கறுப்புப் பணம், வெள்ளைப் பணம், கறைபடிந்த பணம்! (Post No.3040)

rupee6

Written by london swaminathan

Date: 6th    August 2016

Post No. 3040

Time uploaded in London :– 13-18

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சம்ஸ்கிருதம் இப்பொழுது வழங்கும் மொழிகளிலேயே மிகவும் பழமையானது; மிகவும் வளமானது. இதற்கு அருகில் வரக்கூடிய மொழிகள் இன்றைய உலகில் இல்லை. சம்ஸ்கிருத மொழியில் இல்லாத விஷயமே இல்லை. கிரேக்க மொழி இதற்குக் கொஞ்சம் பக்கத்தில் வரும். ஆனால் அதில் கி.மு.800 முதலே இலக்கியங்கள் கிடைக்கும். தமிழோ இதற்கு மிகவும் பிந்தியது. கி.மு. முதல் நூற்றாண்டு முதல்தான் இலக்கியங்கள்! சீன மொழியும், எபிரேய (ஹீப்ரு) மொழியும், லத்தீன் மொழியும் தமிழைவிட மூத்த மொழிகள்; ஆனால் சம்ஸ்கிருதம் அளவுக்கு வளம் நிறைந்தவை அல்ல!

 

இந்தியாவிலுள்ள எவரும் சம்ஸ்கிருதச் சொல் இல்லாமல் ஐந்து நிமிஷம்கூடப் பேச முடியாது. அப்படி கஷ்டப்பட்டு பேச முயற்சித்தால் எதிரே உள்ளவருக்கு விளங்காது!!!

 

மொழிகள் பற்றி நாம் எதைச் சொன்னாலும் அதற்கு ஆதாரம், சான்று இருக்கிறதா? என்று கேட்கவேண்டும். சம்ஸ்கிருத மொழியில் கி.மு.1400 முதல் கல்வெட்டுகளும், இலக்கியமும் உள்ளன. தமிழ் மொழியில் கி.மு.300 முதல் கல்வெட்டுகளும் கி.மு.100 முதல் இலக்கியங்களும் உள்ளன. (எனது முந்தைய கட்டுரைகளில் விவரங்கள் உள)

 

கறுப்புப் பணம், வெள்ளைப் பணம், கறைபடிந்த கரங்கள் என்பன கூட சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவைதான் போலும்!

Currency-of-the-world-006

பணம் எத்தனை வகை? சம்பாதிக்கும் முறை எத்தனை வகை? என்பதை கீழ்க்கண்ட சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும்:–

தனமூலா: க்ரியாசர்வா அதஸ்தஸ்யார்ஜனம் மதம்

வர்தனம் ரக்ஷணம் போக இதி  தஸ்ய விதி: க்ரமாத்

 

தத் புனஸ் ச த்ரிவிதம் ஞேயம் சுக்லம்  சபலமேவ ச

க்ருஷ்ணம் ச தஸ்ய விஞேய: ப்ரபேதஸ்சப்ததா புன:

 

ச்ருதசௌர்யம் தப: கன்யா  யாஜ்ய சிஷ்யா அன்வயாகதம்

 

தனம் சப்தவிதம் சுக்லம் உதயோப்யஸ்ய தத்வித:

குசீத க்ருஷிவாணிஜ்ய சுல்க சில்பானு வ்ருத்திபி:

 

க்ருதோ உபகாராதாப்தம் ச சபம்லம் சமுதாஹ்ருதம்

பார்ஸ்வகத்யூத தைன்யார்த்தீ ப்ரதிரூபக சாஹசை:

 

வ்யாஜேனோபார்ஜிதம் யச்ச தத் க்ருஷ்ணம் சமுதாஹ்ருதம்

யதா விதேன த்ரவ்யேன பக்திசேஹகரோத்யயம்

 

தத்விதம் பலமாப்னோதி தத்பலம் ப்ரேத்யசேஹ ச

 

 currencies

பொருள்:–

எல்லா காரியங்களுக்கும் பணம் வேண்டியிருப்பதால் அதை சம்பாதிப்பது இன்றியமையாதது.

 

சம்பாதித்த பணத்தைக் காப்பாற்றுதல், அதை முதலீடு செய்து அதிகரித்தல், செலவு செய்து அனுபவித்தல் என்று மூன்று வகை இருக்கிறது.

 

அவை ஒவ்வொன்றும் சுக்லம்/வெள்ளை, சபலம்/புள்ளி அல்லது கறை, க்ருஷ்ணம்/கறுப்பு என்று பிரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் மீண்டும் ஏழு விதங்களாகப் பிரிக்கப்படும்;

 

கல்வி, வீரதீரச் செயல், தவம், கன்யாதானம் (சீதனம்), யாகம் செய்வித்தல், சிஷ்யபரம்பரையாகக் கிடைத்தல் (குருதட்சிணை) , புதையல்  ஆகிய வரும்படி வெள்ளைப் பணம் (சுக்லம்)

 

வட்டி, விவசாயம், வியாபாரம், சுங்கவரி, கலைகள், உபதொழில்கள், உதவி செய்தமைக்காகக் கொடுக்கப்படும் பணம் (கையூட்டு) என்ற வகை வரும்படிகள் புள்ளி அல்லது கறையுள்ள வரும்படி;

 

தொண்டூழியம் (அடிமைத் தொழில்), சூதாட்டம் (லாட்டரி), பிறரை வருத்தி பொருளீட்டல், கெட்ட வழிகளில் பொருளீட்டல், ஆள்மாறாட்டம், சாகசச் செயல்கள், கடைத்தர வியாபாரம் (ஏமாற்று, மோசடி) ஆகிய வகை வரும்படி கறுப்பு வருமானம்.

 

யார் யார் எவ்வெவ்வகையில் சம்பாதிக்கின்றனரோ அந்தந்த பலனை அனுபவிப்பர்.

–Subham–

 

Leave a comment

Leave a comment