அறியாமையே அநீதிக்குக் காரணம் (Post No.3257)

englishman

Written by London Swaminathan

 

Date: 16 October 2016

 

Time uploaded in London: 7-06 AM

 

Post No.3257

 

Pictures are taken from various sources; thanks. (Picture is used only for representational purpose)

 

Contact swami_48@yahoo.com

 

 

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்டது இல் — குறள் 1071

 

“கீழ்மைக் குணம் உடையவர்களும் சாதாரண மக்களைப் போலவே தோன்றுவர். இப்படிப்பட்ட ஒற்றுமையை நான் வேறு எங்கும் கண்டதில்லை!”

 

சென்னப்பட்டணத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு இந்திய மொழிகள் தெரியாது. ஆகையால் ஒரு துபாஷை (த்வி பாஷி= இரு மொழி வல்லுநன்= துபாஷ்) வேலைக்கு வைத்துக் கொண்டார். ஒரு நாள் சென்னைக்கு கழைக்கூத்தாடிகள், ஜால வித்தைக் காரர்கள் கோஷ்டி ஒன்று வந்தது. பெரிய பூங்காவில் அவர்கள்: ஜால வித்தைகளைச் செய்து காட்டினர். அதைக் காண ஆங்கிலேய அதிகாரி தனது மொழி பெயர்ப்பாளருடன் — துபாஷுடன் — வந்திருந்தார்.

 

ஒரு மணீ நேரத்தில் வேடிக்கை எல்லாம் முடிந்ததது. ஜாலவித்தைக்காரர்கள் உடனே ஒவ்வொருவரிடமும் வந்து இனாம் வசூலித்தனர். இந்திய ஜால வித்தைகளை முன்பின் காணாத அந்த ஆங்கிலேயரும் வியப்பால் அசந்து போய் தனது உதவியாளரை அழைத்து பத்து பகோடா (தங்க) நாணயங்களைக் கொண்டுவரச் சொன்னார். துபாஷை அழைத்து இதை ஜால வித்தைக்காரகளிடம் கொடு. நான் மிகவும் பாராட்டினேன் என்று சொல்லு என்றார்.

 

அவன் யாரும் காணாதபடி ஒன்பது காசுகளை தன் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு ஒரே ஒரு காசை மட்டும் ஜாலவித்தை செய்யும் கோஷ்டியின் தலைவனிடம் கொடுத்தான். அவனுக்குத் திருப்தி இல்லை. ஏனெனில் ஏதோ ஏமாற்று வேலை நடந்திருக்கிறது. இந்த மொழி பெயர்ப்பாளன் ஏதோ காசு அடித்திருக்கிறான் என்று எண்ணினான்.

மொழிபெயர்ப்பாளன், யாரும் தான் செய்ததைக் கண்டுபிடித்திருப்பார்களோ என்று பயந்து, அவசரம் அவசரமாக வீட்டிற்கு ஏகினான்.

 

ஜாலவித்தைக்கர்களின் தலைவன் மெதுவாக ஆங்கிலேய அதிகாரியிடம் சென்று ஒரு பகோடா நாணயத்தைக் காட்டி, இதைத்தான் அந்த துபாஷ் எங்களுக்குக் கொடுத்தான். தாங்கள் கொடுத்தது இந்த ஒரு காசுதானா? என்று வினவினான். ஆங்கிலேய அதிகாரிக்கு ஒன்றும் விளங்கவில்லை. உடனே துபாஷை அழைத்துவரும்படி உஅதவியாளனுக்கு கட்டளையிட்டான்.

துபாஷும் வந்தான். இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று விளங்கவில்லை என்றான். ஜாலவித்தைக்காரன் மீண்டும் தனது மனக்குறையை வெளியிட்டான்.

 

துபாஷும் வந்தான். இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று விளங்கவில்லை என்றான். ஜாலவித்தைக் காரன் மீண்டும் தனது மனக்குறையை வெளியிட்டான்

 

துத்பாஷ் கள்ளனுக்கும் குள்ளன். ஜாலவித்தைக்காரன் சொன்னதை அப்படியே கயிறு திரிப்பதுபோல திரித்தான். நீங்கள் கொடுத்த பத்து காசுகளில் ஒரு செல்லாக் காசையும் கொடுத்து ஏமாற்றிவிட்டீர்களாம். அந்தக் காசை உங்களிடம் காட்டி, வேறு காசு கேட்கிறான் என்று மொழி பெயர்த்தான். வெள்ளைக்கார அதிகாரிக்கு ஏக கோபம். சேவகர்களை அழைத்து இவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு என்றான்.

 

பாவம் அநீதிக்கு அறியாமை வழிவகுத்தது!

 

–Subham–

Leave a comment

Leave a comment