
WRITTEN BY London swaminathan
Date: 20 September 2016
Time uploaded in London:8-52 AM
Post No.3171
Pictures are taken from various sources; thanks.
தமிழில் சொற் சிலம்பம் ஆடும் காளமேகப் புலவரை நாம் அறிவோம். மனு ஸ்ம்ருதியில் கூட ஒன்றிரண்டு சொற்சிலம்பம் உண்டு.
மாம்சம் என்று ஏன் பெயர் வந்தது? என்று விளக்குகிறார் மனு:-
மாம்= என்னை
ச: = அவன்
இந்த ஜன்மத்தில் நான் அவனை (அதை) சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் என்னை (மாம்) அவன் (ச;) சாப்பிடுவான் இதனால் அதை மாம்ச (இறைச்சி) என்று சொல்கிறோம்
மனு 5-55
இது ஆங்கிலத்திலும் பொருத்தமாக இருக்கிறது ஆங்கிலத்தில் மீட் MEAT என்றால் மாமிசம்; மீ (என்னை) ஈட் (சாப்பிடுவான்) Me Eats (He eats me in my next birth if I eat him now). அதாவது நான் இப்பொழுது அவனைச் சாப்பிட்டால் அவன் என்னை சாப்பிடுவான்.
Xxx

நாராயணன் என்றால் என்ன?
ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபௌ வை நர சூனவ:
தா யதஸ்யாயனம் பூர்வம் தேன நாராயண: ஸ்ம்ருத:
மனு 1-10
நான் என்ற பரமாத்மாவினால் படைக்கப்பட்டதால் நீருக்கு நாரம் எனப்பெயர். அதில் இவன் வசிப்பதால் (அயன) அவனுக்கு நாராயண என்று பெயர்.
Xxx

பரம ஹம்ச
ஹம்சம் என்பதற்கும் இது போல வேதாந்திகள் விளக்கம் தருவர்.
ஹம்சம் என்றால் அன்னப் பறவை (swan) என்று பொருள்.
இதை
அஹம் = நான் = ஜீவாத்மன்
ச: = அவனே + பரமாத்மன்
அஹம்+ச; = அம்ச (ஹம்ச)
இது அத்வைதத்தின் உயர்நிலை; அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி என்பதற்குச் சமம்.
இந்த உண்மையை உயர்ந்தவர் பரமஹம்சர் . ராமகிருஷ்ண பரமஹம்சர், பரமஹம்ச யோகாநந்தர் ஆகிய பெரிய மஹான்களின் பெயர்களை நாம் கேட்டிருக்கிறோம்.
ஹம்சப் பறவை இமயமலைக்கும் மேலே (கணவாய் வழியாகப்) பறப்பதையும், அது தூய வெண்மையாக இருப்பதையும் ஒட்டி வேறு சில விளக்கங்களும் உண்டு.
வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க ஞானம்!
–சுபம்–
You must be logged in to post a comment.