உப்பு நீரில் ஓடும் கார் (Post No.2987)

salt powereeed

Article Written S NAGARAJAN

Date: 20 July 2016

Post No. 2987

Time uploaded in London :– 5-16 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

22-7-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
உப்பு நீரால் ஓடும் கார்!
ச.நாகராஜன்

“படிம எரிபொருள் சீக்கிரமே அரிதாகி விடும் என்பதால் மாற்று எரிபொருள் இன்றியமையாதது.”
– காதத் பகத்

 

salt water car

Toy Salt Car Kit: You can do it

பெட்ரோல் மற்றும் டீஸல் ஆகியவற்றின் விலையை நினைத்தாலேயே நடுத்தர மக்களுக்கு பகீர் என்கிறது. படிம எரிபொருளை விட்டு விட்டு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகெங்கும் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
ஹைட்ரஜன் கார், எலக்ட்ரிக் கார், ஆர்கானிக் எதனால் கார், சூரிய சக்தியால் இயங்கும் சோலார் கார் என பல்வேறு விதமாக மாற்று எரிபொருள் முயற்சிகளை உலகிலுள்ள பல நிறுவனங்களும் மேற்கொண்டு மாதிரி கார்களை உருவாக்கியுள்ளன.
ஆனால் பரவலாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் மாற்று எரிபொருள் கார்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கென உருவாகவில்லை.
இந்த நிலையில் உப்பு நீரை வைத்து காரை ஓட்டலாம் என்ற செய்தி எவ்வளவு இனிப்பான செய்தி!
மரீனா கடற்கரையில் வரிசையில் நின்று ஆளுக்கு தினமும் ஒரு வாளி அல்லது பீப்பாய் கடல் நீரை இலவசமாக எடுத்துச் சென்று அதைக் காரில் போட்டுக் கொண்டு ஓட்டினால்?!!
நினைக்கவே நெஞ்சம் இனிக்கிறது இல்லையா!

ஜெர்மனியைச் சேர்ந்த நேனோ ஃப்ளோசெல் (Nano Flowcell) என்ற நிறுவனம் ஒரு மந்திரக் காரைக் கண்டுபிடித்துள்ளது. அது உப்பு நீரினால் ஓடுகிறது! இந்த உப்பு நீர் காரானது பெட்ரோல் டீஸல் கார்களை விட மூன்று மடங்கு அதிக தூரம் ஓடுகிறது!
ஹைட்ரஜனால் ஓடுகின்ற கார்களைப் போன்றே இந்த உப்பு நீர் காரும் ஓடுகிறது.
உப்பு நீரிலிருந்து மின்சக்தி உருவாக்கப்படுகிறது. ஆனால் ஹைட்ரஜன் காரில் உள்ளது போல சிக்கலான உயர் அழுத்த அமைப்புகள் (high pressure system) இதில் தேவையில்லை!
கொஞ்சம் ‘டெக்னிகலாக’ இதன் செயல்பாட்டை விளக்கவும் முடியும். இந்தக் காரில் இரண்டு எரிபொருள் டாங்குகள் இருக்கும். அது கரைக்கப்பட்ட உலோக உப்புகளினால் (dissolved metallic salts) நிரப்பப் பட்டிருக்கும். இந்த உப்பு எதிர்மறை அயோனிக் மின்னூட்டத்தைக் கொண்டிருக்கும் அது ஒரு மென்படலத்தின் மூலம் பம்ப் செய்யப்படும். இரசாய்ன வினை மூலம் சக்தி உருவாகி நான்கு மின் மோட்டார்கள் இயக்கப்படும். இவை சூப்பர் கபாசிடர்களினால் காரின் சக்கரங்களை இயங்க வைக்கும்.
நேனோ ஃப்ளோசெல் இதுவரை மூன்று உப்பு நீர் கார்களை உருவாக்கி உள்ளது. ஒன்று ஸ்போர்ட்ஸ் கார். இன்னொன்று சாதாரணப் பயன்பாட்டிற்காக உள்ளது. அடுத்தது முதலாக அமைக்கப்பட்ட ப்ரோடோ கார்!
இந்தக் கார்கள் ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுள்ளன.

பொதுமக்களின் பயன்பாட்டிற்கான காரின் பெயர் க்வாண்டினோ (Quantino).
இதன் ஹார்ஸ்பவர் 108. ஐந்து வினாடிகளில் இது 100 கிலோமீட்டர் வேகத்தை எடுத்து விடும்! ரேஸ் கார்களோ 200 ஹார்ஸ் பவர் கொண்டது.
சரி, இதன் மைலேஜ் என்ன? எவ்வளவு மைல்கள் இது ஓடும்?
ஒரு முறை டேங்கை நிரப்பினால் 1000 கிலோமீட்டர் இது ஓடும்!

