மதர் தெரஸா : மீடியா உருவாக்கிய செயிண்ட்! – 2 (Post No.3167)

theresa-oz

கட்டுரையின் முதல் பகுதியைப் படித்து விட்டுத் தொடரவும். 

Written by S NAGARAJAN

Date: 19 September 2016

Time uploaded in London: 6-54 AM

Post No.3167

Pictures are taken from various sources; thanks.

 

 

தெரஸா நடத்திய இல்லங்களுக்கு நூறு நாடுகளிலிருந்து எழைகளும் நோயாளிகளும் புகலிடம் கேட்டு வந்தனர்.

இதில் மூன்றில் இரண்டு பங்கு பேர்கள் தங்கள் நோய்களைத் தீர்க்க ஒரு டாக்டரை வேண்டி வந்தவர்கள். இதர ஒரு பங்கினர் இறக்கும் தருவாயிலிருந்த தங்களுக்கு ஆதரவு வேண்டி வந்தவர்கள்.

 

ஆய்வின் படி இங்கு வருகை புரிந்த டாக்டர்கள் சுகாதாரமற்ற நிலை இல்லங்களில் இருப்பதைக் கண்டனர். இங்கு வாழவே தகுதியில்லாதபடியான சூழ்நிலையும் இருந்தது. அவர்கள் மீது அக்கறை செலுத்துவதிலும் மிகுந்த குறைபாடு இருந்தது. உணவு இல்லை, வலியைக் குறைக்கும் நிவாரண மாத்திரைகள் இல்லை.

இவற்றை வாங்கவோ நிதிக்குக் குறைச்சலே இல்லை. ஏனெனில் லட்சோப லட்சம் டாலர்கள் இந்த இல்லங்களை நடத்துவதற்கென வந்து குவிந்து கொண்டிருந்தது!

அறக்கட்டளைகள் நிதியைத் திரட்டிக் கொண்டே இருந்தன.

 

மதர் தெரஸா தன் நோய்க்கான சிகிச்சைக்கு நவீன சிகிச்சையை அமெரிக்காவில் பெற்றார். ஆனால் இவர்களோ…!

மூன்று ஆய்வாளர்களும் ஆவணங்களில் பழைய ரிகார்டுகளைத் தோண்டி எடுத்தனர். அதில் ஒரு பிரதான விஷய்ம் அவர் 1968ஆம் ஆண்டு லண்டனில் உள்ள பிரப்ல பி.பி.சி நிலையத்தைச் சேர்ந்த மால்கம் மகரிட்ஜுடனான (Malcom Muggeridge) சந்திப்பு..

mother-teresa-souvenir-sheet

மால்கம் மகரிட்ஜ் அபார்ஷன் பற்றி கத்தோலிக்கர்களின் தீவிர கொள்கையைக் கொண்டவர். அபார்ஷன் கூடவே கூடாது என்பது அவரது தீவிரமான  கொள்கை. இதை மதர் தெரஸாவும் பிரதிபலித்ததை அவர் சந்தோஷ்மாக ஏற்றுக் கொண்டார்.

ஆக மகரிட்ஜ் தன் கொள்கைக்கு ஆதரவாளரான  மதர் தெரஸாவை முன்னிலைப் படுத்த – ப்ரொஜெக்ட் செய்ய கங்கணம் பூண்டார்.

1969இல் அவர் மதர் தெரஸாவைப் பற்றிய ஒரு படத்தை எடுத்தார். அதில் தான் மதர் தெரஸாவின் முதல் போட்டோகிராபிக் அற்புதம் பதிவு செய்யப்பட்டது.

இதை கோடக் நிறுவனம் சந்தைப்படுத்தியது.

மகரிட்ஜின் மீடியா ப்ரொஜெக் ஷன் வெற்றிகரமானது!

 

தெரஸா மறைந்த பிறகு ஒரு விசேஷ சலுகையைப் போல அவரை ‘beadutification’  செய்வதற்கான குறைந்த பட்ச காலமான ஐந்து ஆண்டுகளை அது விலக்கியது.

ஆய்வு கண்டுபிடித்த ஒரு மிராகிள் பற்றிய விவரம் சுவையானது.

 

மோனிகா பெஸ்ரா (Monica Besra) என்பவருக்கு கடுமையான அடி வயிற்று வலி இருந்தது. மதர் தெரஸாவினால் “ஆசீர்வதிக்கப்பட்ட”  ஒரு மெடால்லியன் (Medallion) ரஅவர் அடி வயிற்றில் வைக்கப்பட்டது.

அவ்வளவு தான், வலி போயே போச்சு!

ஆய்வாளர் லாரிவீ கூறுகிறார்: “ மோனிகாவின் டாக்டர்கள் இதை வேறு விதமாக (அற்புதம் இல்லை என்று) கருதுகிறார்கள். அவர் Ovarian cyst மற்றும் tuberculosis  வியாதியினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார். அதற்கான உரிய மருந்துகள் தரப்பட்டன. அந்த மருந்துகளினால் தான் அவர் குண்மானார் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.”

ஆனால் வாடிகன் வேறு விதமான முடிவை ஏடுத்தது. அவரது அற்புதத்தால் தான் மோனிகா குணம்டைந்தார் என்று அது “அறிவித்தது.”.

லாரிவீ தன் ஆய்வின் முடிவை ஜாக்கிரதையாக்வே முடிக்கிறார்.

 

theres-satmp

ஒரு வேளை தெரஸாவின் எல்லையற்ற புகழும் ஆற்றலும் நோயாளியிடம் ஒரு பாஸிடிவான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குமானால் அதற்காக நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்கிறார் அவர்.

இது தவிர பின்னால் வந்த தகவல்கள் மதர் தெரஸா ஏழைகளை ஆதரித்து நோயாளிகளைக் குணப்படுத்த முன்வந்ததன் அடிப்படை மதமாற்றமே, இதை அவரே முன்னிலைப் படுத்தியுள்ளார் என்று அந்தத் தகவல்கள் ஆதாரங்களுடன் கூறுகின்றன..

எது எப்படியோ மதர் தெரஸா புனிதராக்கப்பட்டு விட்டார்.

 

இப்படி புனிதராக்கும் ஒரு வழக்கம் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே உண்டு. ஹிந்து மதத்தில் நிச்சயமாக இல்லை.

ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகரிலிருந்து ஆரம்பித்து சமீபத்தில் வாழ்ந்த வள்ளலார் வரை அற்புதங்களை நிகழ்த்துவது என்பது ஹிந்து ஞானிகள், யோகிகள், சித்தர்கள் ஆகியோருக்கு சர்வ சாதாரணம். ஹிந்துமதத்தில் சித்திகள் பெரிது படுத்தப்படுவதில்லை. இது சகஜம், இதற்கும அப்பாற்ப்ட்டு இறை நிலைக்கு உயர வேண்டும் என்பதே ஹிந்து மதம் சுட்டிக் காட்டும் இறைநெறி.

சரி, மதர் தெரஸா ஒரு புனிதர் தான், கிறிஸ்தவர்களுக்கு – ஆய்வாளர்கள் அப்படி இல்லை என்று சொன்ன போதிலும்!

இப்போது கட்டுரையின் முதல் பாராவைப் படியுங்கள்!

– முற்றும்

ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு, 2-3-13 இதழ்

Leave a comment

Leave a comment