
Article Written S NAGARAJAN
Date: 25 July 2016
Post No. 3003
Time uploaded in London :– 5-49 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 9
ச.நாகராஜன்
ஸு யுன்னுக்கு இப்போது வயது 65
க்வி மிங் ஆலயத்தில் இருந்தோர் அவரைத் தனிமைத் தவத்தை விட்டு விட்டுத் தங்களிடம் வருமாறு வேண்டினர். அங்கு அவர்கள் அழைப்புக்கு இணங்கிச் சென்ற அவர், சூத்திரங்களின் விளக்கங்களை சொல்ல ஆரம்பித்தார். இப்போது அவருக்கு சிஷ்யர்களாக 300 பேர் இருந்தனர்.
அடுத்து, யாங்-சு ஆலயம் அவரை அழைத்தது சுராங்கம சூத்திரங்களையும் .ஹான் –ஷான் எழுதிய கவிதைகளையும் ஆலயத்தில் அவர் ம்ரப் பலகைகளில் ஓவியமாக வரைய ஏற்பாடு செய்தார்.
அவற்றை விளக்குமாறு அனைவரும் அவரைக் கேட்டுக் கொண்டனர்.
கூட்ட முடிவில் தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் லு பு சிங் மற்ற அதிகாரிகளுடன் வந்து ஸு யுன்னைத் தரிசித்தார்.
சான் டா ஆலயத்திற்கு வருமாறு பணிவுடன் அவர்கள் வேண்டினர்.
அங்கு சென்றார் ஸு யுன்.
நகரங்களில் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறிய ஸு யுன் காக் ஃபுட் மலையில் உள்ள ஜிங்-டிங் மலை உச்சியில் உள்ள ஆலயத்தைத் தான் புனருத்தாரணம் செய்ய விரும்பியதையும் அங்குள்ளோர் அதைத் தடுத்ததையும் நினைவு கூர்ந்தார். (அத்தியாயம் 7இல் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது)
அந்த இடத்தில் சிறிது இடம் தந்தால் நன்றாக் இருக்கும் என்ற கருத்தை ஆள்வோரிம் அவர் கேட்டுக் கொள்ள அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
போ யு என்ற இடத்தில் ஒரு ஆலயம் இருந்தது. ஜியா குங் வமிசம் (1796-1820) ஆண்ட போது செழிப்பாக இருந்த ஆலயம் இப்போது பாழடைந்து கிடந்தது. ஏன் அதை விட்டு விட்டு எல்லோரும் போய் விட்டார்கள்?
ஆலயத்தின் வலது புறம் பெரிய ஒரு பாறை இருந்தது. அந்தப் பாறையிலிருந்து ‘வெள்ளைப் புலி’ யின் செல்வாக்கு இருந்ததாம். மக்கள் பயந்து ஓடி விட்டனர்.
பாறையை உடைக்க விரும்பினார் ஸு யுன். பாறையோ மிகவும் பெரிது. ஒன்பது அடி நான்கு அங்குலம் உயரம். ஏழரை அடி குறுக்களவு.
பாறையை இடது புறமாக 280 அடி தள்ளி விட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய ஸு யுன் ஒரு மேஸ்திரியைக் கூப்பிட்டு ஆள்களை அழைத்து வருமாறு கூறினார். 100 பேர்கள் குழுமினர். மூன்று நாட்கள் இடை விடாமல் உழைத்தனர். ஒரே சமயத்தில் அனைவரும் முயற்சி செய்தும் கூட பாறை அசையக் கூட இல்லை!
முயற்சியில் தோல்வி அடைந்த அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
ஸு யுன் அங்கு இருந்த காவல் தெய்வங்களை நோக்கிப் பிரார்த்தனை புரிய ஆரம்பித்தார். மந்திரங்களை ஜெபித்தார்.
பின்னர் பத்து துறவிகளை அழைத்தார். இடது புறம் பாறையைத் தள்ளுங்கள் என்றார்.
பாறை நகர்ந்தது! அனைவரும் ஆரவாரித்தனர்.
ஒருவர் பாறையில் ‘யுன் யி ஷி’ என்று எழுதியே விட்டார். மேகத்தால் நகர்த்தப்பட்ட பாறை என்பது அதன் பொருள்.
(மேகம் என்பது இங்கு ஸு யுன்னைக் குறிக்கிறது)
அதிகாரிகளும் அறிஞர்களும் நடந்ததைக் கேள்விப்பட்டு அங்கு விரைந்து வந்தனர். நடந்ததை பாறையில் கல்வெட்டாக்க முனைந்தனர்.
ஸு யுன் ஒரு கவிதையைப் புனைந்தார்.
அதன் சுருக்கம்:
“இந்த விசித்திரமான பாறை தைரியமாக நின்றது
புலிகள் நடமாடும் இடத்தில் ஆலயத்தை புனருத்தாரணம் செய்ய விரும்பினேன்
ஆயிரக்கணக்கான தடைகளைக் கடந்து இந்த மலைக்கு வந்தேன்
அப்போது – பிரகாசமான சந்திர வெளிச்சம்
மீன்கள் விளையாடும் அழகிய நேரம்
மாயா உலகத்தை மேலிருந்து பார்க்கும் அவன்
இனி சுவர்க்கத் தென்றல் தவழ்ந்து வர
மணிகளின் ஓசையைக் கேட்பான்”
ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது.எல்லா யாத்ரீகர்களும் அங்கு வருவதென்றால் அவர்களை நன்கு கவனிக்க பணம் வேண்டுமே
ஸு யுன் நிதி திரட்ட முனைந்தார்
– தொடரும்
You must be logged in to post a comment.