இதைத் தொடர்ந்து ஓட்டிய டிரைவர் 14 மணி மூன்று நிமிடங்களில் களைத்துப் போய் நிறுத்தினார். ஆனால் கார் தொட்ர்ந்து ஓடும் நிலையில் நல்ல கண்டிஷனில் இருந்தது.ஸ்போர்ட்ஸ் கார் மணிக்கு 300 மைல் வேகத்தில் ஓடும், 1090 ஹார்ஸ் பவரைக் கொண்டது

இது போன்ற கார்களை உருவாக்கிய கம்பெனிகள் சில உண்டு என்றாலும் அவை சந்தைக்கு உரிய வண்டிகளை இதுவரை தயாரிக்கவில்லை. ஜப்பானிய நிறுவனமான ஜெனிபகஸ் என்ற நிறுவனம் ஒரு ஹைட்ரஜன் காரைத் தயாரித்தது. ஆனால் நிறுவனமே திவாலாகி விட்டது.!
ஸ்டான்லி ஆலன் மேயர் என்பவர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனால் ஓடக் கூடிய காரைக் கண்டுபிடித்துத் தயாரித்தார். அது உற்பத்திக்கான நிலை வரும் போது அவரை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்தது. முதலீட்டாளர்களிடம் கார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே விஷத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அத்தோடு அந்தக் கார் பற்றிய திட்டமும் நின்றது.
இப்போது உப்பு நீர் காரினால் ஒரு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரை ஓரம் வாழ்பவர்கள் இனி புதிதாக ஒரு பெரும் மக்கள் கூட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். மாற்று எரிபொருளான உப்பு நீரை வேண்டி நிற்கும் வாகனச் சொந்தக்காரர்கள் இனி கடலை நோக்கித் தானே திரண்டு வருவார்கள்! அல்லது அங்கு அமைந்திருக்கும் உப்பு தொழிற்சாலைகளை நோக்கி வரலாம்!
பெட்ரோலும் டீஸலும் போய் உப்பு நீர் எரி பொருளானால் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை நினைத்தாலே மனம் இனிக்கிறது.

 

lauterber 2
அறிவியல் செய்யும் ஜாலங்களுக்கு ஒரு முடிவே இல்லை!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அமெரிக்கரான பால் சி.லாடர்பெர் (Paul C Lauterber : தோற்றம் 6-5-1929 மறைவு : 27-3-2007) 2003ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோப்ல பரிசைப் பெற்ற மேதை. எம் ஆர் ஐ எனப்படும் மாக்னெடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் கண்டுபிடிப்பிற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோய் அறிகுறிக்கான சோதனையில் இன்று உலகெங்கும் வருடந்தோறும் 6 கோடி பேர்களால் எம் ஆர் ஐ சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பக்கவிளைவு இல்லாத பாதுகாப்பான நோய் அறிகுறிக்கான சோதனை இது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.
முதலில் தனது கண்டுபிடிப்பைப் பற்றி நேச்சர் பத்திரிகைக்கு இவர் எழுதி அனுப்பினார். ஆனால் பத்திரிகை இவரது கண்டுபிடிப்பை நிராகரித்து விட்டது.
மனம் நொந்து போன அவர்,” கடந்த 50 ஆண்டுகளில் விஞ்ஞானத்தாலோ அல்லதுநேச்சரினாலோ நிராகரிக்கப்பட்டதை வைத்து விஞ்ஞானத்தின் முழுச் சரித்திரத்தையே எழுதலாம்” என்று நேச்சர் பத்திரிகைக்கு எழுதினார். பின்னர் இவரது கண்டுபிடிப்பின் அருமையையும் பயன்பாட்டையும் கண்ட உலகம் வியந்தது. இவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது.
சுமார் 60க்கும் மேற்பட்ட பிரபல விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு முதலில் எள்ளி நகையாடப்பட்டன.

 

lauterber
அவர்களின் விடாமுயற்சியால் பின்னர் அறிவியல் உலகம அவர்களை அங்கீகரித்தது.. அவர்களுள் பலரும் நோப்ல பரிசை வென்றிருக்கின்றனர்..
எந்த ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பையும் உலகம் பொதுவாக திறந்த மனதுடன் பாராட்டி ஏற்றுக் கொண்டதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
ஆன் லைன் மூலமாக இன்று அன்றாடம் நடைபெறும் ஷாப்பிங்கை 1966ஆம் வருடம டைம் பத்திரிகை, “இதெல்லாம சரிப்பட்டு வராது. பெண்கள் கடைக்குச் சென்று ஷாப்பிங் செய்வதையே விரும்புவர்” என்று விமர்சித்தது.
1904ஆம் வருடம் பிரான்ஸை சேர்ந்த உத்திகளை வகுக்கும் பேராசிரியர் ஈகோல் டீ கர், “விமானங்கள் என்பது சுவையான பொம்மைகள் தான். அவை இராணுவ உபயோகத்திற்குச் சரிப்பட்டு வராது” என்றார். இரண்டாம் உலகப் போரில் விமானப் படைகளின் சேவை பற்றி அனைவரும் அறிவர்.
தாமஸ் எடிஸனே, “ஆல்டர்னேடிங் கரண்ட்” என்பதைப் பற்றிச் சிந்திப்பதே வேஸ்ட் ஆஃப் டைம்” என்றார். ஆனால் ஏசி- யே உலகை இன்று ஆள்கிறது.
இப்படி நூற்றுக் கணக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்..
அறிவுடன் விடாமுயற்சியும் இணைந்தாலேயே உலகம் அங்கீகரிக்கிறது என்பது உண்மை!
*********

Leave a comment

Leave a comment