராஜன்
யோக வாசிஷ்டம் பிரம்மாண்டமான பெரிய நூல். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கீழ்க்கண்ட இணையதள தொடுப்பிலிருந்து (link) பெறலாம்..
ரமண மஹரிஷி யோக வாசிஷ்ட உண்மைகளை அனுபூதியாக அனுபவித்தவர். அவர் யோக வாசிஷ்டம் பற்றி தன் வாழ்க்கை நெடுக அன்பர்களுக்கு அதன் அருமை பெருமைகளைப் பற்றிப் பல்வேறு சமயங்களில் அருளுரை அருளியிருக்கிறார்.
ரமணாசிரமம் வெளியீடாக Yoga Vasishta Sara (The essence of Yoga Vasishta) என்ற சிறிய ஆங்கில நூல் யோக வாசிஷ்ட சாரத்தைத் தருவதாக அமைந்துள்ளது. பத்தே அத்தியாயங்களில் சாரத்தைத் தருகிறது இந்தச் சிறு நூல்.
இந்த நூலை ரமணாசிரமம், திருவண்ணாமலையிலிருந்து பெறலாம். ஆசிரமத்தின் இணையதளத்திலிருந்து ரமணாசிரம புத்தகங்கள் பலவற்றையும் பெறலாம்.
இணையதளத்தில் ஆசிரமத்தின் கீழ்க்கண்ட தொடுப்பிலிருந்து இதை தரவிரக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.
http://www.ramana-maharshi.info/downloads/downloads.htm
அடுத்ததாக பங்களூரிலிருந்து, “Quintessence of Yogavasishtha”
என்ற மிக அருமையான நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதை எழுதியவர் சி.எஸ்.குப்தா.
இதைப் படித்தவர்கள் மனநிறைவுடன் முழு யோகவாசிஷ்டத்தை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் படிப்பார்கள் என்பது நிச்சயம்.
ஆர்தர் கானண்டாயில் அல்லது இர்விங்வாலஸ் நாவலைப் படிப்பதில் உள்ள சஸ்பென்ஸ், விக்ரமாதித்தன் புதிர் கதைகளில் ஆழ்ந்த கருத்துடன் பெறப்படும் லாஜிக்,, டைம் டைலேஷன், ஸ்பேஸ் மர்மம் போன்றவற்றை உள்ளடக்கிய ஸை- ஃபி (ஸயிண்டிபிக் ஃபிக் ஷன்) நாவல்களில் உள்ள அறிவியல் மர்மங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதோடு அதையும் மீறி அபாரமாக சுவாரசிய விருந்து அளிக்கும் இந்த புஸ்தகம் யோக வாசிஷ்ட கருத்துக்களை 174 பக்கங்களில் தருகிறது.
இதை வெளியிட்டுள்ளோர் : Satsangha Seva Samithi, Gandhi Bazar, Bangalore – 4 (1978ஆம் ஆண்டு வெளியீடு)
யோக வாசிஷ்டத்தின் கருத்துக்களை உலகின் மாபெரும் மேதைகளின் கருத்துக்களோடு ஒப்பிட்டுக் காட்டிய யோகவாசிஷ்ட அறிஞர் பி.எல். ஆத்ரேயா எழுதிய Yoga Vasistha and Modern Thought” என்ற புத்தகத்தையும் முதலில் படித்து விட வேண்டும். 1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த புத்தகம் இப்போதும் விலைக்கு வாங்க முடிகிறது.
இது தவிர ஏராளமான புத்தகங்கள் இதன் அருமை பெருமைகளை வெளியிடுகின்றன. அனைத்தையும் கூட ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கலாம்.
சரி,தமிழில் யோகவாசிஷ்டத்தைப் பெற முடியுமா? முடியும்.
இணையதளத்தில் கீழ்க்கண்ட தொடுப்பிலிருந்து இதை இலவசமாகத் தரவிரக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.
https://www.scribd.com/doc/11815811/YOGA-VASISTAM-TAMIL-BOOK
யோகவாசிஷ்டம் (முதல் ஐந்து பிரகரணங்கள்) என்ற இந்த நூலை எஸ்.வி. கணபதி அவர்கள் தமிழாக்கம் செய்து 1943ஆம் ஆண்டு அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை வெளியீட்டாக வெளியிட்டுள்ளார்.
313 பக்கங்கள் கொண்ட நூல் இது.
ஆக தமிழிலும் ஆங்கிலத்திலும் உடனடியாகப் படிக்க சில நூல்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
இன்னும் ஏராளமாக உள்ள யோக வாசிஷ்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் படிப்பதன் மூலம் வாழ்க்கையில் மேம்பட முடியும்.
வாழ்க்கையில் இந்தப் புத்தகத்தைப் படித்தால் வேறு ஒரு புத்தகத்தையும் நாட வேண்டாம் என்று சொல்லும் கீர்த்தியைப் பெற்ற நூல் யோகவாசிஷ்டம்.
படித்தால் அருமை தெரியும்.
**********
R.Nanjappa (@Nanjundasarma)
/ June 13, 2016There are two English editions which may be useful:
1. English translation of Abhinanda Pandita’s Laghu Yoga Vashitha by K.N.Subramanian. First Edition (Sura Books) Chennai. 2008.
2. The Vision And The Way of Vashishtha. This is an English translation of some 2460 verses selected from the Yoga Vashishtha by B.L.Atreya. They were originally compiled as appendix to his thesis on Yoga Vashishtha submitted to Benaras Hindu University in 1928. Shri Atreya gave a detailed introduction in 5 chapters. This book contains the original slokas in Sanskrit, with an admirable translation by SAMVID and the introduction. This book is beautifully printed and published by Samata Books, Chennai-6, Second Edition:2005. As it contains the original slokas, it would help in memorising the ones one considers important.