
Article written by S.NAGARAJAN
Date: 14 June 2016
Post No. 2893
Time uploaded in London :– 6-56 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! – 4
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல!
ச.நாகராஜன்
யோக வாசிஷ்டம் என்னும் பெரிய நூலை படிக்கலாம் என்று அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க ஆரம்பிப்பது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறது என்று அன்பர்கள் சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கத்தான் இருக்கிறது.
விஷயம் சூக்ஷ்மமான விஷயம். ஆர்வம் உள்ளவர்களுக்கே 32000 சுலோகங்களைப் படிப்பது என்பது எளிதான காரியமல்ல. அதுவும் ஆங்கிலத்தில் படிக்கும் போது முழு சாரத்தையும் கிரகிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பே.
இதனால் அன்பர்கள் முதலில் “Quintessence of Yogavasishtha” என்ற புத்தகத்தை முதலில் படிக்கலாம். ருசி வந்து விடும்,
பின்னர் சம்ஸ்கிருதத்தின் அழகைக் காணவும் அதில் ஆழ்ந்த அர்த்தமுள்ள பல்வேறு விஷயங்களைப் படிக்கவும் ஒரு நல்ல நூல் உள்ளது. தேர்ந்தெடுத்த சுமார் 2500 சுலோகங்கள் சம்ஸ்கிருதத்திலும் அதன் ஆங்கில மொழியாக்கமும் உள்ள புத்தகம் அது
B.L. Atreya தேர்ந்தெடுத்த ஸ்லோகங்களை Samvid என்பவர்அழகுற ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூலின் பெயர் ‘The Vision and the way of Vasistha’. 583 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் யோக வாசிஷ்டம் எதைச் சொல்ல வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு பிரமிக்கலாம் இதன் இன்றைய விலை ரூ 400/
அழகிய எளிய சம்ஸ்கிருதம் இந்த நூலில் அமைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்ட இரு ஸ்லோகங்களை இங்கு பார்க்கலாம். நூலின் பெருமையைக் கூறும் ஸ்லோகங்கள் இவை.
க்ரந்தேனானேன லோகோயமஸ்மாத் ஸம்சார சங்கடாத்
சமுத்தரிஷ்யதி க்ஷிப்ரம் போதேனேவாஷு ஸாகராத்
This mankind will cross over this peril of worldly existence speedily by this work, as (one crossed over) the ocean quickly by a boat.
.
யதிஹாஸ்தி ததன்யத்ர யத்ரேஹாஸ்தி ந தத் க்வசித்
இமம் சமஸ்தவிஞ்ஞான சாஸ்த்ர கோஷம் விதுர்புதா:
What is here (in this work), that is elsewhere. What is not here that is nowhere. The wise consider this as the repository of all scriptures of Higher Knowldege. (Translation by Samvid)
இந்த நூலைப் படித்த பின்னர் யோகவாசிஷ்டம் முழுவதையும் ப்டிப்பதில் கஷ்டம் இருக்காது.
இவ்வளவு பீடிகைக்குப் பின்னரும் இந்த அதிச்ய நூலைப் படிக்காமல் இருந்தால் அது பாக்கியக் குறைவே.
படிப்பவர்களுக்கு மற்றவர்களுக்குப் புரியாத பிரபஞ்ச இரகசியங்கள் புரியும்.
********
You must be logged in to post a comment.